Author: admin

  • Uirththeyzhunthaarey உயிர்த்தெழுந்தாரே

    உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
    ஜெயித்த தெழுந்தாரே
    உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
    சொந்த மானாரே

    கல்லறை திறந்திடவே
    கடும் சேவகர் பயந்திடவே
    வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
    வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே

    1.மரித்தவர் மத்தியிலே
    ஜீவ தேவனைத் தேடுவாரோ?
    நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
    நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே

    2.எம்மா ஊர் சீஷர்களின்
    எல்லா மன இருள் நீக்கினாரே
    எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
    எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே

    3.மரணமுன் கூர் எங்கே?
    பாதாள முன் ஜெயங்மெங்கே
    சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
    சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே

    4.ஆவியால் இன்றும் என்றும்
    ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
    ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே – உயிர்த்தெழுந்தாரே
    அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

    5.பரிசுத்த மாகுதலை
    பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
    எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
    எழும்புவோமே மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே


    Uirththeyzhunthaarey Lyrics in English
    uyirththelunthaarae allaelooyaa
    jeyiththa thelunthaarae
    uyirudan eluntha meetpar iyaesen
    sontha maanaarae

    kallarai thiranthidavae
    kadum sevakar payanthidavae
    vallavar Yesu uyirththelunthaarae
    valla pithaavin seyalithuvae – uyirththelunthaarae

    1.mariththavar maththiyilae
    jeeva thaevanaith thaeduvaaro?
    neethiyin athipathi uyirththelunthaarae
    niththiya nampikkai perukiduthae – uyirththelunthaarae

    2.emmaa oor seesharkalin
    ellaa mana irul neekkinaarae
    emmanak kalakkangal neekkinathaalae
    ellaiyillaap paramaananthamae – uyirththelunthaarae

    3.maranamun koor engae?
    paathaala mun jeyangmengae
    saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar
    sapaiyorae thuthi saattiduvom – uyirththelunthaarae

    4.aaviyaal intum entum
    aa! emmaiyum uyirppikkavae
    aaviyin achchaாram emakkaliththaarae – uyirththelunthaarae
    allaelooyaa thuthi saattiduvom

    5.parisuththa maakuthalai
    payaththodentum kaaththuk kolvom
    ekkaalam thonikkaiyil maruroopamaaka
    elumpuvomae makimaiyilae – uyirththelunthaarae

  • Uganda Kanikkai உகந்த காணிக்கையாய்

    உகந்த காணிக்கையாய்
    ஒப்புக் கொடுத்தேனைய்யா
    சுகந்த வாசனையாய்
    முகர்ந்து மகிழுமைய்யா

    தகப்பனே உம் பீடத்தில்
    தகனப்பலியானேன்
    அக்கினி இறக்கிவிடும்
    முற்றிலும் எரித்துவிடும்

    வேண்டாத பலவீனங்கள்
    ஆண்டவா முன் வைக்கின்றேன்
    மீண்டும் தலை தூக்காமல்
    மாண்டு மடியட்டுமே

    கண்களை தூய்மையாக்கும்
    கர்த்தா உமைப் பார்க்கணும்
    காதுகள் திறந்தருளும்
    கர்த்தர் உம் குரல் கேட்கணும்

    அப்பா உம் சமுகத்தில்
    ஆர்வமாய் வந்தேனைய்யா
    தப்பாமல் வனைந்து கொள்ளும்
    உப்பாக பயன்படுத்தும்


    Uganda kanikkai Lyrics in English
    ukantha kaannikkaiyaay
    oppuk koduththaenaiyyaa
    sukantha vaasanaiyaay
    mukarnthu makilumaiyyaa

    thakappanae um peedaththil
    thakanappaliyaanaen
    akkini irakkividum
    muttilum eriththuvidum

    vaenndaatha palaveenangal
    aanndavaa mun vaikkinten
    meenndum thalai thookkaamal
    maanndu matiyattumae

    kannkalai thooymaiyaakkum
    karththaa umaip paarkkanum
    kaathukal thirantharulum
    karththar um kural kaetkanum

    appaa um samukaththil
    aarvamaay vanthaenaiyyaa
    thappaamal vanainthu kollum
    uppaaka payanpaduththum

  • Udharith Thallu Thooki உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு

    உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
    அழுத்தும் சுமைகளை (தினம்)
    பற்றும் பாரங்களை – உன்னை

    பொறுமையுடன் நீ ஒடு
    நேசரின் மேல் கண் வைத்து ஓடு

    மேகம் போன்ற திரள் கூட்டம்
    பரிசு பெற்று நிற்கின்றனர்
    முகம் மலர்ந்து கை அசைத்து
    வா வா வா என்கின்றனர்

    அவமானத்தை எண்ணாமல்
    சுமந்தாரே சிலுவைதனை
    அமர்ந்து விட்டார் அரியணையில்
    அதிபதியாய் அரசனாய்

    தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
    தாங்கிக் கொண்ட இரட்சகரை
    சிந்தையில் நாம் நிறுத்தினால்
    சோர்ந்து நாம் போவதில்லை


    Udharith thallu thooki Lyrics in English
    utharith thallu thookki erinthidu
    aluththum sumaikalai (thinam)
    pattum paarangalai – unnai

    porumaiyudan nee odu
    naesarin mael kann vaiththu odu

    maekam ponta thiral koottam
    parisu pettu nirkintanar
    mukam malarnthu kai asaiththu
    vaa vaa vaa enkintanar

    avamaanaththai ennnnaamal
    sumanthaarae siluvaithanai
    amarnthu vittar ariyannaiyil
    athipathiyaay arasanaay

    thamakku vantha ethirppellaam
    thaangik konnda iratchakarai
    sinthaiyil naam niruththinaal
    sornthu naam povathillai

  • Udavi Varum உதவி வரும்

    உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
    வானமும் வையமும் படைத்தவரை
    நான் பார்க்கின்றேன்

    கால்கள் தள்ளாட விட மாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார்
    இஸ்ரவேலைக் காக்கிறவர்
    எந்நாளும் தூங்க மாட்டார்

    கர்த்தர் என்னைக் காக்கின்றார்
    எனது நிழலாய் இருக்கின்றார்
    பகலினிலும் இரவினிலும்
    பாதுகாக்கின்றார்

    கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
    விலக்கி என்னைக் காத்திடுவார்
    அவர் எனது ஆத்துமாவை
    அனுதினம் காத்திடுவார்

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார்
    இப்போதும் எப்போதும்
    எந்நாளும் காக்கின்றார்


    Udavi Varum Lyrics in English
    uthavi varum kanmalai Nnokkip paarkkinten
    vaanamum vaiyamum pataiththavarai
    naan paarkkinten

    kaalkal thallaada vida maattar
    kaakkum thaevan uranga maattar
    isravaelaik kaakkiravar
    ennaalum thoonga maattar

    karththar ennaik kaakkintar
    enathu nilalaay irukkintar
    pakalinilum iravinilum
    paathukaakkintar

    karththar ellaath theengirkum
    vilakki ennaik kaaththiduvaar
    avar enathu aaththumaavai
    anuthinam kaaththiduvaar

    pokum pothum kaakkintar
    thirumpum pothum kaakkintar
    ippothum eppothum
    ennaalum kaakkintar

  • Udalai Kodu Ullathai Kodu உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்

    உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
    உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
    இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
    இதிலே தான் மகிமை அடைகிறார்

    1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
      உன்னை தேவன் உயர்த்துவாரு
      பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
      கடனில்லாமல் நடத்துவாரு
    2. நன்றிப்பாடல் தினமும் பாடு
      நல்ல தேவன் வருவார் உன்னோடு
      என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
      தீமையை நன்மையால் தினமும்வென்றிடு
    3. தேசத்திற்காக தினம் மன்றாடு
      பிறருக்காக பிரார்த்தனை செய்திடு
      ஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு
      அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்
    4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
      விசுவாசி என்றும் பதறான் பதறான்
      அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
      செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
    5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
      வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
      சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
      இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு

    Udalai Kodu Ullathai Kodu Lyrics in English
    udalaikkodu ullaththaik kodu ursaakamaay
    unnaik kodu oppukkodu santhoshamaay
    ithilae thaevan piriyamaay irukkiraar
    ithilae thaan makimai ataikiraar

    1. oru manninaeram koduththuppaaru
      unnai thaevan uyarththuvaaru
      paththil oru pangu koduththuppaaru
      kadanillaamal nadaththuvaaru
    2. nantippaadal thinamum paadu
      nalla thaevan varuvaar unnodu
      enna nadanthaalum nanti kooridu
      theemaiyai nanmaiyaal thinamumventidu
    3. thaesaththirkaaka thinam mantadu
      pirarukkaaka piraarththanai seythidu
      aalum thalaivarkalai jepath;thil ninaiththidu
      amaithi pongidum vanmurai neengidum
    4. visuvaasam thaanae ulakaththai jeyikkum
      visuvaasi entum patharaan patharaan
      arikkai seythiduvom eriko pitiththiduvom
      sengadal vilakidum yorthaan pirinthidum
    5. naadengum sentidu narseythi sollidu
      veedukal thorum viduthalai kooridu
      sapaikalai nirappidu saatchikal eluppidu
      iratchakar varukaikku aayaththamaakkidu
  • Udaintha Ullathadi Paarunga Yengae உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்

    உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்
    உடைந்த உள்ளத்தை பாருங்க இயேசு ராஜனே

    1. யாரிடம் சொல்லுவேன்
      யாரிடம் கதறுவேன்
    2. உற்றார் உறவினர்
      பிரிந்து போகையில்
    3. நேசரின் மார்பினிலே
      என்றும் சாய்ந்திடுவேன்
    4. இயேசுவை நம்புவோம்
      தேற்றுவார் உள்ளத்தையே

    Udaintha Ullathadi Paarunga Yengae Lyrics in English

    utaintha ullaththai paarunga engae oduvaen
    utaintha ullaththai paarunga Yesu raajanae

    1. yaaridam solluvaen
      yaaridam katharuvaen
    2. uttaாr uravinar
      pirinthu pokaiyil
    3. naesarin maarpinilae
      entum saaynthiduvaen
    4. Yesuvai nampuvom
      thaettuvaar ullaththaiyae
  • Ucchida Pattanam உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்

    உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்
    விரைந்தோடி நடவடி உத்தம புத்திரி
    உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்

    நிச்சயமாகவே ரட்சகர் செப்புரை
    நீணிலம் தோன்றும் முனாடி நம்
    நித்திய பிதாவே ஆயத்தமாய் நாட்டிய
    நீதியின் பட்டணம் ஆதிபன் கட்டடம்
    நிண்ணய மாநகரம் திடத்திடு
    உன்னதமே சிகரம் நமின் பிரிய
    நேசர் கிறிஸ்து மேல் பாசம் மிகுத்தவர்
    நேரே செலும் நவ சாலேம் நகர் என்ற

    சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியே
    செப்புகிறாய் எனின் தாயே அதில்
    சேந்திடு பிள்ளைகள் வாழ்ந்துறும் பாக்கியம்
    திட்ட அரிதாம் என் தாயே புது
    வித்தக மாநகர் ரத்னப் பளிங்கு
    விளக்கொளி மேவும் நன்றாயே அந்த
    விஞ்சையர் பட்டணம் எங்கே இருக்கும்
    விளம்பி விரி என் பேராயே
    இத்தரை மீதிலோ அத்திரி வானிலோ
    இட்டமாய் யாம் அதற் கெட்டி நடவமோ
    எங்கே இருக்கு தம்மா கவலை அற்
    றங்க் கிருப்போமே சும்மா சரி சரி
    இன்பக் கண்ணாட்டியே அன்புப் புதல்வியே
    எங்கிருக்கு தென்றன் தங்கமே சொல்கிறேன்

    உன்னத வானிலிருந் திறங்கும் அவ்வெ
    ருசலேம் பட்டணம் கண்டு வெகு
    ஊக்கமுடன் அதைப் பார்க்கப் புறப்பட்டு
    ஓசன்னாவும் பாடிக் கொண்டு அங்கே
    பன்னிரு வாசலும் கண்ணாடி வீதியும்
    பானொளிக் கற்களும் உண்டு அந்தப்
    பட்டணம் தேவாட்டுக் குட்டியின் ஆசனம்
    பண்பாக மத்தியில் கொண்டு
    மின்னும் விளக்குகள் தீவட்டிகள் இல்லை
    விண்ணினில் சூரிய சந்திரரும் இல்லை
    மெய்ப்பொழு தானவரே அதன் விளக்கெபொழுதும் அவரே அலங்க்ருத
    மேன்மைப்பிரகாசப் பான்மையின் நீதியர்
    மேனி மினுங்கிடத் தோணி இலங்கிடு


    Ucchida Pattanam Lyrics in English
    uchchitha pattanam patchamudan seluvom
    virainthoti nadavati uththama puththiri
    uchchitha pattanam patchamudan seluvom

    nichchayamaakavae ratchakar seppurai
    neennilam thontum munaati nam
    niththiya pithaavae aayaththamaay naattiya
    neethiyin pattanam aathipan kattadam
    ninnnaya maanakaram thidaththidu
    unnathamae sikaram namin piriya
    naesar kiristhu mael paasam mikuththavar
    naerae selum nava saalaem nakar enta

    siththamaay uchchitha pattanam pattiyae
    seppukiraay enin thaayae athil
    senthidu pillaikal vaalnthurum paakkiyam
    thitta arithaam en thaayae puthu
    viththaka maanakar rathnap palingu
    vilakkoli maevum nantayae antha
    vinjaiyar pattanam engae irukkum
    vilampi viri en paeraayae
    iththarai meethilo aththiri vaanilo
    ittamaay yaam athar ketti nadavamo
    engae irukku thammaa kavalai ar
    ranga் kiruppomae summaa sari sari
    inpak kannnnaattiyae anpup puthalviyae
    engirukku thentan thangamae solkiraen

    unnatha vaanilirun thirangum avve
    rusalaem pattanam kanndu veku
    ookkamudan athaip paarkkap purappattu
    osannaavum paatik konndu angae
    panniru vaasalum kannnnaati veethiyum
    paanolik karkalum unndu anthap
    pattanam thaevaattuk kuttiyin aasanam
    pannpaaka maththiyil konndu
    minnum vilakkukal theevattikal illai
    vinnnninil sooriya santhirarum illai
    meyppolu thaanavarae athan vilakkepoluthum avarae alanga்rutha
    maenmaippirakaasap paanmaiyin neethiyar
    maeni minungidath thonni ilangidu

  • Ucchida Motsa Pattanam உச்சித மோட்சபட்டணம் போக

    உச்சித மோட்சபட்டணம் போக
    ஓடி நடப்போமே அங்கே
    உன்னத யேசு மன்னவருண்டு ஓயா இன்பமுண்டு

    சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
    சேனையின் கூட்டமதாய் எங்கள்
    ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
    சீயோன் பதி மனுவேல்

    அன்பினால் அழைப்பார் ஆறுதல் சொல்வார்
    அதிபதி யேசையர் அங்கே
    இன்பங்களுண்டு யேசுவின் சமுகம்
    என்றென்றும் ஆறுதலே

    கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
    கெம்பீரமாய் நடப்போம் அங்கே
    கிளர் ஒளியுள்ள பட்டண ராசன்
    கீதங்கள் நாம் அறைவோம்


    Ucchida Motsa Pattanam Lyrics in English
    uchchitha motchapattanam poka
    oti nadappomae angae
    unnatha yaesu mannavarunndu oyaa inpamunndu

    siththirach seeyon pettidach sellum
    senaiyin koottamathaay engal
    jeevaninathipar yaesu nammakipar
    seeyon pathi manuvael

    anpinaal alaippaar aaruthal solvaar
    athipathi yaesaiyar angae
    inpangalunndu yaesuvin samukam
    ententum aaruthalae

    geethangalodu yaesuvaip pottik
    kempeeramaay nadappom angae
    kilar oliyulla pattana raasan
    geethangal naam araivom

  • Trachai Chadiya Yesu Raja திராட்சை செடியே இயேசு ராஜா

    திராட்சை செடியே இயேசு ராஜா
    உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
    உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
    திராட்சை செடியே இயேசு ராஜா

    1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
      பரிசுத்தமானவரே – ஐயா
      உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
      கள்ளம் நீங்குதையா – எனக்கு
    2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
      ஏந்தி வனைந்திடுமே ஐயா
      சித்தம் போல் உருவாக்கும்
      சுத்தமாய் உருமாற்றம்
      நித்தம் உம் கரத்தில் – நாங்கள்
    3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
      கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
      வேதத்தை ஏந்துகிறோம்
      வாசித்து மகிழுகின்றோம்
      தியானம் செய்கின்றோம் – நாங்கள்

    Trachai Chadiya Yesu Raja Lyrics in English
    thiraatchaை setiyae Yesu raajaa
    ummodu innainthirukkum kilai naangal
    umakkaay padarukinta koti naangal
    thiraatchaை setiyae Yesu raajaa

    1. pasumpul maeychchalilae nadaththich selpavarae
      parisuththamaanavarae – aiyaa
      ullamae makiluthaiyaa ummodu iruppathanaal
      kallam neenguthaiyaa – enakku
    2. kuyavan kaiyil ulla kalimannnaangal
      aenthi vanainthidumae aiyaa
      siththam pol uruvaakkum
      suththamaay urumaattam
      niththam um karaththil – naangal
    3. vaarththaiyil nilaiththirunthu thinamum
      kani kodukkum seedarkal naangal
      vaethaththai aenthukirom
      vaasiththu makilukintom
      thiyaanam seykintom – naangal
  • Thuyarurra Vaentharae துயருற்ற வேந்தரே

    1. துயருற்ற வேந்தரே,
      சிலுவை ஆசனரே,
      நோவால் வாடும் முகத்தை
      இருள் திரை மூடிற்றே,
      எண்ணிறந்த துனபம் நீர்
      மௌனமாக சகித்தீர்.
    2. பலியாக மரிக்கும்
      வேளை வரும் அளவும்
      மூன்று மணி நேரமாய்,
      துணையின்றி மௌனமாய்
      காரிருளில் தேவரீர்
      பேயோடே போராடினீர்.
    3. தெய்வ ஏசு மைந்தனார்,
      அபிஷேக நாதனார்
      “தேவனே, என் தேவனே,
      என்தனை ஏன் கைவிட்டீர்?”
      என்றுரைக்கும் என் வாசகம்
      கேள் இருண்ட ரகசிய

    Thuyarurra Vaentharae Lyrics in English

    1. thuyarutta vaentharae,
      siluvai aasanarae,
      Nnovaal vaadum mukaththai
      irul thirai mootitte,
      ennnnirantha thunapam neer
      maunamaaka sakiththeer.
    2. paliyaaka marikkum
      vaelai varum alavum
      moontu manni naeramaay,
      thunnaiyinti maunamaay
      kaarirulil thaevareer
      paeyotae poraatineer.
    3. theyva aesu mainthanaar,
      apishaeka naathanaar
      “thaevanae, en thaevanae,
      enthanai aen kaivittir?”
      enturaikkum en vaasakam
      kael irunnda rakasiyam