Author: admin

  • Siragoditha Paravai சிறகொடித்த பறவைப்போல

    சிறகொடித்த பறவைப்போல
    சிறையினிலே வாடினேன் நான்
    விடுதலை நான் எப்போது
    கலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த

    1. உன் தகப்பன் மரித்திடுவான்
      உன் மனைவி தவித்திடுவாள் (2)
      உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன்
      குடும்பம் சிதைந்துவிடும்
      என்று சொல்லி சாத்தானே
      குலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த
    2. குழப்பங்களும் திகில் பயமும்
      சூழ்ந்திடவே திகைத்தேன் நான்
      என் தேவனே என் இயேசுவே
      ஏன் என்னைக் கைவிட்டீர்
      கதறினேன் நான் புலம்பினேன் நான்
      ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த

    Siragoditha Paravai – சிறகொடித்த பறவை Lyrics in English
    Siragoditha Paravai

    sirakotiththa paravaippola
    siraiyinilae vaatinaen naan
    viduthalai naan eppothu
    kalangiyae naan thutiththaen naan – sirakotintha

    1. un thakappan mariththiduvaan
      un manaivi thaviththiduvaal (2)
      un pillaikal anaathaiyaavaar – un
      kudumpam sithainthuvidum
      entu solli saaththaanae
      kulaiththiduvaan un amaithiyinai – sirakotintha
    2. kulappangalum thikil payamum
      soolnthidavae thikaiththaen naan
      en thaevanae en Yesuvae
      aen ennaik kaivittir
      katharinaen naan pulampinaen naan
      aattidavo oruvarillai – sirakotintha
  • Sinthika Varir Seyal Veerare சிந்திக்க வாரீர் செயல் வீரரே

    சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2
    சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3

    சபையே நீ திரும்பிப் பார்
    சபையே நீ குனிந்துப் பார்
    சபையே நீ நிமிர்ந்துப் பார்
    முன்னேப் பார் -3

    1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்
    பூர்வ பாதைகளை விசாரித்து அறி
    இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு
    களைப்பை போக்கிடுமே போதுமதுவே

    2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை
    முழங்கால் முடக்கிக் குனிந்துபார்
    வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே
    வனாந்தரத்தில் அதினால் அழிவாமே

    3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்
    வானவரின் வருகை சமீபமே
    நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே
    நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே

    4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை
    கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே
    அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்
    அழுகை தான் தங்கிடுமே வருகையிலே


    Sinthika Varir Seyal Veerare Lyrics in English
    sinthikka vaareer seyal veerarae sinthiya iraththam kooppiduthae -2
    sinthiya iraththam kooppiduthae -3

    sapaiyae nee thirumpip paar
    sapaiyae nee kuninthup paar
    sapaiyae nee nimirnthup paar
    munnaep paar -3

    1.poorva naatkalai ninaiththup paar
    poorva paathaikalai visaariththu ari
    ilaippaaruthal athuvae aaththumaavukku
    kalaippai pokkidumae pothumathuvae

    2.thaalmai ullorukku tharum kirupai
    mulangaal mudakkik kuninthupaar
    vanangaak kaluththunakku vaenndaamae
    vanaantharaththil athinaal alivaamae

    3.vaanaththin saththuvangal asaivathaippaar
    vaanavarin varukai sameepamae
    nimirnthu paar un meetpu nerunguthae
    nilaiththiruppavaikalaiyae naadu neeyae

    4.kannkalai aeraெduththup paar vayalthanai
    kanntippaay seyalpada vaenndumae
    aliyum kannikalaip porukkaavitil
    alukai thaan thangidumae varukaiyilae

  • Sinthanaip Padaathey Nenjamey சிந்தனைப் படாதே நெஞ்சமே

    சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-
    உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார்
    அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?
    எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே- சிந்தனை

    1.ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும்,
    அங்கதில்ஒன்றும்தரையிலேவிழாதென்று உத்தமன் உரைத்திருக்க!
    புத்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல,
    சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று….

    2.சோங்கில் அயர் சீடரின்முன் பாங்குடன்
    தயவளித்துத் தாங்கினோர் உனையும் வந்து தாங்குவார்,
    என வந்தாலும், ஓங்கும் இஸ்ரவேல் ராசன் தூங்கவும் இல்லையே,
    சும்மா ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று…

    3.எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம்
    ஜெயம் கொண்டு அத்தனின் வலத்தில் நித்திய
    துத்தியத் திருந் தரசாள் கர்த்தனாம்
    கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில்
    தத்தி விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு….


    Sinthanaip padaathey Nenjamey Lyrics in English
    sinthanaip padaathae, nenjamae,-
    unai ratchiththa thaeva suthan irukkiraar
    anthiyum santhiyumaaka aar pakai seythaalum enna?
    entha vinai vanthum, mayir ennnap pattirukkaiyilae- sinthanai

    1.ainthu sittu ranndu kaasa thaaka vittum,
    angathilontumtharaiyilaevilaathentu uththaman uraiththirukka!
    puththiyil visaaramudan pokkidam attavar pola,
    santhaekaththinaal ulantu, thaviththuth thaviththu nintu….

    2.songil ayar seedarinmun paangudan
    thayavaliththuth thaanginor unaiyum vanthu thaanguvaar,
    ena vanthaalum, ongum isravael raasan thoongavum illaiyae,
    summaa aengi aengich sanjalam konntaemaan thaemaanthu nintu…

    3.eththisaiyinum adarntha saththuru ellaam
    jeyam konndu aththanin valaththil niththiya
    thuththiyath thirun tharasaal karththanaam
    kiristhu naathar siththama thallaamal veennil
    thaththi vilun thenna varum? piththathu piththathu konndu….

  • Sinthai Seiyyum Enil சிந்தை செய்யும் எனில்

    சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்
    சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர்

    தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும்
    விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர்

    பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின் நேய
    சீலனாம் கிறிஸ்தியேசுக்கும்
    சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ
    கோலம் என்றன் பங்கதாயிற்று
    தந்தைதாயார் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க
    வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர்

    திரியேகதேவனே என்றே அவரைவிட்டுப்
    பிரியேன் என் பிராணன் போனாலும்
    அரிய அவரின்தயையே எனக்கு என்றும்
    உரிய ஒன்றான பொருளே
    பொய் லோகம் மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும்
    ஓய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனகென்றும்

    பக்தியுள்ள ஜீவியம் செய்து பகலின் சேயாய்
    எத்திசையினும் விளங்கிடச்
    சுத்தமனம் செய்கையைத்தாரும் எனைநான் என்றும்
    தத்தம் செய்யக் கற்பித்தருளும்
    உன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும்
    என்னகத்தினின்றும் துதிஏறுவதாக ஆமேன்


    Sinthai Seiyyum Enil Lyrics in English
    sinthai seyyum enil nirampuveer thaevaavi umaich
    sinthai seyyum enil nirappuveer

    thanthaip paranaarinintum mainthanaar kiristhinintum
    vinthaiyaayp purappattaekum viththakaththin aaviyaeneer

    paalanaayp paramathanthaikkum avarin naeya
    seelanaam kiristhiyaesukkum
    saalavae entennaich serththittir aththaalae thaeva
    kolam entan pangathaayittu
    thanthaithaayaar thantha vaakkaich sonthavaayaal naan kodukka
    vanthirukkum vaelaithanil thanthaisuthan aaviyae neer

    thiriyaekathaevanae ente avaraivittup
    piriyaen en piraanan ponaalum
    ariya avarinthayaiyae enakku entum
    uriya ontana porulae
    poy lokam maamsam ennaip pitiththiluththaalum
    oy parisuththa aavi uthavuveer enakentum

    pakthiyulla jeeviyam seythu pakalin seyaay
    eththisaiyinum vilangidach
    suththamanam seykaiyaiththaarum enainaan entum
    thaththam seyyak karpiththarulum
    unnathaththil vaal thanthaikkum uyarsuthan aaviyarkkum
    ennakaththinintum thuthiaeruvathaaka aamaen

  • Sinnap Parathaesi சின்னப் பரதேசி

    மோட்சம் நாடுவோம்!

    1. சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்
      லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன்
    2. முத்தி அடைந்தோரைப் பாவம் சேராதே
      துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே
    3. சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன்
      அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன்
    4. என்னை சுத்தமாகக் காருமேää இயேசுவே
      தினம் வழி காட்டும் தெய்வ ஆவியே
    5. சாந்த இயேசு ஸ்வாமீää உம்மை நேசிப்பேன்
      என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்

    Sinnap Parathaesi Lyrics in English
    motcham naaduvom!

    1. sinnap parathaesi motcham naatinaen
      lokaththin sittinpam veruththu vittaen
    2. muththi atainthoraip paavam seraathae
      thukka saththam angae entum kaelaathae
    3. sinnap parathaesi ingae seerppataen
      angae vellai angi thariththukkolvaen
    4. ennai suththamaakak kaarumaeää Yesuvae
      thinam vali kaattum theyva aaviyae
    5. saantha Yesu svaameeää ummai naesippaen
      entum unthan seeshan aakap paarkkiraen
  • Sinnanj Sittuk Kuruviyae சின்னஞ் சிட்டுக் குருவியே உன்னை

    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
    சந்தோஷமாய் படைச்சது யாரு
    அங்குமிங்கும் பறந்துகிட்டு
    ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
    அழகாக படைச்சது யாரு

    ஐயோ ஐயோ இது தெரியாதா
    ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
    உண்ண உணவும் கொடுக்கிறார்
    உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
    உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

    சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
    சிறகை எனக்கு தந்திடுவாயா
    உன்னைப் போல பாடிக்கிட்டு
    உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
    உதவி என்னக்கு செய்திடுவாயா

    ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
    அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
    எங்களைக் காக்கிற ஆண்டவர்
    உங்களைக் காப்பது இல்லையா – அட
    உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

    ஆமாம் சிட்டுக் குருவியே (2)
    இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
    உங்களைக் காக்கிற ஆண்டவர்
    எங்களைக் காக்க மாட்டாரோ
    இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே


    Sinnanj Sittuk Kuruviyae Lyrics in English
    sinnanj sittuk kuruviyae (2) unnai
    santhoshamaay pataichchathu yaaru
    angumingum paranthukittu
    aananthamaay paadureeyae – unnai
    alakaaka pataichchathu yaaru

    aiyo aiyo ithu theriyaathaa
    oru aanndavar enakku maelae irukkiraar
    unnna unavum kodukkiraar
    uranga idamum kodukkiraar intha
    ulakaththaiyae pataichchum irukkiraar

    sinnanj sittuk kuruviyae (2) – un
    sirakai enakku thanthiduvaayaa
    unnaip pola paatikkittu
    ullaasamaayp parappatharku oru
    uthavi ennakku seythiduvaayaa

    aiyo inimae appatik kaetkaathae
    antha aanndavar kaetta kopichchukkuvaaru
    engalaik kaakkira aanndavar
    ungalaik kaappathu illaiyaa – ada
    ungalaiththaanae rompavum naesikkiraar

    aamaam sittuk kuruviyae (2)
    ithu manushangalukku puriyavillaiyae
    ungalaik kaakkira aanndavar
    engalaik kaakka maattaro
    intha unnmaiyum aeno theriyavillaiyae

  • Sinnagnsiru Suthanae Ennarum Thavamae சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே

    சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
    மன்னர் மன்னவனே உன்னததிருவே

    1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
      கூடுண்டு பறவைகட்கு
      பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
      வீடுண்டோ உந்தனுக்கு
      – சின்னஞ்சிறு
    2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
      காரணம் நீரானீரோ
      கோர வெம்பகைகள் பாரச்சுமைகள்
      தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ
      – சின்னஞ்சிறு
    3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்
      முற்றிலும் நீரல்லவோ
      குற்றம் துடைக்க பற்றினை நீக்க
      உற்றவர் நீரல்லவோ
      – சின்னஞ்சிறு
    4. பாசமாய் வந்து காசினை மீட்ட
      நேசமுள்ள ஏசுவே
      நீச சிலுவை தொங்கப் பிறந்த
      தாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ
      – சின்னஞ்சிறு

    Sinnagnsiru Suthanae Ennarum Thavamae Lyrics in English
    sinnanjitru suthanae ennarum thavamae
    mannar mannavanae unnathathiruvae

    1. kaadunndu narikku kulikalumunndu
      koodunndu paravaikatku
      paadunndu umakku manithakumaaranae
      veedunntoo unthanukku
      – sinnanjiru
    2. thaaranni thuyarkal thunpangal neenga
      kaaranam neeraaneero
      kora vempakaikal paarachchumaikal
      theera marunthaaneero – aa..aa..aa
      – sinnanjiru
    3. suttam thaay thanthai mattumanaiththum
      muttilum neerallavo
      kuttam thutaikka pattinai neekka
      uttavar neerallavo
      – sinnanjiru
    4. paasamaay vanthu kaasinai meetta
      naesamulla aesuvae
      neesa siluvai thongap pirantha
      thaasarin thaaparamae – aa..aa..aa
      – sinnanjiru
  • Sinnagnsiru Kuzhanthaiyaayp Piranthaar சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்

    சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
    பாவத்தைப் போக்க பயமதை நீக்க பாலகனாய்ப் பிறந்தார்

    1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
      சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!
    2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
      சிலுவையை எடுத்து சுயத்தை வெறுத்து பின் செல்லுவீர் என்றுமே!

    Sinnagnsiru Kuzhanthaiyaayp Piranthaar! Lyrics in English
    sinnanjitru kulanthaiyaayp piranthaar! Yesu piranthaar!
    paavaththaip pokka payamathai neekka paalakanaayp piranthaar

    1. maeypparkal vanthanarae! mika vaekamaay vanthanarae!
      saasthirikal vanthu saashdaangam seythu panninthu konndanarae!
    2. vaarungal maanidarae! Yesuvin pin sellavae!
      siluvaiyai eduththu suyaththai veruththu pin selluveer entumae!
  • Sinna Siriya Padagu சின்னஞ் சிறிய படகு

    சின்னஞ் சிறிய படகு ஒன்று
    நீந்திக் கடலில் சென்றதம்மா
    இயேசுவை சீடரை சுமந்து கொண்டு
    இனிதே அசைந்து விரைந்ததம்மா

    1.பொங்கி அலைகள் எழுந்ததம்மா
    அங்கும், இங்கும் அசைந்ததம்மா
    புயலைக் கண்டு சீடரெல்லாம்
    பயந்து, கலங்கி நின்றாரம்மா

    2.இரைச்சல் கேட்டு எழுந்த இயேசு
    இரையும் கடலை அதட்டிடவே
    பொங்கிய கடலும் ஓய்ந்ததம்மா
    எங்கும் அமைதி சூழ்ந்ததம்மா

    3.வாழ்க்கை என்னும் படகில் இயேசு
    என்றும் என்னோடிருப்பாரம்மா
    துன்பங்கள் ஏதும் வந்தாலும்
    பயமே எனக்கு இல்லையம்மா


    Sinna Siriya Padagu Lyrics in English
    sinnanj siriya padaku ontu
    neenthik kadalil sentathammaa
    Yesuvai seedarai sumanthu konndu
    inithae asainthu virainthathammaa

    1.pongi alaikal elunthathammaa
    angum, ingum asainthathammaa
    puyalaik kanndu seedarellaam
    payanthu, kalangi nintarammaa

    2.iraichchal kaettu eluntha Yesu
    iraiyum kadalai athattidavae
    pongiya kadalum oynthathammaa
    engum amaithi soolnthathammaa

    3.vaalkkai ennum padakil Yesu
    entum ennotiruppaarammaa
    thunpangal aethum vanthaalum
    payamae enakku illaiyammaa

  • Singasanam Veetritrukkum சிங்காசனம் வீற்றீர்க்கும்

    சிங்காசனம் வீற்றீர்க்கும் தூயாதி தூயாரே
    சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே

    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

    கேருபீன்ங்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே
    துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம்

    வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி
    வானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை

    ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
    வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே
    துதிகளில் வாசம் செய்பவர் நீர்
    எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர்


    Singasanam Veetritrukkum Lyrics in English
    singaasanam veettaீrkkum thooyaathi thooyaarae
    senaikalin karththarae neer engal thaevanae

    parisuththar neer parisuththar
    parisuththar neer parisuththarae

    kaerupeenngal seraapeenkal pottidum thaevan parisuththarae
    thuthiyum pukalum sthoththiramum thooyavar umakkae seluththukirom

    vaanam umathu singaasanam poomi umathu paathappati
    vaanaththil poomiyil poomiyingeel ummai pol vaeroru theyvamillai

    aathiyil vaarththaiyaay irunthavarae
    vaarththaiyaal anaiththaiyum pataiththavarae
    thuthikalil vaasam seypavar neer
    ellaa thuthi kana makimaikku paaththirar neer