Author: admin

  • Singaara Maaligaiyil சிங்கார மாளிகையில்

    சிங்கார மாளிகையில்
    ஜெயகீதங்கள் பாடிடுவோம்
    சீயோன் மணவாளனுடன் (2)

    1. ஆனந்தம் பாடி அன்பரைச்
      சேர்ந்து
      ஆறுதலடைந்திடுவோம் (2) –
      அங்கே
      அலங்கார மகிமையின் கிரீடங்கள்
      சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம்
      (2)
    2. துயரப்பட்டவர் துதித்துப்
      பாடுவார்
      துதியின் உடையுடனே (2) – அங்கே
      உயரமாம் சீயோன் உன்னதரோடு
      களித்து கவி பாடுவோம் (2)
    3. முள் முடி நமக்காய்
      அணிந்த மெய் இயேசுவின்
      திருமுகம் கண்டிடுவோம் (2)-
      அங்கே
      முத்திரையிட்ட சுத்தர்கள்
      வெள்ளங்கி
      தரித்தோராய் துதித்திடுவோம்
    4. பூமியின் அரசைப்
      புதுப்பாட்டாய் பாடி
      புன்னகை பூத்திடுவோம் –
      புது எண்ணெயால்
      அபிஷேகம்
      பண்ணப்பட்டோராய்
      மண்ணாசை ஒழித்திடுவோம்
    5. மனுஷர் புகழ்ச்சி
      மாய்மால வாழ்க்கை
      களைந்தே ஒழித்திடுவோம் அங்கே
      வெண்வஸ்திரம் தரித்து
      தூயவரோடு மகிழ்வுடன்
      வாழ்ந்திடுவோம்
    6. திவ்ய சுபாவ பொறுமையைக்
      காத்து கிரீடத்தைப் பற்றிக்
      கொள்வோம் அவர் ஆலயத்
      தூணாய் நாட்டப்பட்டே நாம்
      எந்நாளும் நிலைத்திருப்போம்
    7. கிரயம் செலுத்தி ஆவியில்
      ஏழ்மை கொண்டோராய்
      வாழ்ந்திடுவோம்-ஜெயம்
      பெற்ற நம் இயேசு அமர்ந்த
      சிங்காசனம் அவரோடு
      அமர்ந்திடுவோம்

    Singaara Maaligaiyil Lyrics in English
    singaara maalikaiyil
    jeyageethangal paadiduvom
    seeyon manavaalanudan (2)

    1. aanantham paati anparaich
      sernthu
      aaruthalatainthiduvom (2) –
      angae
      alangaara makimaiyin kireedangal
      sooti anparil makilnthiduvom
      (2)
    2. thuyarappattavar thuthiththup
      paaduvaar
      thuthiyin utaiyudanae (2) – angae
      uyaramaam seeyon unnatharodu
      kaliththu kavi paaduvom (2)
    3. mul muti namakkaay
      annintha mey Yesuvin
      thirumukam kanndiduvom (2)-
      angae
      muththiraiyitta suththarkal
      vellangi
      thariththoraay thuthiththiduvom
    4. poomiyin arasaip
      puthuppaattay paati
      punnakai pooththiduvom –
      puthu ennnneyaal
      apishaekam
      pannnappattaோraay
      mannnnaasai oliththiduvom
    5. manushar pukalchchi
      maaymaala vaalkkai
      kalainthae oliththiduvom angae
      vennvasthiram thariththu
      thooyavarodu makilvudan
      vaalnthiduvom
    6. thivya supaava porumaiyaik
      kaaththu kireedaththaip pattik
      kolvom avar aalayath
      thoonnaay naattappattae naam
      ennaalum nilaiththiruppom
    7. kirayam seluththi aaviyil
      aelmai konntooraay
      vaalnthiduvom-jeyam
      petta nam Yesu amarntha
      singaasanam avarodu
      amarnthiduvom
  • Singa Kuttigal Pattini சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

    சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
    ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
    குறையில்லையே குறையில்லையே
    ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

    புல்லுள்ள இடங்களிலே
    என்னை மேய்க்கின்றார்
    தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று
    தாகம் தீர்க்கின்றார்

    எதிரிகள் முன் விருந்தொன்றை
    ஆயத்தப்படுத்துகின்றார்
    என் தலையை எண்ணெயினால்
    அபிஷேகம் செய்கின்றார்

    ஆத்துமாவைத் தேற்றுகின்றார்
    ஆவி பொழிகின்றார்
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்

    என் தேவன் தம்முடைய
    மகிமை செல்வத்தினால்
    குறைகளையே கிறிஸ்துவுக்குள்
    நிறைவாக்கி நடத்திடுவார்


    Singa kuttigal pattini Lyrics in English
    singak kuttikal pattini kidakkum
    aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae
    kuraiyillaiyae kuraiyillaiyae
    aanndavaraith thaeduvorkku kuraiyillaiyae

    pullulla idangalilae
    ennai maeykkintar
    thannnneeranntaik koottich sentu
    thaakam theerkkintar

    ethirikal mun virunthontai
    aayaththappaduththukintar
    en thalaiyai ennnneyinaal
    apishaekam seykintar

    aaththumaavaith thaettukintar
    aavi polikintar
    jeevanulla naatkalellaam
    kirupai ennaith thodarum

    en thaevan thammutaiya
    makimai selvaththinaal
    kuraikalaiyae kiristhuvukkul
    niraivaakki nadaththiduvaar

  • Siluvaiyo Anbin Sigaram சிலுவையோ அன்பின் சிகரம்

    சிலுவையோ அன்பின் சிகரம்
    சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
    சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
    சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர்

    1. கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
      கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பை
      எண்ணி என்ன சொல்லிடுவேன்

    உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்

    1. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
      மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
      உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்
    2. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
      நீர் செய்த நன்மை யாவும் என்றும் நினைத்திடுவேன்
      உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

    Siluvaiyo Anbin Sigaram Lyrics in English
    siluvaiyo anpin sikaram
    sinthiya uthiram anpin makudam
    sirasinil mul muti sinthaiyil ninthanai
    siluvaiyai enakkaay aettaீr siluvaiyai enakkaaka mariththeer

    1. kaalvaari siluvaiyil kaannkinten thiyaakam
      karunnaiyin uraividamae ennai thaeti vantha anpai
      ennnni enna solliduvaen

    um anpai ennaalum en vaalvil kanntaen

    1. kulampiya naeram arukinil vanthu kulappangal akattineerae
      maarpodu serththu annaiththa anpai entum naan maravaen
      um anpai ennaalum en vaalvil thantheer
    2. sothanai naeram nerungiyae vanthu sothanai neekkineerae
      neer seytha nanmai yaavum entum ninaiththiduvaen
      um anpai ennaalum en vaalvil thantheer
  • Siluvaiyinadiyil Sindhina Rathathil சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்

    சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
    மூழ்கிட வந்தேனையா (2)
    உன் தூய இரத்ததால்
    என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா (2)

    1. சிந்தையின் பாவங்கள் போக்கிட
      சிரசினில் முல்முடி அறைந்தனரோ (2)
      முட்களால் சிந்தின இரத்தத்தாலே (2)
      சிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே (2)
      சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
      மூழ்கிட வந்தேனையா
    2. திருக்குள்ள இதயத்தைக் கழுவிட
      ஈட்டியால் இதயத்தைப் பிளந்தனரோ (2)
      மாசில்லா உம் திரு இரத்தத்தாலே (2)
      கேடுள்ள இருதயம் கழுவிடுமே (2)
      சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
      மூழ்கிட வந்தேனையா
    3. கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்
      இரத்தத்தில் மூழ்கிட வந்தேனைய்யா (2)
      பரிசுத்த வாழ்வினைத் தந்திடுமே (2)
      உன் தூய இரத்தத்தால் மூடுமைய்யா (2)
      சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
      மூழ்கிட வந்தேனையா

    Siluvaiyinadiyil Sindhina Rathathil Lyrics in English
    siluvaiyinatiyil sinthina iraththaththil
    moolkida vanthaenaiyaa (2)
    un thooya iraththathaal
    ennaiyum kaluvi parisuththamaakkum aiyyaa (2)

    1. sinthaiyin paavangal pokkida
      sirasinil mulmuti arainthanaro (2)
      mutkalaal sinthina iraththaththaalae (2)
      sinthaiyai parisuththam aakkidumae (2)
      siluvaiyinatiyil sinthina iraththaththil
      moolkida vanthaenaiyaa
    2. thirukkulla ithayaththaik kaluvida
      eettiyaal ithayaththaip pilanthanaro (2)
      maasillaa um thiru iraththaththaalae (2)
      kaedulla iruthayam kaluvidumae (2)
      siluvaiyinatiyil sinthina iraththaththil
      moolkida vanthaenaiyaa
    3. kolkathaa maettinil paaynthidum
      iraththaththil moolkida vanthaenaiyyaa (2)
      parisuththa vaalvinaith thanthidumae (2)
      un thooya iraththaththaal moodumaiyyaa (2)
      siluvaiyinatiyil sinthina iraththaththil
      moolkida vanthaenaiyaa
  • Siluvaiyil Thonkum சிலுவையில் தொங்கும்

    சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
    திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்

    1. முள்முடி தலையில் பாருங்களேன்
      முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
      கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – (2)
      கருணை தேவன் உனக்காக
    2. கைகால் ஆணிகள் காயங்களே
      கதறுகிறார் தாங்க முடியாமல்
      இறiவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
      என்றே அழுது புலம்புகின்றார்

    Siluvaiyil Thonkum Lyrics in English
    siluvaiyil thongum Yesuvaippaar
    thiru iraththam sinthum thaevanaippaar

    1. mulmuti thalaiyil paarungalaen
      mukamellaam iraththam alakillai
      kalvarkal naduvil katharukiraar – (2)
      karunnai thaevan unakkaaka
    2. kaikaal aannikal kaayangalae
      katharukiraar thaanga mutiyaamal
      iraivaa aen ennai kainekilntheer
      ente aluthu pulampukintar
  • Siluvaiyil Nintru Paainthodum Rattham சிலுவையில் நின்று பாய்ந்தோடும்

    சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
    இரத்தம் உன்னோடு பேசலையா –(2)
    அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
    தொங்கிடும் காட்சி காணலையா – சிலுவையில்

    கோரமாம் சிலுவையை சுமந்து சென்று
    குருதியும் வடியுதே சிரசினின்று –(2)
    உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் –(2)
    உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார் –(2) -சிலுவையில்

    சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும்
    இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் –(2)
    அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா –(2)
    அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா –(2) -சிலுவையில்


    Siluvaiyil Nintru Paainthodum Rattham Lyrics in English
    siluvaiyil nintu paaynthodum
    iraththam unnodu paesalaiyaa –(2)
    anpar Yesu unakkaaka parithaapamaaka
    thongidum kaatchi kaanalaiyaa – siluvaiyil

    koramaam siluvaiyai sumanthu sentu
    kuruthiyum vatiyuthae sirasinintu –(2)
    un paavam pokkavae thammaiyae thanthaar –(2)
    unakkaaka puthu vaalvai avarae eenthaar –(2) -siluvaiyil

    siluvaiyin kaatchiyaik kannda neeyum
    Yesuvin thalumpinaal kunamataivaay –(2)
    avarai un ullaththil aettuk kolvaayaa –(2)
    athanaalae puthu vaalvai nee peruvaayaa –(2) -siluvaiyil

  • Siluvaiyil Maanta Iyaesuvae Enrum சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்

    சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்
    சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை வந்திடுவாய்

    நாள்தோறும் நடத்திடுவார்
    உன்னை நாதன் காத்திடுவார்
    நேர்வழி சென்று புது ஜீவன் கண்டு |
    சார்ந்திட அவரை நம்பிடுவாய் | 2

    பாவத்தில் ஜீவிப்பவர்
    பாதாளம் சென்றிடுவார்
    நீயோ உன் நேசர் இயேசுவின் சாந்த |
    வார்த்தையை நம்பி வந்திடுவாய் | 2

    ஏன் இந்த வேதனையோ
    இனி நீங்கி வான்ழ்ந்திடாயோ
    இயேசு சுமந்தார் யாவும் உனக்காய் |
    சிந்தினார் இரத்தம் வந்திடுவாய் | 2


    Siluvaiyil Maanta Iyaesuvae Enrum Lyrics in English
    siluvaiyil maannda Yesuvae entum un thanjam
    sinthanai seythu seekkiram avaranntai vanthiduvaay

    naalthorum nadaththiduvaar
    unnai naathan kaaththiduvaar
    naervali sentu puthu jeevan kanndu |
    saarnthida avarai nampiduvaay | 2

    paavaththil jeevippavar
    paathaalam sentiduvaar
    neeyo un naesar Yesuvin saantha |
    vaarththaiyai nampi vanthiduvaay | 2

    aen intha vaethanaiyo
    ini neengi vaanlnthidaayo
    Yesu sumanthaar yaavum unakkaay |
    sinthinaar iraththam vanthiduvaay | 2

  • Siluvaiyil Araiyunda Iyesaiyaa சிலுவையில் அறையுண்ட இயேசையா

    சிலுவையில் அறையுண்ட இயேசையா
    உம் முகம் பார்க்கின்றேன்
    கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
    பரிசுத்தரே இறை மகனே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

    1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
      உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
      பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
    2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
      கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
      பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.

    siluvaiyil araiyunnda iyaesaiyaa
    um mukam paarkkinten
    kannnneer sinthi um paathamae en mukam pathikkinten
    parisuththarae irai makanae
    sthoththiram sthoththiramae..

    1. ummaiyae verumai aakkineerae atimaiyin kolam eduththeerae
      umathu uyirai thantheerae atimai ennai meettirae
      parisuththarae irai makanae sthoththiram sthoththiramae..
    2. senneer viyarvai viyarthathavarae kannnneer sinthi alutheerae
      kotiya vaethanai ataintheerae paavi ennai ninaiththeerae
      parisuththarae irai makanae sthoththiram sthoththiramae
  • Siluvaiyandayil Nambi Vandhu Nirkayil சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்

    1. நான் உம்மைப் பற்றி இரட்சகா!
      வீண் வெட்கம் அடையேன்
      பேரன்பைக் குறித்தாண்டவா
      நான் சாட்சி கூறுவேன்

    சிலுவையண்டையில்
    நம்பிவந்து நிற்கையில்
    பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
    எந்த நேரமும் என துள்ளத்திலும்
    பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

    1. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
      நான் நம்பிச் சார்வதால்
      நீர் கைவிடீர் இவ்வேழையைக்
      காப்பீர் தேவாவியால்
    2. மாவல்ல வாக்கின் உண்மையை
      கண்டுணரச் செய்தீர்
      நான் ஒப்புவித்த பொருளை
      விடாமல் காக்கிறீர்
    3. நீர் மாட்சியோடு வருவீர்
      அப்போது களிப்பேன்
      ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
      மெய்ப் பாக்கியம் அடைவேன்

    Siluvaiyandayil Nambi Vandhu Nirkayil Lyrics in English

    1. naan ummaip patti iratchakaa!
      veenn vetkam ataiyaen
      paeranpaik kuriththaanndavaa
      naan saatchi kooruvaen

    siluvaiyanntaiyil
    nampivanthu nirkaiyil
    paavappaaram neengi vaalvatainthaen
    entha naeramum ena thullaththilum
    paeraanantham pongip paaduvaen

    1. aa! unthan nalla naamaththai
      naan nampich saarvathaal
      neer kaiviteer ivvaelaiyaik
      kaappeer thaevaaviyaal
    2. maavalla vaakkin unnmaiyai
      kanndunarach seytheer
      naan oppuviththa porulai
      vidaamal kaakkireer
    3. neer maatchiyodu varuveer
      appothu kalippaen
      or vaasasthalam koduppeer
      meyp paakkiyam ataivaen
  • Siluvaiyai Sumanthumai Pin Sellave சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே

    சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
    இயேசுவே என்னையும் அழைத்தீரே
    கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே
    நல்லதோர் வழியை வகுத்தீரே

    முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்
    உந்தனின் திருப்பாதத்தில்
    ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே
    உம் சித்தம் நிறைவேற்றிடும்

    1. நேசரே உம் அடிச் சுவடுகளை
      நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே
      இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்
      சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய்
    2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே
      வேகமாய் உம் அண்டை வந்திடுவேன்
      ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை
      யுகயுகமாக சேவை செய்வேன் – முற்றுமாய்

    Siluvaiyai Sumanthumai Pin Sellave Lyrics in English

    siluvaiyai sumanthummai pin sellavae
    Yesuvae ennaiyum alaiththeerae
    kalvaari malaiyil jeevanai ilanthumae
    nallathor valiyai vakuththeerae

    muttumaay paliyaay pataikkinten
    unthanin thiruppaathaththil
    aettuk kollum ennai Yesuvae
    um siththam niraivaettidum

    1. naesarae um atich suvadukalai
      naesiththu thodarvaen en vaalvinilae
      Yesuvae um thiru karangalil petta – nal
      sevaiyai niraivaetta vaanjikkiraen – muttumaay
    2. naesaththil nin siththam niraivaettiyae
      vaekamaay um anntai vanthiduvaen
      aekamaay ummudan seeyonil innainthummai
      yukayukamaaka sevai seyvaen – muttumaay