Category: Tamil Worship Songs Lyrics

  • Vazhvathu Naanalla Ennil வாழ்வது நானல்ல என்னில்

    வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் – 2

    இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் – 2

    அன்பும் அருளும் பொழிகின்றார் – 2

    என்னை முழுவதும் ஆள்கின்றார்

    உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே – 2

    யாழும் இசையும் போலவே – 2

    வாழும் இறையில் ஒன்றிப்போம்

    கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே – 2

    கிறிஸ்து நம்முள் வாழவே – 2

    நமக்கு பயமே இல்லையே


    Vazhvathu Naanalla Ennil Lyrics in English
    vaalvathu naanalla ennil kiristhuvae vaalkintar – 2

    iraivan ennil uraikintar inpam enakkuth tharukintar – 2

    anpum arulum polikintar – 2

    ennai muluvathum aalkintar

    uyirum udalum polavae malarum manamum polavae – 2

    yaalum isaiyum polavae – 2

    vaalum iraiyil ontippom

    kiristhu nammil valaravae naamum thaeynthu maraiyavae – 2

    kiristhu nammul vaalavae – 2

    namakku payamae illaiyae

  • Vazhvai Alikkum Vallava வாழ்வை அளிக்கும் வல்லவா

    வாழ்வை அளிக்கும் வல்லவா

    தாழ்ந்த என்னுள்ளமே
    வாழ்வின் ஒளியை ஏற்றவே
    எழுந்து வாருமே

    ஏனோ இந்த பாசமே
    ஏழை என்னிடமே
    எண்ணில்லாத பாவமே
    புரிந்த பாவி மேல்

    உலகம் யாவும் வெறுமையே
    உன்னை யான் பெறும்போது
    உறவு என்று இல்லை உன்
    உறவு வந்ததால்

    தனிமை ஒன்றே ஏங்கினேன்
    துணையாய் நீ வந்தாய்
    அமைதியின்றி ஏங்கினேன்
    அதுவும் நீ என்றாய்


    Vazhvai Alikkum Vallava Lyrics in English
    vaalvai alikkum vallavaa

    thaalntha ennullamae
    vaalvin oliyai aettavae
    elunthu vaarumae

    aeno intha paasamae
    aelai ennidamae
    ennnnillaatha paavamae
    purintha paavi mael

    ulakam yaavum verumaiyae
    unnai yaan perumpothu
    uravu entu illai un
    uravu vanthathaal

    thanimai onte aenginaen
    thunnaiyaay nee vanthaay
    amaithiyinti aenginaen
    athuvum nee entay

  • Vazhiyai Sevvai Pannunkal வழியைச் செவ்வை பண்ணுங்கள்

    1. வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
      கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள்

    கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்
    இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் – 2

    1. உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை
      பரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ
    2. பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்
      ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம்
    3. தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்
      தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும்

    Vazhiyai Sevvai Pannunkal Lyrics in English

    1. valiyaich sevvai pannnungal paathaiyai seerppaduththungal
      karththar varukai sameepam karuththudan seyalpadungal

    karththaathi karththar Yesu vettiyae thanthiduvaar
    iraajaathi iraajan Yesu avar seekkiram vanthiduvaar – 2

    1. un vaalvil maattam thaevai en vaalvil thiruppam thaevai
      parisuththar theerkkar entu naam maarividum naal varumo
    2. pooranamaayk geelppativom thaaraalamaayk koduppom
      aeraalamaay jepippom thaesaththaich suthantharippom
    3. thani manithan vaalvil Yesu naamam malaravaenndum
      thaesiyak koottu vaalvil Yesu raajjiyam elumpa vaenndum
  • Vazhiyai Kartharukku வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

    வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
    அவரையே நம்பியிரு – உன்
    காரியத்தை வாய்க்கச் செய்வார்
    உன் சார்பில் செயலாற்றுவார்

    காத்திரு பொறுத்திரு
    கர்த்தரையே நம்பியிரு
    காரியத்தையே வாய்க்கச் செய்வார்
    உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை

    தீயவன் செயல் குறித்து
    மனம் பதறாதே
    புல்லைப் போல் உலர்ந்து
    பூவைப் போல் உதிர்ந்து
    இல்லாமல் போய்விடும் -காத்திரு

    மகிழ்ந்து களிகூரு
    தொடர்ந்து துதிபாடு
    உன் இதயத்தின் வாஞ்சை
    விருப்பங்கள் எல்லாம்
    விரைவில் நிறைவேற்றுவார்

    நீதிமான் அனைவருக்கும்
    வெற்றி உண்டு வெகு விரைவில்
    துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்
    துரிதமாய் ஜெயம் தருவார்

    உனது நேர்மையெல்லாம்
    அதிகாலை வெளிச்சமாகும்
    நண்பகல் போலாகும்
    உன் நீதி நியாயம்
    நண்பா கலங்காதே

    கோபத்தை விட்டுவிடு
    சினம் நீ கொள்ளாதே
    பொறாமை ஏரிச்சல் ஒருபோதும் வேண்டாம்
    அது தீமைக்கு வழிநடத்தும்


    Vazhiyai kartharukku Lyrics in English
    valiyaik karththarukkuk koduththuvidu
    avaraiyae nampiyiru – un
    kaariyaththai vaaykkach seyvaar
    un saarpil seyalaattuvaar

    kaaththiru poruththiru
    karththaraiyae nampiyiru
    kaariyaththaiyae vaaykkach seyvaar
    un saarpil seyalaattuvaar – valiyai

    theeyavan seyal kuriththu
    manam patharaathae
    pullaip pol ularnthu
    poovaip pol uthirnthu
    illaamal poyvidum -kaaththiru

    makilnthu kalikooru
    thodarnthu thuthipaadu
    un ithayaththin vaanjai
    viruppangal ellaam
    viraivil niraivaettuvaar

    neethimaan anaivarukkum
    vetti unndu veku viraivil
    thunnainintu karththaro nadaththich selvaar
    thurithamaay jeyam tharuvaar

    unathu naermaiyellaam
    athikaalai velichchamaakum
    nannpakal polaakum
    un neethi niyaayam
    nannpaa kalangaathae

    kopaththai vittuvidu
    sinam nee kollaathae
    poraamai aerichchal orupothum vaenndaam
    athu theemaikku valinadaththum

  • Vazhimael Vizhi Vaiththu Noekki Ninraen வழிமேல் விழி வைத்து நோக்கி நின்றேன்

    வழிமேல் விழி வைத்து நோக்கி நின்றேன்
    வானிலே பறந்திடவே நானிருந்தேன்
    வருவாய் சீக்கிரமே இயேசுவே எம்மிடமே (2)

    அல்லேலூ-யா – அல்லேலூ-யா அல்லேலூ-யா
    ஆமேன் வாரும் – இயேசுவே ஆமேன் வாரும்

    ஓ……
    அல்லேலூ-யா – அல்லேலூ-யா அல்லேலூ-யா
    ஆமேன் வாரும் – இயேசுவே ஆமேன் வாரும்

    மேகங்கள் சூழ்ந்து வரப் பார்த்திருந்தேன்
    மேசியா பவனி வரக் காத்திருந்தேன்
    எக்காள சத்தம் வானில் கேட்குமென்று
    என் மனம் விண்ணை நோக்கிப் பார்க்குதின்று(வருவாய்)

    அத்திமரம் துளிர்க்கும் காலம் வந்ததென்று
    அன்பரே உம் வருகை விரைந்ததின்று
    தேவனின் நாளும் இன்று வந்ததென்று
    என் மனம் மகிழ்ச்சியிலே திளைக்குதின்று(வருவாய்)


    Vazhimael Vizhi Vaiththu Noekki Ninraen Lyrics in English
    valimael vili vaiththu Nnokki ninten
    vaanilae paranthidavae naanirunthaen
    varuvaay seekkiramae Yesuvae emmidamae (2)

    allaeloo-yaa – allaeloo-yaa allaeloo-yaa
    aamaen vaarum – Yesuvae aamaen vaarum

    o……
    allaeloo-yaa – allaeloo-yaa allaeloo-yaa
    aamaen vaarum – Yesuvae aamaen vaarum

    maekangal soolnthu varap paarththirunthaen
    maesiyaa pavani varak kaaththirunthaen
    ekkaala saththam vaanil kaetkumentu
    en manam vinnnnai Nnokkip paarkkuthintu(varuvaay)

    aththimaram thulirkkum kaalam vanthathentu
    anparae um varukai virainthathintu
    thaevanin naalum intu vanthathentu
    en manam makilchchiyilae thilaikkuthintu(varuvaay)

  • Vazhi Thirappaare வழி திறப்பாரே

    வழி திறப்பாரே
    தேவன் வழி திறப்பாரே
    நான் அறிந்திராத வழிகளில்
    எனக்காக புது பாதைகள்
    என்றும் நடத்திடுவார்
    நம்மை அனைத்து காத்திடுவார்
    நாள் தோறும் என்னை தெற்றியே
    நடத்துவார் நம்மை, வழி திறப்பாரே

    வனாந்தரத்தில் வழிபிறக்க செய்வாரே
    வறண்ட பூமியில் ஆறுகள் காண்பேன்
    இப்புவி ஒழிந்தாலும்
    தேவ வார்த்தை அழியாதே
    புதியதோர் காரியம் செய்வார்


    Vazhi Thirappaare Lyrics in English
    vali thirappaarae
    thaevan vali thirappaarae
    naan arinthiraatha valikalil
    enakkaaka puthu paathaikal
    entum nadaththiduvaar
    nammai anaiththu kaaththiduvaar
    naal thorum ennai thettiyae
    nadaththuvaar nammai, vali thirappaarae

    vanaantharaththil valipirakka seyvaarae
    varannda poomiyil aarukal kaannpaen
    ippuvi olinthaalum
    thaeva vaarththai aliyaathae
    puthiyathor kaariyam seyvaar

  • Vazhi Sonnavar Vazhiyumanar வழி சொன்னவர் வழியுமானவர்

    வழி சொன்னவர் வழியுமானவர்
    வழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
    வார்த்தை என்றவர் வார்த்தையுமானவர்
    உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே

    மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
    விண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன்
    சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
    ராஜாதி ராஜனிவர் – இயேசு

    இயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம்
    இயேசுவே தேவன் மெய்யான தேவன்
    இயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம்
    இயேசுவே தேவன் மீட்க வந்த தேவன்

    இயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர்
    இயேசுவே ஆண்டவர் உயிர்த்தெழுந்த
    ஆண்டவர் – இயேசுவே கர்த்தனாம்
    கர்த்தாதி கர்த்தனாம் – இயேசுவே
    ராஜனாம் ராஜாதி ராஜானாம்


    Vazhi sonnavar vazhiyumanar Lyrics in English
    vali sonnavar valiyumaanavar
    valiyum saththiyam jeevanumaay vanthavar
    vaarththai entavar vaarththaiyumaanavar
    ulakinilae oliyaaka uthiththavar – ivarae

    mannnnor pottum mannaathi mannan
    vinnnnor pottum raajaathi raajan
    saantor pottum thooyaathi thooyan
    raajaathi raajanivar – Yesu

    Yesuvae theyvam orae oru theyvam
    Yesuvae thaevan meyyaana thaevan
    Yesuvae theyvam thaeti vantha theyvam
    Yesuvae thaevan meetka vantha thaevan

    Yesuvae iratchakar uyir eentha iratchakar
    Yesuvae aanndavar uyirththeluntha
    aanndavar – Yesuvae karththanaam
    karththaathi karththanaam – Yesuvae
    raajanaam raajaathi raajaanaam

  • Vazhi Nadathum Valla Devan வழிநடத்தும் வல்ல தேவன்

    வழிநடத்தும் வல்ல தேவன்
    உண்டு மகனே(ளே)
    உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார்
    கலங்கிடாதே

    1. கல்லானாலும் முள்ளானாலும்
      கர்த்தர் இயேசு நடத்திடுவார்
      காடானாலும் மேடானாலும்
      கர்த்தர் இயேசு சுமந்திடுவார்
      அவர் கரம்பற்றிப் பிடிப்பாய்
      அவரையே பின்பற்றி செல்வாய் – வழி
    2. வியாதி வியாகுலமோ?
      பசியோ நிர்வாணமோ?
      நிந்தைகளோ? அவமானமோ?
      நாயகன் இயேசு நடத்திடுவார்
      அவர் கரம் பற்றிப் பிடிப்பாய்
      அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

    Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன் Lyrics in English
    Vazhi Nadathum Valla Devan

    valinadaththum valla thaevan
    unndu makanae(lae)
    un vaalnaalellaam nadaththiduvaar
    kalangidaathae

    1. kallaanaalum mullaanaalum
      karththar Yesu nadaththiduvaar
      kaadaanaalum maedaanaalum
      karththar Yesu sumanthiduvaar
      avar karampattip pitippaay
      avaraiyae pinpatti selvaay – vali
    2. viyaathi viyaakulamo?
      pasiyo nirvaanamo?
      ninthaikalo? avamaanamo?
      naayakan Yesu nadaththiduvaar
      avar karam pattip pitippaay
      avaraiyae pinpatti selvaay – vali
  • Vathai Unthan Koodarathai வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே

    வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
    பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

    ஆமென் ஆமென் அல்லேலூயா
    ஆமென் அல்லேலூயா
    ஆமென் அல்லேலூயா

    1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
      அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்
    2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
      ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு
    3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
      அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்
    4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
      ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்
    5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
      வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
    6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
      தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்
    7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
      சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
      துணையாளர் முன் செல்கிறார்

    Vathai Unthan Koodarathai Lyrics in English
    vaathai unthana koodaaraththai anukaathu makanae
    pollaappu naeridaathu naeridaathu makalae

    aamen aamen allaelooyaa
    aamen allaelooyaa
    aamen allaelooyaa

    1. unnathamaana karththaraiyae uraividamaakkik konndaay
      ataikkalamaam aanndavanai aathaayamaakkik konndaay
    2. aattukkutti iraththaththinaal saaththaanai jeyiththu vittaோm
      aavi unndu vasanam unndu antadam vetti unndu
    3. karththarukkul nam paadukal oru naalum veennaakaathu
      asaiyaamal uruthiyudan athikamaay seyalpaduvom
    4. alaiththavaro unnmaiyullavar parisuththamaakkiduvaar
      aavi aaththumaa sareeramellaam kuttaminti kaaththiduvaar
    5. nammutaiya kutiyiruppu paralokaththil unndu
      varappokum iratchakarai ethirNnokki kaaththiruppom
    6. arpamaana aarampaththai asattaை pannnnaathae
      thodanginavar mutiththiduvaar sonnathai seythiduvaar
    7. aattal alla sakthi alla aaviyinaal aakum
      sornthidaamal nanmai seyvom
      thunnaiyaalar mun selkiraar
  • Vatathaesam Sellum Veerar வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே

    யார் நமது காரியமாய்ப் போவான்?

    வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே?
    பலதேசம் செல்லும்படி கூறினாரே!
    வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே?

    1. எத்தனைக் கூட்டங்கள் இங்கே!
      எத்தனைக் கொள்கைகள் இங்கே!
      ஒன்றும் அறியாதோர் அங்கே!
      கோடிக் கோடியாக உண்டே!
      யாருமில்லை இன்று யாருமில்லை
      இயேசுவை அறிவிக்க யாருமில்லை
    2. அரும்பெரும் கிருபையாம் வாழ்வு
      தெற்கிலே கருகிவிடாது
      தேவையான இடம் செல்ல
      வழிசெய்யும் இயேசுவே இராஜா!
      இஸ்ரவேலே எந்த நாள் வரைக்கும்
      எருசலேம் மதில்களில் முடங்கி நிற்பாய்?
    3. போட்டிப் பொறாமைகள் அகற்றி
      இயேசுவைப் பங்கிடல் தவிர்த்து
      விசுவாசிகள் யாரும் சேர்ந்து
      செயல்படும் காலம் இதுவே
      இயேசுவுக்கு இது மகிமை தரும்
      ஆத்துமாக்கள் யாவும் பயன் அடையும்
    4. கல்லூரிகளில் உள்ள வாலிபரே
      ஆலயங்களில் உள்ள இளைஞர்களே
      தேவனின் பணிக்குத் தோள்கொடுப்பவர் யார்?
      விடுதலைச் செய்தியை சொல்பவர் யார்?
      முன்வருவீர் உடன் முன்வருவீர்!
      தடைகளைத் தாண்டி நீர் முன்வருவீர்!
    5. என்னைத் தருகிறேன் தேவா
      தம்மையே தந்தீர் நாதா
      காட்டும் இடம் எல்லாம் செல்ல
      பின் திரும்பாது நான் நிற்க
      ஏற்றுக்கொள்ளும் என்னை ஏற்றுக்கொள்ளும்
      பாதத்தில் பணிகிறேன் வழி நடத்தும்

    Vatathaesam Sellum Veerar Lyrics in English
    yaar namathu kaariyamaayp povaan?

    vadathaesam sellum veerar yaar nammilae?
    palathaesam sellumpati koorinaarae!
    vadathaesam sellum veerar yaar nammilae?

    1. eththanaik koottangal ingae!
      eththanaik kolkaikal ingae!
      ontum ariyaathor angae!
      kotik kotiyaaka unntae!
      yaarumillai intu yaarumillai
      Yesuvai arivikka yaarumillai
    2. arumperum kirupaiyaam vaalvu
      therkilae karukividaathu
      thaevaiyaana idam sella
      valiseyyum Yesuvae iraajaa!
      isravaelae entha naal varaikkum
      erusalaem mathilkalil mudangi nirpaay?
    3. pottip poraamaikal akatti
      Yesuvaip pangidal thavirththu
      visuvaasikal yaarum sernthu
      seyalpadum kaalam ithuvae
      Yesuvukku ithu makimai tharum
      aaththumaakkal yaavum payan ataiyum
    4. kalloorikalil ulla vaaliparae
      aalayangalil ulla ilainjarkalae
      thaevanin pannikkuth tholkoduppavar yaar?
      viduthalaich seythiyai solpavar yaar?
      munvaruveer udan munvaruveer!
      thataikalaith thaannti neer munvaruveer!
    5. ennaith tharukiraen thaevaa
      thammaiyae thantheer naathaa
      kaattum idam ellaam sella
      pin thirumpaathu naan nirka
      aettukkollum ennai aettukkollum
      paathaththil pannikiraen vali nadaththum