Blog

  • Anbum Natpum Engullatho அன்பும் நட்பும் எங்குள்ளதோ

    அன்பும் நட்பும் எங்குள்ளதோ

    அங்கே இறைவன் இருக்கின்றார்

    கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்

    ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே

    அவரில் அக்களித்திடுவோம் – யாம்

    அவரில் மகிழ்ச்சி கொள்வோமே

    ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம்

    அவருக்கன்பு செய்திடுவோம்

    நேரிய உள்ளத் துடனேயாம்

    ஒருவரை ஒருவர் நேசிப்போம்

    எனவே ஒன்றாய் நாமெல்லாம்

    வந்து கூடும் போதினிலே

    மனதில் வேற்றுமை கொள்ளாமல்

    விழிப்பாய் இருந்து கொள்வோமே

    தீய சச்சரவுகள் ஒழிந்திடுக

    பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக

    நமது மத்தியில் நம் இறைவன்

    கிறிஸ்து நாதர் இருந்திடுக

    முக்தி அடைந்தோர் கூட்டத்தில்

    நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்

    மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்

    மகிமை வதனம் காண்போமே

    முடிவில்லாமல் என்றென்றும்

    நித்திய காலம் அனைத்திற்கும்

    அளவில்லாத மாண்புடைய

    பேரானந்தம் இதுவேயாம்


    Anbum Natpum Engullatho Lyrics in English
    anpum natpum engullatho

    angae iraivan irukkintar

    kiristhuvin anpu nammaiyellaam

    ontayk koottich serththathuvae

    avaril akkaliththiduvom – yaam

    avaril makilchchi kolvomae

    jeeviya thaevanuk kanjiduvom

    avarukkanpu seythiduvom

    naeriya ullath thudanaeyaam

    oruvarai oruvar naesippom

    enavae ontay naamellaam

    vanthu koodum pothinilae

    manathil vaettumai kollaamal

    vilippaay irunthu kolvomae

    theeya sachcharavukal olinthiduka

    pinakkukal ellaam poy olika

    namathu maththiyil nam iraivan

    kiristhu naathar irunthiduka

    mukthi atainthor koottaththil

    naamum ontaych sernthu manam

    makilnthu kiristhu iraivaa nin

    makimai vathanam kaannpomae

    mutivillaamal ententum

    niththiya kaalam anaiththirkum

    alavillaatha maannputaiya

    paeraanantham ithuvaeyaam

  • Anbulla Yesaiah அன்புள்ள இயேசையா

    அன்புள்ள இயேசையா
    உம் பிள்ளை நான் ஐயா
    ஆனந்த ஒளி பிறக்கும்
    வாழ்வெல்லாம் வழி திறக்கும்

    1. காடு மேடு ஓடிய ஆடு
      என்று என்னை வெறுத்திடவில்லை
      நாடி என்னை தேடிய தயவல்லவோ
      பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள
    2. பகலில் மேகம் இரவில் ஜோதி
      பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
      நாடி என்னை தேடிய தயவல்லவோ
      பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள
    3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
      உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
      நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
      பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள

    Anbulla Yesaiah Lyrics in English

    anpulla iyaesaiyaa

    um pillai naan aiyaa

    aanantha oli pirakkum

    vaalvellaam vali thirakkum

    1. kaadu maedu otiya aadu

    entu ennai veruththidavillai

    naati ennai thaetiya thayavallavo

    paaduvaen vaalvellaam inpam — anpulla

    1. pakalil maekam iravil jothi

    pasikku mannaa rusikkavum anpu

    naati ennai thaetiya thayavallavo

    paaduvaen vaalvellaam inpam — anpulla

    1. thaakam theera jeevath thannnneer

    ullangaiyil ennaiyum kannteer

    naati ennaith thaetiya thayavallavo

    paaduvaen vaalvellaam inpam — anpulla

  • Anbu Yesuvin Anbu Enthan அன்பு இயேசுவின் அன்பு எந்தன்

    Anbu Yesuvin Anbu Enthan
    அன்பு இயேசுவின் அன்பு
    எந்தன் பாவத்தை நீக்கினதால் அந்த
    அன்பை நான் என்றும் விடேன் – அல்லேலூயா
    அன்பை நான் என்றும் விடேன்

    1. பாவியாக இருக்கையிலே
      பாரில் என்னை தேடிவந்த
      பாரில் என்னை தேடி வந்தார்
      பரிசுத்த தேவ அன்பே அல்லேலூயா
      பரிசுத்த தேவ அன்பே
    2. நேசர் என்னை அன்பால் இழுத்தார்
      பாசமாய் அவரோடிணைத்தார்
      மாபெரும் அன்பிதுவே அல்லேலுயா
      மாபெரும் அன்பிதுவே
    3. எந்தன் வாஞ்சை இயேசு தானே
      எந்தன் ஜீவனும் இயேசு தானே
      அவரென்னை எறிகின்றார் அல்லேலுயா
      அவரென்னை எறிகின்றார்

    Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன் Lyrics in English
    Anbu Yesuvin Anbu Enthan
    anpu Yesuvin anpu
    enthan paavaththai neekkinathaal antha
    anpai naan entum vitaen – allaelooyaa
    anpai naan entum vitaen

    1. paaviyaaka irukkaiyilae
      paaril ennai thaetivantha
      paaril ennai thaeti vanthaar
      parisuththa thaeva anpae allaelooyaa
      parisuththa thaeva anpae
    2. naesar ennai anpaal iluththaar
      paasamaay avarotinnaiththaar
      maaperum anpithuvae allaeluyaa
      maaperum anpithuvae
    3. enthan vaanjai Yesu thaanae
      enthan jeevanum Yesu thaanae
      avarennai erikintar allaeluyaa
      avarennai erikintar
  • Anbu Thanthaiyae Karunai Thaivamae அன்புத் தந்தையே கருணை தெய்வமே

    அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே

    புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க – 2

    வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க

    பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால்

    தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் – 2

    தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய்

    உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே

    இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே

    இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே – 2

    எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல

    இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே


    Anbu Thanthaiyae Karunai Thaivamae Lyrics in English

    anputh thanthaiyae karunnai theyvamae engal anthonniyaarae

    punitha nakarilae puthumai purinthidum pathuvaip punitharae vaalka – 2

    vaalka vaalka vannnath thiruvati punithar poovati vaalka

    panniyil vaalvum pakirvil niraivum varavum um varavaal

    thanniyum Nnoykal nakarum pinnikal thalaivaa un thayavaal – 2

    thavikkum ullam thanai uyarththa tharmam thaan entay

    urimai vaalvai ulakirku uyarththa punitha nakarilae

    iraivan oliyil naangal sella valiyaich sonnavarae

    irai nalvaalvil nithamum vaalap paathai thanthavarae – 2

    enthan nenjil nee irunthu unnmai neri sella

    iraivan vaakkai vaalnthu kaattida punitha nakarilae

  • Anbu kurven indu அன்பு கூர்வேன் இன்று

    அன்பு கூர்வேன் இன்று உம்மில்
    அன்பு கூர்வேன் ஆதம நேசரே
    நேர்த்தியாய் என்னை மண்ணில்
    காக்கும் உம் அன்பை எண்ணி

    உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
    கனம் பண்ணுவேன் உம் நாமத்தை நாளும்
    எந்துள்ளம் நன்றி மிகுந்து பொங்க

    என் இதயம் என் ஆத்மா
    என் சிந்தை உந்தன் சொந்தம்
    கல்வாரி மேட்டின் மீதே
    விலையீந்தீர் என்னை மீட்க


    Anbu kurven indu Lyrics in English
    anpu koorvaen intu ummil
    anpu koorvaen aathama naesarae
    naerththiyaay ennai mannnnil
    kaakkum um anpai ennnni

    uyarththi ummaith thuthippaen
    kanam pannnuvaen um naamaththai naalum
    enthullam nanti mikunthu ponga

    en ithayam en aathmaa
    en sinthai unthan sontham
    kalvaari maettin meethae
    vilaiyeentheer ennai meetka

  • Anbu Kuruven Innum Athigamai அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

    அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
    ஆராதனை ஆராதனை

    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

    1. எபிநேசரே எபிநேசரே
      இதுவரையில் உதவினீரே –உம்மை
    2. எல்ரோயீ எல்ரோயீ
      என்னைக் கண்டீரே நன்றி ஐயா
    3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
      சுகம் தந்தீரே நன்றி ஐயா

    Anbu Kuruven Innum Athigamai Lyrics in English
    anpu kooruvaen innum athikamaay
    aaraathippaen innum aarvamaay
    aaraathanai aaraathanai

    mulu ullaththodu aaraathippaen
    mulu pelaththodu anpukooruvaen

    1. epinaesarae epinaesarae
      ithuvaraiyil uthavineerae -ummai
    2. elroyee elroyee
      ennaik kannteerae nanti aiyaa
    3. yaekovaa raappaa yaekovaa raappaa
      sukam thantheerae nanti aiyaa
  • Anbu Koorven Indru Ummil அன்பு கூர்வேன் இன்று உம்மில்

    Anbu Koorven Indru Ummil
    அன்பு கூர்வேன் இன்று உம்மில்
    அன்பு கூர்வேன் நான் ஆத்ம நேசரே
    நேர்த்தியாய் என்னை மண்ணில்
    காக்கும் உம் அன்பை எண்ணி
    உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
    கனம் பண்ணுவேன் உம் நாமமதை
    நாளும் எனதுள்ளம்
    நன்றி மிகுந்து பொங்க 2..

    1. ஓ..! என் இதயம் என் ஆத்மா
      என் சிந்தை உந்தன் சொந்தம்
      கல்வாரி மேட்டின் மீதே
      விலையீந்தீர் என்னை மீட்க
      உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
      கனம் பண்ணுவேன் உம் நாமமதை
      நாளும் எனதுள்ளம்
      நன்றி மிகுந்து பொங்க – ..அன்பு கூர்வேன்

    Anbu koorven indru ummil
    Anbu koorven naan aathma nesare
    Nerthiyaai ennai mannil
    Kaakkum um anbai yenni
    Uyarthi ummami thuthipen
    Ganam pannuven um naamamathai
    Naalum enathullam
    Nandri migunthu pongka

    1. Ooh! En ethayam en aathmaa
      En sinthai unthan sontham
      Kalvari mettin meethe
      Vilaiyinthir ennai meetka
      Uyarthi ummami thuthipen
      Ganam pannuven um naamamathai
      Naalum enathullam
      Nandri migunthu pongka

    Anbu Koorven Indru Ummil – அன்பு கூர்வேன் இன்று உம்மில் Lyrics in English
    Anbu Koorven Indru Ummil
    anpu koorvaen intu ummil
    anpu koorvaen naan aathma naesarae
    naerththiyaay ennai mannnnil
    kaakkum um anpai ennnni
    uyarththi ummaith thuthippaen
    kanam pannnuvaen um naamamathai
    naalum enathullam
    nanti mikunthu ponga 2..

    1. o..! en ithayam en aathmaa
      en sinthai unthan sontham
      kalvaari maettin meethae
      vilaiyeentheer ennai meetka
      uyarththi ummaith thuthippaen
      kanam pannnuvaen um naamamathai
      naalum enathullam
      nanti mikunthu ponga – ..anpu koorvaen

    Anbu koorven indru ummil
    Anbu koorven naan aathma nesare
    Nerthiyaai ennai mannil
    Kaakkum um anbai yenni
    Uyarthi ummami thuthipen
    Ganam pannuven um naamamathai
    Naalum enathullam
    Nandri migunthu pongka

    1. Ooh! En ethayam en aathmaa
      En sinthai unthan sontham
      Kalvari mettin meethe
      Vilaiyinthir ennai meetka
      Uyarthi ummami thuthipen
      Ganam pannuven um naamamathai
      Naalum enathullam
      Nandri migunthu pongka
  • Anbu Kooruvom Nam Devnagiah அன்பு கூருவோம் நம் தேவனாகிய

    அன்பு கூருவோம்
    நம் தேவனாகிய கர்த்தரை
    அவரே நம் தேவன்
    என்றென்றும் அவரில் வாழ்ந்திட

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    திருடனைப் போல் அவர் வருகை
    தீவிரமாய் மிக நெருங்கிடுதே
    ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
    கண்டுபுலம்பிக் கதறுவாரே

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    அந்த நாளில் ஆயத்தமானோர்
    இயேசுவிடம் பறந்திடுவோம்
    இவ்வுலக வாழ்வை முடித்துப்
    பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்


    Anbu Kooruvom Nam Devnagiah Lyrics in English
    anpu kooruvom

    nam thaevanaakiya karththarai

    avarae nam thaevan

    ententum avaril vaalnthida

    Yesu makaaraajan seekkiram varukiraar — avar

    varukaiyaich santhikka aayaththamaavom naam

    thirudanaip pol avar varukai

    theeviramaay mika nerungiduthae

    aayaththamillaa avaniyil ullor

    kanndupulampik katharuvaarae

    Yesu makaaraajan seekkiram varukiraar — avar

    varukaiyaich santhikka aayaththamaavom naam

    antha naalil aayaththamaanor

    Yesuvidam paranthiduvom

    ivvulaka vaalvai mutiththup

    paraloka vaasal sernthiduvom

    Yesu makaaraajan seekkiram varukiraar — avar

    varukaiyaich santhikka aayaththamaavom naam

  • Anbu Kooruvaen Innum Athigamai அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)

    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்

    முழு பெலத்தோடு அன்பு கூருவேன்

    ஆராதனை ஆராதனை – 4

    எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே (2)

    இதுவரையில் உதவினீரே – உம்மை

    முழு உள்ளத்தோடு ……

    எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா

    என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை

    முழு உள்ளத்தோடு…

    யெகோவா ராப்பா யெகோவா ராப்பா

    சுகம் தந்தீரே நன்றி ஐயா

    சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை

    முழு உள்ளத்தோடு…


    Anbu Kooruvaen Innum Athigamai Lyrics in English
    anpu kooruvaen innum athikamaay

    aaraathippaen innum aarvamaay (2)

    mulu ullaththodu aaraathippaen

    mulu pelaththodu anpu kooruvaen

    aaraathanai aaraathanai – 4

    epinaesarae epinaesarae ithuvaraiyil uthavineerae (2)

    ithuvaraiyil uthavineerae – ummai

    mulu ullaththodu ……

    elroyee elroyee ennaik kannteerae nanti aiyaa

    ennaik kannteerae nanti aiyaa – ummai

    mulu ullaththodu…

    yekovaa raappaa yekovaa raappaa

    sukam thantheerae nanti aiyaa

    sukam thantheerae nanti aiyaa – ummai

    mulu ullaththodu…

  • Anbu Illa Ulaginilae அன்பு இல்லா உலகினிலே

    Anbu Illa Ulaginilae
    அன்பு இல்லா உலகினிலே
    அன்பை காட்ட வந்தீரே
    உண்மை இல்லா உலகினிலே
    உண்மை சொல்ல வந்தீரே
    என் மேல் அன்பு கூர்ந்ததால்
    உம் உயிரை தந்தீரே -2
    ஆராதனை உமக்கு ஆராதனை -2

    மழையை பார்த்தேன்
    மேகத்தை பார்த்தேன்
    உம் மகிமையை பார்க்க வேண்டுமே
    வல்லமை பார்த்தேன்
    உம் கரத்தை பார்த்தேன்
    உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2
    ஆராதனை உமக்கு ஆராதனை -2

    வெறுமையாய் வந்தேன்
    வெறுமையாய் போவேன்
    என்னோடு எதுவும் வருவதில்லையே
    உம்மோடு இருக்கணும்
    உமக்காய் வாழணும்
    என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2
    ஆராதனை உமக்கு ஆராதனை -2


    Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே Lyrics in English
    Anbu Illa Ulaginilae
    anpu illaa ulakinilae
    anpai kaatta vantheerae
    unnmai illaa ulakinilae
    unnmai solla vantheerae
    en mael anpu koornthathaal
    um uyirai thantheerae -2
    aaraathanai umakku aaraathanai -2

    malaiyai paarththaen
    maekaththai paarththaen
    um makimaiyai paarkka vaenndumae
    vallamai paarththaen
    um karaththai paarththaen
    um saththaththai kaetka vaenndumae -2
    aaraathanai umakku aaraathanai -2

    verumaiyaay vanthaen
    verumaiyaay povaen
    ennodu ethuvum varuvathillaiyae
    ummodu irukkanum
    umakkaay vaalanum
    en ullamellaam thutikkuthaiyyaa-2
    aaraathanai umakku aaraathanai -2