Blog

  • Kirubaiyethe Deva Kirubaiyethe

    கிருபையிதே தேவ கிருபையிதே
    தாங்கி நடத்தியதே
    இயேசுவிலே பொன் நேசரிலே
    அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

    1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
      ஜீவியப் பாதையிலே – இயேசு பரன்
      அனுதினமும் வழி நடந்தே
      அவரது நாமத்தில் காத்தனரே
    2. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
      வியாதியும் வேதனையும் வைத்தியராய்
      இயேசுவல்லால் சார்ந்திடவோ
      இகமதில் வேறெமக் காருமில்லை
    3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
      ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
      கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
      சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்
    4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
      நித்திய ஜீவனை நாம் பெற்றிடவே
      விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
      அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம்
    5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
      வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
      சீயோனே நீ பார் உனக்காய்
      நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்

    Kirupaiyithae Thaeva Kirupaiyithae
    Thaangi Nadaththiyathae
    Yesuvilae Pon Naesarilae
    Akamakilnthae Naam Aananthippom

    1. Aaruyir Anparaay Engaludanae
      Jeeviyap Paathaiyilae – Yesu Paran
      Anuthinamum Vali Nadanthae
      Avarathu Naamaththil Kaaththanarae
    2. Vaarththaiyinaal Avar Theerththaar Enthan
      Viyaathiyum Vaethanaiyum Vaiththiyaraay
      Yesuvallaal Saarnthidavo
      Ikamathil Vaeramak Kaarumillai
    3. Anpin Akalamum Neelam Uyaramum
      Aalamum Arinthunara – Anukkirakiththaar
      Kiristhuvilae Oru Manaiyaay
      Sirushtiththae Niruththinaar Avar Sutharaay
    4. Nalla Poraattam Poraati Jeyiththae
      Niththiya Jeevanai Naam Pettidavae
      Visuvaasaththil Nilaiththiduvom
      Asaiyaathu Alaippinaik Kaaththuk Kolvom
    5. Aaviyum Manavaattiyum Aavaludan
      Vaarumentalaikkintarae – Vaarumenpeer
      Seeyonae Nee Paar Unakkaay
      Naayakan Yesu Thaam Velippaduvaar
  • Kirubai Melaana Kirubai

    1. கிருபை மேலான கிருபை , கிருபை மேலான கிருபை,
      சிலுவையில் எல்லாமே முடிந்ததால்
      கிருபை மாறாத கிருபை , கிருபை மாறாத கிருபை,
      சிலுவையில் எல்லாமே மாறினதையே

    சூழ்ந்தீரே, உம் கிருபையால் சூழ்ந்தீரே,
    சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்

    கிருபை அளவில்லா கிருபை, கிருபை அளவில்லா கிருபை
    சிலுவையில், உம் அன்பை ஊற்றுநீர்
    கிருபை நித்திய கிருபை, கிருபை நித்திய கிருபை
    சிலுவையில் எல்லாமே மாறினதையே

    சூழ்ந்தீரே, உம் கிருபையால் சூழ்ந்தீரே,
    சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்

    நீர் என்னை பின்தொடந்தீர், நீர் என்னை தாங்கினீர்
    பாவத்தில் விழுந்த போதிலும், நீர் என்னை தூக்கி நிறுத்தினீர்
    என் வெட்கத்தை மாற்றினீர், உம் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே
    நீதிமான் ஆக்கினீர், உம்மை போல் மாற்றினீர்
    உம் கிருபையால்


    1. Kirubai Melaana Kirubai, Kirubai Melaana Kirubai,
      Siluvayil Ellaamae Mudindhadhae
      Kirubai Maaradha Kirubai, Kirubai Maaraadha Kirubai,
      Siluvayil Ellaamae Maarinadhae

    Soolndheerae, Um Kirubayaal Soolndheerae,
    Soolndheerae En Vaalvai Muluvadhum

    Kirubai Alavilla Kirubai, Kirubai Alavilla Kirubai
    Siluvayil, Um Anbai Ootrineer
    Kirubai Nithiya Kirubai, Kirubai Nithiya Kirubai
    Siluvayil Ellaamae Maarinadhae

    Soolndheerae, Um Kirubayaal Soolndheerae,
    Soolndheerae En Vaalvai Muluvadhum

    Neer Ennai Pinthodandheer, Neer Ennai Thaangineer
    Paavathil Vilundha Podhilum, Neer Ennai Thooki Niruthineer
    En Vetkathai Maatrineer, Um Pillayaai Aetrukondeerae
    Needhimaan Aakineer, Ummai Pol Maatrineer
    Um Kirubayae

  • Kirubai Deva Kirubai

    கிருபை கிருபை கிருபை
    தேவ கிருபை – 2

    ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை
    நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2
    சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை
    சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2

    பாவியான என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
    ஆவியால் என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
    பாவிகளுக்காய் மரித்து உயிர்த்த கிருபை தேவ கிருபை
    பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை

    நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபை
    நான் உடைந்து போவதும் கிருபை தேவ கிருபை
    நான் பலவீனன் ஆகாததும் கிருபை தேவ கிருபை
    நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதும் கிருபை தேவ கிருபை

    எந்தன் பெலத்தால் அல்ல கிருபை தேவ கிருபை
    எந்தன் திறமையால் அல்ல கிருபை தேவ கிருபை
    எந்தன் கீர்த்தியால் அல்ல கிருபை தேவ கிருபை
    எந்தன் சர்வமும் அல்ல கிருபை தேவ கிருபை

  • Kilakukum Maerkukum

    கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
    அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

    திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
    எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே

    1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
      லட்சங்களுள் அடங்கவில்லை
      ஆனால் என் நேசர் கணக்கில்
      என் பெயரில் பாவம் ஒன்றில்லை
    2. இவர் புகழ் சொல்லி முடிக்க
      உலகத்தில் நாட்களுமில்லை
      இயேசுவுக்கு நிகராக
      உலகில் எந்த உறவுமில்லை
      இயேசுவுக்கு நிகராய்
      இவ்வுலகில் எந்த உறவுமில்லை

    அல்லேலூயா ! போற்றிடுவேன்
    அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
    அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
    மன்னாதி மன்னவனை !
    அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
    அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
    அல்லேலூயா ! ஆராதிப்பேன்
    கர்த்தாதி கர்த்தரையே !


    Kilakukum Maerkukum Evalauv Thooram
    Avvalavaai En paavam Neenga Panninarae

    Thiru Ratham sinthi mul mudi thaangi
    Enthan Paavam Neenga thannayae Thanthavare – Yesuvae

    1. Onnum Rendu Thappukalilillai
      Latchangalukul Adangavillai
      Aanal en nease kanakil
      En paeyaril Paavam Ontrillai
    2. Evar Puhazh Solli Mudikka
      Ulagathil Natkalumillai
      Yesuvuku Nigaraga
      Ulagil Entha Urauvmillai
      Yesuvuku nigarai
      Evvulagil Entha urauvmillai

    Alleluah – Pottriduvean
    Alleluah – Puzhanthiduvaen
    Alleluah- Uyarthiduvaen
    Mannathi Mannavanai
    Alleluah Thozhuthu kolluvean
    Alleluah Paninthu kolluvean
    Alleluah Aarathipaen
    Karthathi kartharayae

  • Karuvaraiyil Thondrum Mun

    கருவறையில் தோன்றும் முன்
    உம் விழிகள் என்னை கண்டது
    தேவ சித்தமே அது தேவ சித்தமே – 2

    காற்றில் ஆடும் நாணல் என்னை
    அழிக்கவில்லையே
    மங்கி எரியும் தீபம் என்னை
    அணைக்கவில்லையே

    அழைத்துக்கொண்டாரே
    என்னை தாசன் என்றாரே
    தெரிந்து கொண்டாரே
    என்னை தாசன் என்றாரே

    1. உந்தன் சித்தம் (ஒன்றே) எந்தன் வாழ்வில்
      நிறைவேறினால் சந்தோஷம்
      உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்
      நிறைவேறினால் சந்தோஷம்
      வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்
      என்றும் இருக்கும் சந்தோஷம் – 2

    சந்தோஷம் சந்தோஷம் – 2

    1. உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்
      உலகம் பகைத்தால் சந்தோஷம் – 2
      யோபை போல அணைத்தும் இழந்தால்
      மீண்டும் பெறுவேன் சந்தோஷம் – 2

    சந்தோஷம் சந்தோஷம் – 2 – கருவறையில்


    Karuvaraiyil Thondrum Mun
    Um Vizhikal Ennai Kandathu
    Deva Siththamae athu Deva Siththamae – 2

    Kaatril Aadum Naanal Ennai
    Azhikkavillayae
    Mangi Eriyum Deepam Ennai
    Anaikkavillaiyae

    Azhaiththukkondaarae
    Ennai Thaasan Endrarae
    Therinthu Kondaarae
    Ennai Thaasan Endrarae

    1. Un Siththam (Ondrae) Enthan Vazhvil
      Niraiverinaal Santhosham
      Um Siththam Ondrae Enthan Vazhvil
      Niraiverinaal Santhosham
      Vaazhkkai Thunayaai Yesu Irunthaal
      Endrum Irukkum Santhosham – 2

    Santhosham Santhosham – 2

    1. Unthan Siththam Seiya Ninaiththum
      Ulagam Pagaiththaal Santhosham – 2
      Yobai Pola Anaiththum Izhanthaal
      Meendum Peruvaen Santhosham – 2

    Santhosham Santhosham – 2 – Karuvarayil

  • Karththar Aavi Ennil

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் பாடுவேன்
    பாடுவேன் பாடுவேன்
    தாவீதைப்போல் பாடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஆடுவேன்
    ஆடுவேன் ஆடுவேன்
    தாவீதைப்போல் ஆடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் துதிப்பேன்
    துதிப்பேன் துதிப்பேன்
    தாவீதைப்போல் துதிப்பேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஜெபிப்பேன்
    ஜெபிப்பேன் ஜெபிப்பேன்
    தாவீதைப்போல் ஜெபிப்பேன்


    Karththar Aavi Ennil Asaivaatida
    Thaaveethaippol Paaduvaen
    Paaduvaen Paaduvaen
    Thaaveethaippol Paaduvaen

    Karththar Aavi Ennil Asaivaatida
    Thaaveethaippol Aaduvaen
    Aaduvaen Aaduvaen
    Thaaveethaippol Aaduvaen

    Karththar Aavi Ennil Asaivaatida
    Thaaveethaippol Thuthippaen
    Thuthippaen Thuthippaen
    Thaaveethaippol Thuthippaen

    Karththar Aavi Ennil Asaivaatida
    Thaaveethaippol Jepippaen
    Jepippaen Jepippaen
    Thaaveethaippol Jepippaen

  • Karthave Retchanya Kanmalaye

    கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
    எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே – 2

    நீர் நல்லவர் சர்வ வல்லவர் – 2

    1. சாரோனின் ரோஜாவே
      உம்மை நான் பாடுவேன் – 2
    2. அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
      உம்மை நான் பாடுவேன் – 2
    3. உலகத்திலே மிக பெரியவரே
      உம்மை நான் பாடுவேன் – 2
    4. ஆதியே அந்தமே
      உம்மை நான் பாடுவேன் – 2
    5. அல்பாயே ஒமேகாயே
      உம்மை நான் பாடுவேன் – 2

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை

  • Kartharai Nambiye Jeevippom

    கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
    கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
    கைவிடா காத்திடும் பரமனின்
    கரங்களை நாம் பற்றி கொள்வோம்

    1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
      ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
      மனதின் காரிருள் நீங்கிடவே
      மா சமாதானம் தங்கும்
    2. உண்மை வழி நடந்திடும்
      உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
      கண்கள் அவன் மீது வைத்திடுவார்
      கருத்தாய் காத்திடுவார்
    3. உள்ளமதின் பாரங்கள்
      ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
      இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
      இயேசு வந்தாதரிப்பார்
    4. அன்புமிகும் அண்ணலிவர்
      அருமை இயேசுவை நெருங்குவோம்
      தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
      தாங்கி அணைத்திடுவார்
    5. நீதிமானின் சிரசின் மேல்
      நித்திய ஆசிர் வந்திறங்குமே
      கிருபை நன்மைகள் தொடருமே
      கேட்பது கிடைக்குமே

    Kartharai Nambiye Jeevippom
    Kavalai Kastangal Theerndhidum
    Kaividaa Kaathidum Paramanin
    Karangalai Naam Patri Kolvom

    1. Jeeva Dhevan Pin Selluvom
      Jeeva Oli Dhanai Kandadaivom
      Manadhin Kaarirul Neengidave
      Maa Samaadhaanam Thangum
    2. Unmai Vazhi Nadandhidum
      Uthamanukkenrum Karthar Thunai
      Kangal Avar Meedhu Vaithiduvaar
      Karuthaai Kaathiduvaar
    3. Ullamadhin Baarangalai
      Ookkamaai Kartharidam Solluvom
      Ikkatu Nerathil Koopiduvom
      Yesu Vandhaadharippaar
    4. Anbu Mihum Annalivar
      Arumai Yesuvai Nerunguvom
      Thammandai Vandhorai Thallidaare
      Thaangi Anaithiduvaar
    5. Needhimanin Sirasin Mel
      Nithiya Aaseer Vaadhirangume
      Kirubai Nanmaihal Thodarume
      Ketpadhu Kidaikkume
  • Kartharai Nambinavan

    கர்த்தரை நம்பினவன்
    என்றென்றும் பாக்கியவான்
    கர்த்தரை நம்பினவன்
    என்றென்றும் செழித்திருப்பான்

    அவன் சோர்ந்து போவதில்லை
    அவன் வெட்கம் அடைவதில்லை
    அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
    அவன் சொல்வதெல்லாம் நடக்கும்

    அவன் பெலத்தின்மேல் பெலனடைந்து
    அவன் கழுகைபோல் எழும்பிடுவான்
    அவன் ஆஸ்தி பெருகிடுமே
    அவன் ஆயுள் நீடித்திடும்

    அவன் விருப்பம் நிறைவேறும்
    அவன் சத்துரு விழுந்திடுவான்
    அவன் கொம்பு உயர்த்தப்படும்
    அவன் சீயோனை சேர்ந்திடுவான்


    Kartharai Nambinavan
    Endrendrum Baakiyavaan
    Kartharai Nambinavan
    Endrendrum Sezhithirupaan

    Avan Sorndhu Povadhilai
    Avan Vetkum Adaivathilai
    Avan Seivadhellaam Vaaikum
    Avan Solvadhellaam Nadakum

    Avan Belathin Mel Belan Adaindhu
    Avan Kazhugai Pol Elzhumbiduvaan
    Avan Aasthi Perugidumae
    Avan Aayul Needithidum

    Avan Virupum Niraivehrum
    Avan Sathuru Vizhundhiduvaan
    Avan Kombhu Uyerthapadum
    Avan Siyonai Sayrndhiduvaan

  • Karthar Yen Meippare

    கர்த்தர் என் மேய்ப்பர்
    குறை எனக்கில்லையே
    அனுதினம் நல் மேய்ச்சல்
    அன்புடன் அளித்திடுவார்

    1.மரணத்தின் இருள் தன்னில்
    நடந்திட நேர்ந்தாலும்
    மீட்பரின் துணையுடன்
    மகிழ்வுடன் நடத்திடுவேன்

    2.எண்ணெயால் என் தலையை
    இன்பமாய் அபிஷேகம்
    செய்கின்றார் என் தேவன்
    உள்ளமும் பொங்கிடுதே

    3.ஜீவனின் நாட்களெல்லாம்
    நன்மையையும் கிருபையும்
    தொடர்ந்திட வாழ்ந்திடுவேன்
    கர்த்தரின் வீட்டினிலே


    Karthar Yen Meippare
    Kurai Yenakillaiye
    Anudinam Nal Maichal
    Anbudan Alitthiduvaar

    1.Maranatthin Erul Thannil
    Nadandida Neerndaalum
    Meetparin Thunai Yudane
    Magilvudan Nadatthiduveen

    2.Yennai Yaal Yen Thalai Yai
    Yenbammai Abisheegam
    Saigindraar En Deevan Dhevan
    Ullamum Pongidudhe

    3.Jeevanin Naatka Lellam
    Nanmaiyum Kirubaiyume
    Thodarndida Vaalndiduveen
    Kartharin Veetinilee