Author: admin

  • மறப்பேனோ மறப்பேனோ Marappeno marappeno

    மறப்பேனோ மறப்பேனோ உம்மை
    மறந்தும் துறந்தும் இருப்பேனோ
    இருப்பேனோ… இருப்பேனோ .. நீர்
    இல்லாமல் வாழ்ந்திருப்பேனோ
    அது கூடாது கூடாது தேவா
    நீர் இல்லாமல் வாழ்வேது நாதா – மறப்பேனோ

    ஒரு தந்தை போல் சுமக்கும் தெய்வம்
    உம் விந்தையை நான் மறவேன் – ஒரு
    தாயைப் போல் தேற்றும் நல்தேவன்
    நீரின்றி யாருண்டு தேவா

    கண்மணிபோல் காக்கும் தெய்வம்
    உம் காரூண்யத்தை நான் மறவேன்
    மரணப் பள்ளத்தில் நான் நடந்தாலும்
    நீருண்டு பயமில்லை தேவா

    என் பாதம் கல்லில் இடறாமல் – என்னை
    தூதர்கள் ஏந்திடுவார்- என்னை
    நேசித்து போஷிக்கும் தேவன்
    உம்மைப் போல் யாருண்டு தேவா


    Marappeno marappeno ummai
    maranthum thuranthum iruppeno
    iruppeno iruppeno nir
    illamal vazhnthiruppeno
    athu kutathu kutathu theva
    nir illamal vazhvethu natha marappeno

    oru thanthai pol sumakkum theyvam
    um vinthaiyai nan maraven oru
    thayaip pol therrum nalthevan
    nirinri yaruntu theva

    kanmanipol kakkum theyvam
    um karunyaththai nan maraven
    maranap pallaththil nan natanthalum
    niruntu payamillai theva

    en patham kallil itaramal ennai
    thutharkal eenthituvar- ennai
    nesiththu poshikkum thevan
    ummaip pol yaruntu theva


  • மண்ணான ஒடம்பு Mannana otampu

    மண்ணான ஒடம்பு மக்கி போகும் எலும்பு
    நாறி போன இந்த நரம்பு
    மனுஷா ஏன் வீம்பு
    இயேசு ராஜாவை நம்பு

    வேஷமாகவே திரியுற விருதாவா சஞ்சலபடுகிற
    ஆஸ்தியை அவனியில் சேர்க்குற
    அத வாறுவார் யாரென்று தெரியல
    கோட்டும் பேண்டும் சூட்டும் நாட்டும்
    உன்னை மாற்றக் கூடுமோ
    ஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியல
    இயேசுவை நீ அறியல

    உண்டு உன் உடலை பெருக்குற
    கண் கண்டதுல ஆசைப்படுகிற
    சண்டை போட முன்னாடி நிக்ற
    வீணா மண்டையத்தான் ஒடச்சிட்டு அழுகுற
    செல்வம் கல்வி ஞானம் உயர்வு
    உன்னை மாற்றக்கூடுமோ
    ஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியல
    இயேசுவைத் தவிர வழியில்லை

    உலகம் அழிஞ்சிடும் தெரிஞ்சுக்கோ அதில்
    உள்ள யாவும் மறைஞ்சிடும் புரிஞ்சுக்கோ
    இருப்பது கொஞ்ச காலமே அதில்
    இயேசுவே தெய்வம் என்று அறிஞ்சுக்கோ
    சொந்தம் பந்தம் உற்றார் நண்பர்
    உன்னை காப்பாற்றக் கூடுமோ
    இதை புரிஞ்சுக்கோ இதை தெரிஞ்சுக்கோ
    இயேசுவை இன்று அறிஞ்சுக்கோ


    Mannana otampu makki pokum elumpu
    nari pona intha narampu
    manusha een vimpu
    iyesu rajavai nampu

    veshamakave thiriyura viruthava sanysalapatukira
    aasthiyai avaniyil serkkura
    atha varuvar yarenru theriyala
    kottum pentum suttum nattum
    unnai marrak kutumo
    onnum puriyala onnum theriyala
    iyesuvai ni ariyala

    untu un utalai perukkura
    kan kantathula aasaippatukira
    santai pota munnati nikra
    vina mantaiyaththan otassittu azhukura
    selvam kalvi nyanam uyarvu
    unnai marrakkutumo
    onnum puriyala onnum theriyala
    iyesuvaith thavira vazhiyillai

    ulakam azhinysitum therinysukko athil
    ulla yavum marainysitum purinysukko
    iruppathu konysa kalame athil
    iyesuve theyvam enru arinysukko
    sontham pantham urrar nanpar
    unnai kapparrak kutumo
    ithai purinysukko ithai therinysukko
    iyesuvai inru arinysukko


  • யேகோவாயீரே எனக்கெல்லாம்Yekovayire enakkellam

    யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
    என் தேவையெல்லாம் சந்திப்பீர்

    என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
    என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே

    ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
    தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே


    Yekovayire enakkellam nire
    en thevaiyellam santhippir

    en ethirparppukku melaka seypavare
    en jepangkal anaiththirkum pathil tharuvire

    ovvoru nalum athisayamaka poshiththire
    thalaikunintha itangkalilellam uyarththinire

    aarathanai aarathanai
    aarathanai umakke


  • ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா Uurrungkappa uurrungkappa

    ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா
    உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
    நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
    உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
    நதியே நதியே நதியே
    காற்றே காற்றே காற்றே
    அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே
    நதியே நதியே நதியே
    காற்றே காற்றே காற்றே

    அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே
    தேசத்தின் ஜனங்களை
    உமதண்டை நடத்திட
    தேசத்தைக் கலக்கிட
    என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
    ஓ.. ஓ…

    இயேசுவின் நாமத்தினால்
    அற்புதம் செய்திட
    இரட்டிப்பான வரங்களால்
    என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
    ஓ.. ஓ…

    ஆத்தும பாரத்தோடு
    நான் ஊழியம் செய்திட
    திறப்பிலே நின்றிட
    என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
    ஓ… ஓ…


    uurrungkappa uurrungkappa
    um aaviyal parisuththa aaviyal nirappungkappa nirappungkappa
    um aaviyal parisuththa aaviyal
    nathiye nathiye nathiye
    karre karre karre
    akkini akkini akkini akkiniye
    nathiye nathiye nathiye
    karre karre karre

    akkini akkini akkini akkiniye
    thesaththin janangkalai
    umathantai nataththita
    thesaththaik kalakkita
    ennai nirappi nirappi nirappitum
    oo.. oo

    iyesuvin namaththinal
    arputham seythita
    irattippana varangkalal
    ennai nirappi nirappi nirappitum
    oo.. oo

    aaththuma paraththotu
    nan uuzhiyam seythita
    thirappile ninrita
    ennai nirappi nirappi nirappitum
    oo oo


  • மனம் சுத்தி Manam suththi

    மனம் சுத்தி சுத்தி வருதே தானே
    இயேசு ராஜாவே
    இயேசு ராஜாவே இயேசு ராஜாவே
    நா உம்ம விட்டு தூரம் போனா…
    மனம் நல்லாயில்ல
    மனம் நல்லாயில்ல மனம் நல்லாயில்ல…(3)
    மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி
    மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி
    மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி
    மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி

    இயேசு தான் என் ஜீவன் பெலனும்
    யாருக்கு தான் இனி அஞ்சி
    அஞ்சி வாழணும் அஞ்சி அஞ்சி வாழணும்
    அஞ்சி அஞ்சி வாழணும்

    உங்க வேதம் உடலுக்கு ஜீவன்
    அதுவே எனக்கு அனுதின கீதம்
    அனுதின கீதம் அனுதின கீதம்
    அனுதின கீதம்


    Manam suththi suththi varuthe thane
    iyesu rajave
    iyesu rajave iyesu rajave
    na umma vittu thuram pona
    manam nallayilla
    manam nallayilla manam nallayilla
    manam suththi suththi suththi suththi suththi suththi
    manam suththi suththi suththi suththi suththi suththi
    manam suththi suththi suththi suththi suththi suththi
    manam suththi suththi suththi suththi suththi suththi

    iyesu than en jivan pelanum
    yarukku than ini anysi
    anysi vazhanum anysi anysi vazhanum
    anysi anysi vazhanum

    ungka vetham utalukku jivan
    athuve enakku anuthina kitham
    anuthina kitham anuthina kitham
    anuthina kitham


  • பாட்டு ஐயா பாட்டு Pattu aiya pattu

    பாட்டு ஐயா பாட்டு
    இது கிராமப்புற பாட்டு,
    இது நாட்டுப்புற பாட்டு
    இது அல்லேலூயா பாட்டு,
    இது அபிஷேக பாட்டு – பாட்டு

    தேனிலும் இனிய நல்ல தெவிட்டாத பாட்டு
    பாட்டு ஐயா பாட்டு இது பரலோகப் பாட்டு
    கனியிலும் மதுரமான அதி மதுரப்பாட்டு
    பாட்டு ஐயா பாட்டு நான் ரசித்துப் பாடும் பாட்டும்
    இது அன்பு உள்ள பாட்டு இது பண்பு உள்ள பாட்டு
    என் துன்பம் நீக்கும் பாட்டு
    என் துயரம் நீக்கும் பாட்டு
    நம்மை வாழ வைக்கும் அன்பு தெய்வம்
    இயேசு ராஜா பாட்டு

    வியாதிகள் போக்கும் நல்ல
    மருந்து உள்ள பாட்டு
    பாட்டு ஐயா பாட்டு இது அற்புதத்தின் பாட்டு
    சாபரோகம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் பாட்டு
    பாட்டு ஐயா பாட்டு இது விடுதலையின் பாட்டு
    இது காரமுள்ள பாட்டு இது சாரமுள்ள பாட்டு
    இது சத்தியத்தின் பாட்டு
    இது நித்தியம் சேர்க்கும் பாட்டு
    எழுப்புதலின் பாட்டு

    எத்தனையோ பரிசுத்தர்கள் எழுதி வச்ச பாட்டு
    அத்தனையும் முத்தான புத்தி சொல்லும் பாட்டு
    சத்தியத்தை எடுத்துச் சொல்லும்
    சத்துவமுள்ள பாட்டு
    பக்தி விருத்திக் கேதுவான
    பக்தன் எந்தன் பாட்டு
    இது உண்மையுள்ள பாட்டு
    நல்ல தன்மையுள்ள பாட்டு
    பரலோக தேவனையே பாடிப் புகழும் பாட்டு
    என் ஜீவனுள்ள நாளெல்லாம்
    ரசித்துப் பாடும் பாட்டு


    Pattu aiya pattu
    ithu kiramappura pattu
    ithu nattuppura pattu
    ithu alleluya pattu
    ithu apisheka pattu pattu

    thenilum iniya nalla thevittatha pattu
    pattu aiya pattu ithu paralokap pattu
    kaniyilum mathuramana athi mathurappattu
    pattu aiya pattu nan rasiththup patum pattum
    ithu anpu ulla pattu ithu panpu ulla pattu
    en thunpam nikkum pattu
    en thuyaram nikkum pattu
    nammai vazha vaikkum anpu theyvam
    iyesu raja pattu

    viyathikal pokkum nalla
    marunthu ulla pattu
    pattu aiya pattu ithu arputhaththin pattu
    saparokam nikki nammai suththikarikkum pattu
    pattu aiya pattu ithu vituthalaiyin pattu
    ithu karamulla pattu ithu saramulla pattu
    ithu saththiyaththin pattu
    ithu niththiyam serkkum pattu
    ezhupputhalin pattu

    eththanaiyo parisuththarkal ezhuthi vassa pattu
    aththanaiyum muththana puththi sollum pattu
    saththiyaththai etuththus sollum
    saththuvamulla pattu
    pakthi viruththik kethuvana
    pakthan enthan pattu
    ithu unmaiyulla pattu
    nalla thanmaiyulla pattu
    paraloka thevanaiye patip pukazhum pattu
    en jivanulla nalellam
    rasiththup patum pattu


  • மலைபோல ஏறிப்போச்சு Malaipola eerippossu

    மலைபோல ஏறிப்போச்சு விலவாசி
    இதுல மலச்சி போயி நிக்கிறான்
    மனுஷன் முழுவாசி
    இயேசுவ விசுவாசி
    இறங்குமையா விலவாசி

    அரிசி வில இறங்கிப் போச்சு சந்தோஷம்
    ஆனா பெட்ரோல் வில ஏறிப்
    போச்சு என்ன செல்ல
    மனுஷன் வில ஏறலையே புரியலையே
    இதுக்கு மார்க்கந்தான் எது இன்னு
    தெரியலையே புரியலையே

    வேர்வை சிந்தி சம்பாதிக்கும்
    பொருளெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்
    காற்றைப் போல மறையுதே ஒரு
    அடி எடுத்தா அடுத்த படி .
    தெரியலையே புரியலையே
    இதற்கு மாற்றுபடி என்னவென்று
    தெரியலையே புரியலையே


    Malaipola eerippossu vilavasi
    ithula malassi poyi nikkiran
    manushan muzhuvasi
    iyesuva visuvasi
    irangkumaiya vilavasi

    arisi vila irangkip possu santhosham
    aana petrol vila eerip
    possu enna sella
    manushan vila eeralaiye puriyalaiye
    ithukku markkanthan ethu innu
    theriyalaiye puriyalaiye

    vervai sinthi sampathikkum
    porulellam oru notippozhuthil
    karraip pola maraiyuthe oru
    ati etuththa atuththa pati
    theriyalaiye puriyalaiye
    itharku marrupati ennavenru
    theriyalaiye puriyalaiye


  • மாறும் இவ்வுலகினிலே Marum ivvulakinile

    மாறும் இவ்வுலகினிலே
    மாறாத உம் கிருபை
    மாறிடும் மனிதன் மாறிடுவான்
    மாறாத தேவன் இயேசுவன்றோ

    பட்டதும் போதும் சுட்டதும் போதும்
    கண்ணீரும் போதும் கவலையும் போதும்
    உம் கிருபை எனக்குப் போதும் போதும்
    மன்னவா எனக்கு நீர் தான் வேண்டும்

    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
    ஞாலம் ஒருநாள் கைவிட்ட ஓடும்
    ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
    ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்


    Marum ivvulakinile
    maratha um kirupai
    maritum manithan marituvan
    maratha thevan iyesuvanro

    pattathum pothum suttathum pothum
    kannirum pothum kavalaiyum pothum
    um kirupai enakkup pothum pothum
    mannava enakku nir than ventum

    kalangkal marum kolangkal marum
    nyalam orunal kaivitta ootum
    aazham akalam nilam ellaikana anpu
    aantavarin patham athuve enakku pothum


  • மீனுக்கார பேதுரு Minukkara pethuru

    மீனுக்கார பேதுரு நானுங்க
    இயேசப்பாவின் முதல் சீஷங்க
    வால மீனு நானுங்க
    வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
    விரும்புகிற சுறா மீனு நானுங்க
    மத்தி மீனு நானுங்க
    நெத்திலி மீனு நானுங்க
    இயேசு ராஜா
    விரும்புகிற சுத்த மீனு நானுங்க மீனுக்கார

    அஞ்சு அப்பம் இரண்டு மீனுங்க என்
    ஆண்டவருக்கு பிடிச்ச உணவுங்க
    சின்னபையன் கொண்டு வந்தாங்க அத
    அஞ்சாயிரமா மாத்தினாருங்க
    வால மீனு நானுங்க
    வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
    விரும்புகிற சுறாமீனு நானுங்க
    பாறை மீனு நானுங்க
    இறா மீனு நானுங்க
    இயேசு ராஜா
    விரும்புகிற கிழங்கா மீனு நானுங்க

    துள்ள குதிக்கும் டால்பின் மீனுங்க
    ஆண்டவர் கையில் கெல்வின் மீனுங்க எங்க
    சேற்றிலிருந்து தூக்கினாருங்க எனை
    மாற்றி மகிமை படுத்துறாருங்க
    வால மீனு நானுங்க
    வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
    விரும்புகிற சுறாமீனு நானுங்க
    உழுவை மீனு நானுங்க
    கொழுவை மீனு நானுங்க இயேசுராஜா
    விரும்புகின்ற ஷீலா மீனு நானுங்க

    அன்புள்ள மீனு நானுங்க என்னை
    யாருமே வெறுத்ததில்லைங்க
    பாசமுள்ள இயேசு அப்பாவின் கையில்
    பயன்படும் மீனு நானுங்க உன்னத மீனுங்க
    வால மீனு நானுங்க
    வஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜா
    விரும்புகிற சுறாமீனு நானுங்க
    தங்க மீனு நானுங்க
    சிங்க மீனு நானுங்க பரலோகில்
    நீந்தி மகிழும் வேங்கை மீனு நானுங்க


    minukkara pethuru nanungka
    iyesappavin muthal sishangka
    vala minu nanungka
    vanysira minu nanungka iyesu raja
    virumpukira sura minu nanungka
    maththi minu nanungka
    neththili minu nanungka
    iyesu raja
    virumpukira suththa minu
    nanungka minukkara

    anysu appam irantu minungka en
    aantavarukku pitissa unavungka
    sinnapaiyan kontu vanthangka atha
    anysayirama maththinarungka
    vala minu nanungka
    vanysira minu nanungka iyesu raja
    virumpukira suraminu nanungka
    parai minu nanungkaira minu nanungka iyesu raja virumpukira kizhangka minu nanungka

    thulla kuthikkum talpin minungka
    aantavar kaiyil kelvin minungka engka
    serrilirunthu thukkinarungka enai
    marri makimai patuththurarungka
    vala minu nanungka
    vanysira minu nanungka iyesu raja
    virumpukira suraminu nanungka
    uzhuvai minu nanungka
    kozhuvai minu nanungka iyesuraja
    virumpukinra shila minu nanungka

    anpulla minu nanungka ennai
    yarume veruththathillaingka
    pasamulla iyesu appavin kaiyil
    payanpatum minu nanungka unnatha minungka
    vala minu nanungka
    vanysira minu nanungka iyesu raja
    virumpukira suraminu nanungka
    thangka minu nanungka
    singka minu nanungka paralokil
    ninthi makizhum vengkai minu
    nanungka vala


  • உம் சித்தம் Um siththam

    உம் சித்தம் செய்வதில்தான் நான்
    மகிழ்ச்சி அடைகின்றேன்
    உம் வசனம் இதயத்திலே, தினம்
    தியானமாய்க் கொண்டுள்ளேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    மகிமை உமக்குத்தான்
    அல்லேலூயா அல்லேலூயா
    மாட்சிமை உமக்குத்தான்

    காத்திருந்தேன் பொறுமையுடன்
    கேட்டீரே என் வேண்டுதலை
    குழியிலிருந்து தூக்கி – (கன்)
    மலையில் நிறுத்தினீரே

    துதிக்கும் புதியபாடல் (என்)
    நாவில் எழச்செய்தீரே – உம்மைத்
    பலரும் இதைப் பார்த்துப் பார்த்து
    நம்புவார்கள் உம்மையே

    எத்தனை எத்தனை நன்மைகளோ
    என் வாழ்வில் நீர் செய்தீர்
    எண்ண இயலாதையா,
    விவரிக்க முடியாதையா

    மாபெரும் சபை நடுவில்
    உம் புகழை நான் அறிவிப்பேன்
    மௌனமாய் இருக்கமாட்டேன்
    மனக்கண்கள் திறந்தீரே


    Um siththam seyvathilthan nan
    makizhssi ataikinren
    um vasanam ithayaththile thinam
    thiyanamayk kontullen
    alleluya alleluya
    makimai umakkuththan
    alleluya alleluya
    matsimai umakkuththan

    kaththirunthen porumaiyutan
    kettire en ventuthalai
    kuzhiyilirunthu thukki kan
    malaiyil niruththinire

    thuthikkum puthiyapatal en
    navil ezhasseythire ummaith
    palarum ithaip parththup parththu
    nampuvarkal ummaiye

    eththanai eththanai nanmaikalo
    en vazhvil nir seythir
    enna iyalathaiya
    vivarikka mutiyathaiya

    maperum sapai natuvil
    um pukazhai nan arivippen
    maunamay irukkamatten
    manakkankal thiranthire