Category: Tamil Worship Songs Lyrics

  • Ulagin Rachakarae உலகின் இரட்சகரே

    உலகின் இரட்சகரே உன்னத குமாரனே
    ஜீவ ஒளியாய் உதித்தவரே
    ஜீவன் தந்திட வந்தவரே

    போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
    இயேசுவின் திருநாமத்தை
    இயேசு பிறந்த இந்நாளிலே
    எல்லாரும் கொண்டாடுவோம்

    இருளில் நடக்கும் ஜனங்களை
    வெளிசத்தில் நடத்துவீர் மரண
    இருளை நீக்கி நம்பிக்கை கொடுத்தீர்

    மனதின் பாரம் நீங்கிடும்
    இயேசு பிறந்ததால் சாத்தானின்
    வல்லமை அழிந்திடும் இயேசு வந்ததால்


    Ulagin rachakarae Lyrics in English
    ulakin iratchakarae unnatha kumaaranae
    jeeva oliyaay uthiththavarae
    jeevan thanthida vanthavarae

    pottiduvom naam pukalnthiduvom
    Yesuvin thirunaamaththai
    Yesu pirantha innaalilae
    ellaarum konndaaduvom

    irulil nadakkum janangalai
    velisaththil nadaththuveer marana
    irulai neekki nampikkai koduththeer

    manathin paaram neengidum
    Yesu piranthathaal saaththaanin
    vallamai alinthidum Yesu vanthathaal

  • Ulagin Pava Barathal உலகில் பாவப் பாரத்தால்

    உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
    பார்ந்த நரரே வந்து சேரும்

    அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
    ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா

    1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
      பாவம் தீராதென்றிப்போரும்
      ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
      ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்
    2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
      இளமை என்று சொல்லிச் செல்லாதே;
      வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
      வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்
    3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
      வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
      சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
      சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்
    4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
      காலம் கழித்தே உழல்வோரே,
      காலமே தேட மறந்தோரே – உங்கள்
      கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்

    Ulagin Pava Barathal Lyrics in English
    ulakil paavap paaraththaal sorum – ilaip
    paarntha nararae vanthu serum

    alaisati pattavarae vaarum – enthan
    aaruthalaal avattaை theerum – pollaa

    1. paavi entennnni thikaipporum – enthan
      paavam theeraathentipporum
      aavalaay otivanthu serum – naan
      aakaamiyarkkaaka vanthathorum – pollaa – ulakil
    2. ilamai ente ennnni nillaathae – saavum
      ilamai entu sollich sellaathae;
      valamaay varuvathaith thallaathae – ketta
      valakkamathaiyae kaikollaathae – pollaa – ulakil
    3. vaalipap piraayamithil naalum – inpa
      vaalvu sukikkaventu maalum;
      seelarae, intennurai kaelum, avai
      serkkum narakaththil ennaalum – pollaa – ulakil
    4. kaalam kadantha kilavorae – veennaayk
      kaalam kaliththae ulalvorae,
      kaalamae thaeda maranthorae – ungal
      kavalaiyaith theerppaen ariveerae – pollaa – ulakil
  • Ulagin Oliye Unmaiyin Vilakke உலகின் ஒளியே உண்மையின் விளக்கே

    உலகின் ஒளியே உண்மையின் விளக்கே
    உயிரினில் கலந்திட வா
    மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை
    மாண்புறச் செய்திட வா (2)
    இயேசு பாலனே இதயம் வாருமே
    மனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா

    இருள் வாழ்வை அகற்றிட வருவீர்
    புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (2)
    பல கோடி உள்ளங்கள் மகிழ
    நீர் பகலவனாய் உதித்திடுவீர் (2)
    எந்தன் உள்ளம் உன்னைப் பாடும்
    என்றும் உந்தன் உறவைத் தேடும்
    என் உயிரே வருவீர் – உலகின்

    புகழ் தேடி அலைகின்ற போது என்னில்
    புதுவாழ்வை அளித்திட வருவீர் (2)
    கரைசேரா ஓடங்கள் ஆனோம்
    நீர் கரை சேர்க்கும் துடுப்பாவீர் (2)
    உந்தன் வரவால் உள்ளம் மகிழும்
    எந்தன் உயிரும் உம்மில் இணையும்
    விண்மலரே வருவீர் – உலகின்


    Ulagin Oliye Unmaiyin Vilakke Lyrics in English
    ulakin oliyae unnmaiyin vilakkae
    uyirinil kalanthida vaa
    mannnakam vaalum manitharin vaalvai
    maannpurach seythida vaa (2)
    Yesu paalanae ithayam vaarumae
    manitham naalum punitham kaanum makilvai aliththida vaa

    irul vaalvai akattida varuveer
    puthu arul vaalvai aliththida eluveer (2)
    pala koti ullangal makila
    neer pakalavanaay uthiththiduveer (2)
    enthan ullam unnaip paadum
    entum unthan uravaith thaedum
    en uyirae varuveer – ulakin

    pukal thaeti alaikinta pothu ennil
    puthuvaalvai aliththida varuveer (2)
    karaiseraa odangal aanom
    neer karai serkkum thuduppaaveer (2)
    unthan varavaal ullam makilum
    enthan uyirum ummil innaiyum
    vinnmalarae varuveer – ulakin

  • Ulagile Uravile Engum உலகிலே உறவிலே எங்குமே

    உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல
    உம்மை போல அன்பு எங்குமே கிடைக்கல
    தாயை போல அல்ல அதை காட்டிலும் மேல
    தந்தை போல அதை காட்டிலும் மேல

    1. காலம் காலமாய் மனிதன் மாறுறான்
      எந்த காலமானாலும் நீங்க மாறல-2
      முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னை
      முகத்தை பாத்துதான் உலகம் எடை போடுது
      உள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா -2
    2. செல்வ ஞானமோ என்னில் இல்லையே
      பதவி பட்டமோ எதுவும் இல்லையே -2
      ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் -2
      ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம்-2

    Ulagile Uravile Engum – உலகிலே உறவிலே எங்குமே Lyrics in English
    Ulagile Uravile Engum
    ulakilae uravilae engumae naan paakkala
    ummai pola anpu engumae kitaikkala
    thaayai pola alla athai kaattilum maela
    thanthai pola athai kaattilum maela

    1. kaalam kaalamaay manithan maaruraan
      entha kaalamaanaalum neenga maarala-2
      mukaththai paaththuthaan manithan etai poduraan ennai
      mukaththai paaththuthaan ulakam etai poduthu
      ullaththai paaththu ennai naesiththeerayyaa -2
    2. selva njaanamo ennil illaiyae
      pathavi pattamo ethuvum illaiyae -2
      aelaikalai othukkinatho intha ulakam -2
      aelaikalai alaiththatho Yesu theyvam-2
  • Ulagil Vandhaar Deiva Sudhan உலகில் வந்தார் தெய்வ சுதன்

    உலகில் வந்தார் தெய்வ சுதன்
    வையம் போற்றும் வல்ல பரன்
    அதிக் குளிரில் நடு இரவில்
    உதித்தனரே மானிடனாய்

    1. பெத்தலையில் மாடடையில்
      புல்லணையில் அவதரித்தார்
      வேதத்தின் சொல் நிறைவேறிட
      தேவன் வந்தார் நம்மை மீட்டிடவே
    2. வான சேனை கீதம் பாடி
      வாழ்த்தினரே விண்ணவனை
      உன்னதத்தில் மாமகிமை
      மண்ணுலகில் சமாதானமே

    Ulagil Vandhaar Deiva Sudhan Lyrics in English

    ulakil vanthaar theyva suthan
    vaiyam pottum valla paran
    athik kuliril nadu iravil
    uthiththanarae maanidanaay

    1. peththalaiyil maadataiyil
      pullannaiyil avathariththaar
      vaethaththin sol niraivaerida
      thaevan vanthaar nammai meettidavae
    2. vaana senai geetham paati
      vaalththinarae vinnnavanai
      unnathaththil maamakimai
      mannnulakil samaathaanamae
  • Ulagathin Thotrathin உலகத்தின் தோற்றத்தின்

    உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்
    தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்
    வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்து
    சிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர்
    நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை

    சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே – 2
    என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே – 2

    வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரே
    இதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2
    சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலே
    உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே
    நீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை

    சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2
    என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 } -2


    Ulagathin Thotrathin Munbu Ennai Kandeer
    Thaayin Karuvinullae Ennai Ninaitheer
    Valargindra Prayathil Koodave Iruntheer
    Sinthai Muluvathilum Nirainthu Vantheer

    Neerindri Yaarum Illai
    Ummai Ninaikkathe Naale Illai

    Swasikum Kaatrilum Neerae
    Ovvorum Moochilum Neerae } – 2

    En Aasai Ellam Neerae
    En Aaruthalum Neerae } – 2

    Vaalgindra Vaalkayin Arthamum Neerae
    Ithayathin Yaekkathai Theerpavar Neerae } – 2

    Saathipathellam Um Kirubayinaale
    Uyarvirkum Vaalvirkum Kaaranarae
    Neer Indri Yaarumillai
    Ummai Unarathe Naalae Illai

    Swasikum Kaatrilum Neerae
    Ovvorum Moochilum Neerae } – 2

    En Aasai Ellam Neerae
    En Aaruthalum Neerae } – 2

    Swasikum Kaatrilum Neerae
    Ovvorum Moochilum Neerae } – 2

    En Aasai Ellam Neerae
    En Aaruthalum Neerae } – 2

  • Ulagathil Iruppavanilum உலகத்தில் இருப்பவனிலும்

    உலகத்தில் இருப்பவனிலும்
    உங்களில் இருப்பவர் பெரியவர்
    கர்த்தர் பெரியவர் நல்லவர்
    வல்லவர் என்றுமே

    தண்ணீரைக் கடந்திடும் போதும்
    உன்மேல் அவைகள் புரளுவதில்லை
    அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
    அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்

    உன் பக்கம் ஆயிரம் பேரும்
    உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
    கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
    ஜெயதொனியோடே முன்னே செல்வாய்

    என்றென்றும் கர்த்தரின் நாமம்
    துணையே என்று அறிந்துணர்வாயே
    உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
    சேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார்

    எந்நாளும் இயேசுவை நம்பு
    குறைவேயில்லை ஜீவியமதிலே
    பசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்
    கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்


    Ulagathil iruppavanilum Lyrics in English
    ulakaththil iruppavanilum
    ungalil iruppavar periyavar
    karththar periyavar nallavar
    vallavar entumae

    thannnneeraik kadanthidum pothum
    unmael avaikal puraluvathillai
    akkiniyin sothanai ontum seyyaathae
    avaikalai mithiththu jeyamae ataivaay

    un pakkam aayiram paerum
    un mael vilunthum theengaொntumillai
    kannkalinaal kaanuvaay thaevan thunnai unakkae
    jeyathoniyotae munnae selvaay

    ententum karththarin naamam
    thunnaiyae entu arinthunarvaayae
    unakkethiraay elumpidum ontum vaaykkaathae
    senaikalin thaevan jeyamae alippaar

    ennaalum Yesuvai nampu
    kuraivaeyillai jeeviyamathilae
    pasumaiyin jeeviyim unthan pangaakum
    karththarin aaseer unakkae sontham

  • Ulagathaiye Setri Vandhalum Yesuvai உலகத்தையே சுற்றி வந்தாலும்

    உலகத்தையே சுற்றி வந்தாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    டிப்டாப்பாக Dress பண்ணினாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    மேக்கப்பை போட்டுக் கொண்டாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    கெத்தாக வாழ்ந்து வந்தாலும்
    இயேசுவை பார்க்க முடியாதே
    இயேசுவை பார்க்கணுமே
    தினம் இயேசுவை பார்க்கணுமே
    அதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும்

    இயேசு நம்மோடு பேசிடுவார் – தினம்
    போதித்து நம்மை நடத்திடுவார்

    அதிகாலையில் தேடுபவன் என்னை கண்டடைவான் (2)
    இது வேதம் கூறும் சத்தியம்
    இதை நாமும் மறக்க கூடாதே


    Ulagathaiye Setri Vandhalum Yesuvai Lyrics in English
    ulakaththaiyae sutti vanthaalum
    Yesuvai paarkka mutiyaathae
    tipdaappaaka Dress pannnninaalum
    Yesuvai paarkka mutiyaathae
    maekkappai pottuk konndaalum
    Yesuvai paarkka mutiyaathae
    keththaaka vaalnthu vanthaalum
    Yesuvai paarkka mutiyaathae
    Yesuvai paarkkanumae
    thinam Yesuvai paarkkanumae
    athikaalaiyil elunthidanum Yesuvodu paesidanum

    Yesu nammodu paesiduvaar – thinam
    pothiththu nammai nadaththiduvaar

    athikaalaiyil thaedupavan ennai kanndataivaan (2)
    ithu vaetham koorum saththiyam
    ithai naamum marakka koodaathae

  • Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர்

    உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை

    ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை – 2

    அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா – 2

    இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார்

    அவரே புனித சவேரியார்

    பொன்னும் பொருளும் தேடுகிறோம்

    பட்டம் பதவியை நாடுகிறோம் – 2

    எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை

    முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் – 2

    அறிவும் திறனும் அமைவதில்லை

    உறவும் நட்பும் தொடர்வதில்லை – 2

    தேடும் எதுவும் கிடைப்பதில்லை

    கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை

    முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் – 2


    Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar Lyrics in English
    ulakamellaam enakkaathaayam ena vaalnthavar makilnthathillai

    aanmaavae enakkaathaayam ena vaalnthaal kavalaiyillai – 2

    aliyum selvam serppathaa aliyaa aanmaavaik kaappathaa – 2

    intha kaelvikkup pathilaay vaalnthavar yaar

    avarae punitha savaeriyaar

    ponnum porulum thaedukirom

    pattam pathaviyai naadukirom – 2

    ethuvum niraivu tharuvathillai ethilum makilchchi nilaippathillai

    mutivillaathathu ontethaan alivillaa aanmaathaan – 2

    arivum thiranum amaivathillai

    uravum natpum thodarvathillai – 2

    thaedum ethuvum kitaippathillai

    kitaikkum palavum nilaippathillai

    mutivillaathathu ontethaan alivillaa aanmaathaan – 2

  • Ulagam Thondrum Munne உலகம் தோன்றும் முன்னே உன்னை

    உலகம் தோன்றும் முன்னே உன்னை
    தெரிந்துகொண்டாரே தேவன்
    கருவினில் உருவாகும் முன்னே உன்னை
    பிரித்தெடுத்தாரே தேவன்
    கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
    பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
    ஆவியாய் கூடவே இருக்கின்றார்
    உனக்காய் பரிந்து பேசுகிறார்


    Ulagam Thondrum Munne
    Unnai therindhu kondaaray dhevan
    Karuvinil uruvaagum Munne
    Unnai piritheduthaaray dhevan
    Kiristhu unakkaay adikapattaar
    Un paavangalukkaga norukapattaar
    Aaviyaai koodavay irukkindraar
    Unakkaai parindhu pesugiraar