Author: admin

  • Pinmari Munmari Ootrume பின்மாரி முன்மாரி ஊற்றுமே

    பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவா
    அருள்மாரி இந்நேரம் தாருமே தேவா
    ஊற்றிடும் தேவா ஊற்றிடும்
    எங்கள் மீது இப்போதே ஊற்றிடுமே

    இரட்சிப்பின் ஊற்றுகள் சுரக்கட்டும்
    அபிஷேகத்தின் ஆறுதல் ஓடட்டுமே
    குருவிகள் பாடிடும் காலமல்லவா
    காட்டுப்புறா சத்தமும் கேட்குதல்லவா

    கல்லான உள்ளங்கள் உருகட்டுமே
    கற்பாறைகள் ஆட்டைப்போல் துள்ளட்டுமே
    தேசத்தில் எழுப்புதல் தாரும் இயேசுவே
    அற்புதங்கள் அடையாளங்கள்
    செய்யும் இயேசுவே

    வருகைக்காய் தேசத்தை சீர்ப்படுத்திட
    தேசமதில் நேசரை சந்தித்திட
    ஆயத்தமாக்கிடும் எந்தன் இயேசுவே
    பரலோகத்தின் மகிமையை வீசச் செய்யுமே


    Pinmari munmari ootrume Lyrics in English
    pinmaari munmaari oottumae thaevaa
    arulmaari innaeram thaarumae thaevaa
    oottidum thaevaa oottidum
    engal meethu ippothae oottidumae

    iratchippin oottukal surakkattum
    apishaekaththin aaruthal odattumae
    kuruvikal paadidum kaalamallavaa
    kaattuppuraa saththamum kaetkuthallavaa

    kallaana ullangal urukattumae
    karpaaraikal aattaைppol thullattumae
    thaesaththil elupputhal thaarum Yesuvae
    arputhangal ataiyaalangal
    seyyum Yesuvae

    varukaikkaay thaesaththai seerppaduththida
    thaesamathil naesarai santhiththida
    aayaththamaakkidum enthan Yesuvae
    paralokaththin makimaiyai veesach seyyumae

  • Pinmaari Peyyattum பின்மாரி பெய்யட்டும்

    பரிசுத்தமே வல்லமை

    பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்
    பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே
    கல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிட
    பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே

    1. ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின்
      அற்புத சக்திகளை இயேசுவே
      பாவிகளாயினும் நாங்களும் கண்டிட
      ஊற்றியருளணுமே இயேசுவே
    2. உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றி
      சுட்டெரித்தாகணுமே இயேசுவே
      ஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன்
      மேசியா நீர் வாருமே .. இயேசுவே
    3. எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில்
      எந்தன் நிலை பாருமே .. இயேசுவே
      எத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள்
      எந்தன் நிலை மாற்றுமே .. இயேசுவே
    4. தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிட
      ஊக்கம் அருளணுமே .. இயேசுவே
      மரணபரியந்தம் உண்மையாய் விளங்க
      இயேசு என்னில் வாருமே .. இயேசுவே

    Pinmaari Peyyattum Lyrics in English
    parisuththamae vallamai

    pinmaari peyyattum pinmaari peyyattum
    pinmaari peyyattumae Yesuvae
    kalvaari anpinai ellorum kanntida
    pinmaari peyyattumae Yesuvae

    1. aathinaatkal thottu aaviyaanavarin
      arputha sakthikalai Yesuvae
      paavikalaayinum naangalum kanntida
      oottiyarulanumae Yesuvae
    2. ullam udal porul pangam pathar inti
      sutteriththaakanumae Yesuvae
      aesaayaa naavinaith thottath thalaludan
      maesiyaa neer vaarumae .. Yesuvae
    3. ennnatta thaevaikal enaichchaூla nirkaiyil
      enthan nilai paarumae .. Yesuvae
      eththanai veelchchikal eththanai tholvikal
      enthan nilai maattumae .. Yesuvae
    4. thaesam engum thaeva seythi mulangida
      ookkam arulanumae .. Yesuvae
      maranapariyantham unnmaiyaay vilanga
      Yesu ennil vaarumae .. Yesuvae
  • Pillai Naan பிள்ளை நான்

    பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
    பாவி அல்ல பாவி அல்ல
    பாவம் செய்வது இல்ல (2)

    1. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
      பிள்ளை ஆனேன் பிதாவுக்கு (2)
      தரித்து கொண்டேன் ஏசுவை – நான் (2)
      அவருக்குள் வாழ்கின்டேன் (2)

    அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே (2) -பிள்ளை நான்

    1. ஒரே ஒரு தரம் இயேசு அன்று
      சிலுவையில் பலியானதால் (2)
      பரிசுத்தமாக்கப்பட்டேன் (2)
      இறை மகனாகி(மகளாகி) விட்டேன் (2) -அல்லேலூயா
    2. உலகமே அன்று தோன்றும் முன்னால்
      முன்குறித்தீரே என்னை (2)
      குற்றமற்ற மகனாக(மகளாக)(2)
      தூய வாழ்வு வாழ (2) -அல்லேலூயா
    3. புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
      கல்வாரி சிலுவையினால் (2)
      திரைசீலை கிழிந்தது அன்று (2)
      நுழைந்தோம் உம் சமூகம் (2) -அல்லேலூயா

    Pillai Naan Lyrics in English

    pillai naan thaeva pillai naan
    paavi alla paavi alla
    paavam seyvathu illa (2)

    1. kiristhuvai pattum visuvaasaththaal
      pillai aanaen pithaavukku (2)
      thariththu konntaen aesuvai – naan (2)
      avarukkul vaalkintaen (2)

    allaelooyaa aananthamae allaelooyaa paerinpamae (2) -pillai naan

    1. orae oru tharam Yesu antu
      siluvaiyil paliyaanathaal (2)
      parisuththamaakkappattaen (2)
      irai makanaaki(makalaaki) vittaen (2) -allaelooyaa
    2. ulakamae antu thontum munnaal
      munkuriththeerae ennai (2)
      kuttamatta makanaaka(makalaaka)(2)
      thooya vaalvu vaala (2) -allaelooyaa
    3. puthiyathor valiyai thiranthu vaiththeer
      kalvaari siluvaiyinaal (2)
      thiraiseelai kilinthathu antu (2)
      nulainthom um samookam (2) -allaelooyaa
  • Pilaunda Maalaiye Pugalidam Yeeyume பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

    1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
      பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
      பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.
    2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
      கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
      பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.
    3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
      உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
      தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.
    4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
      கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
      பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.

    Pilaunda Maalaiye Pugalidam Yeeyume Lyrics in English

    1. pilavunnda malaiyae pukalidam eeyumae;
      pakkam patta kaayamum paayntha senneer vellamum
      paavathosham yaavaiyum neekkumpati arulum.
    2. enthak kiriyai seythumae unthan neethi kittathae;
      kannnneer niththam sorinthum kashda thavam purinthum
      paavam neenga maattathae neerae meetpar Yesuvae.
    3. yaathumatta aelai naan , naathiyatta neesan thaan;
      um siluvai thanjamae , unthan neethi aataiyae
      thooya oottaை anntinaen thooymaiyaakkael maaluvaen.
    4. nilal ponta vaalvilae kannnnai moodum saavilae
      kannnukketta lokaththil , naduththeervai thinaththil
      pilavunnda malaiyae , pukalidam eeyumae.
  • Pidhaavae Nandri Solgiroam பிதாவே நன்றி சொல்கிறோம்

    பிதாவே நன்றி சொல்கிறோம்
    இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)
    தூய ஆவியே எங்கள் தெய்வமே
    நன்றி சொல்கிறோம்
    துதி ஆராதனை செய்கிறோம் -2

    1. தேவன் அருளிய சொல்லி முடியா
      ஈவுக்கு ஸ்தோத்திரம்
      நீர் செய்த எல்லா நன்மைக்கும்
      ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
      எண்ணி முடியா அதிசயங்கள்
      செய்தவரே ஸ்தோத்திரமே
    2. நேசரே என் மேலே என்றும்
      பிரியம் வைத்தீரே
      அகலம் ஆழம் எந்த அளவுமில்லா
      அன்பு காட்டினீரே
      இரக்கத்திலும் கிருபையிலும்
      அனுதினமும் முடிசூட்டினீரே
    3. கடந்த நாட்கள் கண்மணி
      போல பாதுகாத்தீரே
      சோதனையில் என்னைத் தேற்றியே
      தைரியப்படுத்தினீரே
      தீராத நோய்களெல்லாம்
      தழும்புகளால் சுகப்படுத்தினீரே
    4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
      குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
      செழிப்பாய் என்னை மாற்றினீர்
      மனக்கவலை தீர்த்தீரே
      மகிழ்ச்சியினால் நிரப்பினீரே

    Pidhaavae Nandri Solgiroam Lyrics in English

    Pidhaavae Nandri Solgiroam
    pithaavae nanti solkirom
    Yesuvae nanti solkirom (2)
    thooya aaviyae engal theyvamae
    nanti solkirom
    thuthi aaraathanai seykirom -2

    1. thaevan aruliya solli mutiyaa
      eevukku sthoththiram
      neer seytha ellaa nanmaikkum
      sthoththiram sthoththiramae
      ennnni mutiyaa athisayangal
      seythavarae sthoththiramae
    2. naesarae en maelae entum
      piriyam vaiththeerae
      akalam aalam entha alavumillaa
      anpu kaattineerae
      irakkaththilum kirupaiyilum
      anuthinamum mutisoottineerae
    3. kadantha naatkal kannmanni
      pola paathukaaththeerae
      sothanaiyil ennaith thaettiyae
      thairiyappaduththineerae
      theeraatha Nnoykalellaam
      thalumpukalaal sukappaduththineerae
    4. sakala aaseervaathangalaalae aaseervathiththeerae
      kuraikalellaam niraivaakkineer
      selippaay ennai maattineer
      manakkavalai theerththeerae
      makilchchiyinaal nirappineerae
  • Pidha Kumaran Parisutha Aavi பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்

    பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
    திரித்துவ தேவனை துதித்திடுவோம்

    1. பாவத்தின் கோர பலியான
      சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
      பாவிகளுக்காய் ஜீவன் தந்த
      தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்
    2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
      சேரக்கூடாத ஒளிதனில்
      மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
      பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்
    3. வல்லமையோடு வந்திறங்கி
      வரங்கள் பலவும் நமக்கின்று
      ஆவியின் வழியை தினம் காட்டும்
      பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

    Pidha Kumaran Parisutha Aavi Lyrics in English

    pithaa kumaaran parisuththa aaviyaanavaraam
    thiriththuva thaevanai thuthiththiduvom

    1. paavaththin kora paliyaana
      saapangal thannil aettukkonndu
      paavikalukkaay jeevan thantha
      thaeva kumaaranai sthoththarippom
    2. niththiyaththin makimai pirakaasaththil
      serakkoodaatha olithanil
      moontil ontay joliththidum
      paramapithaavai sthoththarippom
    3. vallamaiyodu vanthirangi
      varangal palavum namakkintu
      aaviyin valiyai thinam kaattum
      parisuththa aaviyai sthoththarippom
  • Pidave Aaradhikindrom Yesuve பிதாவே ஆராதிக்கின்றோம்

    பிதாவே ஆராதிக்கின்றோம்
    இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
    ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

    ஆராதிக்கின்றோம்
    ஆர்ப்பரிக்கின்றோம்
    அன்பு செய்கின்றோம் – உம்மை

    1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்
      மறுபடி பிறக்க வைத்தீர்
      ராஜாக்களும் நாங்களே
      ஆசாரியர்களும் நாங்களே
    2. சகலமும் படைத்தவரே
      சர்வ வல்லவரே
      மகிமைக்கு பாத்திரரே
      மங்காத பிரகாசமே
    3. ஸ்தோத்திரமும் கனமும்
      வல்லமையும் பெலனும்
      மாட்சிமையும் துதியும்
      எப்போதும் உண்டாகட்டும்
    4. பரிசுத்தர் பரிசுத்தரே
      பரலோக ராஜாவே
      எப்போதும் இருப்பவரே
      இனிமேலும் வருபவரே
    5. உமது செயல்களெல்லாம்
      அதிசயமானவைகள்
      உமது வழிகளெல்லாம்
      சத்தியமானவைகள்

    Pidave Aaradhikindrom Yesuve Lyrics in English

    pithaavae aaraathikkintom
    Yesuvae aarpparikkintom
    aaviyaanavarae anpu seykintom

    aaraathikkintom
    aarpparikkintom
    anpu seykintom – ummai

    1. makanaaka (makalaaka) therinthu konnteer
      marupati pirakka vaiththeer
      raajaakkalum naangalae
      aasaariyarkalum naangalae
    2. sakalamum pataiththavarae
      sarva vallavarae
      makimaikku paaththirarae
      mangaatha pirakaasamae
    3. sthoththiramum kanamum
      vallamaiyum pelanum
      maatchimaiyum thuthiyum
      eppothum unndaakattum
    4. parisuththar parisuththarae
      paraloka raajaavae
      eppothum iruppavarae
      inimaelum varupavarae
    5. umathu seyalkalellaam
      athisayamaanavaikal
      umathu valikalellaam
      saththiyamaanavaikal
  • Phottri Thudhipom En போற்றி துதிப்போம் என்

    போற்றி துதிப்போம் என் தேவ தேவனே
    புதிய கிருபையுடனே
    நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
    நான் என்றும் பாடித்துதிப்பேன்

    இயேசு என்னும் நாமமே
    என் ஆத்துமாவின் கீதமே
    என் நேசர் இயேசுவை நான்
    என்றும் பாடி மகிழ்ந்திடுவேன்

    கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
    கனிவுடன் நம்மை அரவணைத்தே
    நம் கால்களை கன்மலையில் மேல்
    நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்


    Phottri Thudhipom Em Dheva Dhevanae
    Pudhiya Kirubaiyudanae
    Naettrum indrum Endrum maaraa yesuvai
    Nam Endrum Paadi Thudhipom

    Yesu Ennum namamae
    En Aathumavin Geethamae
    En naesar Yesuvai naan endrum
    Yetri magizhindhduvaen

    Kadandhitta natkalil Avar Karangal
    Kanivudan Nammai Aravanaithae
    Nam Kalgalai Kanmalayin mael
    Niruthiyae nidham nammai vazhinadathum

  • Petror Unnai Maranthalum பெற்றோர் உன்னை மறந்தாலும்

    பெற்றோர் உன்னை மறந்தாலும்

    பெற்றோர் உன்னை மறந்தாலும்
    உற்றார் உன்னை துறந்தாலும்
    தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்
    இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்

    1. குற்றம் பல புரிந்தாலும்
      நீ சற்றும் தயங்காமலே
      இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை
      நேசமாய் மன்னித்தருள்வார்
    2. காசு ஒன்றும் கேட்பதில்லை
      இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு
      நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே
      தஞ்சம் என காத்துக்கொள்வார்

    Petror Unnai Maranthalum Lyrics in English
    pettaோr unnai maranthaalum

    pettaோr unnai maranthaalum
    uttaாr unnai thuranthaalum
    thaesamae unnaip pakaiththuth thallinaalum
    Yesu unnai aettukkolvaar

    1. kuttam pala purinthaalum
      nee sattum thayangaamalae
      Yesuvidam vanthuvittalunnai
      naesamaay manniththarulvaar
    2. kaasu ontum kaetpathillai
      intha Yesu unnai meetpatharkku
      nenjam mattum thanthuvittal naanae
      thanjam ena kaaththukkolvaar
  • Pesum Deivam Neer பேசும் தெய்வம் நீர்

    பேசும் தெய்வம் நீர்
    பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

    1.என்னைப் படைத்தவர் நீர்
    என்னை வளர்த்தவர் நீர்
    என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
    என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

    2.என் பாரம் சுமப்பவர் நீர்
    என் தாகம் தீர்ப்பவர் நீர்
    என்னைப் போஷித்து என்னை உடுத்தி
    என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

    3.என் குடும்ப வைத்தியர் நீர்
    ஏற்ற நல ஔஷதம் நீர்
    எந்தன் வியாதி பெலவீனங்களில்
    என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

    4.என்னை அழைத்தவர் நீர்
    என்றும் நடத்திடுவீர்
    என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து
    என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

    5.எனக்காய் வருபவர் நீர்
    என் கண்ணீர் துடைப்பவர் நீர்
    எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்


    Pesum Deivam Neer Lyrics in English
    paesum theyvam neer
    paesaatha kallo maramo neer alla

    1.ennaip pataiththavar neer
    ennai valarththavar neer
    en paavam neekki ennaik kunamaakki
    ennotiruppavar neer – Yesuvae (4) – paesum

    2.en paaram sumappavar neer
    en thaakam theerppavar neer
    ennaip poshiththu ennai uduththi
    ennotiruppavar neer – Yesuvae (4) – paesum

    3.en kudumpa vaiththiyar neer
    aetta nala oushatham neer
    enthan viyaathi pelaveenangalil
    ennotiruppavar neer – Yesuvae (4) – paesum

    4.ennai alaiththavar neer
    entum nadaththiduveer
    enmael kannvaiththu aalosanai thanthu
    ennotiruppavar neer – Yesuvae (4) – paesum

    5.enakkaay varupavar neer
    en kannnneer thutaippavar neer
    ellaam mutiththu seeyonil serththuennotiruppavar neer – Yesuvae (4) – paesum