Category: Song Lyrics

  • கண்விழித்து காத்திருக்கும் Kanvilithu Kaathirukum

    கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ
    தேசத்தை காத்திடும் காவல்காரன் நீ
    தூங்கிப்போனதேனோ
    தளர்ந்து போனதேனோ

    எழும்பிடு எழும்பிடு
    உன் வல்லமையை தரித்திடு – 2
    அயராமல் ஜெபித்திடு
    கண்ணுறங்காமல் காத்திரு

    எருசலேமின் அலங்கத்தைப்பார்
    மகிமையை இழந்த நிலைதனைப்பார் – 2
    சீயோனின் வாசல்களில்
    ஆனந்தம் ஒழிந்தது பார் -2

    மங்கி எரிந்திடும் காலமல்ல இது
    தூங்கி இளைப்பாறும் நேரமல்ல – 2
    அனல் கொண்டு நீ எழுந்தால்
    காரிருள் நீங்கிடுமே – 2

    உலர்ந்த எலும்புகள் உயிரடையும்
    ஆதி எழுப்புதல் மீண்டும் வரும் – 2
    மாமீட்பர் நம் இயேசுவை
    தேசங்கள் அறிந்திடுமே – 2

    கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்
    தேசத்தை காத்திடும் காவல்காரன் நான் – 2
    தூங்கிப் போவதில்லை
    தளர்ந்து போவதில்லை – 2

    எழும்புவேன் எழும்புவேன்
    வல்லமையைத் தரித்துக்கொள்வேன் – 2
    அயராமல் ஜெபித்திடுவேன்
    கண்ணுறங்காமல் காத்திருப்பேன் – 2


    Kanvilithu Kaathirukum Jamakaaran Nee
    Desathai Kaathidum Kavalkaaran Nee – 2
    Thoongi Ponathaeno?
    Thalarnthu Ponathaeno? – 2

    Elumpidu Elumpidu
    Um Vallamaiyai Tharithidu – 2
    Aayaraamal Jebithudu
    Kan Urangaamal Kaathiru – 2

    Erusalaemin Alangathai Paar
    Magimai Illantha Nillaithanai Paar – 2
    Seiyonin Vasalglil
    Aanandam Olinthathu Paar – 2

    Mangi Erinthidum Kaalamalla
    Ithu Thoongi Illaipaarum Neramalla – 2
    Analkondu Nee Elunthaal
    Kaarirul Neengidumae – 2

    Ularntha Elumbukal Uriradaiyum
    Aathi Eluputhal Meendum Varum – 2
    Maameetpar Nam Yesuvai
    Thesangal Arinthidumae – 2

    Kanvilithu Kaathirukum Jamakaaran Naan
    Desathai Kaathidum Kavalkaaran Naan – 2
    Thoongi Povathillai
    Thalarnthu Povathillai – 2

    Elumpuvaen Elumpuvaen
    Vallamaiyai Tharithu Kolvaen – 2
    Aayaraamal Jebithiduvaen
    Kan Urangaamal Kaathirupaen – 2


  • ஜெப ஆவியால் Jeba Aaviyaal

    ஜெப ஆவியால் நிரப்பும் ஐயா
    ஜெப சிந்தையை தாரும் ஐயா – 2
    ஜெபிக்கணுமே இன்னும் ஜெபிக்கணுமே
    ஜெப ஆவியால் என்னை நிரப்பிடுமே – 2

    இந்தியா உம்மை அறிந்திடனும்
    பாரதம் விடுதலை அடைத்திடனும் – 2
    பாவங்கள் எல்லாம் ஒழிந்திடனும் – 2
    சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடனும் – 2

    ஜெபித்திடுவேன் இன்னும் ஜெபித்திடுவேன்
    உயிருள்ள நாள் எல்லாம் ஜெபித்திடுவேன் – 2

    சபைகளில் பரிசுத்தம் ஜொலித்திடனும்
    ஆதி அன்புக்குள் வந்திடனும் – 2
    ஆத்தும பாரங்கள் பெருகிடனும் – 2
    இழந்திட்ட மகிமை திரும்பிடனும் – 2

    உம் சித்தம் செய்திட அர்பணித்தேன்
    கோதுமை மணியாக மடிந்திடுவேன் – 2
    என் உள்ளம் ஓய்வின்றி கதறும் ஐயா – 2
    என் தேசம் இந்தியா உம்மை காணும் வரை – 2


    Jeba Aaviyaal Nirapum Aiyya
    Jeba Sinthaiyai Thaarum Aiyya – 2
    Jebikanumae Ennum Jebikanumae
    Jeba Aaviyaal Ennai Nirapidumae – 2

    India Ummai Arinthidanum
    Baratham Viduthalai Adaithidanum – 2
    Paavangal Ellaam Ozhinthidanum – 2
    Sathanin Kottaigal Thagarnthidanum – 2

    Jebithiduvaen Ennum Jebithiduvaen
    Uyirulla Naal Ellam Jebithiduvaen – 2

    Sabaigalil Parisutham Jolithidanum
    Aadhi Anbukul Vanthidanum – 2
    Aathuma Baarangal Paerugidanum – 2
    Ezhanthita Magimai Thirumbidanum – 2

    Um Sitham Seithida Arpanithaen
    Gothumai Mniyaaga Madinthiduvaen – 2
    En Ullam Oivindri Kadharum Aiyya – 2
    En Dhesam India Ummai Kaanum Varai – 2


  • அழைத்தவர் நீர்தானைய்யா Azhaithavar Neerthaanaiyya

    அழைத்தவர் நீர்தானைய்யா
    என்னை அறிந்தவர் நீர்தானையா

    இதுவரை உமக்காக
    ஓடிட பெலன் தந்தீர் – 2
    எண்ணமும் உமக்காக
    உண்மையாய் ஓட செய்வீர் – 2

    உண்மையுள்ளவன் என்று நம்பினீர்
    உமது ஊழியம் கரங்களில் தந்தீர் – 2
    கனமான உம் சேவையை
    கவனமாய் நானும் செய்திட – 2
    நாள்தோறும் கிருபை தாருமே – 2

    பொன்னும் பொருளும் என் நாட்டம் இல்லப்பா
    பேரும் புகழும் என் தேடல் இல்லப்பா – 2
    அழிந்து போகும் ஆத்துமாக்களை
    மீட்டிடவே கிருபை தாருமே – 2
    எழுப்புதலை காண செய்யுமே – 2

    பரம அழைத்தாள் பந்தய பொருளுக்கான
    லாக்கை நோக்கியே தொடர்ந்து ஓடுவேன் – 2
    விண்மகிமை காணும் வரை
    அனல் கொண்ட உள்ளத்தோடயே – 2
    அயராமல் ஓட செய்யுமே – 2


    Azhaithavar Neerthaanaiyya
    Ennai Arinthavar Neerthaanaiyaa

    Ethuvarai Umakaaga
    Odida Belan Thantheer – 2
    Ennamum Umakaaga
    Unmaiyaai Oda Seiveer – 2

    Unmaiyullavan Endru Nambineer
    Umathu Uzhiyam Karangalil Thantheer – 2
    Ganamaana Um Saevaiyaai
    Gavanamaai Naanum Seithida – 2
    Naalthorum Kirubai Thaarumae – 2

    Ponnum Porulum En Naatam Ellappa
    Paerum Pugazhum En Theydal Ellapa – 2
    Azhinthu Pogum Aathumaakalai
    Meettidavae Kirubai Thaarumae – 2
    Ezhuputhalai Kaana Seiyumae – 2

    Parama Azhaithalin Panthaya Porulukaai
    Lakkai Nokkiyae Thodarthu Oduvaen – 2
    Vinmagimai Kaanum Varai
    Anal Konda Ullathodae – 2
    Ayaraamal Oda Seiyumae – 2


  • உன்னதர் நீரே மாட்சிமை Unnadhar neerae matchimai

    உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரே
    சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே
    உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்
    இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்
    உன்னதர் நீரே மாட்சிமை நிறைந்தவரே
    சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே
    தூயவரும் நீரே

    எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
    என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்
    பாதையிலே நீர் தீபமாய்
    வெயிலினிலே நீர் நிழலுமாய்
    தாங்குவீர் தப்புவிப்பீர் விடுவிப்பீர்

    என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
    பார்வோனின் சேனைகள் நின்றாலும்
    வல்லவரே உந்தன் கரம் என்னை
    நல்லவரே உந்தன் அரண் என்னை
    தாங்கிடும் தப்புவிக்கும்


    Unnadhar neerae matchimai nirainthavare
    Sarvathaiyum padaitha thooyavarum neerae
    Undhan thuthi paadi ummai aarathipaen
    Iru karam uyarthi ummai uyarthiduvean
    Unnadhar neerae matchimai nirainthavare
    Sarvathaiyum padaitha thooyavarum neerae
    Thooyavarum neerae

    Erigokkal munbaga nindraalum
    En nambikkai thalarnthu ponalum
    Paathaiyilae neer deepamai
    Veyilinilae neer nilzhalumai
    Thanguveer thapuvipeer viduvipeer

    Yennena thunbangal vanthalum
    Paarvonin senaigal nindralum
    Vallavarae undhan karam ennai
    Nallavarae undhan aran ennai
    Thangidum thapuvikkum viduvikkum


  • உள்ளமெல்லாம் உருகுதையோ Ullamellaam Urukuthaiyo

    உள்ளமெல்லாம் உருகுதையோ
    உத்தமனை நினைக்கையிலே
    உம்மையல்லால் வேறே தெய்வம்
    உண்மையாய் இங்கில்லையே
    கள்ளனென்று தள்ளிடாமல்
    அள்ளி என்னை அணைத்தவா
    சொல்லடங்கா நேசத்தாலே
    சொந்தமாக்கிக் கொண்டீரே

    எத்தன் என்னை உத்தமனாக்க
    சித்தம் கொண்டீர் என் ஏசையா
    எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
    அத்தனையும் நீர் மன்னித்தீர்
    இரத்தம் சிந்த வைத்தேனே நான்
    அத்தனையும் என் பாவமன்றோ
    கர்த்தனே உம் அன்புக்கீடாய்
    நித்தம் உம்மையே சேவிப்பேன்

    மேக மீதில் இயேசு ராஜன்
    வேகம் வரும் நாள் என்றோ
    லோகமீதில் காத்திருப்போர்
    ஏக்கமெல்லாம் தீர்ந்திட
    தியாக ராஜன் இயேசுவை நான்
    முகமுகமாய் தரிசிக்க
    ஆவலோடு ஏங்கும் தாசன்
    சோகம் நீங்கும் நாள் எப்போ


    Ullamellaam Urukuthaiyo
    Uththamanai Ninaikkaiyilae
    Ummaiyallaal Vaetae Theyvam
    Unnmaiyaay Ingillaiyae
    Kallanentu Thallidaamal
    Alli Ennai Annaiththavaa
    Solladangaa Naesaththaalae
    Sonthamaakkik Konnteerae

    Eththan Ennai Uththamanaakka
    Siththam Konnteer En Aesaiyaa
    Eththanaiyaam Thurokam Naan Seythaen
    Aththanaiyum Neer Manniththeer
    Iraththam Sintha Vaiththaenae Naan
    Aththanaiyum En Paavamanto
    Karththanae Um Anpukgeedaay
    Niththam Ummaiyae Sevippaen

    Maeka Meethil Yesu Raajan
    Vaekam Varum Naal Ento
    Lokameethil Kaaththiruppor
    Aekkamellaam Theernthida
    Thiyaaka Raajan Yesuvai Naan
    Mukamukamaay Tharisikka
    Aavalodu Aengum Thaasan
    Sokam Neengum Naal Eppo


  • தேசத்தை மாற்றும் Desathai Maatrum

    தேசத்தை மாற்றும் சபை
    இந்த தேசத்தை மாற்றும் சபை – 2

    எழும்பிடு சபையே எழும்பிடு
    இந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு – 2

    பரிசுத்தம் தேசத்தில் நிலவிட
    பரிகாரி இயேசுவை கண்டிட – 2
    சபைகள் இயேசுவை காண்பிக்க
    இந்த தேசம் இயேசுவை கண்டிட – 2

    பழையவை எல்லாம் ஒழிந்திட
    உனக்குள் புதிய காரியம் நடந்திட – 2
    தரிசனம் உனக்குள் பிறந்திட
    இந்த தேசத்தில் மாறுதல் கண்டிட – 2


    Desathai Maatrum Sabai
    Intha Desathai Maatrum Sabai – 2

    Elumbidu Sabaye Elumbidu
    Intha Desathai Maatrida Elumbidu – 2

    Parisutham Desathil Nilavida
    Parigari Yesuvai Kandida – 2
    Sabaigal Yesuvai Kanbitka
    Intha Desam Yesuvai Kandida – 2

    Palayavai Ellam Olindida
    Unakul Puthiya Kariyam Nadanthida – 2
    Tharisanam Unakul Piranthida
    Intha Desathil Maaruthal Kandida – 2


  • மறைவிடமாம் எனக்கேசு Maraividamaam Enakkesu

    மறைவிடமாம் எனக்கேசு உண்டு
    மறைத்திடுவார் என்னை சிறகடியில்
    மறந்திடார் நிதம் என்னை நினைத்திடுவார்
    மாறாத இயேசு எந்தன் அருகில் உண்டு – 2

    அனுதினமும் கிருபையினால்
    அவரே எந்தன் முன்மாதிரியாய் – 2
    ஆனந்த ஜீவிய வழியிலென்னை
    அனுதினமும் அன்பாய் நடத்திடுவார் – 2

    அழைத்த தெய்வம் உண்மையானவராலோ
    வழியில்நான் வழி தப்பி போகாவண்ணம் – 2
    வருகைமட்டும் என்னை பிரியாவண்ணம்
    வலதுகை பிடித்தென்னை நடத்திடுவார் – 2

    இதோ வேகம் நான் வானவீதியில்
    இனியும் வருவேன் என்று அருளி சென்றார் – 2
    இன்ப நாதனை நானும் காணும்வண்ணம்
    இரவும் பகலும் எண்ணி வாழ்ந்திடுவேன் – 2


    Maraividamaam Enakkesu Undu
    Maraithiduvaar Ennai Siragadiyil
    Marandhidaar Nidham Ennai Ninaithiduvaar
    Maaraadha Yesendhan Arugil Undu – 2

    Anudhinamum Kirubayinaal
    Avarae Endhan Munmaadhiriyaai – 2
    Aanandha Jeeviya Vazhiyilennai
    Anudhinamum Anbaai Nadathiduvaar – 2

    Azhaitha Dheivam Unmaiyaanavarallo
    Vazhiyilnaan Vazhi Thappi Pogaavannam – 2
    Varugaimattum Ennai Piriyaavannam
    Valadhukkai Pidithennai Nadathiduvaar – 2

    Idho Vaegam Naan Vaanaveedhiyil
    Iniyum Varuvaen Endru Aruli Sendraar – 2
    Inba Naadhanai Naanum Kaanumvannam
    Iravum Pagalum Enni Vaazhndhiduvaen – 2


  • உன்னத தேவனுக்கு Unnatha dhevanukku

    உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
    வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு – 2
    உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
    வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு – 2

    உம் நாமம் பாட பாட உள்ளத்தில் சந்தோஷம் பொங்குதய்யா – 2
    உம் நாமம் துதிக்க துதிக்க தடைகள் எல்லாம் நீங்குதய்யா – 2
    அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4

    பூமியின் குடிகள் எல்லாம் பணிந்து துதித்து பாடிடுங்க – 2
    அதிசயமானவர் அவர் வல்லமையுள்ள தேவன் அவர் – 2
    அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4

    சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்யும் தெய்வம் அவர்
    நீதியின் சூரியன் அவர் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்
    அல்லேலூயா… அல்லேலூயா.அல்லேலூயா


    Unnatha dhevanukku mahimai seluthunga
    Vaanilum boomiyilum uyarntha rajanukku – 2
    Unnatha dhevanukku mahimai seluthunga
    Vaanilum boomiyilum uyarntha rajanukku – 2

    Um naamam paada paada ullathil santhosam ponguthaiya – 2
    Um naamam thuthikka thuthikka thadaikal ellam neenguthaiya – 2
    Hallaeluyah…Hallaeluyah…Hallaeluyah – 4

    Boomiyin kudigal ellam paninthu thuthithu paadidunga – 2
    Athisayamaanavar avar vallamaiulla dhevan avar – 2
    Hallaeluyah…Hallaeluyah…Hallaeluyah – 4

    Sera kooda ozhiyinilae vaasam seiyum deivam avar
    Neethiyin Sooriyan avar settaigalin keel arokiyam
    Hallaeluyah…Hallaeluyah…Hallaeluyah


  • கிருபை மேல் கிருபை Kirubai mel kirubai

    கிருபை மேல் கிருபை தாருமே
    உண்மையாக வாழ்ந்திடவே
    உங்க கிருபை மேல் கிருபை தாருமே
    உண்மையாக வாழ்ந்திடவே

    உங்க பெலத்தின் மேல பெலன் தாருமே
    நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
    நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே

    உமது வருகையின் நாள் மிகவும் நெருங்குதையா
    தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே
    இப்பொழுதோ எப்பொழுதோ எந்நேரம் வந்திடலாம்
    ஆயத்தமுள்ள கன்னியை போல
    எண்ணையை நாள் வைத்து கொள்ள
    மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே

    பெருங்காற்று வந்து என்னை மோதி அடிக்குதய்யா
    பெரு வெள்ளம் வந்து என் மேல் மோதி அடிக்குதய்யா
    ஆனாலும் விழவில்லை கன்மலை மேல் நிற்கிறேன்
    புத்தியுள்ள வீட்டை நான் கன்மலை மேல கட்டிடணும்
    மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே

    பரிசுத்த ஆவியில் நான் நிரம்பி ஜெபிக்கணுமே
    விசுவாசம் தளர்ந்திடாமல் முன்னேறி செல்லணுமே
    அசைவில்லா ராஜ்ஜியத்தை தருகின்ற தெய்வமல்லோ
    பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்திடுவேன்
    மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே


    Kirubai mel kirubai thaarumae
    Unmaiyaaga vazhnthidavae
    Unga kirubai mela kirubai thaarumae
    Unmaiyaaga vazhnthidavae

    Unga belathin mela belan thaarumae
    Naan parisuthamaai vazhnthidavae
    Naan parisuthamaai vazhnthidavae

    Umathu varugaiyin naal migavum nerunguthaiyaa
    Dhevanai santhikkavae aayathamaaganumae
    Ippozhutho eppozhutho enneram vanthidalam
    Aayathamulla kanniyai pola
    Ennaiyai naal vaithu kolla
    Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae

    Perungkaatru vanthu ennai mothi adikkuthaiya
    Peru vellam vanthu en mel mothi adikkuthaiya
    Aanalum vizhavillai kanmalai mel nirkiren
    Puthiyulla veetai naan kanmala mela katidanum
    Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae

    Parisutha aaviyil naal nirambi jebikanumae
    Visuvaasam thalarnthidaamal munneri sellanumae
    Asaivilla rajiyathai tharukintra deivamallo
    Payathodum pakthiyodum aarathanai seithiduven
    Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae


  • அடிமை அல்ல இனி Adimai Alla Eni

    அடிமை அல்ல இனி தனிமை அல்ல – 2
    தேவன் உன்னோடு இருக்கிறார் – 2

    தனிமை அல்ல இனி தனிமை அல்ல – 2

    தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
    காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் – 2
    தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் – 2
    நிச்சயமாய் உன்னை அவர் கை விட மாட்டார் – 2

    தாயின் கருவினிலே உருவாகும் முன்னே
    பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை – 2
    தனிமையில் சிறையிலே ஜோசேப்போடே இருந்தவர் – 2
    எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2

    பெற்றெடுத்த தாய் தந்தை கை விட்டு போனாலும்
    பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் – 2
    உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் – 2
    ராஜ முடியாக கையிலே வைத்து கொள்வார் – 2


    Adimai Alla Eni Thanimai Alla – 2
    Dhevan Unnodu Irukiraar – 2

    Thanimai Alla Eni Thanimai Alla – 2

    Thanimaiyil Vaadi Nitra Aaharai Kandu
    Kaankira Dhevanaga Aatharitha Dheivam Avar – 2
    Thanimaiyil Vaadukintra Unnai Kaankitrar – 2
    Nitchayamaai Unnai Avar Kai Vida Matar – 2

    Thaayin Karuvinilae Uruvaagum Munnae
    Peyar Solli Azhithavar Marappaaro Unnai – 2
    Thanimaiyil Siraiyilae Josephpodae Irunthavar – 2
    Egpithin Athipathiyaai Unnathathilae Amara Vaithaar – 2

    Petredutha Thaai Thanthai Kai Vittu Ponalum
    Parama Thagappan Unnai Nitchayamaai Aatharipar – 2
    Ullam Kaiyilae Unnai Vanainthavar – 2
    Raja Mudiyaga Kaiyilae Vaithu Kolvaar – 2