Author: admin

  • உன்னை தேற்றும் Unnai therrum

    உன்னை தேற்றும் தெய்வம் இயேசு உண்டு
    கலங்காதே மனமே
    உன்னை ஆறுதல் படுத்தும் இயேசு உண்டு
    அழாதே மனமே
    கலங்காதே பதறாதே
    திகையாதே மனம் தளராதே

    அழுது புலம்பும் நேரத்திலே
    அருகில் இயேசு இருக்கிறார்
    திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார்

    தேவன் அருளும் ஆறுதல் உன்
    ஆத்துமாவை தேற்றிடும்
    திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார்


    Unnai therrum theyvam iyesu untu
    kalangkathe maname
    unnai aaruthal patuththum iyesu untu
    azhathe maname
    kalangkathe patharathe
    thikaiyathe manam thalarathe

    azhuthu pulampum neraththile
    arukil iyesu irukkirar
    thikaiyathe patharathe iyesu aaruthal thanthituvar

    thevan arulum aaruthal un
    aaththumavai therritum
    thikaiyathe patharathe iyesu aaruthal thanthituvar


  • உலக இரட்சகர் இயேசு Ulaka iratsakar iyesu

    உலக இரட்சகர் இயேசு பிறந்தாரு
    உன்னையும் என்னையும் மீட்க பிறந்தாரு
    பெத்லகேமிலே மாட்டு முன்னனையிலே
    ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு
    ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு

    உலக பாவம் போக்க பிறந்தாரு இயேசு
    உலகத்தின் ஒளியாய் பிறந்தாரு
    இருளை நீக்கி வெளிச்சம் தந்திட
    இயேசுவே மனுவாக பிறந்தாரு
    நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு

    பிதாவின் சித்தம் செய்ய பிறந்தாரு இயேசு
    பிசாசின் கிரியை அழிக்க பிறந்தாரு
    மரண பயம் நீக்கி விடுதலை தந்திட
    இயேசுவே மனுவாக பிறந்தாரு
    நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு

    சமாதானம் தந்திட பிறந்தாரு இயேசு
    சாபத்தை முறிக்கவே பிறந்தாரு
    பிரிவினை நீக்கி ஒரு மனம் தந்திட
    இயேசுவே மனுவாக பிறந்தாரு
    நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு


    Ulaka iratsakar iyesu pirantharu
    unnaiyum ennaiyum mitka pirantharu
    pethlakemile mattu munnanaiyile
    eezhai kolam etuththu piranthuthiththaru
    eezhai kolam etuththu piranthuthiththaru

    ulaka pavam pokka pirantharu iyesu
    ulakaththin oliyay pirantharu
    irulai nikki velissam thanthita
    iyesuve manuvaka pirantharu
    namma iyesuve manuvaka pirantharu

    pithavin siththam seyya pirantharu iyesu
    pisasin kiriyai azhikka pirantharu
    marana payam nikki vituthalai thanthita
    iyesuve manuvaka pirantharu
    namma iyesuve manuvaka pirantharu

    samathanam thanthita pirantharu iyesu
    sapaththai murikkave pirantharu
    pirivinai nikki oru manam thanthita
    iyesuve manuvaka pirantharu
    namma iyesuve manuvaka pirantharu


  • மானிடரை மீட்டிடும் Manitarai mittitum

    மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசு
    மானிடனாய் மண்ணுலகில் பிறந்தாரே
    பாவம் போக்கிட பிறந்தவர் இயேசு
    சாபம் தீர்த்திட பிறந்தவர் இயேசு
    இருள் நீக்கிட இன்பம் தந்திட இயேசு பிறந்தாரே

    மகிமையை வெறுத்து இயேசு மானிட ரூபமாய்
    மக்களின் பாவம் போக்க மனுவாய் பிறந்தாரே
    அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
    வல்லமையுள்ளவர் சமாதானப்பிரபு
    வார்த்தையாய் வந்தாரே

    இழந்ததை தேடிட வந்த இறைமகன் இயேசுவே
    ஈசாயின் வேரிலே பிறந்த இறைவன் இயேசுவே
    வழியும் வாய்மையுமானவராக வாழ்க்கையின்
    உறைவிடம் ஆனவராக விண்ணவர் பிறந்தாரே

    உன்னதமானவர் இவர் உலக இரட்சகர்
    உன்னையும் என்னையும் பரலோகில் சேர்க்க உதித்தவர் உள்ளத்தில் இருந்திட வந்தவர் இயேசு
    உண்மையாய் வாழ உதவிடும் இயேசு
    உனக்காய் பிறந்தாரே


    Manitarai mittitum mitparay iyesu
    manitanay mannulakil piranthare
    pavam pokkita piranthavar iyesu
    sapam thirththita piranthavar iyesu
    irul nikkita inpam thanthita iyesu piranthare

    makimaiyai veruththu iyesu manita rupamay
    makkalin pavam pokka manuvay piranthare
    athisayamanavar aalosanaik karththar
    vallamaiyullavar samathanappirapu
    varththaiyay vanthare

    izhanthathai thetita vantha iraimakan iyesuve
    iisayin verile pirantha iraivan iyesuve
    vazhiyum vaymaiyumanavaraka vazhkkaiyin
    uraivitam aanavaraka vinnavar piranthare

    unnathamanavar ivar ulaka iratsakar
    unnaiyum ennaiyum paralokil serkka uthiththavar
    ullaththil irunthita vanthavar iyesu
    unmaiyay vazha uthavitum iyesu unakkay piranthare


  • பொறந்தாரய்யா பாலன் Porantharayya palan

    பொறந்தாரய்யா பாலன் பெத்தலையிலே
    பொறந்தாரம்மா பாலன் பெத்தலையிலே
    பெத்தலையிலே மாட்டு முன்னனையிலே

    மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    பாட்டு பாடி நின்னாங்க நின்னாங்க நின்னாங்க
    மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க
    தூதர்களும் வந்தாங்க பாட்டு பாடி நின்னாங்க

    மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    ஆட்டுக்குட்டி தந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    வெள்ளை போலம் தந்தாங்க தந்தாங்க தந்தாங்க
    மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க வெள்ளை போலம் தந்தாங்க

    தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க
    நல்ல செய்தி சொன்னாங்க சொன்னாங்க சொன்னாங்க வந்தவங்க எல்லாரும் எல்லாரும் எல்லாரும் பணிந்து தானே சென்றாங்க சென்றாங்க சென்றாங்க தூதர்களும் வந்தாங்க நல்ல செய்தி சொன்னாங்க
    வந்தவங்க எல்லாரும்
    பணிந்து தானே சென்றாங்க


    Porantharayya palan peththalaiyile
    porantharamma palan peththalaiyile
    peththalaiyile mattu munnanaiyile

    meypparkalum vanthangka vanthangka vanthangka
    sasththirikalum vanthangka vanthangka vanthangka
    thutharkalum vanthangka vanthangka vanthangka
    pattu pati ninnangka ninnangka ninnangka
    meypparkalum vanthangka sasththirikalum vanthangka
    thutharkalum vanthangka pattu pati ninnangka

    meypparkalum vanthangka vanthangka vanthangka
    aattukkutti thanthangka vanthangka vanthangka
    sasththirikalum vanthangka vanthangka vanthangka
    vellai polam thanthangka thanthangka thanthangka
    meypparkalum vanthangka sasththirikalum vanthangka
    vellai polam thanthangka

    thutharkalum vanthangka vanthangka vanthangka
    nalla seythi sonnangka sonnangka sonnangka
    vanthavangka ellarum ellarum ellarum
    paninthu thane senrangka senrangka senrangka
    thutharkalum vanthangka nalla seythi sonnangka
    vanthavangka ellarum
    paninthu thane senrangka


  • மனுக்குல பாவம் Manukkula pavam

    மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்
    மனுவாய் அவதரித்தார்
    நம்மை மீட்க மனுவாய் அவரித்தார்
    நம் பாவம் போக்க மனுவாய் அவரித்தார்

    மகிமை நிறைந்த ராஜாதி ராஜன்
    மகிமையை வெறுத்து வந்தார்
    நம்மை மீட்டிட உலகில் வந்தார்
    அடிமை ரூபமெடுத்து தம்மை வெறுமையாக்கி
    மகிமையை வெறுத்து வந்தார்
    நம்மை மீட்டிட உலகில் வந்தார்
    நம்மை மீட்டிட உலகில் வந்தார்

    சர்வ சிருஷ்டியின் தேவாதி தேவன்
    சமாதான பிரபுவாகவே இந்த
    தரணியில் அவதரித்தார்
    விந்தை வாழ்வை மாற்றி நித்திய ஜீவன் தந்திட
    சமாதான பிரபுவாகவே இந்த
    தரணியில் அவதரித்தார்
    தரணியில் அவதரித்தார்

    பராக்கிரமம் நிறைந்த கர்தாதி கர்த்தர்
    பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில்
    பரிசுத்தராக பிறந்தார்
    பரிசுத்தம் தந்திட நமக்கு பாக்கியம் நல்கிட
    பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில்
    பரிசுத்தராக பிறந்தார்
    பரிசுத்தராக பிறந்தார்


    Manukkula pavam pokka iyesu rajan
    manuvay avathariththar
    nammai mitka manuvay avariththar
    nam pavam pokka manuvay avariththar

    Makimai niraintha rajathi rajan
    makimaiyai veruththu vanthar
    nammai mittita ulakil vanthar
    atimai rupametuththu thammai verumaiyakki
    makimaiyai veruththu vanthar
    nammai mittita ulakil vanthar
    nammai mittita ulakil vanthar

    sarva sirushtiyin thevathi thevan
    samathana pirapuvakave intha
    tharaniyil avathariththar
    vinthai vazhvai marri niththiya jivan thanthita
    samathana pirapuvakave intha
    tharaniyil avathariththar
    tharaniyil avathariththar

    parakkiramam niraintha karthathi karththar
    parisuththamaka piranthar ivvulakil
    parisuththaraka piranthar
    parisuththam thanthita namakku pakkiyam nalkita
    parisuththamaka piranthar ivvulakil
    parisuththaraka piranthar
    parisuththaraka piranthar


  • அய்யாமாரே அம்மாமாரே Ayyamare ammamare

    அய்யாமாரே அம்மாமாரே
    அண்ணன்மாரே அக்காமாரே
    நம்மை தேடி மீட்க இயேசு பிறந்தார் நம்மை
    தேடி மீட்க இயேசு பிறந்தார்

    ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால்
    தெய்வ மகிமையை இழந்துப்போனோமே
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்

    பாவ இருளில் மூழ்கிக் கிடப்பதால
    தெய்வ மகிமையை இழந்துப்போனோமே
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்

    சாத்தானின் பிடியில் அகப்பட்டுக்கொண்டதால்
    தெய்வ மகிமையை இழந்துப்போனோமே
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்
    இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்


    Ayyamare ammamare
    annanmare akkamare
    nammai theti mitka iyesu piranthar nammai
    theti mitka iyesu piranthar

    aatham eeval seytha pavaththa
    theyva makimaiyai izhanthupponome
    izhanthup ponathai theta iyesu piranthar
    izhanthup ponathai theta iyesu piranthar

    pava irulil muzhkik kitappatha
    theyva makimaiyai izhanthupponome
    izhanthup ponathai theta iyesu piranthar
    izhanthup ponathai theta iyesu piranthar

    saththanin pitiyil akappattukkontathal
    theyva makimaiyai izhanthupponome
    izhanthup ponathai theta iyesu piranthar
    izhanthup ponathai theta iyesu piranthar


  • இஸ்ரவேலை ஆளும் Isravelai aalum

    இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய்
    இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
    இயேசு பிறந்துதித்தார்
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

    பாவம் போக்கும் பரிகாரியாய்
    பாவ மன்னிப்பு தருபவராய்
    பாவ கட்டுகளை முறிக்க இயேசு
    பாரினில் பிறந்துதித்தார்

    வாழ்வளிக்கும் வைத்தியராய்
    வாழ்நாள் முழுவதும் காப்பவராய்
    மரண அக்கினையை நீக்கவே இயேசு
    மண்ணுலகில் பிறந்துதித்தார்

    பயத்தைப் போக்கும் துணையாளராய்
    பாதாளம் வென்ற வெற்றி வேந்தராய்
    நித்திய ஜீவனை தந்திட இயேசு
    நிதிபரனாய் வந்துதித்தார்


    Isravelai aalum pirapuvay
    iyesu piranthar iyesu piranthar
    iyesu piranthuthiththar
    alleluya alleluya alleluya
    alleluya alleluya alleluya

    pavam pokkum parikariyay
    pava mannippu tharupavaray
    pava kattukalai murikka iyesu
    parinil piranthuthiththar

    vazhvalikkum vaiththiyaray
    vazhnal muzhuvathum kappavaray
    marana akkinaiyai nikkave iyesu
    mannulakil piranthuthiththar

    payaththaip pokkum thunaiyalaray
    pathalam venra verri ventharay
    niththiya jivanai thanthita iyesu
    nithiparanay vanthuthiththar


  • இம்மானுவேலனாய் நம்மோடு Immanuvelanay nammotu

    இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே
    இயேசு இரட்சகராய் நம்
    பாவம் போக்க பிறந்துதித்தார்
    பிறந்தார் பிறந்தார்
    பிறந்தார் பிறந்தார்
    பிறந்தார் இயேசு ராஜன்
    பிறந்தார் இருளை நீக்க

    அதிசயமான ஆண்டவர் இவர் தான்
    ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான்
    நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய்
    இயேசு அவதரித்தார்

    இழந்ததை தேட வந்தவர் இவர் தான்
    இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான்
    மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில்
    இயேசு அவதரித்தார்

    மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான்
    மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான்
    இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய்
    இயேசு அவதரித்தார்


    Immanuvelanay nammotu irukkave
    iyesu iratsakaray nam
    pavam pokka piranthuthiththar
    piranthar piranthar
    piranthar piranthar
    piranthar iyesu rajan
    piranthar irulai nikka

    athisayamana aantavar ivar than
    aalosanai karththar iyesu ivarthan
    niththiya pithavay samathana pirapuvay
    iyesu avathariththar

    izhanthathai theta vanthavar ivar than
    iratsippu thanthu mitpavar ivarthan
    manukkumaranay mattuththozhuvaththil
    iyesu avathariththar

    mesiya iyesu kiristhu ivarthan
    menmaiyaith thuranthu vanthavar ivarthan
    irajathi rajanay karththathi karththaray
    iyesu avathariththar


  • சின்னஞ்சிறு பாலகன் Sinnanysiru palakan

    சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துதித்தார்
    கன்னியின் வயிற்றிலே கர்த்தர் இயேசு பிறந்துதித்தார் தீர்க்க தரிசியாய் சொன்னவர் பிறந்துதித்தார் இம்மானுவேலனாய் நம்மோடு இருந்திட, கூடவே இருந்திட பெயரோடு பிறந்துதித்தார்

    எல்லோரையும் மீட்கும் பொருளாய் இயேசு பிறந்துதித்தார் மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட பிறந்துதித்தார் மாட்டுத்தொழுவிலே இயேசு மனுவாய் பிறந்துதித்தார்

    அகிலத்தை ஆளும் பிரபுவாய் ஆண்டவர் பிறந்துதித்தார் அழிந்திடும் மாந்தரை மீட்டிட பிறந்துதித்தார் அன்பின் ரூபமாய் இயேசு மனுவாய் பிறந்துதித்தார்

    பரலோகில் நம்மை சேர்க்க பாலனாய் பிறந்துதித்தார் பரமனின் சித்தம் செய்ய பாரினில் பிறந்துதித்தார் பரிகார வழியாக இயேசு மனுவாய் பிறந்துதித்தார்

    Sinnanysiru palakan pethlakamil piranthuthiththar
    kanniyin vayirrile karththar iyesu piranthuthiththar
    thirkka tharisiyay sonnavar piranthuthiththar
    immanuvelanay nammotu irunthita
    kutave irunthita peyarotu piranthuthiththar

    elloraiyum mitkum porulay iyesu piranthuthiththar
    manukkulaththin pavaththai pokkita piranthuthiththar
    mattuththozhuvile iyesu manuvay piranthuthiththar

    akilaththai aalum pirapuvay aantavar piranthuthiththar
    azhinthitum mantharai mittita piranthuthiththar
    anpin rupamay iyesu manuvay piranthuthiththar

    paralokil nammai serkka palanay piranthuthiththar
    paramanin siththam seyya parinil piranthuthiththar
    parikara vazhiyaka iyesu manuvay piranthuthiththar


  • எல்லாரும் பாடுவோம் Ellarum patuvom

    எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்
    மன்னவன் பிறந்ததை பாடுவோம்
    இம்மானுவேலனாய் எப்போதும் தங்கிட
    வந்ததை எண்ணியே பாடுவோம் – அய்யா அம்மா

    சமாதானம் தந்திட வந்தவர்
    சாபத்தை முறித்திட வந்தவர்
    துன்புறும் உள்ளத்தைத் தேற்றவே
    தூயாதி தேவன் வந்தாரே – அய்யா அம்மா
    – எல்லாரும்

    பாவி என்று ஒருபோதும் தள்ளிடார் நம்
    பாவங்களை மன்னிக்கவே வந்தாரே
    வழுவாது காத்து என்றும் நடத்திட
    வல்லவர் இயேசு வந்தாரே – அய்யா அம்மா
    – எல்லாரும்

    உலகத்தின் பாவத்தை போக்கவே இயேசு
    உலகத்தின் இரட்சகராய் வந்தாரே
    இருளான வாழ்வை என்றும் நீக்கிட
    ஒளியாக இயேசு வந்தாரே – அய்யா அம்மா
    – எல்லாரும்


    Ellarum patuvom makizhnthu aatuvom
    mannavan piranthathai patuvom
    immanuvelanay eppothum thangkita
    vanthathai enniye patuvom – ayya amma

    samathanam thanthita vanthavar
    sapaththai muriththita vanthavar
    thunpurum ullaththaith therrave
    thuyathi thevan vanthare ayya amma
    ellarum

    pavi enru orupothum thallitar nam
    pavangkalai mannikkave vanthare
    vazhuvathu kaththu enrum nataththita
    vallavar iyesu vanthare ayya amma
    ellarum

    ulakaththin pavaththai pokkave iyesu
    ulakaththin iratsakaray vanthare
    irulana vazhvai enrum nikkita
    oliyaka iyesu vanthare ayya amma
    ellarum