Category: Tamil Worship Songs Lyrics

  • Alaiyolir Arunanai Aninthiduma அலையொளிர் அருணனை அணிந்திடுமா

    அலையொளிர் அருணனை
    அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ

    வாழ்க்கையின் பேரரசி
    வழுவில்லா மாதரசி
    கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
    காலமும் காத்திடுவாய்

    அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
    பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
    வல்ல உன் மகனிடம் கேள்


    Alaiyolir Arunanai Aninthiduma Lyrics in English

    alaiyolir arunanai
    anninthidumaa mannimuti maamari nee

    vaalkkaiyin paerarasi
    valuvillaa maatharasi
    kalaiyellaam sernthelu thalaiviyum neeyallo
    kaalamum kaaththiduvaay

    akaala vaelaiyilae ammaa un karunnaiyaalae
    pollaatha ooliyin thollaikal neengida‌
    valla un makanidam kael

  • Alaiyinil Amaithi Vendum அலையினில் அமைதி வேண்டும்

    அலையினில் அமைதி வேண்டும் –
    இந்த அவனியில் நிம்மதி வேண்டும்
    வாழ்வில் சாந்தி வேண்டும் – அதை
    இறைமகன் இயேசுவே தரக் கூடும் – 2

    1. பருவத்தின் சிகரம் வாலிபம் – அது
      இன்பத்தை நாடும் காலம்!
      இளமையின் இராகமே மோகம்-அது
      சிந்தையை மயக்கும் ரோகம்!
      பாவம் விருந்தல்ல சாபம் – அந்த
      பாவத்தின் முடிவே நரகம்….
      நரகம் ! நரகம்! நரகம்! நரகம்!
    2. உலகம் கவர்ந்து ஈர்க்கும் – உன்னை
      உல்லாசப் பறவையாய் மாற்றும்
      அற்பகால மாய சுகங்கள் – உன்
      எதிரியின் கண்ணி வெடிகள்
      பாவத்தின் விலங்கு இறுகும் – தீய
      பழக்கமே உயிரைக் குடிக்கும்…
      குடிக்கும் ! அழிக்கும்! ஒழிக்கும்!
      சிதைக்கும்!
    3. உலகின் அதிபதி சாத்தான் – அவன்
      பொய்யை தானே விதைப்பான்
      மனிதரைக் கொல்லும்
      மாபாதகன்-அவன் இரக்கமில்லாத
      வஞ்சகன் மானம் இழக்கச்
      செய்து – மன நிம்மதி
      கெடுப்பான்…. அரக்கன்!
      கெடுப்பான்! சிதைப்பான்!

    ஒழிப்பான்! அழிப்பான்!


    Alaiyinil Amaithi Vendum Lyrics in English

    alaiyinil amaithi vaenndum –
    intha avaniyil nimmathi vaenndum
    vaalvil saanthi vaenndum – athai
    iraimakan Yesuvae tharak koodum – 2

    1. paruvaththin sikaram vaalipam – athu
      inpaththai naadum kaalam!
      ilamaiyin iraakamae mokam-athu
      sinthaiyai mayakkum rokam!
      paavam virunthalla saapam – antha
      paavaththin mutivae narakam….
      narakam ! narakam! narakam! narakam!
    2. ulakam kavarnthu eerkkum – unnai
      ullaasap paravaiyaay maattum
      arpakaala maaya sukangal – un
      ethiriyin kannnni vetikal
      paavaththin vilangu irukum – theeya
      palakkamae uyiraik kutikkum…
      kutikkum ! alikkum! olikkum!
      sithaikkum!
    3. ulakin athipathi saaththaan – avan
      poyyai thaanae vithaippaan
      manitharaik kollum
      maapaathakan-avan irakkamillaatha
      vanjakan maanam ilakkach
      seythu – mana nimmathi
      keduppaan…. arakkan!
      keduppaan! sithaippaan!
      olippaan! alippaan!
  • Alaiththavarae Alaiththavarae அழைத்தவரே அழைத்தவரே

    அழைத்தவரே அழைத்தவரே
    என் ஊழியத்தின் ஆதாரமே

    1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
      எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
      உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
      ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்
    2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
      பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
      ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
      அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே

    Alaiththavarae Alaiththavarae Lyrics in English
    alaiththavarae alaiththavarae
    en ooliyaththin aathaaramae

    1. eththanai ninthaikal eththanai thaevaikal
      enai soolanintalum ummai paarkkinten
      uththama ooliyan entu neer sollidum
      oru vaarththai kaettida unnmaiyaay odukiraen
    2. veennaana pukalchchikal enakku ingu vaenndaam
      pathavikal perumaikal oru naalum vaenndaam
      ooliyap paathaiyil ontu mattum pothumae
      appaa un kaalkalin suvadukal pothumae
  • Alaitheere Yesuve Anbodu Yennai Alaitheere அழைத்தீரே ஏசுவே அன்போடே என்னை

    அழைத்தீரே ஏசுவே
    அன்போடே என்னை அழைத்தீரே
    ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
    ஆயத்தமானேன் தேவே

    1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
      என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
      என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
      என் காரியமாக யாரை அழைப்பேன்
      என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே
    2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
      என்னை விட்டோடும் என் ஜனமே
      எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
      என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
      எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே
    3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
      ஆண்டவர் அன்பு பொங்கிடவே
      ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
      நல் பூரண தியாகப் பாதை நடந்தே
      நன்றியுடன் உழைப்பேன் — அழைத்தீரே
    4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
      ஏழை ஜனத்தை மீட்டிடுமே
      எந்தன் பித்த சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
      என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
      என்னையும் ஒப்படைத்தேன் — அழைத்தீரே
    5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
      ஆசாபாசங்கள் பெருகிடுதே
      ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
      ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
      ஆண்டவரே இரங்கும் — அழைத்தீரே
    6. பாக்கியமான சேவையிதே
      பாதம் பணிந்தே செய்திடுவேன்
      ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
      அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
      ஆண்டவரை அடைவேன் — அழைத்தீரே

    Alaitheere Yesuve Anbodu Yennai Alaitheere Lyrics in English

    alaiththeerae aesuvae

    anpotae ennai alaiththeerae

    aanndavar sevaiyilae marippaenae

    aayaththamaanaen thaevae

    1. en janam paavaththil maalkirathae

    en uyir thanthaen mannuyirkkae

    en thuyarathoniyo ithaiyaar intu kaetpaaro

    en kaariyamaaka yaarai alaippaen

    enteerae vanthaenitho — alaiththeerae

    1. ennathaan theengu naan ilaiththaen

    ennai vittaோdum en janamae

    eththanai nanmaikalo unakkaaka naan seythaenallo

    ente uraiththennai aengi alaiththeer

    eppati naan marappaen — alaiththeerae

    1. aathi visvaasam thangidavae

    aanndavar anpu pongidavae

    aathi apposthalarae upathaesam aliththanarae

    nal poorana thiyaakap paathai nadanthae

    nantiyudan ulaippaen — alaiththeerae

    1. enthan jepaththaik kaetdidumae

    aelai janaththai meetdidumae

    enthan piththa siththamae enthan pojanamum athuvae

    en pirananaikkooda naesiththidaamal

    ennaiyum oppataiththaen — alaiththeerae

    1. aadamparangal maettimaikal

    aasaapaasangal perukiduthae

    aayiram aayiramae naraka valipokintarae

    aa! neeraeyallaamal yaarunndu meetka

    aanndavarae irangum — alaiththeerae

    1. paakkiyamaana sevaiyithae

    paatham panninthae seythiduvaen

    aayul mutiyum varai kiristhaesu varukai varai

    anpin manaththaalmai unnmaiyum kaaththu

    aanndavarai ataivaen — alaiththeerae

  • Alaipin Kural Ketten En அழைப்பின் குரல் கேட்டேன்

    அழைப்பின் குரல் கேட்டேன் – என்

    ஆண்டவர் என உணர்ந்தேன்

    அருகினில் தயங்கி நடை பயின்றேன்

    பின்னே வா என முன் சென்றார்

    1. அறிவில் குறைந்தவன் நான் அன்றோ

    அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்

    அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே — பின்னே

    1. வலிமை குறைந்தவன் நான் அன்றோ

    அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்

    வலியவர் கொடுக்கினை வதைத்திடவே — பின்னே

    1. குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ

    அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்

    கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் — பின்னே


    Alaipin Kural Ketten En Lyrics in English

    alaippin kural kaettaen – en

    aanndavar ena unarnthaen

    arukinil thayangi natai payinten

    pinnae vaa ena mun sentar

    1. arivil kurainthavan naan anto

    athaith therinthum alaiththathu aen enten

    arinthavar serukkinai akattidavae — pinnae

    1. valimai kurainthavan naan anto

    athaith therinthum alaiththathu aen enten

    valiyavar kodukkinai vathaiththidavae — pinnae

    1. kuraikal nirainthavan naan anto

    athaith therinthum alaiththathu aen enten

    karuvil irunthunnaith therinthavar naan — pinnae

  • Alaikum Satham Ketkalaiyo அழைக்கும் சத்தம் கேட்கலையோ

    பல்லவி

    அழைக்கும் சத்தம் கேட்கலையோ

    அழைக்கும் இயேசுவை பார்க்கலையோ

    அனுபல்லவி

    மழைக்கும் ஆழிக்கும் மேலானவர்

    தழைக்கும் விருட்சத்தின் கருவானவர் – அவர

    சரணங்கள்

    1. காணாத ஆட்டை தேடினவர் கானகத்தில் குளிர் நீரானவர் மலைக்கும் நடுவில் நீர் உண்டு பண்ணி (2) மலைக்கும் விதமாய் இரட்சித்தவர் (2) – அவர்
    2. குஷ்டரோகியைக் குணமாக்கினவர் கஷ்ட நோய்களை எல்லாம் நீக்கினவர் துஷ்டனாய் நடந்த சவுல் என்ற நபரை (2) இஷ்டமாய் பவுலாய் மாற்றியவர் (2) – அவர்
    3. சீஷர்கள் கால்களைக் கழுவினவர் பாசமாய் சிறுவரை நேசித்தவர் நீசராம் நம்மை திருத்திட எண்ணி (2) கசையடி வசை மொழி ஏற்றிட்டவர் (2) – அவர்
    4. வருந்திய மக்களை மகிழ்வித்தவர் திருந்திய மக்களை இரட்சித்தவர் வேதனையோடு தொங்கிய போதும் (2) வேதனை செய்தவரை மன்னித்தவர் (2) – அவர்

    Alaikum Satham Ketkalaiyo Lyrics in English

    pallavi

    alaikkum saththam kaetkalaiyo

    alaikkum Yesuvai paarkkalaiyo

    anupallavi

    malaikkum aalikkum maelaanavar

    thalaikkum virutchaththin karuvaanavar – avara

    saranangal

    1. kaannaatha aattaை thaetinavar
      kaanakaththil kulir neeraanavar
      malaikkum naduvil neer unndu pannnni (2)
      malaikkum vithamaay iratchiththavar (2) – avar
    2. kushdarokiyaik kunamaakkinavar
      kashda Nnoykalai ellaam neekkinavar
      thushdanaay nadantha savul enta naparai (2)
      ishdamaay pavulaay maattiyavar (2) – avar
    3. seesharkal kaalkalaik kaluvinavar
      paasamaay siruvarai naesiththavar
      neesaraam nammai thiruththida ennnni (2)
      kasaiyati vasai moli aettittavar (2) – avar
    4. varunthiya makkalai makilviththavar
      thirunthiya makkalai iratchiththavar
      vaethanaiyodu thongiya pothum (2)
      vaethanai seythavarai manniththavar (2) – avar
  • Alaikkiraar Yesu Aandavar அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

    அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
    ஆவலாய் நாமும் செல்லுவோம்
    அவர் வழியில் நடந்திட
    அவர் ஜெயத்தை பெற்றிட -2
    சாட்சிகளாய் என்றும்
    வாழ்ந்திட – இந்நாளிலே

    1. தேடினேன் தேவன் வருகிறார்
      தன்னையே நாளும் தருகிறார்
      தோள்களில் நம்மை தாங்குவார்
      துயரினில் நம்மைத் தேற்றுவார்
      சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
      வளமுடன் வாழும் வழியைக்காட்டுவார்
      வாருங்கள் உலகினை
      நாம் வெல்லுவோம்!
      துணிவுடன் ஜெயக்கொடி
      நாம் ஏற்றுவோம்
    2. அன்பினால் உலகை ஆளுவார்
      ஆவியால் நம்மை நிரப்புவார்
      அமைதியை என்றும் அருளுவார்
      ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
      விடியலின் கீதமாக முழங்குவார்
      விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்
      வாருங்கள் உலகினை
      நாம் வெல்லுவோம்!
      துணிவுடன் ஜெயக்கொடி
      நாம் ஏற்றுவோம்
    3. கிருபையை நித்தம் அருளுவார்
      வலதுகை தந்து தாங்குவார்
      தயவுடன் குற்றம் மன்னிப்பார்
      தாராளம் கிட்டிச் சேருவார்
      சோதனை சோகங்களை
      மாற்றுவார்! சோர்வுகளை
      துதிகளாக மாற்றுவார்!
      வாருங்கள் உலகினை
      நாம் வெல்லுவோம்!
      துணிவுடன் ஜெயக்கொடி

    நாம் ஏற்றுவோம்


    Alaikkiraar Yesu Aandavar Lyrics in English

    alaikkiraar Yesu aanndavar
    aavalaay naamum selluvom
    avar valiyil nadanthida
    avar jeyaththai pettida -2
    saatchikalaay entum
    vaalnthida – innaalilae

    1. thaetinaen thaevan varukiraar
      thannaiyae naalum tharukiraar
      tholkalil nammai thaanguvaar
      thuyarinil nammaith thaettuvaar
      sumaikalai sukangalaaka maattuvaar
      valamudan vaalum valiyaikkaattuvaar
      vaarungal ulakinai
      naam velluvom!
      thunnivudan jeyakkoti
      naam aettuvom
    2. anpinaal ulakai aaluvaar
      aaviyaal nammai nirappuvaar
      amaithiyai entum aruluvaar
      aanantham nenjil polikuvaar
      vitiyalin geethamaaka mulanguvaar
      viduthalai vaalvai namakku valanguvaar
      vaarungal ulakinai
      naam velluvom!
      thunnivudan jeyakkoti
      naam aettuvom
    3. kirupaiyai niththam aruluvaar
      valathukai thanthu thaanguvaar
      thayavudan kuttam mannippaar
      thaaraalam kittich seruvaar
      sothanai sokangalai
      maattuvaar! sorvukalai
      thuthikalaaka maattuvaar!
      vaarungal ulakinai
      naam velluvom!
      thunnivudan jeyakkoti
      naam aettuvom
  • Alaikirar Alaikirar Itho Neeyum Vaa அழைக்கிறார் அழைக்கிறார் இதோ நீயும் வா

    அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
    நீயும் வா உந்தன் நேசர்
    ஆவலாய் அழைக்கிறார் – இதோ

    சரணங்கள்

    1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
      கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
      கண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார்
    2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
      நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரே
      நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார்
    3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்
      இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்
      துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார்
    4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
      சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
      நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ — அழைக்கிறார்
    5. கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்கக்
      கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
      உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே — அழைக்கிறார்
    6. சாந்த சொரூபனே ! சத்திய வாசனே !
      வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
      தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார் — அழைக்கிறார்

    Alaikirar Alaikirar Itho Neeyum Vaa Lyrics in English

    alaikkiraar alaikkiraar itho
    neeyum vaa unthan naesar
    aavalaay alaikkiraar – itho

    saranangal

    1. paavaththai aettavar paliyaay maanndavar
      kalvaariyin maettinil kannkollaatha kaatchiyae
      kanndidum , vaenndidum paavappaaram neengidum — alaikkiraar
    2. Nnoyaiyum aettavar paeyaiyum ventavar
      naesar unthan Nnoykalai nichchayamaay theerththaarae
      Nnoyutta unnaiyae naeyamaay alaikkiraar — alaikkiraar
    3. thunpam sakiththavar , thuyaratainthavar
      innalutta unnaiyae annnal yaesalaikkiraar
      thunpurum nenjamae thurithamaaka vaaraayo — alaikkiraar
    4. anthak kaedatainthaar alakattuth thontinaar
      sonthamaakach sernthida inthap paadatainthaarae
      ninthikkum unnaiyum santhippaar nee vaaraayo — alaikkiraar
    5. kallaraith thirakkak kaavalar nadungak
      kasthikalatainthaarae kattukalaruththaarae
      uyirththaar , jeyiththaar unndu meetpunakkumae — alaikkiraar
    6. saantha soroopanae ! saththiya vaasanae !
      vanjamatta vaayanae vanthannaikkum naeyanae
      thanjamae thannaiyae thanthunai alaikkiraar — alaikkiraar
  • Alaikirar Alaikirar Anbai Indre Unnai அழைக்கிறார் அழைக்கிறார்

    அழைக்கிறார் அழைக்கிறார்
    அன்பாய் இன்றே உன்னை
    கல்லும் கரையும் கல்வாரியண்டை
    கர்த்தர் அழைக்கிறார்

    சரணங்கள்

    1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
      கெட்ட குமாரனைப்போல்
      பாவத்தின் சம்பளம் மரணமே
      பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்
    2. உந்தன் நீதி கந்தையாகும்
      உன்னில் நன்மை ஒன்றில்லை
      பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
      பாவியை நேசித்தார் — அழைக்கிறார்
    3. பாவங்களை மறைப்பவன்
      பாரில் வாழ்வை அடையான்
      சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
      சங்காரம் அடைவார் — அழைக்கிறார்
    4. நானே வழி சத்தியமும்
      நித்திய ஜீவன் என்றார்
      இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
      இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்
    5. காலங்களும் கடந்திடும்
      வால வயதும் மாறும்
      தேவனைச் சந்திக்கும் வேளையிதே
      தேடி நீ வாராயோ — அழைக்கிறார்

    அழைக்கிறார் அழைக்கிறார்
    அன்பாய் இன்றே உன்னை
    கல்லும் கரையும் கல்வாரியண்டை
    கர்த்தர் அழைக்கிறார்

    சரணங்கள்

    1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
      கெட்ட குமாரனைப்போல்
      பாவத்தின் சம்பளம் மரணமே
      பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்
    2. உந்தன் நீதி கந்தையாகும்
      உன்னில் நன்மை ஒன்றில்லை
      பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
      பாவியை நேசித்தார் — அழைக்கிறார்
    3. பாவங்களை மறைப்பவன்
      பாரில் வாழ்வை அடையான்
      சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
      சங்காரம் அடைவார் — அழைக்கிறார்
    4. நானே வழி சத்தியமும்
      நித்திய ஜீவன் என்றார்
      இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
      இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்
    5. காலங்களும் கடந்திடும்
      வால வயதும் மாறும்
      தேவனைச் சந்திக்கும் வேளையிதே
      தேடி நீ வாராயோ — அழைக்கிறார்
  • Alaikadalin Oosaiyilae அலைகடலின் ஓசையிலே

    அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
    அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா –2

    நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே –2
    அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா –2

    கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் –2
    எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா –2

    வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் –2
    வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் –2


    Alaikadalin Oosaiyilae Lyrics in English

    alaikadalin osaiyilae anpumoli kaetkuthammaa

    annaiyaval aalayaththil arul nirainthu kaanuthammaa –2

    nonnti mudam koon kurudu Nnoykalellaam theernthidavae –2

    annti vantha anaivarukkum arulvalangum annaiyammaa –2

    kannkavarum aalayamum kaannikkaip porulanaiyum –2

    ennnnillaak kavithaikalai ententum kooruthammaa –2

    vaelainakar thiruththalaththil veettirukkum annaiyival –2

    vaenndum varam thanthiduvaal vaethanaikal theerththiduvaal –2