Category: Tamil Worship Songs Lyrics

  • Ennai Nadatthidume Ennai Kaathidume என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே

    என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே
    என்நேசர் என்னோடுண்டு

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    எல்ஷடாய் எல்ஷடாய்

    ஆபத்து நேரத்தில்
    என்னோடு இருந்து என்னை காத்துக்கொள்வார்
    எப்போதும் அவர்கண்கள்
    என்மேலே உள்ளதால் எனக்கு கவலை இல்லை

    வாக்குத்தத்தங்கள் எனக்கு செய்தவர்
    வாக்கை நிறைவேற்றுவார்
    என் பாவம் சுமைத்தீர்க்க
    தம் ரெத்தம் சிந்தீயே என்னை மீட்டுக்கொண்டார்


    Ennai Nadatthidume Ennai Kaathidume Lyrics in English

    ennai nadaththidumae ennai kaaththidumae
    ennaesar ennodunndu

    neer nallavar sarva vallavar
    elshadaay elshadaay

    aapaththu naeraththil
    ennodu irunthu ennai kaaththukkolvaar
    eppothum avarkannkal
    enmaelae ullathaal enakku kavalai illai

    vaakkuththaththangal enakku seythavar
    vaakkai niraivaettuvaar
    en paavam sumaiththeerkka
    tham reththam sintheeyae ennai meettukkonndaar

  • Ennai Nadathum Yesu என்னை நடத்தும் இயேசு

    என்னை நடத்தும் இயேசு நாதா
    உமக்கு நன்றி ஐயா
    எனக்குள் வாழும் எந்தன் நேசா
    உமக்கு நன்றி ஐயா

    ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    அழிவில் நின்று பாதுகாத்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    தேடி வந்தீர் பாட வைத்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    பாவமில்லா தூயவாழ்வு
    வாழச் செய்பவரே
    பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
    மலரச் செய்பவரே

    துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    உலகம் மாயை எல்லாம் மாயை
    உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்
    உறவு பாசம் குப்பையென்றறிந்து
    உம்மையே பின் தொடர்ந்தேன்


    Ennai Nadathum Yesu Lyrics in English

    ennai nadaththum Yesu naathaa
    umakku nanti aiyaa
    enakkul vaalum enthan naesaa
    umakku nanti aiyaa

    oliyaay vantheer valiyaith thantheer
    umakku nanti aiyaa
    alivil nintu paathukaaththeer
    umakku nanti aiyaa

    thaeti vantheer paada vaiththeer
    umakku nanti aiyaa
    oti oti ulaikkach seytheer
    umakku nanti aiyaa

    paavamillaa thooyavaalvu
    vaalach seypavarae
    poovaay valarnthu pooththuk kulungi
    malarach seypavarae

    thuyaram neekki aaruthal thantheer
    umakku nanti aiyaa
    pulampal maatti aanantham thantheer
    umakku nanti aiyaa

    kalakkam neekki kannnneer thutaiththeer
    umakku nanti aiyaa
    kavalai maatti karaththaal annaiththeer
    umakku nanti aiyaa

    ulakam maayai ellaam maayai
    unarnthaen unarnthu konntaen
    uravu paasam kuppaiyentarinthu
    ummaiyae pin thodarnthaen

  • Ennai nadathidum devan என்னை நடத்திடும் தேவன்

    என்னை நடத்திடும் தேவன்
    என்னோடு இருக்க
    பயமே எனக்கில்லையே
    நான் நம்பிடும் தேவன்
    என் துருகமாய் இருப்பதால்
    கலக்கமே எனக்கில்லையே

    பயமில்லை-2 பயமில்லையே
    நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
    பயமில்லை -2 பயமில்லையே
    நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே

    சிறு கூட்டமே நீ பயப்படாதே
    கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
    எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
    ஆவியானவர் கொடியேற்றுவார்

    பாதைகள் எங்கும் தடைகற்களோ
    தாமதம் மட்டும் பதிலானதோ
    நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
    நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே

    முந்தினதை நீ யோசிக்காதே
    பூர்வமானதை சிந்திக்காதே
    மேலானதை நீ சுதந்தரிக்க
    வேரூன்ற செய்வார் பயமில்லையே

    அல்லேலூயா -6
    ஒசன்னா -6


    Ennai nadathidum devan Lyrics in English

    ennai nadaththidum thaevan
    ennodu irukka
    payamae enakkillaiyae
    naan nampidum thaevan
    en thurukamaay iruppathaal
    kalakkamae enakkillaiyae

    payamillai-2 payamillaiyae
    nam saarpil karththar unndu payamillaiyae
    payamillai -2 payamillaiyae
    namakkaaka yuththam seyvar payamillaiyae

    sitru koottamae nee payappadaathae
    karththar entum nam thunnai nirkintar
    ethirikal vellam pol ethiraaka vanthaalum
    aaviyaanavar kotiyaettuvaar

    paathaikal engum thataikarkalo
    thaamatham mattum pathilaanatho
    naervaliyaay nammai nadaththidum thaevan
    nichchayam ndaththuvaar payamillaiyae

    munthinathai nee yosikkaathae
    poorvamaanathai sinthikkaathae
    maelaanathai nee suthantharikka
    vaeroonta seyvaar payamillaiyae

    allaelooyaa -6
    osannaa -6

  • Ennai Maravaathavarae என்னை மறவாதவரே

    என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே
    உம்மை நான் நம்புவேனைய்யா நேசர் இயேசய்யா
    உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேனைய்யா

    1. தாயானவள் தன் பாலனை மறந்தாலும் நான் மறவேனே
      உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே
      உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே
    2. இமைப்பொழுது எந்தன் முகத்தை மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்
      மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
      எந்தன் சமாதானம் உன்னைவிட்டு விலகிவிடாது
    3. உன் தாய் உன்னை தேற்றிடும் போல நான் உன்னை தேற்றிடுவேனே
      தண்ணீரைக் கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்
      அக்கினியில் நடக்கும் போதும் கூடவே நடப்பேன்

    Ennai Maravaathavarae Lyrics in

    ennai maravaathavarae ennil ninaivaanavarae
    ummai naan nampuvaenaiyyaa naesar iyaesayyaa
    uyirulla naalellaam naan nampuvaenaiyyaa

    1. thaayaanaval than paalanai maranthaalum naan maravaenae
      unnai enthan ullangaiyil varainthu vaiththaenae
      unnai maravaamal ennaalum ninaiththiduvaenae
    2. imaippoluthu enthan mukaththai maraiththaalum unakku iranguvaen
      malaikal vilaki parvathangal nilaipeyarnthaalum
      enthan samaathaanam unnaivittu vilakividaathu
    3. un thaay unnai thaettidum pola naan unnai thaettiduvaenae
      thannnneeraik kadakkum pothum unnudan iruppaen
      akkiniyil nadakkum pothum koodavae nadappaen
  • Ennai Marava Iyaesunatha என்னை மறவா இயேசுநாதா

    என்னை மறவா இயேசுநாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்

    1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
      வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
      ஆபத்திலே அரும் துணையே
      பாதைக்கு நல்ல தீபமதே
    2. பயப்படாதே வலக்கரத்தாலே
      பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
      பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
      பறிக்க இயலாதெவருமென்னை
    3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
      மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
      வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
      உன்னதா எந்தன் புகலிடமே
    4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
      தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
      அக்கினியின் மதிலாக
      அன்பரே என்னைக் காத்திடுமே
    5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
      ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
      எப்படியும் உம் வருகையிலே
      ஏழை என்னைச் சேர்த்திடும

    Ennai Marava Iyaesunatha Lyrics in English

    ennai maravaa Yesunaathaa
    unthan thayavaal ennai nadaththum

    1. valla jeeva vaakkuththaththangal
      varainthenakkaay thanthathaalae sthoththiram
      aapaththilae arum thunnaiyae
      paathaikku nalla theepamathae
    2. payappadaathae valakkaraththaalae
      paathukaappaen entathaalae sthoththiram
      paasam enmael neer vaiththathinaal
      parikka iyalaathevarumennai
    3. thaay than seyai maranthu vittalum
      maravaen unnai entathaalae sthoththiram
      varaintheeranto um ullangaiyil
      unnathaa enthan pukalidamae
    4. unnaith thoduvon en kannmanniyaith
      thoduvathaaka uraiththathaalae sthoththiram
      akkiniyin mathilaaka
      anparae ennaik kaaththidumae
    5. ennai muttum oppuviththaen
      aettu entum nadaththuveerae sthoththiram
      eppatiyum um varukaiyilae
      aelai ennaich serththiduma
  • Ennai Kandavarae Ennai என்னைக் கண்டவரே என்னை

    என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே
    என்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே

    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா

    Verse 1

    பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரே
    பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
    நெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரே
    நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே

    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா

    Verse 2

    கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே
    வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
    கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே
    புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே

    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா

    Verse 3

    தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
    மதில்களைத் தாண்டும்படி தூக்கிவிட்டீரே
    நெறிந்த நாணலைப் போல் வாழ்ந்து வந்தேனே
    எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே

    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா


    Ennai Kandavarae Ennai Lyrics in English

    ennaik kanndavarae ennaik kaannpavarae
    ennaik kaaththavarae ennaik kaappavarae

    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa

    Verse 1

    paaviyaay iruntha ennaik kanndu konnteerae
    paasamaay maarpodu annaiththuk konnteerae
    nerukkaththil iruntha ennaith thaeti vantheerae
    nerungi anpaaka serththuk konnteerae

    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa

    Verse 2

    kadantha kaalamellaam kaaththuk konnteerae
    varukira kaalaththilum kaaththuk kolveerae
    koduththa vaakkuththaththam poorththi seytheerae
    puthiya vaakkuruthi koduththu vittirae

    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa

    Verse 3

    thallaati nadantha ennaith thaeti vantheerae
    mathilkalaith thaanndumpati thookkivittirae
    nerintha naanalaip pol vaalnthu vanthaenae
    eriyum theeppilampaay maatti vittirae

    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa

  • Ennai kandar yesu என்னைக் கண்டார் – இயேசு

    என்னைக் கண்டார் – இயேசு
    என்னைக் கண்டார் – உள்ளங்கையில்
    என்னை வரைந்து கொண்டார்
    கண்ணுக்குள்ளே என்னை வைத்து
    கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்

    இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
    இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்

    கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்
    சத்துருவை அவர் துரத்தி விட்டார்
    சாபத்தையும் வியாதியையும்
    சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார்

    மீட்டுக் கொண்டார் – என்னை
    மீட்டுக் கொண்டார் – பாவத்திலிருந்தென்னை
    மீட்டுக் கொண்டார்
    சொந்த பிள்ளை என்றும் என்னை
    உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார்

    ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
    சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார்
    உலகத்தின் மேல் ஜெயமெடுக்க
    விசுவாசத்தின் வலிமை தந்தார்


    Ennai kandar yesu Lyrics in English

    ennaik kanndaar – Yesu
    ennaik kanndaar – ullangaiyil
    ennai varainthu konndaar
    kannnukkullae ennai vaiththu
    kataisi varaikkum kaaththuk kolvaar

    Yesu en thaevan Yesu en jeevan
    Yesu thaan enakku ellaam ellaam

    kattavilththaar ennai kattavilththaar
    saththuruvai avar thuraththi vittar
    saapaththaiyum viyaathiyaiyum
    saavinaal ventu jeyam koduththaar

    meettuk konndaar – ennai
    meettuk konndaar – paavaththilirunthennai
    meettuk konndaar
    sontha pillai entum ennai
    uruthippaduththa tham aavi thanthaar

    jeyam thanthaar Yesu jeyam thanthaar
    saththuruvin mael avar jeyam thanthaar
    ulakaththin mael jeyamedukka
    visuvaasaththin valimai thanthaar

  • Ennai Kakavum என்னைக் காக்கவும்

    என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
    எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
    எனக்காய் யுத்தம் செய்து
    இரட்சித்து வழி நடத்தி
    என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்

    1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
      ஏழு வழியாக துரத்திடுவீர்
    2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
      எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
    3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
      விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
    4. நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
      கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
    5. காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
      கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
    6. வற்றாத நீருற்றாய் ஓடச்செய்தீர்
      வளமான தோட்டமாக மாற்றுகிறீர்

    Ennai Kakavum – என்னைக் காக்கவும் Lyrics in English

    Ennai Kakavum
    ennaik kaakkavum paralokam serkkavum
    enakkul iruppavarae sthoththiram
    enakkaay yuththam seythu
    iratchiththu vali nadaththi
    ennodu varupavarae sthoththiram

    1. oru valiyaay ethiri oti vanthaal
      aelu valiyaaka thuraththiduveer
    2. varatchi kaalangalil thirupthiyaakki
      elumpukalai valimai aakkukireer
    3. porida kaikalukku payirsi thanthu
      viralkalai yuththam seyya palakkukireer
    4. nalinthorai nalvaakkaal ookkuvikka
      kalvimaan naavai enakkuth thantheerae
    5. kaalai thorum ennai eluppukireer
      karththar um kural kaetka paesukireer
    6. vattaாtha neeruttaாy odachcheytheer
      valamaana thottamaaka maattukireer
  • Ennai Kaetkaamalae Unthan Anpai என்னை கேட்காமலே உந்தன் அன்பை

    என்னை கேட்காமலே உந்தன் அன்பை
    எனக்களித்தாய் என்னிறைவா

    1. அன்பின் கனலை அளித்திடவே
      உழைப்பும் உறவும் உனக்கே தருவேன்
      என் ஜீவன் உனக்கல்லவா
      நான் தேடும் நிறைவல்லவா
    2. விடியல் கனவு நனவாகிட
      உரிமை யுகமே நிஜமாகிட
      என் தேடல் நீயல்லவா
      என் வாழ்வின் பொருளல்லவா

    Ennai Kaetkaamalae Unthan Anpai Lyrics in English

    ennai kaetkaamalae unthan anpai
    enakkaliththaay enniraivaa

    1. anpin kanalai aliththidavae
      ulaippum uravum unakkae tharuvaen
      en jeevan unakkallavaa
      naan thaedum niraivallavaa
    2. vitiyal kanavu nanavaakida
      urimai yukamae nijamaakida
      en thaedal neeyallavaa
      en vaalvin porulallavaa
  • Ennai kaappavar என்னை காப்பவர்

    என்னை காப்பவர் மிகவும் நல்லவரே
    என்னை காப்பவர் சர்வ வல்லவரே
    என்னை காப்பவர் உறங்குவதில்லையே
    என்னை காப்பவர் கைவிடுவதில்லையே
    என்னை காப்பவர் தள்ளாடவொட்டாரே

    காத்தவர் காப்பாரே கருனையாலே
    காத்தவர் காப்பாரே அன்பினாலே

    பாவ சாபத்தில் சிக்கின என்னை
    திரு இரத்தம் சிந்தி இரட்சித்தீரே
    தேவாட்டுகுட்டி நீரே
    என் பாவம் போக்கினீரே
    இரட்சகர் இயேசு நீரே

    வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்
    வழிகாட்டி என்னை மீட்டு காத்தீரே
    நீர் வல்ல மீட்பரே
    என் நல்ல மேய்ப்பரே
    எனை வழி நடத்தும் தெய்வம் நீரே

    சுகம் இல்லாமல் துன்பப்பட்டேன்
    உம் வார்த்தையை அனுப்பி
    என்னை வாழவைத்தீரே
    என் நோய்கள் சுமந்தீரே
    என் பலிகள் ஏற்றீரே
    பரிகாரி கர்த்தர் நீரே

    தரித்திரனாய் இருந்த என்னை
    பெரும் சீமானாய் மாற்றி மகிழ்ந்தீரே
    உம் துதிகள் பாடுவேன்
    தினம் அகமகிழ்வேன்
    ஐசுவரிய சம்மன்னர் நீரே


    Ennai kaappavar Lyrics in English

    ennai kaappavar mikavum nallavarae
    ennai kaappavar sarva vallavarae
    ennai kaappavar uranguvathillaiyae
    ennai kaappavar kaividuvathillaiyae
    ennai kaappavar thallaadavottarae

    kaaththavar kaappaarae karunaiyaalae
    kaaththavar kaappaarae anpinaalae

    paava saapaththil sikkina ennai
    thiru iraththam sinthi iratchiththeerae
    thaevaattukutti neerae
    en paavam pokkineerae
    iratchakar Yesu neerae

    vali theriyaamal alainthu thirinthaen
    valikaatti ennai meettu kaaththeerae
    neer valla meetparae
    en nalla maeypparae
    enai vali nadaththum theyvam neerae

    sukam illaamal thunpappattaen
    um vaarththaiyai anuppi
    ennai vaalavaiththeerae
    en Nnoykal sumantheerae
    en palikal aettaீrae
    parikaari karththar neerae

    thariththiranaay iruntha ennai
    perum seemaanaay maatti makilntheerae
    um thuthikal paaduvaen
    thinam akamakilvaen
    aisuvariya sammannar neerae