Category: Tamil Worship Songs Lyrics

  • En meetpar en nesar என் மீட்பர் என் நேசர்

    என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
    எப்போது நான் நிற்கப் போகிறேன்
    ஏங்குகிறேன் உம்மைக் காண
    எப்போது உம் முகம் காண்பேன்
    தாகமாய் இருக்கிறேன்
    அதிகமாய்த் துதிக்கிறேன் -நான்

    மானானது நீரோடையை
    தேடி தவிப்பது போல்
    என் நெஞ்சம் உம்மைக்காண
    ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்

    பகற்காலத்தில் உம் பேரன்பை
    கட்டளையிடுகிறீர்
    இராக்காலத்தில் உம் திருப்பாடல்
    என் நாவில் ஒலிக்கிறது

    ஆத்துமாவே நீ கலங்குவதேன்
    நம்பிக்கை இழப்பதேன் -என்
    கர்த்தரையே நீ நம்பியிரு
    அவர் செயல்களை நினைத்துத் துதி
    ஜீவனுள்ள தேவன்
    அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன்


    En meetpar en nesar Lyrics in English
    en meetpar en naesar sannithiyil
    eppothu naan nirkap pokiraen
    aengukiraen ummaik kaana
    eppothu um mukam kaannpaen
    thaakamaay irukkiraen
    athikamaayth thuthikkiraen -naan

    maanaanathu neerotaiyai
    thaeti thavippathu pol
    en nenjam ummaikkaana
    aengith thavikkirathu – thaakamaay

    pakarkaalaththil um paeranpai
    kattalaiyidukireer
    iraakkaalaththil um thiruppaadal
    en naavil olikkirathu

    aaththumaavae nee kalanguvathaen
    nampikkai ilappathaen -en
    karththaraiyae nee nampiyiru
    avar seyalkalai ninaiththuth thuthi
    jeevanulla thaevan
    avar seekkiram varukiraar -aengukiraen

  • En meetpar என் மீட்பர்

    என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
    எனக்கென்ன ஆனந்தம்
    என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்
    எனக்கென்ன பேரின்பம்

    பூலோகமெங்கும் ஓர் செய்தி
    மேலோகமெங்கும் விண் செய்தி
    நரர் வாழ்த்திட பெரும் நீதி
    நீர் வாரும் மெய் ஜோதி

    உந்தன் மகிமையை என்றென்றும்
    சொல்வேன் உந்தன் கிருபையின்
    மேன்மையைக் கண்டேன்
    நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
    பரலோக வாழ்வின்றே

    ஆ அல்லேலூயா துதி பாடு
    அன்று அமலன் பிறந்தார் பாடு
    மோட்ச வாசலை திறந்தார் பாடு
    எந்நாளும் புகழ் பாடு


    En meetpar Lyrics in English
    en meetpar kiristhu piranthaar
    enakkenna aanantham
    en meetpar kiristhu uthiththaar
    enakkenna paerinpam

    poolokamengum or seythi
    maelokamengum vinn seythi
    narar vaalththida perum neethi
    neer vaarum mey jothi

    unthan makimaiyai ententum
    solvaen unthan kirupaiyin
    maenmaiyaik kanntaen
    niththiya jeeva kireedam enathinte
    paraloka vaalvinte

    aa allaelooyaa thuthi paadu
    antu amalan piranthaar paadu
    motcha vaasalai thiranthaar paadu
    ennaalum pukal paadu

  • En Meethu Anbu Koornthu என்மீது அன்புகூர்ந்து

    என்மீது அன்புகூர்ந்து
    பலியானீர் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி
    கழுவினீர் குற்றம் நீங்க
    பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட

    ஆராதனை உமக்கே
    அனுதினமும் உமக்கே

    1. பிதாவான என் தேவனே
      தகப்பனே என் தந்தையே
      மாட்சிமையும் மகத்துவமும்
      உமக்குத்தானே என்றென்றைக்கும்
      வல்லமையும் மகிமையும்
      தகப்பனே உமக்குத்தானே
    2. உம் இரத்தத்தால் பிதாவோடு
      ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
      கறைபடாத மகன(ள)க
      நிறுத்தி தினம் பார்க்கின்றீர்
    3. மாம்சமான திரையை அன்று
      கிழித்து புது வழி திறந்தீர் – உம்
      மகா மகா பரிசுத்த உம்
      திருச்சமுகம் நுழையச் செய்தீர்
    4. உம் சமூகம் நிறுத்தினரே
      உமது சித்தம் நான் செய்திட
      அரசராக குருவாக
      ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய

    En Meethu Anbu Koornthu Lyrics in English
    En Meethu Anbu Koornthu

    enmeethu anpukoornthu
    paliyaaneer siluvaiyilae
    enakkaay iraththam sinthi
    kaluvineer kuttam neenga
    piriththeduththeer pirakkum munnaal
    umakkentu vaalnthida

    aaraathanai umakkae
    anuthinamum umakkae

    1. pithaavaana en thaevanae
      thakappanae en thanthaiyae
      maatchimaiyum makaththuvamum
      umakkuththaanae ententaikkum
      vallamaiyum makimaiyum
      thakappanae umakkuththaanae
    2. um iraththaththaal pithaavodu
      oppuravaakki makilachcheytheer
      karaipadaatha makana(la)ka
      niruththi thinam paarkkinteer
    3. maamsamaana thiraiyai antu
      kiliththu puthu vali thirantheer – um
      makaa makaa parisuththa um
      thiruchchamukam nulaiyach seytheer
    4. um samookam niruththinarae
      umathu siththam naan seythida
      arasaraaka kuruvaaka
      aerpaduththineer ooliyam seyya
  • En Manathu Thudikkuthu என் மனது துடிக்குது

    என் மனது துடிக்குது
    குலை பதைத்து நோகும்
    தெய்வ மைந்தனின் சவம்
    கல்லறைக்குப் போகும்

    ஆ அவரே மரத்திலே
    அறையப்பட்டிறந்தார்
    கர்த்தர்தாமே பாவியின்
    சாபத்தைச் சுமந்தார்

    என் பாவத்தால் என் தீங்கினால்
    இக்கேடுண்டாயிருக்கும்
    ஆகையால் என்னுள்ளத்தில்
    தத்தளிப்பெடுக்கும்

    என் ஆண்டவர் என் ரட்சகர்
    வதைந்த மேனியாக
    ரத்தமாய்க் கிடக்கிறார்
    என் ரட்சிப்புக்காக

    வெட்டுண்டோரே ஆ உம்மையே
    பணிந்தென் ஆவி பேணும்
    ஆகிலும் என் நிமித்தம்
    நான் புலம்பவேணும்

    குற்றமற்ற கர்த்தாவுட
    அனலாம் ரத்தம் ஊறும்
    மனஸ்தாபமின்றி ஆர்
    அதைப் பார்க்கக்கூடும்

    ஆ இயேசுவே என் ஜீவனே
    நீர் கல்லறைக்குள்ளாக
    வைக்கப்பட்டதைத் தினம்
    நான் சிந்திப்பேனாக

    நான் மிகவும் எந்நேரமும்
    என் மரணநாள் மட்டும்
    என் கதியாம் இயேசுவே
    உம்மை வாஞ்சிக்கட்டும்


    En Manathu Thudikkuthu Lyrics in English
    en manathu thutikkuthu

    kulai pathaiththu Nnokum

    theyva mainthanin savam

    kallaraikkup pokum

    aa avarae maraththilae

    araiyappattiranthaar

    karththarthaamae paaviyin

    saapaththaich sumanthaar

    en paavaththaal en theenginaal

    ikkaedunndaayirukkum

    aakaiyaal ennullaththil

    thaththalippedukkum

    en aanndavar en ratchakar

    vathaintha maeniyaaka

    raththamaayk kidakkiraar

    en ratchippukkaaka

    vettunntoorae aa ummaiyae

    panninthen aavi paenum

    aakilum en nimiththam

    naan pulampavaenum

    kuttamatta karththaavuda

    analaam raththam oorum

    manasthaapaminti aar

    athaip paarkkakkoodum

    aa Yesuvae en jeevanae

    neer kallaraikkullaaka

    vaikkappattathaith thinam

    naan sinthippaenaaka

    naan mikavum ennaeramum

    en marananaal mattum

    en kathiyaam Yesuvae

    ummai vaanjikkattum

  • En Maeypparae Iyaesaiyaa என் மேய்ப்பரே இயேசையா

    என் மேய்ப்பரே இயேசையா
    என்னோடு இருப்பவரே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – (2)

    1. பசும்புல் மேய்ச்சலிலே
      இளைப்பாறச் செய்கின்றீர்
    2. அமர்ந்த தண்ணீரண்டை
      அநுதினம் நடத்துகிறீர்
    3. ஆத்துமா தேற்றுகிறீர்
      அபிஷேகம் செய்கின்றீர்
    4. கோலும் கைத்தடியும்
      தினமும் தேற்றிடுமே
    5. நீதியின் பாதையிலே
      நித்தமும் நடத்துகிறீர்
    6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
      நடந்தாலும் பயமில்லையே
    7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
      கிருபை என்னைத் தொடரும்

    En Maeypparae Iyaesaiyaa Lyrics in English
    en maeypparae iyaesaiyaa
    ennodu iruppavarae
    sthoththiram sthoththiram – (2)

    1. pasumpul maeychchalilae
      ilaippaarach seykinteer
    2. amarntha thannnneeranntai
      anuthinam nadaththukireer
    3. aaththumaa thaettukireer
      apishaekam seykinteer
    4. kolum kaiththatiyum
      thinamum thaettidumae
    5. neethiyin paathaiyilae
      niththamum nadaththukireer
    6. irul soolntha pallaththaakkil
      nadanthaalum payamillaiyae
    7. jeevanulla naatkalellaam
      kirupai ennaith thodarum
  • En Kirubai Unakku என் கிருபை உனக்கு

    என் கிருபை உனக்குப் போதும்
    பலவீனத்தில் என் பெலமோ
    பூரணமாய் விளங்கும்

    பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
    எனக்கே நீ சொந்தம்
    பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
    எனக்கே நீ சொந்தம்

    உலகத்திலே துயரம் உண்டு
    திடன் கொள் என் மகனே
    கல்வாரி சிலுவையினால்
    உலகத்தை நான் ஜெயித்தேன்

    உனக்கெதிரான ஆயுதங்கள்
    வாய்க்காதே போகும்
    இருக்கின்ற பெலத்தோடு
    தொடர்ந்து போராடு

    எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
    ஒடுங்கி நீ போவதில்லை
    கலங்கினாலும் மனம் முறிவதில்லை
    கைவிடப் படுவதில்லை


    En Kirubai Unakku Lyrics in English
    en kirupai unakkup pothum
    palaveenaththil en pelamo

    pooranamaay vilangum

    payappadaathae unnai meettuk konntaen

    enakkae nee sontham

    peyarittu naan unnai alaiththaen

    enakkae nee sontham

    ulakaththilae thuyaram unndu

    thidan kol en makanae

    kalvaari siluvaiyinaal

    ulakaththai naan jeyiththaen

    unakkethiraana aayuthangal

    vaaykkaathae pokum

    irukkinta pelaththodu

    thodarnthu poraadu

    ellaa vakaiyilum nerukkappattum

    odungi nee povathillai

    kalanginaalum manam murivathillai

    kaividap paduvathillai

  • En Karthar Seiyya என் கர்த்தர் செய்ய

    என் கர்த்தர் செய்ய நினைத்தது
    அது தடைபடாது
    என் தேவன் என்னை ஆசீர்வதித்தால்
    தடுப்பது யாரு

    என் தேவனால் நான் உயருவேன்
    என் தேவனால் நான் பெருகுவேன்
    நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்
    சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனை
    சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும்

    நான் கலங்கி நின்றபோது
    கலங்காதே என்றாரே
    நான் தனித்து நின்றபோது
    நான் இருக்கிறேன் என்றாரே
    கர்த்தர் எந்தன் கரம் பிடித்து
    நான் உன்னை விட்டு விலகேன்
    நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே

    நான் முடியாது என்றபோது
    முடியும் என்றாரே
    நான் மனம் தளர்ந்த போது
    திடன்கொள் என்றாரே
    கர்த்தர் எந்தன் அருகில் நின்று
    நான் உனக்காய் யாவும் செய்வேன்
    உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே


    En Karthar Seiyya Lyrics in English
    en karththar seyya ninaiththathu
    athu thataipadaathu
    en thaevan ennai aaseervathiththaal
    thaduppathu yaaru

    en thaevanaal naan uyaruvaen
    en thaevanaal naan perukuvaen
    nichchayam nadakkum nichchayam nadakkum
    suttiyulla kannkal athai paarkkum – enai
    suttiyulla kannkal athai paarkkum

    naan kalangi nintapothu
    kalangaathae entarae
    naan thaniththu nintapothu
    naan irukkiraen entarae
    karththar enthan karam pitiththu
    naan unnai vittu vilakaen
    naan unnai entum kaivitaen entarae

    naan mutiyaathu entapothu
    mutiyum entarae
    naan manam thalarntha pothu
    thidankol entarae
    karththar enthan arukil nintu
    naan unakkaay yaavum seyvaen
    un thaevai paarththuk kolvaen entarae

  • En Karam Pidithu Enai Nadathu என் கரம் பிடித்து எனை நடத்து

    என் கரம் பிடித்து எனை நடத்து
    என்னுடன் நடந்து வழி நடத்து
    என் கரம் பிடித்து எனை நடத்து
    வருவாய் இயேசுவே வழி துணையே
    என் வாழ்கை பயணம் முழுவதுமே
    என் கரம் பிடித்து எனை நடத்து

    1. இருளின் ஆட்சி தொடங்கிவிட
      என் இதயம் சோர்ந்து தளர்ந்துவிட (2)
      என்னுடன் நீயும் இல்லாமல்
      வேறு எங்கோ போவது சரிதானா?
      எங்கோ போவது சரிதானா?
      என் கரம் பிடித்து எனை நடத்து
    2. என்னுடன் நீயும் நடந்து வந்தால்
      இங்கு எல்லாம் அழகாய் மாறிவிடும் (2)
      என்னுடன் நீயும் இல்லையென்றால்
      என் உலகே இருளில் மூழ்கி விடும்
      உலகே இருளில் மூழ்கி விடும்
      என் கரம் பிடித்து எனை நடத்து
      என்னுடன் நடந்து வழி நடத்து
      என் கரம் பிடித்து எனை நடத்து

    En Karam Pidithu Enai Nadathu Lyrics in English
    en karam pitiththu enai nadaththu

    ennudan nadanthu vali nadaththu

    en karam pitiththu enai nadaththu

    varuvaay Yesuvae vali thunnaiyae

    en vaalkai payanam muluvathumae

    en karam pitiththu enai nadaththu

    1. irulin aatchi thodangivida

    en ithayam sornthu thalarnthuvida (2)

    ennudan neeyum illaamal

    vaetru engaோ povathu sarithaanaa?

    engaோ povathu sarithaanaa?

    en karam pitiththu enai nadaththu

    1. ennudan neeyum nadanthu vanthaal

    ingu ellaam alakaay maarividum (2)

    ennudan neeyum illaiyental

    en ulakae irulil moolki vidum

    ulakae irulil moolki vidum

    en karam pitiththu enai nadaththu

    ennudan nadanthu vali nadaththu

    en karam pitiththu enai nadaththu

  • En Kanmalaiyum En Meetparumanavare என் கன்மலையும் என் மீட்பருமானவரே

    பல்லவி

    என் கன்மலையும் என் மீட்பருமானவரே

    என் வாயின் வார்த்தைகளும்

    என் இதயத்தின் தியானங்களும்

    உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக– என்

    சரணங்கள்

    1. கர்த்தாவே உமது பாதையில் நடக்க கருணை கூர்ந்திடுமே வேதத்தை தியானிக்க மதுரமானது பேதையை ஞானி ஆக்கிடுமே (2) – என்
    2. என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே எல்லாம் செய்ய பெலன் உண்டு எந்தன் குறைகள் யாவுமே நீங்கும் எந்தன் இயேசுவின் கிருபையாலே(2) – என்

    En Kanmalaiyum En Meetparumanavare Lyrics in English
    pallavi

    en kanmalaiyum en meetparumaanavarae

    en vaayin vaarththaikalum

    en ithayaththin thiyaanangalum

    um samookaththil preethiyaay iruppathaaka– en

    saranangal

    1. karththaavae umathu paathaiyil nadakka karunnai koornthidumae vaethaththai thiyaanikka mathuramaanathu paethaiyai njaani aakkidumae (2) – en
    2. ennaip pelappaduththum kiristhuvaalae ellaam seyya pelan unndu enthan kuraikal yaavumae neengum enthan Yesuvin kirupaiyaalae(2) – en
  • En Kanmalai En Kottaium என் கன்மலை என் கோட்டையும்

    என் கன்மலை என் கோட்டையும்
    என் துருகமும் நீரே
    நான் நம்பிடும் என் நம்பிக்கை
    என் அடைக்கலம் நீரே –(2)

    போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
    உம்மை வணங்குவேன் ராஜா – (2)

    1. அருமையானவர் நீரே நீரே
      இனிமையானவர் நீரே நீரே
      இன்பமானவர் நீரே நீரே
      மதுரமானவர் நீரே நீரே -(2)
    2. சாரோனின் ரோஜா நீரே நீரே
      லீலி புஷ்பமும் நீரே நீரே
      ஆலோசனைக்கர்த்தர் நீரே நீரே
      சமாதானப்பிரபு நீரே நீரே -(2)
    3. பூரண அழகின் தேவன் நீரே,
      பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே
      ஆத்ம நேசர் நீரே நீரே
      என்னை நேசிக்கும் இயேசு நீரே -(2)

    En Kanmalai En Kottaium Lyrics in English
    en kanmalai en kottaைyum
    en thurukamum neerae
    naan nampidum en nampikkai
    en ataikkalam neerae –(2)

    pottuvaen ummai vaalththuvaen
    ummai vananguvaen raajaa – (2)

    1. arumaiyaanavar neerae neerae
      inimaiyaanavar neerae neerae
      inpamaanavar neerae neerae
      mathuramaanavar neerae neerae -(2)
    2. saaronin rojaa neerae neerae
      leeli pushpamum neerae neerae
      aalosanaikkarththar neerae neerae
      samaathaanappirapu neerae neerae -(2)
    3. poorana alakin thaevan neerae,
      pathinaayirangalil siranthor neerae
      aathma naesar neerae neerae
      ennai naesikkum Yesu neerae -(2)