Author: admin

  • Ragasiyamaai Oru Varugai ரகசியமாய் ஒரு வருகை

    ரகசியமாய் ஒரு வருகை
    அனைவரும் காணும் ஒரு வருகை
    இரண்டுக்கும் நடுவே உபத்திரவம்
    அதன் நடுவில் மகா உபத்திரவம்
    சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே
    வருகிறார் இரகசியமாய்

    சபையை தம்மோடு அழைத்து வருகிறார்
    வெளியரங்கமாய்
    நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே
    அதில் மிகுதியாய் பாடுகள் புவியில்
    தோன்றுதே

    நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய்
    மாறிடுவோம் இரகசியமாய்
    ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம்
    வெளியரங்கமாய்
    கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு
    சாதனைதான்- இந்த
    இரட்சிப்பை நீ அசட்டைசெய்தால் நரக
    வேதனைதான்

    ஆரவாரத்தோடும் தூதன் சத்தத்தோடும்
    எக்காளதொனியோடும் இறங்கி வருகிறார்
    யாரும் அறியா நேரம் இவைகள் நடந்தேறும்
    காத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுவார்
    இது ரகசிய வருகை
    ஒரு அதிசய வருகை

    தீர்க்கதரிசி சொன்ன இறுதி ஏழு வருடம்
    அந்திகிறிஸ்து தன்னை உயர்த்திக் கொள்கிறான்
    மூன்றரை ஆண்டு காலம் முடிந்த பின்னே அவனும்
    பாழாக்கும் அருவருப்பை உயர்த்தி வைக்கிறான்
    அதை கண்கள் யாவும் காணும்
    அது முடிவு நெருங்கும் காலம்

    இயேசுவே ரட்சகர் என்பதை நம்பி நீ
    மன்றாடி மன்னிப்பை பெற்றுக்கொள் இன்றே நீ
    குற்றங்கள் ஒப்புக்கொள் வாழ்க்கையை மாற்றிக்கொள்
    வேறொன்றும் வேண்டாமே வேண்டுதல் கேட்பாரே

    இன்றைக்கே வந்தாலும் ஆச்சரியம் இல்லையே
    ஆயத்தமாக நீ நின்றாலே தப்பித்தாய்
    சட்டென்று செல்லுவாய் கர்த்தரை சந்திப்பாய்
    மேகத்தில் உன்னைப்போல் நம்பினோர்
    நிற்பாரே

    இயேசுவை நம்பாமல் இரட்சிப்பு இல்லாமல்
    மோட்சத்தை எண்ணாதே மோசமாய் போகாதே
    யாக்கோபின் கஷ்டத்தை சந்திக்க நாடாதே
    சாத்தானின் முத்திரை பெற்றுத்தான் மாளாதே
    நித்திய அக்கினி உனக்கு வேண்டாமே
    சத்திய வேதத்தின் வார்த்தையை நம்பியே வா

    பரலோகம் ஒருபுறத்தில்
    பாடுகள் புவியில் மறுபுறத்தில்
    விழிப்புடன் இருந்தால் நீ பிழைத்திடுவாய்
    வரப்போகும் ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வாய்


    Ragasiyamaai Oru Varugai Lyrics in English
    rakasiyamaay oru varukai
    anaivarum kaanum oru varukai
    iranndukkum naduvae upaththiravam
    athan naduvil makaa upaththiravam
    sapaiyai thamakkena eduththukkollavae
    varukiraar irakasiyamaay

    sapaiyai thammodu alaiththu varukiraar
    veliyarangamaay
    naduvilae aelu varudam kadanthu pokuthae
    athil mikuthiyaay paadukal puviyil
    thontuthae

    notippoluthinilae vaeroru roopamaay
    maariduvom irakasiyamaay
    aelu varudangal kaliththu thirumpuvom
    veliyarangamaay
    karththarukkul mariththupponaal nalloru
    saathanaithaan- intha
    iratchippai nee asattaைseythaal naraka
    vaethanaithaan

    aaravaaraththodum thoothan saththaththodum
    ekkaalathoniyodum irangi varukiraar
    yaarum ariyaa naeram ivaikal nadanthaerum
    kaaththirunthaal unnai alaiththuch selluvaar
    ithu rakasiya varukai
    oru athisaya varukai

    theerkkatharisi sonna iruthi aelu varudam
    anthikiristhu thannai uyarththik kolkiraan
    moontarai aanndu kaalam mutintha pinnae avanum
    paalaakkum aruvaruppai uyarththi vaikkiraan
    athai kannkal yaavum kaanum
    athu mutivu nerungum kaalam

    Yesuvae ratchakar enpathai nampi nee
    mantati mannippai pettukkol inte nee
    kuttangal oppukkol vaalkkaiyai maattikkol
    vaerontum vaenndaamae vaennduthal kaetpaarae

    intaikkae vanthaalum aachchariyam illaiyae
    aayaththamaaka nee nintalae thappiththaay
    sattentu selluvaay karththarai santhippaay
    maekaththil unnaippol nampinor
    nirpaarae

    Yesuvai nampaamal iratchippu illaamal
    motchaththai ennnnaathae mosamaay pokaathae
    yaakkopin kashdaththai santhikka naadaathae
    saaththaanin muththirai pettuththaan maalaathae
    niththiya akkini unakku vaenndaamae
    saththiya vaethaththin vaarththaiyai nampiyae vaa

    paralokam orupuraththil
    paadukal puviyil marupuraththil
    vilippudan irunthaal nee pilaiththiduvaay
    varappokum aakkinaikku thappiththukkolvaay

  • Raayar Moovar Geelthaesam ராயர் மூவர் கீழ்தேசம்

    1. ராயர் மூவர் கீழ்தேசம்
      விட்டு வந்தோம் வெகுதூரம்
      கையில் காணிக்கைகள் கொண்டு
      பின் செல்வோம் நட்சத்திரம்

    ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்
    ஆச்சரிய நட்சத்திரம்
    நித்தம் வழி காட்டிச் செல்லும்
    உந்தன் மங்கா வெளிச்சம்

    1. பெத்லகேம் வந்த இராஜாவே
      உம்மை நித்திய வேந்தன் என்றேன்
      க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்
      வைத்தேன் உம் முன்னமே — ஓ…
    2. வெள்ளை போளம் நான் ஈவேன்
      கொண்டு வந்தேன் கடவுளே
      துஷ்ட பாவ பாரம் தாங்கி
      மரிப்பார் தேவனே — ஓ…
    3. தூப வர்க்கம் நான் ஈவேன்
      தெய்வம் என்று தெரிவிப்பேன்
      ஜெப தூபம் ஏறெடுப்பேன்
      உம் பாதம் பணிவேன் — ஓ…

    Raayar Moovar Geelthaesam Lyrics in English

    1. raayar moovar geelthaesam
      vittu vanthom vekuthooram
      kaiyil kaannikkaikal konndu
      pin selvom natchaththiram

    o… o… iraavin jothi natchaththiram
    aachchariya natchaththiram
    niththam vali kaattich sellum
    unthan mangaa velichcham

    1. pethlakaem vantha iraajaavae
      ummai niththiya vaenthan enten
      kreedam soodum narponnai naan
      vaiththaen um munnamae — o…
    2. vellai polam naan eevaen
      konndu vanthaen kadavulae
      thushda paava paaram thaangi
      marippaar thaevanae — o…
    3. thoopa varkkam naan eevaen
      theyvam entu therivippaen
      jepa thoopam aeraெduppaen
      um paatham pannivaen — o…
  • Raasa Raasa Pitha Maintha ராச ராச பிதா மைந்த

    ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
    யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

    ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக — ராச

    1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
      நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
      நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை — ராச
    2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
      வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
      பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித — ராச
    3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
      பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
      கிருபா கரா நரா! சருவேசுரா, பரா திரு — ராச
    4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
      கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
      நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர — ராச

    Raasa Raasa Pitha Maintha Lyrics in English

    raasa raasa pithaa maintha thaesulaavusathaa nantha
    yaesu naayakanaar sontha maesiyaa nanthanae!
    jekatheesu raesuran suka naesa meesuran maka — raasa

    1. maasilaa manniyae! manthra aasilaa anniyae! sunthara
      naesamae panniyae, thanthira mosamae thanniyae!
      niraivaana kaanthanae! iraiyaana saanthanae! marai — raasa
    2. aathiyantha millaan antha maathinunthiyilae, muntha
      vaetha panthanamaay vantha paatham vanthanamae,
      patha aamanaamanaa! suthanaamanaamanaa! sitha — raasa
    3. maenmaiyaa sananae, nanmai maevuposananae, thonmai
      paanmai vaasananae, punmai paava mosananae
      kirupaa karaa naraa! saruvaesuraa, paraa thiru — raasa
    4. veedu thaedavumae, thanthai naadu koodavumae, mainthar
      kaedu moodavumae, vinthaiyodu paadavumae,
      naravaeda maevinaan, suraraadu kovinaan, para — raasa
  • Raakaalam Bethalem Meippergal ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

    1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
      தம் மந்தை காத்தனர்
      கர்த்தாவின் தூதன் இறங்க
      விண் ஜோதி கண்டனர்
    2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
      விண் தூதன் திகில் ஏன்?
      எல்லாருக்கும் சந்தோஷமாம்
      நற்செய்தி கூறுவேன்
    3. தாவீதின் வம்சம் ஊரிலும்
      மெய் கிறிஸ்து நாதனார்
      பூலோகத்தார்க்கு ரட்சகர்
      இன்றைக்குப் பிறந்தார்
    4. இதுங்கள் அடையாளமாம்
      முன்னணைமீது நீர்
      கந்தை பொதிந்த கோலமாய்
      அப்பாலனைக் காண்பீர்

    5.என்றுரைத்தான் அக்ஷணமே
    விண்ணோராம் கூட்டத்தார்
    அத்தூதனோடு தோன்றியே
    கர்த்தாவைப் போற்றினார்

    1. மா உன்னதத்தில் ஆண்டவா
      நீர் மேன்மை அடைவீர்
      பூமியில் சமாதானமும்
      நல்லோர்க்கு ஈகுவீர்

    Raakaalam Bethalem Meippergal Lyrics in English

    1. raakkaalam pethlaem maeypparkal
      tham manthai kaaththanar
      karththaavin thoothan iranga
      vinn jothi kanndanar
    2. avarkal achchangaொllavum
      vinn thoothan thikil aen?
      ellaarukkum santhoshamaam
      narseythi kooruvaen
    3. thaaveethin vamsam oorilum
      mey kiristhu naathanaar
      poolokaththaarkku ratchakar
      intaikkup piranthaar
    4. ithungal ataiyaalamaam
      munnannaimeethu neer
      kanthai pothintha kolamaay
      appaalanaik kaannpeer

    5.enturaiththaan akshanamae
    vinnnnoraam koottaththaar
    aththoothanodu thontiyae
    karththaavaip pottinaar

    1. maa unnathaththil aanndavaa
      neer maenmai ataiveer
      poomiyil samaathaanamum
      nallorkku eekuveer
  • Raajathi Raajan Yesu Varukirar இராஜாதி இராஜன் இயேசு வருவார்

    1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
      சிந்திக்க ஆயத்தமா ?
      வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
      சந்திக்க ஆயத்தமா ?

    பல்லவி

    கேள் ! கேள் ! மானிடரே
    சந்திக்க ஆயத்தமா ?
    இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
    சந்திக்க ஆயத்தமா ?

    1. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
      சந்திக்க ஆயத்தமா ?
      பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
      சந்திக்க ஆயத்தமா ?
    2. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
      சந்திக்க ஆயத்தமா ?
      கத்திக் கதறியே தாழிடுவார்
      சந்திக்க ஆயத்தமா ?
    3. உலகமனைத்துமே கண்டிடுமே
      சந்திக்க ஆயத்தமா ?
      பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
      சந்திக்க ஆயத்தமா ?

    Raajathi Raajan Yesu Varukirar Lyrics in English

    1. iraajaathi iraajan Yesu varuvaar
      sinthikka aayaththamaa ?
      varuvaen entavar seekkiram varuvaar
      santhikka aayaththamaa ?

    pallavi

    kael ! kael ! maanidarae
    santhikka aayaththamaa ?
    iraajaathi iraajanaay vanthiduvaar
    santhikka aayaththamaa ?

    1. pallaayiram makkal aayaththamae
      santhikka aayaththamaa ?
      paraloka vaalvin nalpaakkiyaththai
      santhikka aayaththamaa ?
    2. kuththinor yaavarum kanndiduvaar
      santhikka aayaththamaa ?
      kaththik kathariyae thaaliduvaar
      santhikka aayaththamaa ?
    3. ulakamanaiththumae kanndidumae
      santhikka aayaththamaa ?
      parisuththavaankalin por nirkumae
      santhikka aayaththamaa ?
  • Raajan Thaaveethin Oorinilae ராஜன் தாவீதின் ஊரினிலே

    ராஜன் தாவீதின் ஊரினிலே
    ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
    மந்தையைக் காக்க
    விண்தூதர்கள் இறங்க
    விண் ஜோதி கண்டவரே

    1. திகையாதே கலங்தாதே
      மகிழ்விக்கும் செய்தியுண்டு
      ராஜாதி ராஜன் வல்லமைத் தேவன்
      மானிடனாய் உதித்தார்
    2. ஒரு மாட்டுத் தொழுவத்தினில்
      அன்னை மரியின் மடியினில்
      புல்லணை மீதினிலே
      கடுங்குளிர் நேரத்தில்
      பாலகனாய் பிறந்தார்
    3. நட்சத்திரத்தின் ஒளியிலே
      மூன்று ஞானியர் வந்தனரே
      பொன் வெள்ளைத் தூபம்
      காணிக்கையேந்தி
      பாதம் பணிந்தனரே

    Raajan Thaaveethin Oorinilae Lyrics in English
    raajan thaaveethin oorinilae
    raakkaalam pethlaem maeypparkal
    manthaiyaik kaakka
    vinnthootharkal iranga
    vinn jothi kanndavarae

    1. thikaiyaathae kalangthaathae
      makilvikkum seythiyunndu
      raajaathi raajan vallamaith thaevan
      maanidanaay uthiththaar
    2. oru maattuth tholuvaththinil
      annai mariyin matiyinil
      pullannai meethinilae
      kadungulir naeraththil
      paalakanaay piranthaar
    3. natchaththiraththin oliyilae
      moontu njaaniyar vanthanarae
      pon vellaith thoopam
      kaannikkaiyaenthi
      paatham panninthanarae
  • Raajan Paalan Piranthanarae ராஜன் பாலன் பிறந்தனரே

    ராஜன் பாலன் பிறந்தனரே
    தாழ்மையான தரணியிலே

    ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
    ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்
    தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன்

    1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்
      அன்னல் ஏழையாய் வந்தார்
      அவர் வாழ்வினில் மானிடரை
      காக்க என்னிலே அவதரித்தார்
      அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன்
    2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்
      மானிட ஜென்மம் எடுத்தார்
      அவர் பாதம் பணிந்திடுவோம்
      பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ
      மானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன்

    Raajan Paalan Piranthanarae Lyrics in English
    raajan paalan piranthanarae
    thaalmaiyaana tharanniyilae

    aathipan piranthaar amalaathipan piranthanarae
    aelmaiyaanathoru maattukkottilthanil
    thaalmaiyaay avathariththaar — raajan

    1. annai mariyin karppaththil uthiththaar
      annal aelaiyaay vanthaar
      avar vaalvinil maanidarai
      kaakka ennilae avathariththaar
      annal aelaiyaay vanthaar — raajan
    2. paarinil paavam pokkavae paangudan
      maanida jenmam eduththaar
      avar paatham panninthiduvom
      paalanin anpukku ellai unntoo
      maanida jenmam eduththaar — raajan
  • Raajaathi Raajanaam ராஜாதி ராஜனாம்

    ராஜாதி ராஜனாம்
    தேவாதி தேவனாம்
    உமமை போற்றி போற்றியே
    என்றும் வாழ்த்துவோம் – 2

    1. முழுங்கால் யாவும் என்றும் முடங்கட்டும்
      நாவுகள் உம்மை என்றும் துதிக்கட்டும்
      சத்துரு கோட்டைகள் என்றும் உடையட்டும்
      யாவரும் உயர்த்தி பாடுவோம்
      தேவ இராஜனே – 2 ராஜாதி – 2
    2. தேவனின் நாமத்தை உயர்த்துவோம்
      சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும்
      பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும்
      யாவரும் உயர்த்தி கட்டுவோம்
      தேவ ராஜ்யத்தை -2 ராஜாதி – 2

    Raajaathi Raajanaam Lyrics in English
    raajaathi raajanaam
    thaevaathi thaevanaam
    umamai potti pottiyae
    entum vaalththuvom – 2

    1. mulungaal yaavum entum mudangattum
      naavukal ummai entum thuthikkattum
      saththuru kottaைkal entum utaiyattum
      yaavarum uyarththi paaduvom
      thaeva iraajanae – 2 raajaathi – 2
    2. thaevanin naamaththai uyarththuvom
      sapaikal ellaam ontaka valarattum
      paarampariya kattukal ellaam utaiyattum
      yaavarum uyarththi kattuvom
      thaeva raajyaththai -2 raajaathi – 2
  • Raajaathi Raajan Devaathi Devan இராஜாதி இராஜன் தேவாதி தேவன்

    இராஜாதி இராஜன் தேவாதி தேவன்
    வேகம் வருகின்றாரே

    நம் இயேசு இராஜா வருவார்
    எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்
    ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்

    1.முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
    வென்ணங்கி தரித்தவராய்
    ஜெயக் கொடிகள் பிடித்திடுவார்
    மீட்பின் கீதங்கள் பாடிடுவார்
    ஆஹா என்ன பேரின்பம் அது – இராஜாதி

    2.தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாத
    மேலாக ஆட்சி இது
    துக்கம் நோயும் அங்கில்லையே
    பசி தாகமும் அங்கே இல்லை
    பெரும் அல்லேலூயா முழக்கமே – இராஜாதி

    3.விருந்தாகும் இந்த ஆராதனையை
    தந்துமே மகிழச் செய்தார்
    மத்திய வானத்தில் ஓர் விருந்து
    சிறப்பாகவே மட்டும் அருந்த – இராஜாதி

    4.நம் மீட்பர் உயிரோடிருப்பதால் நாம்
    கண்ணால் அவரைக் காண்போம்
    நாம் தூசிகள் உதறியே
    தூய்மையை அணிந்திடுவோம்
    நம் தூய தேவனைக் காண – இராஜாதி

    5.பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும்
    காலம் இதுவே தானே
    நீதிமானே நீதி செய்வாய்
    பலனோடு நான் வாறன் என்றார்
    ஆமென் இயேசுவே வாரும் ஐயா – இராஜாதி


    Raajaathi Raajan Devaathi Devan Lyrics in English

    iraajaathi iraajan thaevaathi thaevan
    vaekam varukintarae

    nam Yesu iraajaa varuvaar
    enthan suththarai serungal enpaar
    aahaa naamangu sernthiduvom

    1.muththirai petta suththar ellorum
    vennangi thariththavaraay
    jeyak kotikal pitiththiduvaar
    meetpin geethangal paadiduvaar
    aahaa enna paerinpam athu – iraajaathi

    2.theettulla ontum ullae sellaatha
    maelaaka aatchi ithu
    thukkam Nnoyum angillaiyae
    pasi thaakamum angae illai
    perum allaelooyaa mulakkamae – iraajaathi

    3.virunthaakum intha aaraathanaiyai
    thanthumae makilach seythaar
    maththiya vaanaththil or virunthu
    sirappaakavae mattum aruntha – iraajaathi

    4.nam meetpar uyirotiruppathaal naam
    kannnnaal avaraik kaannpom
    naam thoosikal uthariyae
    thooymaiyai anninthiduvom
    nam thooya thaevanaik kaana – iraajaathi

    5.parisuththavaankal parisuththamaakum
    kaalam ithuvae thaanae
    neethimaanae neethi seyvaay
    palanodu naan vaaran entar
    aamen Yesuvae vaarum aiyaa – iraajaathi

  • Raajaathi Raajaavaik Kontaatuvoem ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்

    ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
    நாள் தோறும் துதிபாடி கொண்டாடுவோம் – நம்

    1. வந்தாரே தேடி வந்தாரே
      தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
      என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
      என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த
    2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
      கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
      என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
      நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் – அந்த
    3. வென்றாரே சாத்தானை வென்றாரே
      வல்லமைகள் அனைத்தையும் உரித்தாரே
      அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
      என் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி முறியடிப்பேன் – நம்
    4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
      கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
      ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
      கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்
    5. முடிவில்லாத தம் மகிமையிலே
      பங்கு பெற என்னை தெரிந்துக் கொண்டார்
      என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
      பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்

    Raajaathi Raajaavaik Kontaatuvoem Lyrics in English
    raajaathi raajaavaik konndaaduvom
    naal thorum thuthipaati konndaaduvom – nam

    1. vanthaarae thaeti vanthaarae
      than jeevan enakkaay thanthaarae
      ennai vaalavaikkum theyvamthaan Yesu
      ennai valinadaththum theepamthaanae Yesu – antha
    2. kalakkam illae enakku kavalai illae
      karththar en maeypparaay irukkiraar
      ennai pasumpul maeychchalukku nadaththuvaar
      naan pasiyaara unavu ootti makiluvaar – antha
    3. ventarae saaththaanai ventarae
      vallamaikal anaiththaiyum uriththaarae
      antha saaththaan maelae athikaaram thanthaarae
      en Yesu naamam sollich solli muriyatippaen – nam
    4. karangalilae ennai poriththu ullaar
      kannmunnae thinam ennai niruththiyullaar
      aetta kaalaththilae uyarththuvaar – avar
      karangalukkul adangi naan kaaththiruppaen
    5. mutivillaatha tham makimaiyilae
      pangu pera ennai therinthuk konndaar
      ennai seerpaduththi sthirappaduththi nadaththuvaar
      pelappaduththi nilainiruththi makiluvaar