Author: admin

  • Pogathe Pogathe Un Thayin போகாதே போகாதே

    போகாதே போகாதே
    உன் தாயின் கருவில் அழைத்தவர் நான் அல்லவா
    உன் தாயினும் மேலாய் காக்கும் தேவன் நான் அல்லவா

    என்னை விட்டு பிரிந்திட
    ஏன் மனம் வந்தது
    உனகெந்த குறையும் நான் வைக்கவில்லை
    ஜீவனை பார்க்கிலும் மேலானது(2) அது
    என்ன சொல்லிடு
    தந்திடுவேன்

    உன்னை தேடி வந்தேன்
    வாசலில் நின்றேன்
    ஒரு முறை அழைத்தாய்
    ஏற்று கொண்டாய்
    சில நாள் கழித்து மறந்தாயே
    கதவை நீ திறக்க காத்திருப்பேன்


    Pogathe pogathe un thayin Lyrics in English
    pokaathae pokaathae
    un thaayin karuvil alaiththavar naan allavaa
    un thaayinum maelaay kaakkum thaevan naan allavaa

    ennai vittu pirinthida
    aen manam vanthathu
    unakentha kuraiyum naan vaikkavillai
    jeevanai paarkkilum maelaanathu(2) athu
    enna sollidu
    thanthiduvaen

    unnai thaeti vanthaen
    vaasalil ninten
    oru murai alaiththaay
    aettu konndaay
    sila naal kaliththu maranthaayae
    kathavai nee thirakka kaaththiruppaen

  • Poevaas Poevaas போவாஸ் போவாஸ்

    போவாஸ் போவாஸ்
    போர்வையால் என்னை மூடுமையா
    இயேசையா இயேசையா உம்
    அன்பினால் என்னை மூடுமையா

    1. உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்
      காப்பாற்றும் கடமை உமக்கையா
    2. நிறைவான பரிசு நீர்தானையா – உம்
      நிழல்தானே தங்கும் சொர்க்கமையா
    3. வேதனையோ வேறு சோதனையோ
      எதுவுமே என்னை பிரிக்காதையா
    4. ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
      வேறொரு வயல் நான் போவதில்லை
    5. கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
      சொல்வதை செய்து முடித்திடுவேன்
    6. போர்வை விரித்தேன் போடுமையா
      கோதுமையால் என்னை நிரப்புமையா
    7. கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்
      கனிமொழியால் என்னைத் தேற்றுமையா
    8. திருப்தியாக்கும் என் திருஉணவே
      தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே

    Poevaas Poevaas Lyrics in English
    povaas povaas
    porvaiyaal ennai moodumaiyaa
    iyaesaiyaa iyaesaiyaa um
    anpinaal ennai moodumaiyaa

    1. unthan atimai naan aiyaa – ennaik
      kaappaattum kadamai umakkaiyaa
    2. niraivaana parisu neerthaanaiyaa – um
      nilalthaanae thangum sorkkamaiyaa
    3. vaethanaiyo vaetru sothanaiyo
      ethuvumae ennai pirikkaathaiyaa
    4. oyvinti kathirkal porukkiduvaen
      vaeroru vayal naan povathillai
    5. kattuththaarum naan kataipitippaen
      solvathai seythu mutiththiduvaen
    6. porvai viriththaen podumaiyaa
      kothumaiyaal ennai nirappumaiyaa
    7. karunnaikkann konndu Nnokkumaiyaa – unthan
      kanimoliyaal ennaith thaettumaiyaa
    8. thirupthiyaakkum en thiruunavae
      thaakam theerkkum jeevath thannnneerae
  • Poethumaanavarae Puthumaiyaanavarae போதுமானவரே புதுமையானவரே

    போதுமானவரே புதுமையானவரே
    பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
    ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை

    1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
      அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
      எனக்காக காயப்பட்டீரே
      அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
      – ஆராதனை
    2. பாவங்கள் சுமந்ததனால் – நான்
      நீதிமானாய் மாற்றப்பட்டேன்
      மரணத்தை ஏற்றுக் கொண்டதால் – நித்திய
      ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
    3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
      அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
      எனக்காக அவமானமடைந்து – உம்
      மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
    4. சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை
      செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்
      சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்
      ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்

    Poethumaanavarae Puthumaiyaanavarae Lyrics in English
    pothumaanavarae puthumaiyaanavarae
    paathukaappavarae en paavam theerththavarae
    aaraathanai (2) aayulellaam aaraathanai

    1. enakkaaka thanntikkappattirae
      athanaal naan mannikkappattaen
      enakkaaka kaayappattirae
      athanaal naan sukam pettuk konntaen
      – aaraathanai
    2. paavangal sumanthathanaal – naan
      neethimaanaay maattappattaen
      maranaththai aettuk konndathaal – niththiya
      jeevanai pettuk konntaen aiyaa
    3. enakkaaka purakkannikkappattir
      athanaal naan aettuk kollappattaen
      enakkaaka avamaanamatainthu – um
      makimaiyilae panguperach seytheer
    4. siluvaiyilae aelmaiyaanathaal – ennai
      selvanthanaay maattivittirae – neer
      saapangalai sumanthu konndathaal – naan
      aasirvaatham pettuk konntaen
  • Poethakar Vanthu Veettaar போதகர் வந்து வீட்டார்

    போதகர் வந்து வீட்டார்
    உன்னைத்தான் அழைக்கிறார்
    எழுந்து வா (4)

    1. கண்ணீர் கடலில் மூழ்கி
      கலங்கி தவிக்கிறாயோ
      கலங்காதே திகையாதே
      கர்த்தர் உன் அடைக்கலம் – மகளே
    2. பாவச்சேற்றில் மூழ்கி
      பயந்து சாகிறாயோ
      தேவமைந்தன் தேடுகிறார்
      தேற்றிட அழைக்கிறார் மகளே
    3. கல்வாரி சிலுவையைப் பார்
      கதறும் இயேசுவைப் பார்
      உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
      உன் துக்கம் சுமந்து கொண்டார்
    4. துன்பம் துயரம் உன்னை
      சோர்வுக்குள் ஆக்கியதோ
      அன்பர் இயேசு அழைக்கிறார்
      அணைக்கத் துடிக்கிறார்

    Poethakar Vanthu Veettaar Lyrics in English
    pothakar vanthu veettar
    unnaiththaan alaikkiraar
    elunthu vaa (4)

    1. kannnneer kadalil moolki
      kalangi thavikkiraayo
      kalangaathae thikaiyaathae
      karththar un ataikkalam – makalae
    2. paavachchaேttil moolki
      payanthu saakiraayo
      thaevamainthan thaedukiraar
      thaettida alaikkiraar makalae
    3. kalvaari siluvaiyaip paar
      katharum Yesuvaip paar
      un paadukal aettuk konndaar
      un thukkam sumanthu konndaar
    4. thunpam thuyaram unnai
      sorvukkul aakkiyatho
      anpar Yesu alaikkiraar
      annaikkath thutikkiraar
  • Poeshippavar Neerae போஷிப்பவர் நீரே

    போஷிப்பவர் நீரே
    பாதுகாப்பு நீரே
    பரிகாரி நீரே
    என் இரட்சகரும் நீரே -2

    1. சோர்ந்து போனாயோ
      கவலைபடாதே -2
      இயேசு உன்னை சுமப்பார்
      மகிழ்ச்சியாக்குவார் -2 போஷிப்பார்
    2. இயேசு நீர் பெரியவர்
      எல்ஷடாய் நீர் வல்லவர்
      உலகம் வனாந்திரம்
      பரலோகம் மகிழ்ச்சியே -2 போஷிப்பார்
    3. தண்ணிர் மேல் நடந்தார்
      அற்புதங்கள் செய்திட்டார் -2
      உன் பிரச்சனை எம்மாத்திரம்
      எண்ணிப்பார் ஓர் நிமிடம் -2 போஷிப்பார் அல்லேலூயா பாடுவோம்
      தேவனை துதிப்போம் -2

    Poeshippavar Neerae Lyrics in English
    poshippavar neerae
    paathukaappu neerae
    parikaari neerae
    en iratchakarum neerae -2

    1. sornthu ponaayo
      kavalaipadaathae -2
      Yesu unnai sumappaar
      makilchchiyaakkuvaar -2 poshippaar
    2. Yesu neer periyavar
      elshadaay neer vallavar
      ulakam vanaanthiram
      paralokam makilchchiyae -2 poshippaar
    3. thannnnir mael nadanthaar
      arputhangal seythittar -2
      un pirachchanai emmaaththiram
      ennnnippaar or nimidam -2 poshippaar allaelooyaa paaduvom
      thaevanai thuthippom -2
  • Poerruvoemae Poerruvoemae போற்றுவோமே போற்றுவோமே

    போற்றிப்பாடுங்கள்

    போற்றுவோமே போற்றுவோமே
    எம் தேவரீரை இவ்வேளையிலே – நன்றியுடனே

    1. துங்கவன் இயேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்
      மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்
      கங்குல் அற எங்குமெ ஒளி மங்கிடாமலே தங்கிடவேணும்
    2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே
      ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே
      அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே
    3. பாவம் போக்கியே கோபம் மாற்றிய ரோகம் தொலைத்தோனே
      துரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனே
      தூயாநேயா காயமாற்றிய கருணாநிதியே பரிகாரியே
    4. பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனே
      அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தவனே
      தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க
    5. பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே
      புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன்
      கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன்

    Poerruvoemae Poerruvoemae Lyrics in English

    pottippaadungal

    pottuvomae pottuvomae
    em thaevareerai ivvaelaiyilae – nantiyudanae

    1. thungavan Yesuvae thooyaa umakkae thuthikal saattiduvaen
      mangaa pukalum makilnthupotti engum thuthiththiduvaen
      kangul ara engume oli mangidaamalae thangidavaenum
    2. aalntha settinil amilntha emmaiyae annaiththu eduththonae
      aalithanilempaava merintha annai uththamanae
      antum intum entum thuthippaen mannavanaiyae manathinilae
    3. paavam pokkiyae kopam maattiya rokam tholaiththonae
      thuroki ennaiyae suththikariththa thooya vaenthanae
      thooyaanaeyaa kaayamaattiya karunnaanithiyae parikaariyae
    4. paarilennaiyae piriththeduththonae thaavivanthonae
      akamathinilae aavi eenthida arul nirainthavanae
      tharisanam thantha thaevanae parisuththamaay paaril jeevikka
    5. pooranar aakavae poovil vaalnthida kirupai aliththonae
      pukalai virumpaen makilvaen thinamae makimai seluththiduvaen
      konae thaenae kothillaathonae kaanam paatiyae thuthiththiduvaen
  • Poerrum, Poerrum போற்றும், போற்றும்

    1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
      வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்
      பாரிலேயும் நாமசங்கீர்த்தனஞ் செய்ய
      மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்
      நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
      இயேசுநாதர் நம்மையும் தாங்குவார்
      போற்றும், போற்றும், பரலோகத்தைச்
      சென்றடைய தெய்வகுமாரனைப் போற்றும்!
      பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்
    2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
      பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்
      பாடுபட்டு பிராணத் தியாகமும் செய்து
      வானலோக வாசலைத் திறந்தார்
      மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும்! என்றும்!
      வாழ்க, வாழ்க, ஜெபத்து இரட்சகா!
      அருள் நாதா, மாசணுகா பரஞ்ஜோதி,
      வல்ல நாதா, கருணை நாயகா!
    3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
      விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்,
      போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
      ஆட்சி செய்வார் நித்திய காலமும்,
      இயேசு ராஜா மாட்சிமையோடு வந்து,
      இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்,
      லோகமெங்கம் நீதியின் செங்கோலை ஒச்சி
      ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன

    Poerrum, Poerrum Lyrics in English

    1. pottum, pottum! punnnniya naatharaip pottum!
      vaanor kootip paadavum inpamaay
      paarilaeyum naamasangaீrththananj seyya
      maanthar yaarum, vaarum aananthamaay
      naesa maeyppan karaththil aenthumaatru
      Yesunaathar nammaiyum thaanguvaar
      pottum, pottum, paralokaththaich
      sentataiya theyvakumaaranaip pottum!
      paathukaaththu niththamum poshippaar
    2. pottum, pottum! punnnniya naatharaip pottum!
      paavam pokkap paarinil jenmiththaar
      paadupattu piraanath thiyaakamum seythu
      vaanaloka vaasalaith thiranthaar
      maa karththaavae, sthoththiram entum! entum!
      vaalka, vaalka, jepaththu iratchakaa!
      arul naathaa, maasanukaa paranjjothi,
      valla naathaa, karunnai naayakaa!
    3. pottum, pottum! punnnniya naatharaip pottum!
      vinnnum mannnum isainthu paadavum,
      pottum, pottum, meetpar makaththuvamaaka
      aatchi seyvaar niththiya kaalamum,
      Yesu raajaa maatchimaiyodu vanthu,
      Yesu svaami, poomiyil aalumaen,
      lokamengam neethiyin sengaோlai ochchi
      jothiyaakap paalanam pannnumaena
  • Poerritu Aanmamae போற்றிடு ஆன்மமே

    1. போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை,
      ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு சுகமானோரை
      கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
      மாண்பாய் சபையாரெல்லோரும்
    2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை,
      ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை.
      ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்,
      யாவும் அவர் அருள் ஈவாம்
    3. போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை,
      தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை.
      பேரன்பராம் பராபரன் தயவை,
      சிந்திப்பாய் இப்போதெப்போதும்.
    4. போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்,
      ஏற்றிடும் கர்த்தரை ஜீவராசிகள் யாவும்.
      சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே,
      வணங்கி மகிழ்வாய் ஆமென்.

    Poerritu Aanmamae, Sishti Karththaavaam Lyrics in English

    1. pottidu aanmamae, sishti karththaavaam vallorai,
      aettidu unakku iratchippu sukamaanorai
      koodiduvom paadiduvom paranai
      maannpaay sapaiyaarellorum
    2. pottidu yaavaiyum njaanamaay aalum piraanai,
      aattalaayk kaappaarae tham settaை maraivil nammai.
      eenthiduvaar eenndu naam vaenndum ellaam,
      yaavum avar arul eevaam
    3. pottidu kaaththunai aaseervathikkum piraanai,
      thaettiyae thayavaal nirappuvaar un vaannaalai.
      paeranparaam paraaparan thayavai,
      sinthippaay ippotheppothum.
    4. pottidu aanmamae, en mulu ullamae neeyum,
      aettidum karththarai jeevaraasikal yaavum.
      sapaiyaarae, sernthentum solluveerae,
      vanangi makilvaay aamen.
  • Poerrith Thuthippoem Em Thaeva போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

    1. போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
      புனித இதயமுடனே
      நேற்றும் இன்றும் என்றும் மாறா
      இயேசுவை நாமென்றும் பாடித்துதிப்போம்

    இயேசு என்னும் நாமமே – என்
    ஆத்துமாவின் கீதமே – என் நேசரேசுவை
    நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

    1. கோர பயங்கரமான புயலில்
      கொடிய அலையின் மத்தியில்
      காக்குங் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
      அன்பை என்றும் பாடுவேன்
    2. யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
      சோர்ந்தமிழ்ந்து மாளாதே
      ஆர்க்கும் ஜெயதொனியோடே
      பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
    3. தாய் தன் பாலகனையே மறப்பினும்
      நான் மறவேன் என்று சொன்னதால்
      தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
      ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
    4. பூமியகிலமும் சாட்சியாகவே
      போங்களென்ற கட்டளையதால்
      ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
      தந்து தொண்டு செய்குவேன

    Poerrith Thuthippoem Em Thaeva Lyrics in English

    1. pottith thuthippom em thaeva thaevanai
      punitha ithayamudanae
      naettum intum entum maaraa
      Yesuvai naamentum paatiththuthippom

    Yesu ennum naamamae – en
    aaththumaavin geethamae – en naesaraesuvai
    naan entum aetti makilnthiduvaen

    1. kora payangaramaana puyalil
      kotiya alaiyin maththiyil
      kaakkung karangaொnndu maarpil serththannaiththa
      anpai entum paaduvaen
    2. yorthaan nathi ponta sothanaiyilum
      sornthamilnthu maalaathae
      aarkkum jeyathoniyotae
      paathukaaththa anpai entum paaduvaen
    3. thaay than paalakanaiyae marappinum
      naan maravaen entu sonnathaal
      thaalththi ennaiyavar kaiyil thanthu
      jeeva paathai entum oduvaen
    4. poomiyakilamum saatchiyaakavae
      pongalenta kattalaiyathaal
      aavi aaththumaavum thaekam yaavumintu
      thanthu thonndu seykuvaena
  • Poeraatum En Negnsamae போராடும் என் நெஞ்சமே

    போராடும் என் நெஞ்சமே
    புகலிடம் மறந்தாயோ
    பாராளும் இயேசு உண்டு
    பதறாதே மனமே

    1. அலைகடல் நடுவினிலே
      அமிழ்ந்து போகின்றாயோ
      கரம் நீட்டும் இயேசுவைப் பார்
      கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ… ஆனந்தம் பேரானந்தம்
      என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும்
    2. கடந்ததை நினைத்து தினம்
      கண்ணீர் வடிக்கின்றாயோ
      நடந்ததெல்லாம் நன்மைக்கே
      நன்றி நன்றி சொல்லு ஆ…ஆனந்தம் பேரானந்தம்
      என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும்
    3. வருங்கால பயங்களெல்லாம்
      வாட்டுதோ அனுதினமும்
      அருள்நாதர் இயேசுவிடம்
      அனைத்தையும் கொடுத்துவிடு ஆ… ஆனந்தம் பேரானந்தம்
      என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும்
    4. நண்பன் கைவிட்டானோ
      நம்பினோர் எதிர்த்தனரோ
      கைவிடா நம் தேவனின்
      கரம் பற்றி நடத்திடு ஆ… ஆனந்தம் பேரானந்தம்
      என் அருள்நாதர் சமூகத்திலே (2) – போராடும்

    Poeraatum En Negnsamae Lyrics in English
    poraadum en nenjamae
    pukalidam maranthaayo
    paaraalum Yesu unndu
    patharaathae manamae

    1. alaikadal naduvinilae
      amilnthu pokintayo
      karam neettum Yesuvaip paar
      karai serkkum thunnai avarae.. aa… aanantham paeraanantham
      en arulnaathar samookaththilae (2) – poraadum
    2. kadanthathai ninaiththu thinam
      kannnneer vatikkintayo
      nadanthathellaam nanmaikkae
      nanti nanti sollu aa…aanantham paeraanantham
      en arulnaathar samookaththilae (2) – poraadum
    3. varungaala payangalellaam
      vaattutho anuthinamum
      arulnaathar Yesuvidam
      anaiththaiyum koduththuvidu aa… aanantham paeraanantham
      en arulnaathar samookaththilae (2) – poraadum
    4. nannpan kaivittano
      nampinor ethirththanaro
      kaividaa nam thaevanin
      karam patti nadaththidu aa… aanantham paeraanantham
      en arulnaathar samookaththilae (2) – poraadum