Author: admin

  • கல்லற கல்லு புரண்டிச்சு Kallara kallu purandichu

    கல்லற கல்லு புரண்டிச்சு
    கல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சு
    கட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சு
    கர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு

    மகிழ்வோம் மானிடரே
    மலர்ந்தது இன்று பரலோகம்
    மறுபடி பிறந்தவர்க்கே
    மனம் இன்னும் மாறலையோ ?
    மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ?
    மழலை போல் நாமும் மாறிடுவோம்!
    மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்!

    மரணம் அவர் முன் தோத்திச்சு
    மன்னனின் காவலும் அழிஞ்சிச்சு
    மாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சு
    மன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு

    பாவ மன்னிப்பும் கிடச்சிச்சு
    பரலோகப் பாதை தெரிஞ்சிச்சு
    புதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சு
    பிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு


    Kallara kallu purandichu
    Kalvaari raththam jeichichu
    Kattuk kathaigal olinjichu
    Kartharin magimai therinjichu

    Magizhvom maanidare
    Malarnthathu indru paralogam
    Marupadi piranthavarkea
    Manam innum maaralaiyo
    Magimayin devanukkaai Yeangalayo
    Mazhalai pol naamum maariduvom
    Maaraatha magimaikkul pravaesippom

    Maranam avar mun thoththichu
    Mannanin kaavalum azhinjichu
    Maatraan sathigalum tholanjichu
    Mannaathi mannarin maatchimai engum olirnthidichu

    Paava mannipum kidachichu
    Paraloga paathai therinjichu
    Puthu kattalai ondru piranthichu
    Pirarai nesikkumullamum malarnthichu


  • பாரு பாரு பாரு எங்க Paaru Paaru Enga

    பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராரு
    மரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு

    மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியல
    பாதளம் அவரையும் மேற்க்கொள்ள முடியல
    உயிரோடு எழுந்தாரு மூன்றாவது நாளுல
    உய்ர்த்தெழுந்த இயேசுவோட வல்லமைய பாருல

    சிலுவையில அறஞ்சுட்ட Scene முடிஞ்சதுன்னு நெனச்சியா
    கல்லரைல வெச்சுட்ட கதை Over’nu நெனச்சியா
    நீ போட்ட கணக்குயெல்லாம் தப்பா தானே போச்சையா
    கெர்ச்சிக்கும் சிங்கம் போல உயிரோடு வரார் பாரு


    Paaru Paaru Enga Yudha Raja Singam Vararu
    Maranathai Jeyithavarai Uyirodu Ezhunthu Vararu

    Maranathal Avaraiyum Katti Vekka Mudiyala
    Paadhaalam Avaraium Merkolla Mudiyala
    Uyirodu Ezhuntharu Moondravathu Naalula
    Uyirthezhundha Yesuvoda Vallamaiya Paarula

    Siluvaiyila Arainjutta Scene Mudinchurunu Nenaichiya
    Kallaraila Vechutta Kadha Over’nu Nenachiya
    Nee Potta Kanakku Ellam Thappa Thaane Pochaiya
    Gerchikkum Singam Pola Uyiroda Varaar Paaru


  • என் இயேசு இராஜன் En yesu raajan

    என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்
    அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்
    மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்
    மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார்

    எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்
    எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்

    அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்

    எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்
    எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்

    அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்

    எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்
    எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்

    அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்


    En yesu raajan uyirththezhunthaar
    Avar maranaththayae jeyiththezhunthaar
    Mannathi mannan uyirthezhunthaar
    Mannukagai meetka jeyithezhunthaar

    Enthan pavam saapam pokkivittar
    Enthan bayaththai mutrum neekkivittar

    Hallelujah jeyamae-En yesu rajan

    Enthan vaathai noigal neekki vittar
    Enthan kalakkam kanneer pokkivittar

    Hallelujah jeyamae-En yesu rajan

    Enthan tholviyai jeyamaai maatri vittar
    Enthan kuraivai niraivaai maatri vittar

    Hallelujah jeyamae-En yesu rajan


  • சுத்திகரியும் சுத்திகரியும் Suthikariyum suthikariyum

    சுத்திகரியும் சுத்திகரியும்
    நிலைவரமான ஆவியால் நிரப்பும்

    உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்
    உம் ஆவி என்னை தாங்கிட செய்யும்

    என்னை கழுவும் உம் ஈசோப்பினால்
    அப்பொழுது சுத்தமாவேன்
    என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்
    அப்பொழுது சுத்தமாவேன்

    உள்ளத்தில் உண்மையாய் இருக்க
    நீர் விரும்பிடும் தெய்வமல்லோ
    உம் விருப்பத்தை நிறைவேற்றிட
    என்னை கழுவும் உம் ஈசோப்பினால்

    என் பாவங்கள் ஒன்றையும் பாரா
    பரிசுத்தமான தெய்வமல்லோ
    பாவ மன்னிப்பை நான் பெற்றிட
    என்னை கழுவும் உம் ஈசோப்பினால்


    Suthikariyum suthikariyum
    Nilaivaramaana aaviyal nirappum

    Um ratchanya sandhoshathai thaarum
    Um aavi ennai thaangida seiyum

    Ennai kazhuvum um eesopinaal
    Appozhudhu suthamaaven
    Ennai kazhuvum um thiru rathathaal
    Appozhudhu suthamaaven

    Ullathil unmaiyai irukka
    Neer virumbidum deivamallo
    Um virupathai niraivetrida
    Ennai kazvum um eesopinaal

    En paavangal ondrayum paara
    Parisuthamaana deivamallo
    Paava mannipai naan petrida
    Ennai kazhuvum um eesopinal


  • என் பாவ பரிகாரியே En Paava Parigaariye

    என் பாவ பரிகாரியே
    என் ஜீவ உபகாரியே

    இறை இயேசுவே மறை மாமணியே
    நிறை ஆசீர் அருள்வீரையா
    குறையாவும் போக்கி
    பாவ கறையாவும் நீக்கி
    புது வாழ்வு அளித்தீரையா

    உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயா
    புது ஜீவன் தரும் தேவனே
    மனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்து
    மறுரூபம் ஆக்கும் ஐயா

    எனக்காகவே நீர் மரித்தீரையா
    எனக்காக உயிர்த்தீரையா
    உம் வருகையில் நானும் சரியாக இருக்க
    கிருபையால் மூடும் ஐயா


    En Paava Parigaariye
    En Jeeva Ubagaariye

    Irai Yesuve Marai Maa Maniye
    Nirai Aaseer Arulveeraiyaa
    Kuraiyavum Pokki
    Paava Karaiyaavum Neekki
    Puthu Vaazhvu Aliththeeraiyaa

    Um Iraththathaal Ennai Kazhuvum Ayya
    Pudhu Jeevan Tharum Dhevane
    Manam Mara Cheithu Nal Gunam Yaavum Thanthu
    Maruroobam Aakkum Ayya

    Enakkaagave Neer Maritheeraiyaa Enakkaaga Uyirtheer Ayya
    Um Varugaiyil Naanum Sariyaaga Irukka
    Kirubaiyaal Moodum Ayya


  • உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் Uyirthelunthaar Uyirthelunthaar

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    தாவீதின் மைந்தன்
    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

    நம் பாவம் எல்லாம் நீக்கவே
    ரட்சகர் இயேசு வந்தாரே
    சொன்னபடி மூன்றாம் நாளில்
    மரணத்தை வென்றுயிர்த்தார்

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

    மரணத்தின் கூர் முறிந்தது
    உன் ஜெயம் எங்கே பாதாளமே
    சிலுவையிலே வெற்றி பெற்று
    நம் ராஜன் உயித்தெழுந்தார்

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

    ஜீவன்மும் உயிர்த்தெழுதலும்
    நானேதான் என்று சொன்னனரே
    அவரே நீ விசுவாசத்தால்
    மரித்தாலும் பிழைத்திடுவாய்

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்


    Uyirthelunthaar Uyirthelunthaar
    Thaavithin Mainthan Uyirthelunthaar
    Uyirthelunthaar Uyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar

    Nam Paavam ellam neetkavae
    Ratchakar Yesu Vantharae
    Sonnapadi Moontraam Naalil
    Maranathai Ventruyirthaar

    UyirthelunthaarUyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar

    Maranthain Koor murinthathu
    un jeyam enge paathalame
    siluvaiyilae vettri pettru
    Nam rajan Uyirthelunthaar

    UyirthelunthaarUyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar

    Jeevanmum uyirtheluthalum
    Naanethaan entru sonnanare
    Avarae nee visuvasithaal
    Marithaalum pillaithiduvaai

    Uyirthelunthaar Uyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar


  • மூன்றாம் நாளில் சொன்னது Moondram naalil Sonnathu

    மூன்றாம் நாளில் சொன்னது போலே
    சிலுவை நீங்கி சாவை வென்று
    உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர்
    வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு
    விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார்

    கல்லறை திறந்து காரிருள் மறைந்தது
    கடவுள் மகனே காலத்தை வென்றீர்
    அனைவருக்கும் புது பிறப்பு
    ஆண்டவரின் அருள் அளிப்பு
    அன்பு இரக்கம் நற்பண்பு
    ஈஸ்டர் தரும் இறை செய்தி
    நம்பிக்கை கொண்டு வாழ்பவரே
    இறந்த பின்பும் உயிர் வாழ்வான்
    தேவனின் அன்பை பெற்றுக்கொண்டு
    சாவிலும் உயிர் பெறுவான்

    வானில் பூமியில் ஒளிரும் நிலவில்
    நட்சத்திரங்களின் மகிழ்ச்சியின் நடனம் அங்கே
    பாவத்தை வென்று இயேசு பாவத்தை உயிர்த்தார்
    ஆண்டவரின் பெரும் உயிர்ப்பு
    கடல்கள் மலைகள் எல்லாமே
    மீண்டும் பிறந்தது போன்று
    பாவத்தின் வாழ்வை விட்டு வா
    புது பிறப்பை எடுத்திடுவாய்
    புது வாழ்வை இனி தருவார்


    Moondram naalil Sonnathu polae
    Siluvai Neengi Saavai Ventru
    Uyirthaar Enthan Yesu Naathar
    Vaanagamae Ozhinrthidu Maanulagamae Malaranthidu
    Visuvasathin Devan vithakaraai Vanthaar

    Kallarai Thiranthu Kaarirul Marainthathu
    Kadauvl Maganae Kaalaththai Ventreer
    Anaivarukkum Puthu Pirappu
    Aandavarin Arul Alippu
    Anbu,Irakkam,Narpanbu
    Easter Tharum Irai Seithi
    Nambikai Kondu Vazhpavarae
    Erantha Pinpum Uyir Vaazhvaan
    Devanin Anbai PettruKondu
    Saavilum Uyir Peruvaan

    Vaanil Boomiyil Ozhirum Nilavil
    Natchathirangalin Magilchiyin Nadanam Ange
    Paavaththai Ventru Yesu Uyirthaar
    Andavarin Perum Uyirppu
    Kadalgal Malaigal Ellamae
    Meendum Piranthathu Pontru
    Paavathin Vaazhvai Vittu vaa
    Puthu Pirappai Eduththiduvaai
    Paarulagai Kaakkiravar
    Puthu vaazhvai Ini Tharuvaar


  • தேவசித்தம் செய்வதே Devasitham seivadhe

    தேவசித்தம் செய்வதே
    என்னுடைய வாஞ்சையையா
    வஞ்சகன் வலைக்குள்
    விழவே மாட்டேன்
    வீணிலே மனதை என்றும்
    கெடுக்க மாட்டேன்
    உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம்

    என் நேசர் என்னோடு இருப்பதினால் -4

    என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை
    அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2
    என் வழி காட்டிலும் அவர் வழிகள்
    ஆயிரம் மடங்கு மேலானவை

    அவர் சித்தம் செய்து அவர் சாயலை
    மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2
    பாடுகள் எதிர்ப்புகள் சோதனைகள்
    வந்தாலும் அவரில் நிலைத்திருப்பேன்


    Devasitham seivadhe ennudaya vaanjaiyayya
    Vanjagan valaikkul vizhave maatten
    Veenile manadhai endrum keduka maatten
    Ulaga sneham enakku vendam

    En nesar ennodu irupadhinaal (x2)

    En sitham ondrum thevai illai
    Avar sitham pola nadandhiduven
    En vazhi kaatilum avar vazhigal
    Aayiram madangu melaanavai

    Avar sitham seidhu avar saayalai
    Maatrida ennaiyum padaithiduven
    Paadugal yedhirpugal sodhanaigal
    Vandhalum avaril nilaithirupen


  • இரக்கத்தில் ஐஸ்வர்யரே Irakkathil Aiswaryararae

    இரக்கத்தில் ஐஸ்வர்யரே
    குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2
    ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்
    அபையம் என்றும் நீரே-2

    உந்தன் நாமம் என் அடைக்கலமே
    உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்

    சிறை மாற்றினீர் கறை போக்கினீர்
    என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2
    நீதிமானாக என்னை உயர்த்தினீரே
    உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2

    உந்தன் நாமம் என் அடைக்கலமே
    உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்

    குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்
    பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2
    இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்
    என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2

    உந்தன் நாமம் என் அடைக்கலமே
    உந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில்


    Irakkathil Aiswaryararae
    Kuraivellam Niraivaakkineerae-2
    Orupozhuthum ennai Maravaamal nesikkum
    Abayam Endrum Neerae-2

    Unthan Naamam En Adaikkalamae
    Unthan Vaarthai En Aiyanaiye-2-Irakkathil

    Sirai Matrineer Karai Pokkineer
    Ennayum Ummaippolave Matrineer-2
    Neethimaanaga Ennai Uyarthineerae
    Ummodu Endrum Vaazhum Baakiyam Thantheer-2

    Unthan Naamam En Adaikkalamae
    Unthan Vaarthai En Aiyanaiye-2-Irakkathil

    Kurai Matrineer Niraivakkineer
    Paraloga Raajiyathin Vazhvai Thantheer-2
    Raajathi Raajavaaga Arasalugireer
    Ennayum Ummodu Serthukkondeer-2

    Unthan Naamam En Adaikkalamae
    Unthan Vaarthai En Aiyanaiye-2-Irakkathil


  • நீர் என் கேடகம் Neer en kedagam

    நீர் என் கேடகம்
    என் மகிமையும் நீரே
    தலையை உயர்த்துபவர் நீர்
    என் தலை நிமிர செய்பவர் நீர்

    என்னை ஆசிர்வதித்தீரே
    உம் காருண்யத்தாலே
    என்னை சூழ்ந்து கொண்டீரே
    கேடகமாய் – (2)

    உம்மை நோக்கி கூப்பிட்டேன்
    செவி கொடுத்தீரே
    சத்தமிட்டு கூப்பிட்டேன்
    பதில் கொடுத்தீரே
    கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்
    தேவனே நீரே என்னை சுமக்கின்றீர்

    பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரே
    நீதிமானாக மாற்றிவிட்டீரே
    நெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்
    விசாலத்தில் என்னை நிறுத்தினீர்


    Neer en kedagam
    En magimaiyum neerae
    En thalaiyaiy uyarthubavar neer
    En thalai nimira seibavar neer

    Ennai aasirvathitheerae
    Um karunyathalae
    Ennai sooznthu kondeerae
    Kedagamaaaaiiii – (2)

    Ummai Noki koopitaen
    Sevi kodutheerae
    Sathamitu koopitaen
    Pathil kodutheerae
    Kartharae neerae ennai thangugureer
    Devanae neerae ennai sumakindreer

    Bhakthiullavanai therindhukondeerae
    Neethimanaga matriviteerae
    Nerukathil irundha ennai viduvitheer
    Visalathelae ennai niruthineer