Author: admin

  • Thaai Pola Thetri தாய்போல தேற்றி

    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

    Chord : F Major

    மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

    பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணை நின்று காப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

    தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
    தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா


    Thaai Pola Thetri Thandhai Pola Aatri
    Tholmeedhu Sumandhidum En Yesaiyya
    Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
    Ummai Pola Aravanaikka Yaarumillaiyae
    Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

    Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
    Pani Pola Urukida Seibavarae
    Kanmani Pol Ennai Kaappavarae
    Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
    Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
    – Thaaipola Thaettri

    Belaveena Neram En Kirubai Unakku Podhum
    Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
    Nizhal Pola En Vaazhvil Varubavarae
    Vilagaamal Thunai Nindru Kaappavarae
    Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
    – Thaaipola Thaettri

    Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
    Thozhan Pola Purindhu Konda En Yesaiya
    Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
    Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
    Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

  • Thaai Madiyil Thavazhukinra தாய் மடியில் தவழுகின்ற

    தாய் மடியில் தவழுகின்ற
    குழந்தையைப் போல‌
    தகப்பனே உம்மடியில்
    சாய்ந்துவிட்டேன் நான்

    1.கவலையில்லையே கலக்கம் இல்லையே-2
    கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் (நான்)-2
    எதைக் குறித்தும் பயமில்லையே-2
    என் நேசர் நடத்துகிறீர் (தினம்)-2

    2.செய்த நன்மைகள் நினைக்கின்றேன்-2
    நன்றியோடு துதிக்கிறேன் (நான்)-2
    கைவிடாத என் ஆயனே (என்னை)-2
    கல்வாரி நாயாகனே-2

    3.துணையாளரே துணையானீரே -2
    இணையில்லா மணவாளரே (என்)-2
    உணவாக வந்தீரையா-2
    உயிரோடு கலந்தீரையா (என்)-2

    4.உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்-2
    உம் தோளில் அமர்ந்துவிட்டேன் (நான்)-2
    உந்தன் சிறகுகள் நிழ்ல்தனிலே-2
    உலகத்தையே மறந்துவிட்டேன் (இந்த)-2

    5.அதிகாலமே தேடுகிறேன்-2
    ஆர்வமுடன் நாடுகிறேன் (நான்)-2
    உயிர்வாழும் நாட்களெல்லாம்-2
    உம் நாமம் சொல்வேனையா (நான்)-2

    6.படுக்கையிலும் நினைக்கின்றேன்-2
    இராச்சாமம் தியானிக்கின்றேன்-2
    உம் அன்பு போதுமையா-2
    உயிரினும் உயர்ந்தையா-அது-2


    Thaai Madiyil Thavazhukinra Lyrics in English
    thaay matiyil thavalukinta
    kulanthaiyaip pola‌
    thakappanae ummatiyil
    saaynthuvittaen naan

    1.kavalaiyillaiyae kalakkam illaiyae-2
    karththar karam pitiththuk konntaen (naan)-2
    ethaik kuriththum payamillaiyae-2
    en naesar nadaththukireer (thinam)-2

    2.seytha nanmaikal ninaikkinten-2
    nantiyodu thuthikkiraen (naan)-2
    kaividaatha en aayanae (ennai)-2
    kalvaari naayaakanae-2

    3.thunnaiyaalarae thunnaiyaaneerae -2
    innaiyillaa manavaalarae (en)-2
    unavaaka vantheeraiyaa-2
    uyirodu kalantheeraiyaa (en)-2

    4.ummaith thaanae pattik konntaen-2
    um tholil amarnthuvittaen (naan)-2
    unthan sirakukal nillthanilae-2
    ulakaththaiyae maranthuvittaen (intha)-2

    5.athikaalamae thaedukiraen-2
    aarvamudan naadukiraen (naan)-2
    uyirvaalum naatkalellaam-2
    um naamam solvaenaiyaa (naan)-2

    6.padukkaiyilum ninaikkinten-2
    iraachchaாmam thiyaanikkinten-2
    um anpu pothumaiyaa-2
    uyirinum uyarnthaiyaa-athu-2

  • Thaai Kooda Pillaigalai Marandhu தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்

    தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
    சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
    தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
    இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
    மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
    உன் நம்பிக்கையை விட்டு விடாதே
    நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

    நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லை
    அவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)
    நேற்று அல்ல இன்று அல்ல
    தாயின் கருவில் தோன்று முன்னே (2)
    தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
    சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

    தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்
    ஒன்று கூட மாறிப் போவதில்லை (2)
    நேற்றும் இன்றும் என்றும் மாறா
    தேவன் இயேசு மாறிடாரே (2)
    தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
    சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம்

    நீ அவரின் முகத்தை நோக்கிப் பார்த்தால்
    உந்தன் வாழ்வு வெளிச்சமாக மாறும் (2)
    கர்த்தருக்குக் காத்திருப்போர்
    வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
    தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
    சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
    தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
    இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
    மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
    உன் நம்பிக்கையை விட்டு விடாதே
    நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)


    Thaai Kooda Pillaigalai Marandhu Lyrics in English
    thaay kooda pillaikalai maranthu pokalaam
    singang kooda kuttikalai pattini podalaam (2)
    thaayinum maelaaka anpu vaiththavar
    iraththathaiyae siluvaiyilae unakkuth thanthavar (2)
    maranthiduvaaro unnai veruththiduvaaro -2
    un nampikkaiyai vittu vidaathae
    nee nampinavar kaivida maattar (2)

    nee avaraith therinthuk kollavillai
    avarallavo unnaith therinthuk konndaar (2)
    naettu alla intu alla
    thaayin karuvil thontu munnae (2)
    thaay kooda pillaikalai maranthu pokalaam
    singang kooda kuttikalai pattini podalaam

    thaevan unakku sonna vaarththaiyellaam
    ontu kooda maarip povathillai (2)
    naettum intum entum maaraa
    thaevan Yesu maaridaarae (2)
    thaay kooda pillaikalai maranthu pokalaam
    singang kooda kuttikalai pattini podalaam

    nee avarin mukaththai Nnokkip paarththaal
    unthan vaalvu velichchamaaka maarum (2)
    karththarukkuk kaaththiruppor
    vetkappattup povathillai (2)
    thaay kooda pillaikalai maranthu pokalaam
    singang kooda kuttikalai pattini podalaam (2)
    thaayinum maelaaka anpu vaiththavar
    iraththathaiyae siluvaiyilae unakkuth thanthavar (2)
    maranthiduvaaro unnai veruththiduvaaro -2
    un nampikkaiyai vittu vidaathae
    nee nampinavar kaivida maattar (2)

  • Thaagam Ullavan Mel Tamil தாகமுள்ளவன் மேல் தண்ணீரை

    தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
    ஊற்றுவேன் என்றீர்
    வறண்ட நிலத்தில் ஆறுகளை
    ஊற்றுவேன் என்றீர்

    ஊற்றுமையா உம் வல்லமையை
    தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்

    1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
      மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே
    2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
      கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே
    3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல
      நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும்
    4. புதிய கூர்மையான கருவியாகணும்
      பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும்
    5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
      சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்
    6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்
      வயல்வெளி அடர்ந்த காடாகனும்
    7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
      நல்வாழ்வும் நம்பிக்கையும் வளரவேண்டுமே
    8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
      எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்

    Thaagam Ullavan Mel Lyrics in English
    thaakamullavan mael thannnneerai
    oottuvaen enteer
    varannda nilaththil aarukalai
    oottuvaen enteer

    oottumaiyaa um vallamaiyai
    thaakaththathodu kaaththirukkiraen – naan

    1. maamsamaana yaavarmaelum ootta vaenndumae
      makkalellaam iraivaakku uraikka vaenndumae
    2. muthiyor maelum ilainjar maelum ootta vaenndumae
      kanavukal kaatchikal kaanavaenndumae
    3. neerotai arukilulla marangalaippola
      niththamum thavaraamal kanithara vaenndum
    4. puthiya koormaiyaana karuviyaakanum
      poomiyengum suvaitharum uppaakanum
    5. kallaana ithayaththai eduththida vaenndum
      sathaiyaana ithayaththaip poruththida vaenndum
    6. vanaanthiram selippaana thottamaakanum
      vayalveli adarntha kaadaakanum
    7. neethiyum naermaiyum thalaikka vaenndumae
      nalvaalvum nampikkaiyum valaravaenndumae
    8. thooya neerai engal mael theliththida vaenndum
      ellaavitha asuththangal neengida vaenndum
  • Suya Athikaaraa Suntharak Kumaaraa சுய அதிகாரா சுந்தரக் குமாரா

    சுய அதிகாரா சுந்தரக் குமாரா
    சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான — சுய

    1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
      அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
      துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
      ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த — சுய
    2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
      கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
      திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
      சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் — சுய
    3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
      இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
      மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
      வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த — சுய
    4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
      பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
      சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
      தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் — சுய

    Suya Athikaaraa Suntharak Kumaaraa Lyrics in English
    suya athikaaraa suntharak kumaaraa
    sontha ulakanthanai thurantha marimainthanaana — suya

    1. akilaththai oru sollil amaiththanaiyae
      athai oru pamparam polisaiththanaiyae
      thukil pol aakaayamathai lakuvaay samaiththathilae
      jothi pala maathiriyaayth thookki vaiththi langavaiththa — suya
    2. karai matha kattakulam puviyilunntoo
      kadalukkavan sollaiyantik karaikalunntoo
      thirai thiraiyaaka jalam malaipor kuvilnthelunthum
      sethamintip poothalaththai maa thayavaay paathukaakkum — suya
    3. narar palar kooti oru manai mutikka
      iraappakalulaiththittalum naal pitikkumae
      mara muyir thaathu innum vaan puvi yanaiththaiyum or
      vaarththaiyaal shanap poluthil naerththiyaay unndaakki vaiththa — suya
    4. paava manuvor mukaththaip paarththeerae
      paavappinni thol sumanthu theerththeerae
      suvaami ummaip pattum suvaami thaasaruk kiranga vaenndum
      thanjam thanjam oti vanthom kenjamanuk kaettarulvaay — suya
  • Suvisaesham Solla Vaarunkal சுவிசேஷம் சொல்ல வாருங்கள்!

    சுவிசேஷம் சொல்ல வாருங்கள்!

    அறிவிக்காமல் நான் இருப்பேனோ?
    அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்கு
    அறிவிக்காமல் நான் இருப்பேனோ?

    1. பாவியாம் எந்தனை மீட்டிடவே
      மேவியே உலகில் வந்தவரே
      புவிதனிலே திரிந்தலைந்து
      சிலுவையில் தம்முயிர் தந்திருக்க
    2. விண்ணெழும் வேளையில் வேந்தனேசு
      சென்றிடுவீர் ப10லோக மெல்லாம்
      நின்றிடுவீர் என் சாட்சிகளாய்
      என்றுமே கட்டளைத் தந்திருக்க
    3. பேதுரு யோவான் பவுல் சீலாவும்
      சாதுவும் வாக்கரும் அசரியாவும்
      சாதனையில் நல் சாட்சிகளாய்
      மாதிரி வைத்துச் சென்றிருக்க

    Suvisaesham Solla Vaarunkal! Lyrics in English
    suvisesham solla vaarungal!

    arivikkaamal naan iruppaeno?
    annnal Yesuvin anpinaip pirarkku
    arivikkaamal naan iruppaeno?

    1. paaviyaam enthanai meettidavae
      maeviyae ulakil vanthavarae
      puvithanilae thirinthalainthu
      siluvaiyil thammuyir thanthirukka
    2. vinnnnelum vaelaiyil vaenthanaesu
      sentiduveer pa10loka mellaam
      nintiduveer en saatchikalaay
      entumae kattalaith thanthirukka
    3. paethuru yovaan pavul seelaavum
      saathuvum vaakkarum asariyaavum
      saathanaiyil nal saatchikalaay
      maathiri vaiththuch sentirukka
  • Suththa Irudhayathai Sristiyume சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே

    சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
    செத்த மனிதனை உயிர்ப்பியுமே
    சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே
    சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே

    பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்
    அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும்
    மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன்
    கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன்
    உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன்

    உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர்
    ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர்
    சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும்
    வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும்
    கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும்

    நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே
    உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே
    பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
    ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர்
    உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர்

    வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
    கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர்
    பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே
    பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே
    கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே


    Suththa Irudhayathai Sristiyume Lyrics in English
    suththa iruthayaththai sirushtiyumae
    seththa manithanai uyirppiyumae
    sikkunndu thavikkiraen ulakinilae
    seekkiram vanthu ennai thappuviyumae

    paavangal neenga ennai suththikariyum
    akkiramam neenga ennai kaluvividum
    meeruthal arinthaen paavangal therinthaen
    kannmunnae pollaanginai nadaththivittaen
    ummunnae paavangalai uduththivittaen

    ullaththil unnmaithanai virumpukireer
    njaanaththai ennidaththil vilampukireer
    suththikariththidum kuttam eriththidum
    vennmalaipola ennai vennmaiyaakkidum
    kanmalai neerennai nalthanmaiyaakkidum

    nal ithayaththai ennil sirushtiyumae
    ul ithayaththil aavi puthuppiyumae
    paaviyai thallaatheer aaviyai allaatheer
    ratchippin santhoshaththai enakku thaareer
    ursaaka aavi ennai thaangach seykuveer

    vettunnda aavithanai aettukkolkireer
    kattunnda paavithanai thaettichchelkireer
    paavappalikalai neekkidum aiyanae
    poyyanai maattum paraloka meyyanae
    kempeeriththummai paati pottiduvaenae

  • Suththa Aavee சுத்த ஆவீ

    1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
      பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே
      என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும்.
    2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
      தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;
      நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும்.
    3. நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
      துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே
      அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும்.
    4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே,
      சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
      நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும்.
    5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
      பகை, மேட்டிமை , விரோதம், மாற்றும் தீமை யாவுமே
      என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன்.
    6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
      மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே
      தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்

    Suththa Aavee, Ennil Thangum Lyrics in English

    1. suththa aavee, ennil thangum, naanum suththan aakavae;
      paava alukkellaam neekkum; um aalayamaakavae
      ennai neer singaariyum, vaasam pannnum niththamum.
    2. saththiya aavee, ennil thangum, naanum saththiyan aakavae;
      theyva pakthi ennil muttum valarnthaerach seyyumae;
      neer ennil piravaesiyum; aanndu kollum niththamum.
    3. naesa aavee , ennil thangum, naanum naesan aakavae;
      thurch supaavam pokap pannnum; anpil naan vaeroontavae
      anpin svaalai eluppum, menmaelum valarththidum.
    4. valla aavee, ennil thangum, naanum vallon aakavae,
      saaththaan ennaith thoonntividum pothu jeyang kollavae
      neer en pakkaththil irum, ennaip palappaduththum.
    5. nalla aavee, ennil thangum, naanum nallon aakavae;
      pakai, maettimai , virotham, maattum theemai yaavumae
      ennai vittakattumaen, ennaich seerppaduththumaen.
    6. theyva aavee, ennil thangum, naanum ummil thangavae;
      motcha paathaiyil nadaththum, Yesuvin mukaththaiyae
      thelivaakak kaannpiyum; ennai muttum ratchiyum
  • Suthigariyayo Dhurgunam Neega சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க

    சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச்

    சுத்திகரியாயோ

    மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே

    பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே!

    பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே

    உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே

    அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே

    சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே!

    சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில் தினம் தேறவே

    புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே

    தேவ நல் வர மானவா, எங்கு மேவு மூன்றில் ஒன்றானவா

    பாவ மாசினைப் போக்குவாய், நித்திய சாபம் யாவையும் நீக்குவாய்


    Suthigariyayo Dhurgunam Neega Lyrics in English
    suththikariyaayo, thurkkunam neenga ennaich

    suththikariyaayo

    maththiyasththar pirasaathanae, parisuththaavi enum naathanae

    pakthi tharum pothanae, uyar mukthi tharum neethanae!

    penthaekosthu murukilae (panntikai), angu vanthu seeshararukilae

    unthiya karunnai vaariyae, arul thanthidu nal uthaariyae

    anthakaaram vilakavae, oli santhathamum ilangavae

    santharappirakaasanae, thaevamainthar pottum nal naesanae!

    saththiya neriyil aeravae, narkaththiyil thinam thaeravae

    puththiyaiththarum aaviyae, ithayaththai unnarul maeviyae

    thaeva nal vara maanavaa, engu maevu moontil ontanavaa

    paava maasinaip pokkuvaay, niththiya saapam yaavaiyum neekkuvaay

  • Suthantharippoemae Naam சுதந்தரிப்போமே நாம்

    பூமியைச் சுதந்தரிப்போம்

    சுதந்தரிப்போமே நாம் சுதந்தரிப்போமே நாம்
    தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போமே
    இந்தியர் அனைவரும் இயேசுவில் வாழ
    சுதந்தரிப்போமே நாம்.

    பூமியைச் சுதந்தரிக்கும் குடிகள்
    நாம் மியைச் சுதந்தரிக்கும் குடிகள்

    1. உறவில் நேசம் வளர்ப்போம் உண்மை பேசி வாழ்வோம்
      இரவு பகலாய் உழைப்போம் இணைந்தே வெற்றி பெறுவோம்
    2. பலராய்ச் சேர்ந்து அறுப்போம் பகைமையின்றி உழைப்போம்
      தேவை அறிந்து கொடுப்போம் தியாகத்தோடு வாழ்வோம்
    3. இடைவிடாது துதிப்போம் இரவு பகலாய் ஜெபிப்போம்
      தடைகள் யாவும் தகர்ப்போம் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்

    Suthantharippoemae Naam Lyrics in English
    poomiyaich suthantharippom

    suthantharippomae naam suthantharippomae naam
    thaesaththai Yesuvukkaay suthantharippomae
    inthiyar anaivarum Yesuvil vaala
    suthantharippomae naam.

    poomiyaich suthantharikkum kutikal
    naam miyaich suthantharikkum kutikal

    1. uravil naesam valarppom unnmai paesi vaalvom
      iravu pakalaay ulaippom innainthae vetti peruvom
    2. palaraaych sernthu aruppom pakaimaiyinti ulaippom
      thaevai arinthu koduppom thiyaakaththodu vaalvom
    3. itaividaathu thuthippom iravu pakalaay jepippom
      thataikal yaavum thakarppom makilchchi ponga vaalvom