Category: Song Lyrics

  • Senkadalai Kadanthiduvem

    செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்
    ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் அஞ்சிடேன் – 2
    நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2
    இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
    இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2

    நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் கைவிட்டாலும்
    ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னைப் பார்த்து சொன்னாலும் – 2
    நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2
    இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
    இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2


    Senkadalai Kadanthiduvem Mathilgalai Thandiduven
    Aayiram Yenakkethiraai Vanthaalum Anjiden – 2
    Neer Ennodirukaiyeley Yethai Kurithum Kalakamillaiyey – 2
    Yesu Jeevikinrarey Enakul Jeevikinrarey
    Ini Nanalla Nanalla En Yesuvey Jeevikinrar – 2

    Nesithoor Veruthaalum Nambinoor Kaivitalum
    Ondrukkum Uthavathavan Endru Ennai Parthu Sonnalum – 2
    Neer Ennodirukaiyeley Yethai Kurithum Kalakamillaiyey
    Yesu Jeevikinrarey Enakul Jeevikinrarey
    Ini Nanalla Nanalla En Yesuvey Jeevikinrar – 2

  • Senaigalin Karthar Nallavare

    சேனைகளின் கர்த்தர் நல்லவரே
    சேதமின்றி நம்மை காப்பவரே
    சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
    சோதனை வென்றிட தந்தருள்வார்

    எக்காலத்தும் நம்பிடுவோம்
    திக்கற்ற மக்களின் மறைவிடம்
    பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம்

    1. வெள்ளங்கள் புரண்டுமோதினாலும்
      உள்ளத்தின் உறுதி அசையாதே
      ஏழு மடங்கு நெருப்புநடுவிலும்
      ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்
    2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
      ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி
      நித்திரை செய்திடும்
      கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?
    3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
      கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
      ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின்
      அன்பில் நிலைத்திருப்போம்
    4. ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார்
      ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
      யாவையும் ஜெயித்து வானத்தில்பறந்து
      ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்

    Senaikalin Karththar Nallavarae
    Sethaminti Nammai Kaappavarae
    Sornthidum Naerangal Thaettidum Vaakkukal
    Sothanai Ventida Thantharulvaar

    Ekkaalaththum Nampiduvom
    Thikkatta Makkalin Maraividam
    Pakkapalam Paathukaappum Ikkattil Aesuvae Ataikkalam

    1. Vellangal Puranndumothinaalum
      Ullaththin Uruthi Asaiyaathae
      Aelu Madangu Neruppunaduvilum
      Aesu Nammodangu Nadakkintar
    2. Aalaththinintum Naam Kooppiduvom
      Aaththiramaay Vanthu Thappuvippaar Kappalin Pinnanni
      Niththirai Seythidum
      Karththar Nammodunndu Kavalai Aen?
    3. Kaaththirunthu Pelan Pettiduvom
      Karththarin Arputham Kanndiduvom
      Jeevanaanaalum Maranamaanaalum Nam Thaevanin
      Anpil Nilaiththiruppom
    4. Aesu Nam Yuththangal Nadaththuvaar
      Aettiduvom Entum Jeyakkoti
      Yaavaiyum Jeyiththu Vaanaththilparanthu
      Aesuvai Santhiththu Aananthippom
  • Senaigalin Dhevanae Umathu

    சேனைகளின் தேவனே
    உமது வாசஸ்தலம்
    எத்தனை நன்மையும்
    எத்தனை இன்பமுமாய் இருக்கிறது
    எங்கள் சேனைகளின் தேவனே – 2

    1. பூமி நோக்கி நான் பார்த்தேன்
      உம்மை போல ஒரு தெய்வம்
      பூமியிலே கண்டதில்லை – 2
      வானம் கொள்ளாதவர்
      இயேசு பூமி கொள்ளாதவர் – 2
      பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று
      வாழ்நாளெல்லாம் நான் பாடுவேன்
    2. ஜோதிகளின் தேவனே
      நன்மையான ஈவுகளை
      நாள்தோறும் தருபவரே – 2
      எனக்காக யாவையும்
      செய்து முடிப்பவரே – 2
      தடைகளை உடைத்து கட்டுகளை அறுத்து
      அனுதினம் என்னை காப்பவர்
    3. பட்சிக்கிற அக்கினியே
      தீமைகளை பாரத
      சுத்த தெய்வம் நீர் ஐயா – 2
      வானம் சிங்காசனம்
      பூமி பாதபடி – 2
      அகிலமே போற்றுது போற்றுது போற்றுது
      உன்னத தேவனே

    Senaigalin Dhevanae
    Umathu Vaasasthalam
    Ethanai Nanmaium
    Ethanai Inbamumai Irukirathu
    Engal Senaigalin Dhevanae – 2

    1. Boomi Nooki Naan Paarthen
      Ummai Pola Oru Dhaivam
      Boomiyila Kandathillai – 2
      Vaanam Kollathavar
      Yesu Boomi Kollathavar – 2
      Parisuthar Parisuthar Parisuthar Endru
      Vazhlnaal Ellam Naan Paaduvaen
    2. Jothigalin Dhevanae
      Nanmaiyaana Evugalai
      Naalthorum Tharubavarae – 2
      Enakaga Yaavaium
      Saithu Mudipavarae – 2
      Thadaigalai Udaithu Kattugalai Aruthu
      Anuthinam Ennai Kaappavar
    3. Patchikira Akkiniyae
      Theemaigalai Paaratha
      Sutha Dhaivam Neer Aiya – 2
      Vaanam Singasanam
      Boomi Paathapadi – 2
      Agilamae Potruthu Potruthu Potruthu
      Unnadha Dhevanae
  • Seerthiriyega Vasthe Namo Namo

    சீர்திரியேக வஸ்தே, நமோ நமோ, நின்
    திருவடிக்கு நமஸ்தே, நமோ நமோ!

    பார்படைத்தாளும் நாதா,
    பரம சற்பிரசாதா,
    நாருறுந தூயவேதா, நமோ நமோ நமோ! – சீர்

    1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்
      தாங்கி ஆதரிப்போனே – நமோ நமோ!
      சொந்தக் குமாரன் தந்தாய்,
      சொல்லரும் நலமீந்தாய்,
      எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ – சீர்
    2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புது
      எருசலேம் நகர்ராசா நமோ நமோ!
      எங்கும் நின் அரசேற,
      எவரும் நின் புகழ்கூற,
      துங்க மந்தையிற் சேர, நமோ நமோ நமோ – சீர்
    3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ, திட
      பலமளித் தெமைக்காவா, நமோ நமோ!
      கரிசித்துத்தா நற்புத்தி,
      கபடற்ற மனசுத்தி,
      திருமொழி பற்றும்பக்தி, நமோ நமோ நமோ – சீர்

    Seerthiriyaeka Vasthae, Namo Namo, Nin
    Thiruvatikku Namasthae, Namo Namo!

    Paarpataiththaalum Naathaa,
    Parama Sarpirasaathaa,
    Naaruruna Thooyavaethaa, Namo Namo Namo! – Seer

    1. Thanthaip Paraaparanae Namo Namo, Emaith
      Thaangi Aatharipponae – Namo Namo!
      Sonthak Kumaaran Thanthaay,
      Sollarum Nalameenthaay,
      Enthavir Pokkumenthaay, Namo Namo Namo – Seer
    2. Engal Pavaththinaasaa Namo Namo, Puthu
      Erusalaem Nakarraasaa Namo Namo!
      Engum Nin Arasera,
      Evarum Nin Pukalkoora,
      Thunga Manthaiyir Sera, Namo Namo Namo – Seer
    3. Parisuththa Aavithaevaa Namo Namo, Thida
      Palamalith Themaikkaavaa, Namo Namo!
      Karisiththuththaa Narpuththi,
      Kapadatta Manasuththi,
      Thirumoli Pattumpakthi, Namo Namo Namo – Seer
  • Seer Yesu Naathanukku

    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
    திரியேக நாதனுக்கு சுபமங்களம்
    பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
    நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு

    1. ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
      அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
      நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
      ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
    2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
      வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
      கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு
      கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
    3. பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
      பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
      சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
      பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு

    Seer Yesu Naathanukku Jeyamangalam Aathi
    Thiriyaeka Naathanukku Supamangalam
    Paaraetru Neethanukku Parama Porpaathanukku
    Naeraetru Pothanukku Niththiya Sangathanukku

    1. Aathi Saru Vaesanukku Eesanukku Mangalam
      Akilap Pirakaasanukku Naesanukku Mangalam
      Neethiparan Paalanukku Niththiya Kunnaalanukku
      Othum Anukoolanukku Uyar Manuvaelanukku
    2. Maanaapi Maananukku Vaananukku Mangalam
      Valar Kalaik Kiyaananukku Njaananukku Mangalam
      Kaanaan Nal Thaeyanukkuk Kanni Mariseyanukku
      Konaar Sakaayanukku Kootru Peththa Laeyanukku
    3. Paththu Latchanaththanukkuch Suththanukku Mangalam
      Parama Pathaththanukku Niththanukku Mangalam
      Saththiya Visthaaranukkuch Saruvaathi Kaaranukku
      Paththar Upakaaranukkup Parama Kumaaranukku
  • Sarvalogathin Athibathi

    சர்வ லோகத்தின் அதிபதியே
    எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே – 2
    என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்
    எல்லாமே நீர்தானய்யா
    என் பெலனும் அரணும் கோட்டையும்
    துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா

    துதி உமக்கே தேவா துதி உமக்கே
    விண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே – 2

    1. சர்வ சிருஷ்டிப்பின் தேவனே
      சகல அதிகாரம் உடையவரே – 2
      சத்தியம் நிறைந்த மகத்துவரே
      பாதாளம் வென்ற பரிசுத்தரே – 2
    2. சதா காலமும் வாழ்பவரே
      மரணமே இல்லாதவரே – 2
      மரணத்தையே வென்றவர்
      சரித்திரம் படைத்தவர் – 2

    Sarva Logathin Athibathiyae
    Enthan Ullathil Sonthamaanire – 2
    En Aasaiyum Paasamum Ekkamum
    Thedalum Ellame Neerthanaiya
    En Bellanum Aaranum Kottaiyum Thurugamum
    Nambikkaiyum Neerthanaiya

    Thuthi Umakke Theva Thuthi Ummakke
    Vinnaiyum Mannaiyum Azhbavarke – 2

    1. Sarva Sirusthippin Thevanae
      Sagala Athigaaram Udaiyavarae – 2
      Sattiyam Niraintha Magathuvarae
      Pathalam Vendra Parisutharae – 2
    2. Sathaa Kaalamum Vaazhbavare
      Maranamae Illathavarae – 2
      Maranathaiye Vendravar
      Sarithiram Padaithavar – 2
  • Sarva Valla Naamam

    சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – 4
    கட்டுகளை அறுத்திடும் நாமம் இது
    தடைகளை தகர்த்திடும் நாமம் இது – 2

    துதியினால் யுத்தம் செய்வோம்
    ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
    அறிக்கையால் யுத்தம் செய்வோம்
    இப்படிதான் யுத்தம் செய்வோம் – 2

    சூழ்நிலைகளை பார்க்கிலும்
    என் தேவன் பெரியவர்
    பெலவீனங்களைப் பார்க்கிலும்
    என் தேவன் பெரியவர் – 2 – துதியினால்


    Sarva Valla Naamam Yesuvin Naamam – 4
    Katugalai Aruthidum Naamam Edhae
    Thadaigalai Thagarthidum Naamam Edhae – 2

    Thudhiyinaal Yutham Seivom
    Jebathinaal Yutham Seivom
    Arikaiyaal Yutham Seivom
    Ipadidhaan Yutham Seivom – 2

    Suzhilnilaigalai Paarkilum
    En Dhevan Periyavar
    Belavinangalai Paarkilum
    En Dhevan Periyavar – 2 – Thudhiyinaal

  • Saruva Logathiba Namaskaram

    1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்
      சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
      தரை, கடல், உயிர்,
      வான், சகலமும் படைத்த
      தயாபர பிதாவே, நமஸ்காரம்
    2. திரு அவதாரா, நமஸ்காரம்
      ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
      தரணியில் மனுடர்
      உயிர் அடைந்தோங்கத்
      தருவினில் மாண்டோர் நமஸ்காரம்
    3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்
      பரம சற்குருவே, நமஸ்காரம்
      அரூபியாய் அடியார்
      அகத்தினில் வசிக்கும்
      அரியசித்தே சதா நமஸ்காரம்
    4. முத்தொழிலோனே, நமஸ்காரம்
      மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்
      கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
      நித்திய திரியேகா, நமஸ்காரம்

    1. Saruva Lokaathipaa, Namaskaaram
      Saruva Sirushtikanae, Namaskaaram
      Tharai, Kadal, Uyir,
      Vaan, Sakalamum Pataiththa
      Thayaapara Pithaavae, Namaskaaram
    2. Thiru Avathaaraa, Namaskaaram
      Jekath Thiratchakanae, Namaskaaram
      Tharanniyil Manudar
      Uyir Atainthongath
      Tharuvinil Maanntoor Namaskaaram
    3. Parisuththa Aavi, Namaskaaram
      Parama Sarkuruvae, Namaskaaram
      Aroopiyaay Atiyaar
      Akaththinil Vasikkum
      Ariyasiththae Sathaa Namaskaaram
    4. Muththolilonae, Namaskaaram
      Moontilontonae, Namaskaaram
      Karththaathi Karththaa, Karunnaasamuththiraa,
      Niththiya Thiriyaekaa, Namaskaaram
  • Santhosam Ponguthey

    சந்தோஷம் பொங்குதே – 2
    சந்தோஷம் என்னில் பொங்குதே
    அல்லேலூயா
    இயேசு என்னை இரட்சித்தார்
    முற்றும் என்னை மாற்றினார்
    சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

    1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவ
      பழியதை சுமந்தலைந்தேன்
      அவர் அன்புக் குரலே
      அழைத்தது என்னையே
      அந்த இன்ப நாளில்
      எந்தன் பாவம் நீங்கிற்றே – 2
    2. சத்துரு சோதித்திட தேவ
      உத்தரவுடன் வருவான்
      ஆனால் இயேசு கைவிடார்
      தானாய் வந்து இரட்சிப்பார்
      இந்த நல்ல இயேசு எந்தன்
      சொந்தமானாரே – 2
    3. பாவத்தில் ஜீவிப்பவர்
      பாதாளத்தில் அழிந்திடுவார்
      நானோ பரலோகத்தில்
      நாளும் பாடல் பாடிடுவேன்
      என்னில் வாழும் இயேசுவோடு
      என்றும் வாழுவேன் – 2

    Santhosham Ponguthae – 2
    Santhosham Ennil Ponguthae
    Allaelooyaa
    Yesu Ennai Iratchiththaar
    Muttum Ennai Maattinaar
    Santhosham Pongip Ponguthae

    1. Vali Thappi Naan Thirinthaen – Paava
      Paliyathai Sumanthalainthaen
      Avar Anpuk Kuralae
      Alaiththathu Ennaiyae
      Antha Inpa Naalil
      Enthan Paavam Neengitte – 2
    2. Saththuru Sothiththida Thaeva
      Uththaravudan Varuvaan
      Aanaal Yesu Kaividaar
      Thaanaay Vanthu Iratchippaar
      Intha Nalla Yesu Enthan
      Sonthamaanaarae – 2
    3. Paavaththil Jeevippavar
      Paathaalaththil Alinthiduvaar
      Naano Paralokaththil
      Naalum Paadal Paadiduvaen
      Ennil Vaalum Yesuvodu
      Entum Vaaluvaen – 2
  • Samathana Prabuve

    சமாதான பிரபுவே சமாதான பிரபுவே
    என் இயேசு இராஜனே
    பேரின்ப நதியே பேரின்ப நதியே
    என் இயேசு இராஜனே – 2

    என் இயேசு இராஜனே – 2
    இராஜாதி இராஜாவே
    கர்த்தாதி கர்த்தாவே
    என் இயேசு இராஜனே – 2

    1.இரட்சிப்பின் ஊற்றிலே
    மகிழ்ச்சியின் தண்ணீரை
    மொண்டு கொள்வோமய்யா
    பேரின்ப நதியில்
    தாகம் தீர்த்திடும்
    ஜீவ தண்ணீர் நீரே
    தாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலை
    என் தெய்வம் நீர்தானய்யா – 2
    என் தெய்வம் நீர்தானய்யா – சமாதான

    2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்
    ஜீவ தண்ணீர் ஓடும்
    அமர்ந்த தண்ணீரண்டை
    நடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே
    சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்தி
    ஆயத்தம் செய்திடுவீர் – 2
    ஆயத்தம் செய்திடுவீர் – சமாதான

    3.தமது ஜனத்திற்கு
    பெலன் கொடுத்து
    சமாதானம் தந்திடுவீர்
    தமது ஜனத்தின் நிந்தைகளெல்லாம்
    நீக்கிடுவீரய்யா
    வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
    சிறுமையானவன் தாகம் தீரும் – 2
    சிறுமையானவன் தாகம் தீரும் – சமாதான


    Samadhana Prabhuvae Samadhana Prabhuvae
    En Yesu Rajanae
    Perinba Nathiyae Perinba Nathiyae
    En Yesu Rajanae – 2

    En Yesu Rajanae – 2
    Rajathi Rajave
    Karthathi Karthavae
    En Yesu Rajanae – 2

    1. Ratchipin Ootrilae
      Magilchiyin Thanneerai
      Mondu Kondomaiya
      Perinba Nathiyil
      Thaagam Theerthidum
      Jeeva Thanneer Neerae
      Thaagathai Theerthidum Uyarntha Kanmalai
      En Dhaivam Neer Thanaiya – 2
      En Dhaivam Neer Thanaiya – Samadhana
    2. Ummai Nammbugindra Idhayathil Yellam
      Jeeva Thanneer Oodum
      Amarntha Thanneerandai
      Nadathi Sendru Aathmavai Thetrineerae
      Sathrukkal Munnae Yenakkaga Oru Panthi
      Aayatham Seithiduveer – 2
      Aayatham Seithiduveer – Samadhana
    3. Thamathu Jenathirku Belan Koduthu
      Samathanam Thanthiduveer
      Thamathu Janathin Ninthaigal Yellam
      Neekiduveeraiya
      Varanda Nilathil Aarugal Oodum
      Sirumaiyanavan Thaagam Theerum – 2
      Sirumaiyanavan Thaagam Theerum – Samadhana