Author: admin

  • மலைபோல ஏறிப்போச்சு Malaipola eerippossu

    மலைபோல ஏறிப்போச்சு விலவாசி
    இதுல மலச்சி போயி நிக்கிறான்
    மனுஷன் முழுவாசி
    இயேசுவ விசுவாசி
    இறங்குமையா விலவாசி

    அரிசி வில இறங்கிப் போச்சு சந்தோஷம்
    ஆனா பெட்ரோல் வில ஏறிப்
    போச்சு என்ன செல்ல
    மனுஷன் வில ஏறலையே புரியலையே
    இதுக்கு மார்க்கந்தான் எது இன்னு
    தெரியலையே புரியலையே

    வேர்வை சிந்தி சம்பாதிக்கும்
    பொருளெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்
    காற்றைப் போல மறையுதே ஒரு
    அடி எடுத்தா அடுத்த படி .
    தெரியலையே புரியலையே
    இதற்கு மாற்றுபடி என்னவென்று
    தெரியலையே புரியலையே


    Malaipola eerippossu vilavasi
    ithula malassi poyi nikkiran
    manushan muzhuvasi
    iyesuva visuvasi
    irangkumaiya vilavasi

    arisi vila irangkip possu santhosham
    aana petrol vila eerip
    possu enna sella
    manushan vila eeralaiye puriyalaiye
    ithukku markkanthan ethu innu
    theriyalaiye puriyalaiye

    vervai sinthi sampathikkum
    porulellam oru notippozhuthil
    karraip pola maraiyuthe oru
    ati etuththa atuththa pati
    theriyalaiye puriyalaiye
    itharku marrupati ennavenru
    theriyalaiye puriyalaiye


  • மாறும் இவ்வுலகினிலே Marum ivvulakinile

    மாறும் இவ்வுலகினிலே
    மாறாத உம் கிருபை
    மாறிடும் மனிதன் மாறிடுவான்
    மாறாத தேவன் இயேசுவன்றோ

    பட்டதும் போதும் சுட்டதும் போதும்
    கண்ணீரும் போதும் கவலையும் போதும்
    உம் கிருபை எனக்குப் போதும் போதும்
    மன்னவா எனக்கு நீர் தான் வேண்டும்

    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
    ஞாலம் ஒருநாள் கைவிட்ட ஓடும்
    ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
    ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்


    Marum ivvulakinile
    maratha um kirupai
    maritum manithan marituvan
    maratha thevan iyesuvanro

    pattathum pothum suttathum pothum
    kannirum pothum kavalaiyum pothum
    um kirupai enakkup pothum pothum
    mannava enakku nir than ventum

    kalangkal marum kolangkal marum
    nyalam orunal kaivitta ootum
    aazham akalam nilam ellaikana anpu
    aantavarin patham athuve enakku pothum


  • மீனுக்கார பேதுரு Minukkara pethuru

    மீனுக்கார பேதுரு நானுங்க
    இயேசப்பாவின் முதல் சீஷங்க
    வால மீனு நானுங்க
    வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
    விரும்புகிற சுறா மீனு நானுங்க
    மத்தி மீனு நானுங்க
    நெத்திலி மீனு நானுங்க
    இயேசு ராஜா
    விரும்புகிற சுத்த மீனு நானுங்க மீனுக்கார

    அஞ்சு அப்பம் இரண்டு மீனுங்க என்
    ஆண்டவருக்கு பிடிச்ச உணவுங்க
    சின்னபையன் கொண்டு வந்தாங்க அத
    அஞ்சாயிரமா மாத்தினாருங்க
    வால மீனு நானுங்க
    வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
    விரும்புகிற சுறாமீனு நானுங்க
    பாறை மீனு நானுங்க
    இறா மீனு நானுங்க
    இயேசு ராஜா
    விரும்புகிற கிழங்கா மீனு நானுங்க

    துள்ள குதிக்கும் டால்பின் மீனுங்க
    ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க எங்க
    சேற்றிலிருந்து தூக்கினாருங்க எனை
    மாற்றி மகிமை படுத்துறாருங்க
    வால மீனு நானுங்க
    வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
    விரும்புகிற சுறாமீனு நானுங்க
    உழுவை மீனு நானுங்க
    கொழுவை மீனு நானுங்க இயேசுராஜா
    விரும்புகின்ற ஷீலா மீனு நானுங்க

    அன்புள்ள மீனு நானுங்க என்னை
    யாருமே வெறுத்ததில்லைங்க
    பாசமுள்ள இயேசு அப்பாவின் கையில்
    பயன்படும் மீனு நானுங்க உன்னத மீனுங்க
    வால மீனு நானுங்க
    வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
    விரும்புகிற சுறாமீனு நானுங்க
    தங்க மீனு நானுங்க
    சிங்க மீனு நானுங்க பரலோகில்
    நீந்தி மகிழும் வேங்கை மீனு நானுங்க


    minukkara pethuru nanungka
    iyesappavin muthal sishangka
    vala minu nanungka
    vanysira minu nanungka iyesu raja
    virumpukira sura minu nanungka
    maththi minu nanungka
    neththili minu nanungka
    iyesu raja
    virumpukira suththa minu
    nanungka minukkara

    anysu appam irantu minungka en
    aantavarukku pitissa unavungka
    sinnapaiyan kontu vanthangka atha
    anysayirama maththinarungka
    vala minu nanungka
    vanysira minu nanungka iyesu raja
    virumpukira suraminu nanungka
    parai minu nanungkaira minu nanungka iyesu raja virumpukira kizhangka minu nanungka

    thulla kuthikkum talpin minungka
    aantavar kaiyil kelvin minungka engka
    serrilirunthu thukkinarungka enai
    marri makimai patuththurarungka
    vala minu nanungka
    vanysira minu nanungka iyesu raja
    virumpukira suraminu nanungka
    uzhuvai minu nanungka
    kozhuvai minu nanungka iyesuraja
    virumpukinra shila minu nanungka

    anpulla minu nanungka ennai
    yarume veruththathillaingka
    pasamulla iyesu appavin kaiyil
    payanpatum minu nanungka unnatha minungka
    vala minu nanungka
    vanysira minu nanungka iyesu raja
    virumpukira suraminu nanungka
    thangka minu nanungka
    singka minu nanungka paralokil
    ninthi makizhum vengkai minu
    nanungka vala


  • உம் சித்தம் Um siththam

    உம் சித்தம் செய்வதில்தான் நான்
    மகிழ்ச்சி அடைகின்றேன்
    உம் வசனம் இதயத்திலே, தினம்
    தியானமாய்க் கொண்டுள்ளேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    மகிமை உமக்குத்தான்
    அல்லேலூயா அல்லேலூயா
    மாட்சிமை உமக்குத்தான்

    காத்திருந்தேன் பொறுமையுடன்
    கேட்டீரே என் வேண்டுதலை
    குழியிலிருந்து தூக்கி – (கன்)
    மலையில் நிறுத்தினீரே

    துதிக்கும் புதியபாடல் (என்)
    நாவில் எழச்செய்தீரே – உம்மைத்
    பலரும் இதைப் பார்த்துப் பார்த்து
    நம்புவார்கள் உம்மையே

    எத்தனை எத்தனை நன்மைகளோ
    என் வாழ்வில் நீர் செய்தீர்
    எண்ண இயலாதையா,
    விவரிக்க முடியாதையா

    மாபெரும் சபை நடுவில்
    உம் புகழை நான் அறிவிப்பேன்
    மௌனமாய் இருக்கமாட்டேன்
    மனக்கண்கள் திறந்தீரே


    Um siththam seyvathilthan nan
    makizhssi ataikinren
    um vasanam ithayaththile thinam
    thiyanamayk kontullen
    alleluya alleluya
    makimai umakkuththan
    alleluya alleluya
    matsimai umakkuththan

    kaththirunthen porumaiyutan
    kettire en ventuthalai
    kuzhiyilirunthu thukki kan
    malaiyil niruththinire

    thuthikkum puthiyapatal en
    navil ezhasseythire ummaith
    palarum ithaip parththup parththu
    nampuvarkal ummaiye

    eththanai eththanai nanmaikalo
    en vazhvil nir seythir
    enna iyalathaiya
    vivarikka mutiyathaiya

    maperum sapai natuvil
    um pukazhai nan arivippen
    maunamay irukkamatten
    manakkankal thiranthire


  • கிருபாசனதண்டை ஓடி kirupasanathantai ooti

    கிருபாசனதண்டை ஓடி வந்தேன்
    கிருபையாய் இரங்கிடுமே
    தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
    உம் கிருபையால் நிறைத்திடுமே
    தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
    உம் கிருபையால் நிரைத்திடுமே
    உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை
    அதை நீர் நன்றாய் அறிவீர்

    என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்
    அதை நீர் நன்றாய் அறிவீர்
    உம் பெலத்தால் எல்லாம் செய்திட
    உம் கிருபையால் நிறைத்திடுமே

    சோதனைகள் தாங்க பெலனில்லை
    அதை நீர் நன்றாய் அறிவீர்
    சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
    உம் கிருபையால் நிரைத்திடுமே


    kirupasanathantai ooti vanthen
    kirupaiyay irangkitume
    thatumarram illamal nan vazhnthita
    um kirupaiyal niraiththitume
    thatumarram illamal nan vazhnthita
    um kirupaiyal niraiththitume
    um kirupai illaiyenral nan illai
    athai nir nanray arivir

    en suyapelaththal onrum seythiten
    athai nir nanray arivir
    um pelaththal ellam seythita
    um kirupaiyal niraiththitume

    sothanaikal thangka pelanillai
    athai nir nanray arivir
    sornthitamal jepam eeretukka
    um kirupaiyal niraiththitume


  • ஜீவ தயாபரனே Jiva thayaparane

    ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே
    மேகமணாளனே துங்கமெய்தேவனே
    வாரும் வாரும் என்னுள்ளில் வாரும்
    தாரும் தாரும் ஜீவ ஆவி தாரும்

    சோர்வான் சமயங்களில் என்
    தளர்வான நேரங்களில்
    மலரான உந்தன் பாதம்
    அமர்ந்து நான் அழுதிடுவேன்

    தூற்றிடும் மனிதர்களின்
    சாத்தானின் தந்திரங்கள்
    சகித்திட பெலன் தாரும்
    பொருத்திட கிருபை செய்யும்

    சாவின் துக்கங்களில்
    மரணத்தின் பள்ளங்களில் நீர்
    என்னோடு இருந்தீரானால் எந்த
    ஆபத்தும் வந்திடுமோ

    உடைந்த நேரங்களில்
    உள்ளத்தின் சோர்வுகளில்
    ஆற்றிடும் என் பாதமே
    தேற்றிட வாருமைய்யா


    Jiva thayaparane eekathiriththuvane
    mekamanalane thungkameythevane
    varum varum ennullil varum
    tharum tharum jiva aavi tharum

    sorvan samayangkalil en
    thalarvana nerangkalil
    malarana unthan patham
    amarnthu nan azhuthituven

    thurritum manitharkalin
    saththanin thanthirangkal
    sakiththita pelan tharum
    poruththita kirupai seyyum

    savin thukkangkalil
    maranaththin pallangkalil nir
    ennotu irunthiranal entha
    aapaththum vanthitumo

    utaintha nerangkalil
    ullaththin sorvukalil
    aarritum en pathame
    therrita varumaiyya


  • மேசியா மேசியா Mesiya mesiya

    மேசியா மேசியா
    மேசியா இயேசு ராஜா
    ஓசையுள்ள கைத்தாளத்தோடு
    இசையுள்ள மேளத்தாளத்தோடு
    ஆசையுடன் நான் பாடும் பாட்டு என்
    இயேசு ராஜாவுக்கு

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    வரப்போகும் ராஜா மேசியா
    வந்துவிட்ட ராஜா மேசியா
    உயிர்த்தெழுந்த ராஜா மேசியா நம்மை
    வருகையில் சேர்த்திடும் மேசியா

    மேகங்களின் மீதே மேசியா
    ராக தாள தொனியோடு வருகிறார்
    காற்றின் செட்டைகளுடன் மேசியா நம்மை
    மார்போடு அணைதிட வருகிறார்

    அன்பே உருவான மேசியா என்னை
    ஆளுகின்ற தெய்வம் மேசியா
    ஆத்ம மணாளன் மேசியா என்னை
    அரவணைக்கும் நேசர் மேசியா


    Mesiya mesiya
    mesiya iyesu raja
    oosaiyulla kaiththalaththotu
    isaiyulla melaththalaththotu
    aasaiyutan nan patum pattu en
    iyesu rajavukku
    alleluya alleluya alleluya
    alleluya alleluya alleluya

    varappokum raja mesiya
    vanthuvitta raja mesiya
    uyirththezhuntha raja mesiya nammai
    varukaiyil serththitum mesiya

    mekangkalin mithe mesiya
    raka thala thoniyotu varukirar
    karrin settaikalutan mesiya nammai
    marpotu anaithita varukirar

    anpe uruvana mesiya ennai
    aalukinra theyvam mesiya
    aathma manalan mesiya ennai
    aravanaikkum nesar mesiya


  • ஜெபத்தின் நாயகனே Jepaththin nayakane

    ஜெபத்தின் நாயகனே எங்கள்
    தவத்திரு திருமகனே
    அகிலம் போற்றும் மகிபன் உம்மை
    வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை

    ஆவியின் அபிஷேகத்தால் எங்களை
    நிரப்பி மகிழணுமே
    அந்நிய பாஷை பரலோக பாஷை
    பாடி மகிழணுமே நாங்கள்

    பரிசுத்த ஸ்தலத்தினிலே நாங்கள்
    துதித்து மகிழணுமே
    பரலோக அக்கினி பலி பீடத்திலே
    பரவசம் ஆகணுமே எங்கள் மீது

    ராதனை அபிஷேகம் எங்கள்
    சபையில் இறங்கணுமே
    ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும்
    பதில் தந்து மகிழணுமே எங்களுக்கு


    Jepaththin nayakane engkal
    thavaththiru thirumakane
    akilam porrum makipan ummai
    vazhththi vanangkukirom ummai
    aaviyin apishekaththal engkalai
    nirappi makizhanume
    anniya pashai paraloka pashai
    pati makizhanume nangkal

    parisuththa sthalaththinile nangkal
    thuthiththu makizhanume
    paraloka akkini pali pitaththile
    paravasam aakanume engkal mithu

    aarathanai apishekam engkal
    sapaiyil irangkanume
    eeretukkum entha thevaikatkum nir
    pathil thanthu makizhanume engkalukku


  • ஜெபிக்க ஜெபிக்க Jepikka jepikka

    ஜெபிக்க… ஜெபிக்க… மனம்
    புத்தம் புதிய இருதயமாய் மாறும்
    துதிக்க.. துதிக்க.. மனபாரம் நீங்கி
    நம் துக்கமெல்லாம் தீரும்
    கவலையெல்லாம் நீங்கும்
    கண்ணீரெல்லாம் மறையும்
    கழுகு போலப் புதுபெலன் அடைந்து
    நம்மை பெலவானாய் மாற்றும்

    இடைவிடா ஜெபத்தினால் – பெரும்
    தடைகளைத் தகர்த்திடலாம் – நாம்
    கருத்துடன் ஜெபிப்பதினால் – நம்
    கண்ணீரைத் துடைத்திடலாம்
    ஊக்கமான ஜெபம் ஏக்கங்கள் தீர்க்கும்
    வெற்றியைத் தந்திடும்
    புது மனிதனாக்கி நல் கிருபைகளை தந்து
    மகிமையில் சேர்த்திடும்
    பெலவானாய் மாற்றிடும் சுகமதைத் தந்திடும்

    ஜெபத்தின் வல்லமையால்
    நாம் சாத்தானை வென்றிடலாம்
    துதியின் வல்லமையால்
    பெரும் சதிகளை முறித்திடலாம்
    ஜெபிக்கிற மனிதன் வெற்றியைப் பெறுவான்
    தோல்விக்கு அஞ்சிடான்
    கரடு முரடான வாழ்வைக் கூட
    இலகுவாய்க் கடந்திடுவான்
    கலங்கி நின்றிடான் கர்த்தரை மறந்திடான்

    வேதம் சத்தியம் நமக்கு
    விடுதலை நிச்சயம்
    ஆவியின் பாடல்கள் நம்மை
    ஆற்றித் தேற்றிடும்
    கட்டுகள் உடைக்கும் கவலைகள் தீர்க்கும்
    கண்ணீரைத் துடைத்திடும்
    நித்திய சத்திய சுத்த மகத்துவ
    வழிதனைக் காட்டிடும்
    வேதமே தீபம் ஜெபமே ஜெயம்


    Jepikka jepikka manam
    puththam puthiya iruthayamay marum
    thuthikka.. thuthikka.. manaparam ningki
    nam thukkamellam thirum
    kavalaiyellam ningkum
    kannirellam maraiyum
    kazhuku polap puthupelan atainthu
    nammai pelavanay marrum

    itaivita jepaththinal perum
    thataikalaith thakarththitalam nam
    karuththutan jepippathinal nam
    kanniraith thutaiththitalam
    uukkamana jepam eekkangkal thirkkum
    verriyaith thanthitum
    puthu manithanakki nal kirupaikalai thanthu
    makimaiyil serththitum
    pelavanay marritum sukamathaith thanthitum

    jepaththin vallamaiyal
    nam saththanai venritalam
    thuthiyin vallamaiyal
    perum sathikalai muriththitalam
    jepikkira manithan verriyaip peruvan
    tholvikku anysitan
    karatu muratana vazhvaik kuta
    ilakuvayk katanthituvan
    kalangki ninritan karththarai maranthitan

    vetham saththiyam namakku
    vituthalai nissayam
    aaviyin patalkal nammai
    aarrith therritum
    kattukal utaikkum kavalaikal thirkkum
    kanniraith thutaiththitum
    niththiya saththiya suththa makaththuva
    vazhithanaik kattitum
    vethame thipam jepame jeyam


  • வீடும் ஆஸ்தியும் Vitum aasthiyum

    வீடும் ஆஸ்தியும் பிதாக்கள்
    வைக்கும் சுதந்திரம்
    புத்தியுள்ள மனைவியோ
    கர்த்தர் அருளும் ஈவு வீடும்

    குணசாலியான ஸ்திரீயை
    கண்டுப்பிடிப்பவன் யார்? அவள்
    விலையோ முத்துவைப்
    பார்க்கிலும் அதிகமானது
    புத்தியுள்ள ஸ்திரீ தன்
    வீட்டைக் கட்டுகிறார்
    புத்தியில்லாத ஸ்திரீயோ
    அதை இடித்துப் போடுகிறாள்

    உன் மனைவி உன் விட்டோரம்
    கனி தரும் திராட்சைச் செடி
    உன் பிள்ளைகள் உன் வீட்டைச்
    சுற்றிலும் ஒலிவக் கன்றுகள்
    குடும்பம் என்னும் ஒளிவிளக்கை
    ஏற்ற வந்தவள்
    இரவும் பகலும் அவளின் தீபம்
    அணைவது இல்லையே

    மணவாளன் கிறிஸ்துவுக்காக
    ஏங்கி நிநிற்பவள் தன்னை
    மணவாட்டியாக
    அலங்கரித்து எதிரே செல்பவள்
    பரலோகத்தின் நிழலாட்டத்தை
    பூமியில் செய்பவள்
    கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாகி
    காத்து இருப்பவள்


    Vitum aasthiyum pithakkal
    vaikkum suthanthiram
    puththiyulla manaiviyo
    karththar arulum iivu vitum

    kunasaliyana sthiriyai
    kantuppitippavan yar aval
    vilaiyo muththuvaip
    parkkilum athikamanathu
    puththiyulla sthiri than
    vittaik kattukirar
    puththiyillatha sthiriyo
    athai itiththup potukiral

    un manaivi un vittoram
    kani tharum thiratsais seti
    un pillaikal un vittais
    surrilum olivak kanrukal
    kutumpam ennum olivilakkai
    eerra vanthaval
    iravum pakalum avalin thipam
    anaivathu illaiye

    manavalan kiristhuvukkaka
    eengki ninirpaval thannai
    manavattiyaka
    alangkariththu ethire selpaval
    paralokaththin nizhalattaththai
    pumiyil seypaval
    karththarin varukaikku aayaththamaki
    kaththu iruppaval