Author: admin

  • Pasca Unavai Arunthida பாஸ்கா உணவினை அருந்திட

    பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து

    பந்தியிலே அமர்ந்திருந்தார்

    தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி

    சீடரிடம் எழுந்து வந்தார்

    குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு

    கழுவியே துடைத்து விட்டார் பணி வாழ்வின் பெருமை சொன்னார்

    சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட

    இயேசு வந்த நேரத்திலே

    இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது

    உரிமையில் கடிந்து கொண்டார்

    என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா

    ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும் சம்மதியேன்

    நான் செய்வது இன்னதென்று இப்போது புரியாது

    பின்னரே புரிந்து கொள்வாய்

    உன் பாதம் கழுவிட அனுமதியாவிடில்

    என்னோடு பங்கில்லை

    ஆண்டவரே போதகரே என் கால்களை மட்டுமல்ல

    என் கைகளை தலையையுமே முழுவதும் கழுவி விடும்

    முழுவதும் குளித்தவன் கால் மட்டும் கழுவினால்

    போதுமென்று அறியாயோ ?

    நான் செய்வதன் அர்த்தம் என்னவென்று உமக்கு

    இந்நேரம் புரியாதோ ?

    நான் ஆண்டவர் போதகர் தான் முன் மாதிரி காட்டுகிறேன்

    நீங்கள் ஒருவர் ஒருவரது பாதங்களைக் கழுவுங்கள்

    இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் இருத்தி

    நாமும் வாழ்ந்திடுவோம்

    பிறர் பணி செய்து வாழ்வதே நம் வாழ்வின் கடமை

    சீடரின் தகுதியென்போம் (2) – 3


    Pasca Unavai Arunthida Lyrics in English
    paaskaa unavinai arunthida seedarodu Yesu vanthu

    panthiyilae amarnthirunthaar

    tham maelaatai kalainthu iduppinil thunntaik katti

    seedaridam elunthu vanthaar

    kuvalaiyil thannnneer monndu seedarkalin paatham thottu

    kaluviyae thutaiththu vittar panni vaalvin perumai sonnaar

    seemon iraayapparai naati vanthu paathangalaik kaluvida

    Yesu vantha naeraththilae

    iraayapparo paathangalai Yesuvidam kaattathu

    urimaiyil katinthu konndaar

    ennutaiya paathangalai en aanndavar kaluvuvathaa

    orupothum anumathiyaen oru kaalum sammathiyaen

    naan seyvathu innathentu ippothu puriyaathu

    pinnarae purinthu kolvaay

    un paatham kaluvida anumathiyaavitil

    ennodu pangillai

    aanndavarae pothakarae en kaalkalai mattumalla

    en kaikalai thalaiyaiyumae muluvathum kaluvi vidum

    muluvathum kuliththavan kaal mattum kaluvinaal

    pothumentu ariyaayo ?

    naan seyvathan arththam ennaventu umakku

    innaeram puriyaatho ?

    naan aanndavar pothakar thaan mun maathiri kaattukiraen

    neengal oruvar oruvarathu paathangalaik kaluvungal

    Yesu sonna vaarththaikalai manathil iruththi

    naamum vaalnthiduvom

    pirar panni seythu vaalvathae nam vaalvin kadamai

    seedarin thakuthiyenpom (2) – 3

  • Parolaga Devane Parakkiramam பரலோக தேவனே

    பரலோக தேவனே
    பராக்கிரமம் உள்ளவரே (2)
    (இந்த) அகிலத்தை ஆள்பவரே
    உம்மால் ஆகாதது எதுவுமில்லை

    1. எல்ஷடாய் எல்ஷடாய்
      சர்வ வல்ல தெய்வமே (2)

    உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
    வணங்குகிறோம் – உம்மை

    1. யெஹோவா நிசியே
      வெற்றி தந்த தெய்வமே (2)
    2. யெஹோவா ராஃப்ஃபா
      சுகம் தந்த தெய்வமே (2)
    3. எல்ரோயீ எல்ரோயீ
      என்னை கண்ட தெய்வமே (2)

    Parolaga Devane Parakkiramam Lyrics in English

    paraloka thaevanae
    paraakkiramam ullavarae (2)
    (intha) akilaththai aalpavarae
    ummaal aakaathathu ethuvumillai

    1. elshadaay elshadaay
      sarva valla theyvamae (2)

    uyarththukirom vaalththukirom
    vanangukirom – ummai

    1. yehovaa nisiyae
      vetti thantha theyvamae (2)
    2. yehovaa raaqpqpaa
      sukam thantha theyvamae (2)
    3. elroyee elroyee
      ennai kannda theyvamae (2)
  • Parithi Thoongida Paathiraa Naeraththil பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

    பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்
    பாரிடை பிறந்தவரே…
    பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்
    தரணியில் பிறந்தவரே… (2)

    1. மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்
      வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)
      தேவ குமாரா தாவீதின் மைந்தா
      தாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே
      – பரிதி
    2. கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்
      பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)
      மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்
      மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே
      – பரிதி

    Parithi Thoongida Paathiraa Naeraththil Lyrics in English
    parithi thoo…ngida paathiraa nae…raththil
    paaritai piranthavarae…
    paavangal po…kkavum saapangal nee…kkavum
    tharanniyil piranthavarae… (2)

    1. mayilkal aa…dattum kuyilkal paa…dattum
      vaanavar vaayaara vaalth…thidattum… (2)
      thaeva kumaaraa thaaveethin mainthaa
      thaalmaiyin thiru…vuruvae – thiyaakaththin thiruvativae
      – parithi
    2. kanikal kani…yattum malarkal mala…rattum
      paraman nin perumai pukalnthi…dattum (2)
      maattukkottilil maaperum thaevan
      maanidan aa…naarae – maantharai meettidavae
      – parithi
  • Parisuththarae Engal Yesu Thaevaa பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

    பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
    நானிலத்தில் நீ என்றும் ராஜா
    உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
    உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை

    அல்லேலூயா (4)

    உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
    உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

    1. நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் – ஐயா
      எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
      புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
      ராஜாக்களோடு அமர்த்தினீரே

    உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
    உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

    அல்லேலூயா (4)

    உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
    உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

    1. ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
      அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
      அறியாத ஜாதியை வரவழைத்தீர்
      நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்

    உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
    உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

    அல்லேலூயா (4)

    1. வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்
      எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
      நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
      என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே

    உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
    உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

    அல்லேலூயா (4)


    Parisuththarae Engal Yesu Thaevaa Lyrics in English
    parisuththarae engal Yesu thaevaa
    naanilaththil nee entum raajaa
    ummaip paaduvathaal ennil tholviyillai
    ummaith thuthippathinaal ennil kuraivaeyillai

    allaelooyaa (4)

    ummai uyarththuvathae engal Nnokkamaiyaa
    ummai paaduvathae engal maenmaiyaiyaa

    1. naan konnda thittangal sirithaayinum – aiyaa
      enakkaay um thittangal perithallavo
      puluthiyilirunthennai uyarththineerae
      raajaakkalodu amarththineerae

    unthan kirupaikalai ennnni naan paaduvaen
    unthan makimaithanai thinam naan rusippaen

    allaelooyaa (4)

    ummai uyarththuvathae engal Nnokkamaiyaa
    ummai paaduvathae engal maenmaiyaiyaa

    1. ooliya ellaikal perithaakkineer
      athil iraajaakkal uthikkavum uthaviseytheer
      ariyaatha jaathiyai varavalaiththeer
      neer thantha vaakkinai niraivaettineer

    unthan kirupaikalai ennnni naan paaduvaen
    unthan makimaithanai thinam naan rusippaen

    allaelooyaa (4)

    1. varuththangal pasithaakam aerppattalum
      engal visuvaasa kaedakam veelnthidaathae
      nampinor nattaththil kaivittalum
      ennai kaappatta neer unndu payamillaiyae

    unthan kirupaikalai ennnni naan paaduvaen
    unthan makimaithanai thinam naan rusippaen

    allaelooyaa (4)

  • Parisuththar Kuuttam Natuvil பரிசுத்தர் கூட்டம் நடுவில்

    பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    ஜொலித்திடும் சுத்த ஜோதியே
    அரூபியே இவ்வேளையில்
    அடியார் நெஞ்சம் வாரீரோ

    1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
      கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
      பொல்லாதோர் கூட செய்திடார்
      நற்பிதா நலம் அருள்வார்
    2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
      விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
      பாவி நீச பாவி நானையா
      தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
    3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
      யாரும் காணா உள் அலங்கோலத்தை
      மனம் நொந்து மருளுகின்றேன்
      பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
    4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
      என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
      என் ஜீவன் எல்லையெங்கிலும்
      பரிசுத்தம் என எழுதும்

    Parisuththar Kuuttam Natuvil Lyrics in English
    parisuththar koottam naduvil
    joliththidum suththa jothiyae
    aroopiyae ivvaelaiyil
    atiyaar nenjam vaareero

    1. meen kaettal paampai arulvaar unntoo?
      kal thinnak kodukkum pettaோr unntoo?
      pollaathor kooda seythidaar
      narpithaa nalam arulvaar
    2. suththam virumpum suththa jothiyae
      virumpaa asuththam yaavum pokkumae
      paavi neesa paavi naanaiyaa
      thaevaa irakkam seyyamaattiro
    3. paarum thanthaiyae enthan ullaththai
      yaarum kaannaa ul alangaோlaththai
      manam nonthu marulukinten
      parisuththam kenjukinten
    4. thunnai vaenndum thakappanae ulakilae
      ennai ethirkkum sakthikal pala unntae
      en jeevan ellaiyengilum
      parisuththam ena eluthum
  • Parisuththam Pera Vanthitdeergalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

    பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
    ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்?
    பாவதோஷம் நீங்க நம்பினீர்களா
    ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

    மாசில்லா- சுத்தமா
    திருபுண்ணிய தீர்த்தத்தினால்?
    குற்றம் நீங்கிவிடக் குணம் மாறிற்றா
    ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

    1. பரலோக சிந்தை அணிந்தீர்களா
      வல்லமீட்பர் தயாளத்தினால்?
      மறுஜென்ம குணமடைந்தீர்களா
      ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
    2. மணவாளன் வரக் களிப்பீர்களா
      தூய நதியின் ஸ்நானத்தினால்
      மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா
      ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
    3. மாசு கறை நீங்கும், நீசப்பாவியே!
      சுத்த ரத்தத்தின் சக்தியினால்.
      முக்தி பேறுண்டாகும்,
      குற்றவாளியே!
      ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்

    Parisuththam Pera Vanthitdeergalaa Lyrics in English
    parisuththam pera vanthittirkalaa
    oppillaath thiru snaanaththinaal?
    paavathosham neenga nampineerkalaa
    aattukkuttiyin raththaththinaal?

    maasillaa- suththamaa
    thirupunnnniya theerththaththinaal?
    kuttam neengividak kunam maarittaா
    aattukkuttiyin raththaththinaal?

    1. paraloka sinthai annintheerkalaa
      vallameetpar thayaalaththinaal?
      marujenma kunamataintheerkalaa
      aattukkuttiyin raththaththinaal?
    2. manavaalan varak kalippeerkalaa
      thooya nathiyin snaanaththinaal
      motcha karai aerich sukippeerkalaa
      aattukkuttiyin raththaththinaal?
    3. maasu karai neengum, neesappaaviyae!
      suththa raththaththin sakthiyinaal.
      mukthi paerunndaakum,
      kuttavaaliyae!
      aattukkuttiyin raththaththinaal
  • Parisuththa Poomiyil Naam Nirkirom பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம்

    பரிசுத்த பூமியில் நாம் நிற்கிறோம்
    பரத்தின் தூதர் படை சூழக்காண்கிறோம்
    துதிப்போம் நம் இயேசுவை
    பரிசுத்தரின் பிரசன்னத்தில் (2)
    நாம் நிற்கிறோம்

    We are standing on holy ground
    And I know that there
    Are angels all around
    Let us praise Jesus now
    We are standing in His presence (2)
    On holy ground


    Parisuththa Poomiyil Naam Nirkirom Lyrics in English
    parisuththa poomiyil naam nirkirom
    paraththin thoothar patai soolakkaannkirom
    thuthippom nam Yesuvai
    parisuththarin pirasannaththil (2)
    naam nirkirom

    We are standing on holy ground
    And I know that there
    Are angels all around
    Let us praise Jesus now
    We are standing in His presence (2)
    On holy ground

  • Parisuththa Akkini Anuppum பரிசுத்த அக்கினி அனுப்பும்

    பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்
    ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா

    1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டுஉருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும்
    2. கன்னிகை விருத்தர் வாலிபரும்உன்னத ஆவியால் நிரம்பிடவும்
    3. பாவிகள் யாவரும் மனந்திரும்பபரலோக அக்கினி நாவருளும்
    4. தேசமெங்கும் திவ்விய அக்கினியால்தீவினை யாவையும் சுட்டெரிக்க
    5. இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்துஆவியில் யாவரும் வளர்ந்திடவே

    Parisuththa Akkini Anuppum Lyrics in English
    parisuththa akkini anuppum thaevaa urukkamaay
    joovaalikkak koluththum thaevaa

    1. irakkamaay akkinith thalalaik konnduurukkamaay ullaththaith thottarulum
    2. kannikai viruththar vaaliparumunnatha aaviyaal nirampidavum
    3. paavikal yaavarum mananthirumpaparaloka akkini naavarulum
    4. thaesamengum thivviya akkiniyaaltheevinai yaavaiyum sutterikka
    5. Yesuvin paeranpai nankunarnthuaaviyil yaavarum valarnthidavae
  • Parisuththa Aavi பரிசுத்த ஆவி

    பரிசுத்த ஆவி
    எனில் வாருமே
    உம் கரத்தாலே
    எனைத் தாங்குமே
    உம் புயத்தாலே
    எனை நடத்துமே

    முத்தோழிலோனே
    மூன்றில் ஒன்றோனே
    முன்னவனே
    முகம் பார்த்து கிருபை
    செய்யா மன்னவனே
    ஆதியும் அந்தமும் நீரே
    அரவணைத்ததும் நீரே


    Parisuththa Aavi Lyrics in English
    parisuththa aavi
    enil vaarumae
    um karaththaalae
    enaith thaangumae
    um puyaththaalae
    enai nadaththumae

    muththolilonae
    moontil ontonae
    munnavanae
    mukam paarththu kirupai
    seyyaa mannavanae
    aathiyum anthamum neerae
    aravannaiththathum neerae

  • Parisuthare Engal Deivame பரிசுத்தரே எங்கள் தெய்வமே

    பரிசுத்தரே எங்கள் தெய்வமே
    உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை -2

    நீரே என் தேவன் நீரே என் ராஜன்
    உம்மை போல யாருமில்லை
    உம்மை உயர்த்திடுவேன் -2

    எங்கள் மத்தியில் அசைவாடிடும்
    பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் – 2

    எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
    என் பாவம் சுமந்திரே என் இயேசுவே

    குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
    உம்மை போலவே மாற்றிடுமே


    Parisuthare Engal Deivame Lyrics in English

    parisuththarae engal theyvamae
    uyarththukirom unthan naamaththai -2

    neerae en thaevan neerae en raajan
    ummai pola yaarumillai
    ummai uyarththiduvaen -2

    engal maththiyil asaivaadidum
    parisuththa naamaththai uyarththukirom – 2

    engalukkaakavae siluvaiyil mariththeerae
    en paavam sumanthirae en Yesuvae

    kuyavanae um kaiyil ennaiyae tharukinten
    ummai polavae maattidumae