Author: admin

  • மாறாதவர் எந்தன் Marathavar enthan

    மாறாதவர் எந்தன் இயேசு
    என்னை மறவாதர் எந்தன் நேசர்
    காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்
    ஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதவர்

    மனிதன் சொல்லும் வார்த்தைகள்
    மனிதன் போல மாறிப்போம்
    உம் வார்த்தைகள் அழியாதது
    உம் வசனங்கள் ஒழியாதது
    ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே
    என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே

    ஞானங்கள் கூட மங்கிப்போம் உலகத்தின்
    ஆஸ்திகள் கூட அழிந்துப்போம்
    உம் சமூகமோ ஜீவனுள்ளது
    உம் சந்நிதி என் ஆனந்தமே
    ஒரு பார்வை பார்த்தால் போதுமே
    என் பாரங்களெல்லாம் மறைந்திடுமே


    Marathavar enthan iyesu
    ennai maravathar enthan nesar
    kalangkal marinalum kolangkal marinalum
    nyalam than ootinalum nir marathavar

    manithan sollum varththaikal
    manithan pola marippom
    um varththaikal azhiyathathu
    um vasanangkal ozhiyathathu
    oru varththai sollum iyesuve
    en vazhkkai ellam maritume

    nyanangkal kuta mangkippom ulakaththin
    aasthikal kuta azhinthuppom
    um samukamo jivanullathu
    um sannithi en aananthame
    oru parvai parththal pothume
    en parangkalellam marainthitume


  • பார்வோனே எங்களை Parvone engkalai

    பார்வோனே எங்களை போகவிடு
    நாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள்
    பார்வோனே எங்களை போகவிடு
    நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்
    எகிப்தின் அடிமைதனம் வேண்டாம்
    கானானை சுதந்தரிக்க வேண்டும் – நாங்கள்

    செங்கடலை பிளந்திட வேண்டும்
    எரிகோவை உடைத்திட வேண்டும் – நாங்கள்
    ஆயியை பிடித்திட வேண்டும்
    கர்த்தர் நாமம் உயர்த்திட வேண்டும் – நாங்கள்

    பாலும் தேனும் ஓடுகின்ற தேசம்
    நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும்
    ஏலீமின் நீருற்றில் நனைந்து
    எங்கள் தாகத்தை தீர்த்து கொள்ள வேண்டும்

    அழுமையின் பள்ளத்தில் கிடந்து
    நாங்கள் அழுது புலம்பினது போதும்
    எங்கள் சுதந்திர தேசத்தில் கால் பதித்து
    வெற்றி கொடி நாட்டிட வேண்டும்


    parvone engkalai pokavitu
    nangkal aarathikka piranthavarkal
    parvone engkalai pokavitu
    nangkal sathikka piranthavarkal
    ekipthin atimaithanam ventam
    kananai suthantharikka ventum nangkal

    sengkatalai pilanthita ventum
    erikovai utaiththita ventum nangkal
    aayiyai pitiththita ventum
    karththar namam uyarththita ventum nangkal

    palum thenum ootukinra thesam
    nangkal aalukinra thesamaka ventum
    eelimin nirurril nanainthu
    engkal thakaththai thirththu kolla ventum

    azhumaiyin pallaththil kitanthu
    nangkal azhuthu pulampinathu pothum
    engkal suthanthira thesaththil kal pathiththu
    verri koti nattita ventum


  • அவர் இல்லாமல் நான் Avar illamal nan

    அவர் இல்லாமல் நான் என்றும் இல்லை
    அவர் கிருபையில்லாமல் நான் வாழ்வதில்லை
    என் எண்ணங்கள பலிப்பதில்லை
    என் திட்டங்கள் ஜெயிப்பதில்லை
    என் இயேசு இல்லாமல் நான் வாழ்வதில்லை

    காலை விடிவதில்லை பொழு போவதில்லை
    மாலை வருவதில்லை என் தாகம் தீர்வதில்லை

    தந்தையும் அவரே என்னை தாங்கும்
    தெய்வமும் அவரே
    மாயையான இவ்வுலகில்
    என் ஆயனும் நேயனும் அவரே

    என் இல்லத்தலைவரும் அவரே
    என் உள்ளநாயகனும் அவரே
    என் சிறப்பு விருந்தினரும் அவரே
    என் இதய மாணாளனும் அவரே

    வாழ்விலும் தாழ்விலும் அவரே என்னை
    நடத்திச் செல்பவரும் அவரே என்னை
    ஆள வைப்பவரும் அவரே என்னை
    ஆண்டு கொள்பவரும் அவரே


    Avar illamal nan enrum illai
    avar kirupaiyillamal nan vazhvathillai
    en ennangkala palippathillai
    en thittangkal jeyippathillai
    en iyesu illamal nan vazhvathillai

    kalai vitivathillai pozhu povathillai
    malai varuvathillai en thakam thirvathillai

    thanthaiyum avare ennai thangkum
    theyvamum avare
    mayaiyana ivvulakil
    en aayanum neyanum avare

    en illaththalaivarum avare
    en ullanayakanum avare
    en sirappu virunthinarum avare
    en ithaya manalanum avare

    vazhvilum thazhvilum avare ennai
    nataththis selpavarum avare ennai
    aala vaippavarum avare ennai
    aantu kolpavarum avare


  • வானம் இருட்டிருச்சி Vanam iruttirussi

    வானம் இருட்டிருச்சி
    நிலவும் வெளிச்சிருச்சி
    ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி
    நட்சத்திர மண்டலமும்
    பூக்கள் தொடுத்திருச்சி
    நடுவானம் வெள்ளி மின்ன
    நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சி
    – வானம்

    எல்லோரும் வாங்கடியோவ் ஆடி
    பாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான்
    இயேசு என்று சொல்லலாம்
    குத்தடி குத்தடி ஷீலக்கா
    குனிஞ்சி குத்தடி ரெபேக்கா
    நம்ம ஊரு தெய்வம் தான்
    இயேசன்னு சொல்லக்கா
    ஒய்யாரே அல்லேலூயா ஒய்யா
    ஒய்யாரே அல்லேலூயா ஒய்யா

    நம்ம ஊரு தெய்வம் தான்
    இயேசுராஜா தான் அவர்
    நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு
    நம்ம தெரு வழியா கழுதை மேல
    பவனி வர்றாரு – நம்ம
    ஊரு மக்க ஓசன்னா
    சொல்லி பாடுது வானம் குத்தடி

    மாரி காலம் முடிஞ்சது
    மழையும் ஓய்ந்தது நம்ம
    ஊருக்குள்ள மண்வாசனை
    முகத்தில் அடிக்குது
    நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம்
    வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம
    இயேசுராஜா வந்ததால
    ஊரெல்லாம் கொண்டாட்டம்

    செத்தவனை உயிரோட
    எழுப்புவாருங்க அவனை
    பெத்தவனை சன்தோஷப்படுத்துவாருங்க
    வார்த்த நீரை ரசமாக மாற்றுவாருங்க
    நோக்கி பார்த்தவரின்
    கஷ்டங்களை நீக்குவாருங்க


    vanam iruttirussi
    nilavum velissirussi
    aakaya mantalamum karunila niramassi
    natsaththira mantalamum
    pukkal thotuththirussi
    natuvanam velli minna
    namma uurum makizhnthirussi
    vanam

    ellorum vangkatiyov aati
    patalam namma uuru theyvam than
    iyesu enru sollalam
    kuththati kuththati shilakka
    kuninysi kuththati repekka
    namma uuru theyvam than
    iyesannu sollakka
    oyyare alleluya oyya
    oyyare alleluya oyya

    namma uuru theyvam than
    iyesuraja than avar
    nanmaikal seypavara surri vararu
    namma theru vazhiya kazhuthai mela
    pavani varraru namma
    uuru makka oosanna
    solli patuthu

    mari kalam mutinysathu
    mazhaiyum ooynthathu namma
    uurukkulla manvasanai
    mukaththil atikkuthu
    namma theruvellam kontattam
    varampu miri aarppattam namma
    iyesuraja vanthathala
    uurellam kontattam

    seththavanai uyirota
    ezhuppuvarungka avanai
    peththavanai santhoshappatuththuvarungka
    varththa nirai rasamaka marruvarungka
    nokki parththavarin
    kashtangkalai nikkuvarungka


  • விடாக் கண்டன் Vitak kantan

    விடாக் கண்டன் கொடாக்
    கண்டன் வாழ்க்கை வாழாதே உன்
    பிடிவாத குணத்தால் அழிந்து போகாதே
    அடிக்கடி கடிந்து கொண்டும்
    கடினப்படுத்தும் மனிதன்
    சகாயமின்றி சடுதியிலே நாசமடைவான்

    ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த
    ஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம்
    புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீ
    புசிக்கும் நாளில் சாவாயே
    என்றார் தேவனே – கனி
    புழுபழுத்தக் கனி அழித்த பலன்
    உலகில் வந்த – பாவம்
    புழு புழுத்த மனிதன் அழிந்து போனான்
    அதினால் வந்த சாபம்

    ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு
    வீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாது
    அலையாதே அலையாதே எந்தன் மகனே – நீ
    அலைவதினால் கிடைக்கும் பலன் மரணம் தானே
    நீ ஓடி ஓடி உழைச்சாலும் நிக்கிறது தான் நிற்கும்
    நீ விழுந்து விழுந்து உருண்டாலும்
    ஒட்டுறது தான் ஒட்டும்

    ஆராதனையில் ஒழுங்கா கலந்துகொள்ளணும் – தேவ ஆவியிலே நிரம்பி ஜெபித்துப் பழகணும்
    மறவாதே மறவாதே எந்தன் மகனே – நீ
    மறந்தாலும் வாழ்வு இல்லை எந்தன் மகளே இதை
    நித்திய சத்திய சுத்த மகத்துவ வாழ்க்கை வாழ வேண்டும் உத்தம புத்திர தேவ நாமம் உயர்த்தப்பட வேண்டும்


    Vitak kantan kotak
    kantan vazhkkai vazhathe un
    pitivatha kunaththal azhinthu pokathe
    atikkati katinthu kontum
    katinappatuththum manithan
    sakayaminri satuthiyile nasamataivan

    aathiyile vanthathaiya pavam antha
    eethen thotta natuvilirunthu mokam
    pusiyathe pusiyathe enthan aathame ni
    pusikkum nalil savaye
    enrar thevane kani
    puzhupazhuththak kani azhiththa palan
    ulakil vantha pavam
    puzhu puzhuththa manithan azhinthu ponan
    athinal vantha sapam

    oru notippozhuthil azhiyum manitha vazhvu
    vinay thutippathinal palanethum kitaiyathu
    alaiyathe alaiyathe enthan makane ni
    alaivathinal kitaikkum palan maranam thane
    ni ooti ooti uzhaissalum nikkirathu than nirkum
    ni vizhunthu vizhunthu uruntalum
    otturathu than ottum

    aarathanaiyil ozhungka kalanthukollanum theva
    aaviyile nirampi jepiththup pazhakanum
    maravathe maravathe enthan makane ni
    maranthalum vazhvu illai enthan makale ithai
    niththiya saththiya suththa makaththuva
    vazhkkai vazha ventum
    uththama puththira theva namam
    uyarththappata ventum


  • ஸ்தோத்திரம் பண்ண Sthoththiram panna

    ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சு
    துதிச்சுப் பாடினேன் என் தரித்திரம் போச்சு
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    நான் ஆடிப் பாடுவேன்

    அல்லேலூயா சொன்னதால்
    அல்லல் நீங்கிப் போச்சு
    உள்ளமெல்லாம் இன்பத்தாலே
    பொங்கி எழிலாச்சு
    ஆண்டவரை அழைச்சதாலே
    ஆபத்து நீங்கிப் போச்சு
    வேண்டி வேண்டி துதிச்சதாலே
    வேதனை நீங்கிப் போச்சு

    தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சு
    கர்த்தாவே என்றதாலே
    கட்டுகள் உடைஞ்சிப் போச்சு
    வல்லவரே என்றதாலே
    வல்லமை கிடைக்கலாச்சு
    நல்லவரே என்றதாலே
    நன்மை கிடைக்கலாச்சு

    அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சு
    நண்பரே என்றதாலே நட்பு நெருங்கிப் போச்சு
    இன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சு
    உன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு


    Sthoththiram panna en upaththiram possu
    thuthissup patinen en thariththiram possu
    alleluya alleluya
    alleluya alleluya
    alleluya alleluya

    nan aatip patuven
    alleluya sonnathal
    allal ningkip possu
    ullamellam inpaththale
    pongki ezhilassu
    aantavarai azhaissathale
    aapaththu ningkip possu
    venti venti thuthissathale
    vethanai ningkip possu

    thevane enrathale thevai niraivassu
    karththave enrathale
    kattukal utainysip possu
    vallavare enrathale
    vallamai kitaikkalassu
    nallavare enrathale
    nanmai kitaikkalassu

    anpare enrathale anpu athikamassu
    nanpare enrathale natpu nerungkip possu
    inpare enrathale ithayam purippassu
    unnathare enrathale ullam niraivassu


  • சாத்தானை அழிக்கும் virarkal nangkal

    சாத்தானை அழிக்கும் வீரர்கள் நாங்கள்
    அவனின் கோட்டைகளை
    தகர்த் தெறியும் சேனைகள் நாங்கள்
    பட்டயத்தை எடுத்து விழ தள்ளுவோம்
    தேவ வசனத்தை ஆயுதமாக்கி ஜெயிப்போம்
    வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க நீங்க எங்க துணையாக வாங்க
    வாங்க வாங்க வாங்க இயேசுப்பா நீங்க
    வாங்க வாங்க – சாத்தானை

    சாத்தானின் ஆழங்களை அவமாக்குவோம்
    அவனின் மாந்திரீக தந்திரத்தை மாயமாக்குவோம்
    சாத்தானை எதிர்த்து சிலுவையை எடுத்து
    இயேசுவுக்காய் போர்கொடி நாம் ஏற்றுவோம் நம்ம
    வாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்க
    வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க

    சாத்தானின் சதிகளை சாம்பலாக்குவோம்
    அவனின் பில்லிசூனியத்தை எல்லாம் மடங்கடிப்போம்
    வேதத்தை எடுத்து தேவ வார்த்தையால் ஜெயித்து
    பரிசுத்த ஆவியினால் கலங்கடிப்போம்
    அவனை பரிசுத்த ஆவியினால் முறியடிப்போம்
    வாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்க
    வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
    வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க

    சாத்தானின் திட்டங்களை திவாலாக்கணும்
    அவனின் நாசமோசங்களையெல்லாம் தடுத்திடுவோம் சாத்தானை மிதித்து அவன் சேனையை ஜெயித்து நம்ம இயேசுவுக்காய் பந்தயத்தை வென்றிடுவோமே வாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க வாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்க வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க


    Saththanai azhikkum virarkal nangkal
    avanin kottaikalai
    thakarth theriyum senaikal nangkal
    pattayaththai etuththu vizha thalluvom
    theva vasanaththai aayuthamakki jeyippom
    vangka vangka vangka iyesappa ningka
    vangka vangka ningka engka thunaiyaka vangka
    vangka vangka vangka iyesuppa ningka
    vangka vangka saththanai

    saththanin aazhangkalai avamakkuvom
    avanin manthirika thanthiraththai mayamakkuvom
    saththanai ethirththu siluvaiyai etuththu
    iyesuvukkay porkoti nam eerruvom namma
    vangka vangka ningka iyesappa ningka
    vangka vangka vangka engka thunaiyaka vangka
    vangka vangka vangka iyesappa ningka
    vangka vangka ningka engka thalapathiyay vangka

    saththanin sathikalai sampalakkuvom
    avanin pillisuniyaththai ellam matangkatippom
    vethaththai etuththu theva varththaiyal jeyiththu
    parisuththa aaviyinal kalangkatippom
    avanai parisuththa aaviyinal muriyatippom
    vangka vangka ningka iyesappa ningka
    vangka vangka vangka engka thunaiyaka vangka
    vangka vangka vangka iyesappa ningka
    vangka vangka ningka engka thalapathiyay vangka

    saththanin thittangkalai thivalakkanum
    avanin nasamosangkalaiyellam thatuththituvom
    saththanai mithiththu avan senaiyai jeyiththu
    namma iyesuvukkay panthayaththai venrituvome
    vangka vangka ningka iyesappa ningka
    vangka vangka vangka engka thunaiyaka vangka
    vangka vangka vangka iyesappa ningka
    vangka vangka ningka engka thalapathiyay vangka


  • கேரீத் ஆற்றங்கரையில் kerith aarrangkaraiyil

    கேரீத் ஆற்றங்கரையில்
    நீரூற்று வற்றிப் போனாலும்
    மேரிபாவின் ஊற்றண்டை கண்ட தேவன்
    உன்னையும் கண்டிடுவார்
    எலியா ஒ எலியா தேவன்
    உன் வாழ்வில் ஒளியா
    – கேரீத்

    தீர்க்கனின் பசி தீர்க்க
    காகம் விரைந்தது அன்றோ – அன்று
    உந்தனின் தாகம் தீர்க்க
    தேவன் வருகின்றாரே – தேவன் – எலியா

    சமாரியா கிண்றறனடையில்
    அந்த ஸ்திரீயை கண்ட தேவன்
    உன்னையும் கண்டிடுவார்
    உன் தாகம் தீர்த்திடுவார்
    சமாரியா ஓ சமாரியா – இயேசு உன்
    வாழ்வில் நல்ல சமாரியன்

    கடலில் வலை வீசி
    வெறுமையாய் நிற்கின்றாயே
    இயேசு வருகின்றார்
    என் படகை நிரப்பிடுவார்
    பேதுரு ஓ பேதுரு
    இயேசு உன் வாழ்வில் கேதுரு


    kerith aarrangkaraiyil
    nirurru varrip ponalum
    meripavin uurrantai kanta thevan
    unnaiyum kantituvar
    eliya o eliya thevan
    un vazhvil oliya kerith

    thirkkanin pasi thirkka
    kakam virainthathu anro – anru
    unthanin thakam thirkka
    thevan varukinrare thevan eliya

    samariya kinraranataiyil
    antha sthiriyai kanta thevan
    unnaiyum kantituvar
    un thakam thirththituvar
    samariya oo samariya iyesu un
    vazhvil nalla samariyan

    katalil valai visi
    verumaiyay nirkinraye
    iyesu varukinrar
    en patakai nirappituvar
    pethuru oo pethuru
    iyesu un vazhvil kethuru


  • நீ உயிரோடிருக்கும் Ni uyirotirukkum

    நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்
    ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை
    நான் மோசேயோடே இருந்ததுப்போல்
    உன்னோடு இருப்பேன் என் மகனே
    உன்னோடு இருப்பேன் என் மகளே
    திகையாதே கலங்காதே
    திகையாதே கலங்காதே

    நீ போகும் இடமெல்லாம் வருவேன்
    நீ போகும் இடமெல்லாம் வருவேன்
    தாய் தன் சேயை மறந்து போனாலும்
    நான் உன்னை மறப்பதில்லை
    துன்பத்தால் பாரத்தால் நசுக்குண்டு
    போகையில் அடைக்கலமாய் இருப்பேன்

    உன் ஜெபத்தை தள்ளாமல்
    கிருபையை விலக்காமல்
    நான் உன்னை தாங்கிடுவேன்
    தீயையும் தண்ணீரையும்
    கடந்து வரும் போது
    நான் உன்னை ஏந்திடுவேன்


    Ni uyirotirukkum nalellam
    oruvarum unnai ethirppathillai
    nan moseyote irunthathuppol
    unnotu iruppen en makane
    unnotu iruppen en makale
    thikaiyathe kalangkathe
    thikaiyathe kalangkathe
    ni pokum itamellam varuven
    ni pokum itamellam varuven

    thay than seyai maranthu ponalum
    nan unnai marappathillai
    thunpaththal paraththal nasukkuntu
    pokaiyil ataikkalamay iruppen

    un jepaththai thallamal
    kirupaiyai vilakkamal
    nan unnai thangkituven
    thiyaiyum thanniraiyum
    katanthu varum pothu
    nan unnai eenthituven


  • இனியும் உம்மோடு Iniyum ummotu

    இனியும் உம்மோடு கிட்டி சேர
    ஆவியின் மாரியை ஊற்றும்
    ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
    ஆற்றி கிருபை அளித்திடுமே

    பெலவீனன் என் அருகில்
    பெலம் தாரூம் வந்தெனக்காய்
    உம்மைப் போல கனி தரவே
    உமதாவியால் நிறைத்திடுமே

    நல்ல திராட்சை செடி நீரல்லோ
    நானும் நினைந்து வாழ்ந்திடவே
    எல்லா நாளும் கனி தந்திட
    இயேசுவே சுத்தமாக்கிடுமே


    Iniyum ummotu kitti sera
    aaviyin mariyai uurrum
    aathi anpin aazhangkalil ennai
    aarri kirupai aliththitume

    pelavinan en arukil
    pelam tharum vanthenakkay
    ummaip pola kani tharave
    umathaviyal niraiththitume

    nalla thiratsai seti niralAAlo
    nanum ninainthu vazhnthitave
    ella nalum kani thanthita
    iyesuve suththamakkitume