Category: Tamil Worship Songs Lyrics

  • Nirapidunga Enna Nirapidunga என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

    என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
    என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே

    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    ஆவியினாலே நிரப்பிடுங்க
    நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
    உம் வல்லமையாலே நிரப்பிடுங்க

    நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
    கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும்
    பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
    பவுலை போல் பயன்படுத்திடுங்க

    காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
    முடிவுக்கு வரணும்
    மூழ்கனுமே நான் மூழ்கனுமே
    ஆவியின் நதியிலே மூழ்கனுமே
    நிரம்பணுமே நான் நிரம்பணுமே
    பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே

    தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
    என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
    செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க
    நதியாய் பாய்ந்திட செய்திடுங்க


    Nirapidunga Enna Nirapidunga Lyrics in English

    enna nirappungappaa unga vallamaiyaalae
    enna nirappungappaa unga akniyaalae

    nirappidunga enna nirappidunga
    aaviyinaalae nirappidunga
    nirappidunga enna nirappidunga
    um vallamaiyaalae nirappidunga

    nilalai thoduvor sukaththai peranum
    kachchayai thoduvor arputham peranum
    paethuru pol enna nirappidunga
    pavulai pol payanpaduththidunga

    kaaliyaana paaththiramaaka vaalntha vaalkkai
    mutivukku varanum
    moolkanumae naan moolkanumae
    aaviyin nathiyilae moolkanumae
    nirampanumae naan nirampanumae
    parisuththa aaviyaal nirampanumae

    theruvellaam um akkini nathiyai
    ennai konndu paaynthida seyyum
    seythidunga aiyyaa seythidunga
    nathiyaay paaynthida seythidunga

  • Nirambi Valiyum Pathiramaai நிரம்பி வழியும் பாத்திரமாய்

    நிரம்பி வழியும் பாத்திரமாய்
    என்னை மாற்றும் – 4
    நிரப்பும் தேவா உமது ஆவியால்
    நிரப்பும் தேவா உமது வல்லமையால்

    1. ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என்
      தாகத்தை நீரே தீர்த்திடும் – 2
    2. மகிமையால் என்னை நிரப்பிடும்
      மறுரூபமாக்கி நடத்திடும் – 2
    3. அபிஷேகத்தால் நிரப்பிடும்
      அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2
    4. வரங்களை நீர் தந்திடும்
      வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2

    Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய் Lyrics in English

    Nirambi Valiyum Pathiramaai
    nirampi valiyum paaththiramaay
    ennai maattum – 4
    nirappum thaevaa umathu aaviyaal
    nirappum thaevaa umathu vallamaiyaal

    1. jeevaththannnneerai oottidum en
      thaakaththai neerae theerththidum – 2
    2. makimaiyaal ennai nirappidum
      maruroopamaakki nadaththidum – 2
    3. apishaekaththaal nirappidum
      akkiniyaay ennai maattidum – 2
    4. varangalai neer thanthidum
      vallamaiyaay ooliyam seyyanum – 2
  • Niraivaana Balanai நிறைவான பலனை

    நிறைவான பலனை
    நான் வாஞ்சிக்கிறேன் – 2

    குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
    நிறைவான தேவன் வருகையிலே – 2
    நிறைவான பலனை
    நான் வாஞ்சிக்கிறேன் – 2

    1. வாழ்க்கையில் குழப்பங்கள்
      குறைவுகள் வந்தாலும்
      அழைத்தவர் நீர் இருக்க
      பயமே இல்ல – 2
      வாக்கு செய்தவர் மாறாதவர்
      உம்மை நம்பிடுவேன்
      வாக்கு செய்தவர் மாறாதவர்
      உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள்
    2. தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒரு
      தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் – 2
      உங்க அன்பு பெரிதையா
      உம்மை நம்பிடுவேன் – 2 – குறைவுகள்

    Niraivaana Balanai Lyrics in English

    Niraivaana Balanai

    niraivaana palanai
    naan vaanjikkiraen – 2

    kuraivukal ellaam niraivaakumae
    niraivaana thaevan varukaiyilae – 2
    niraivaana palanai
    naan vaanjikkiraen – 2

    1. vaalkkaiyil kulappangal
      kuraivukal vanthaalum
      alaiththavar neer irukka
      payamae illa – 2
      vaakku seythavar maaraathavar
      ummai nampiduvaen
      vaakku seythavar maaraathavar
      ummaiyae nampiduvaen – kuraivukal
    2. thaayaippola ennai thaettukireer – oru
      thanthaippola ennai thaettukireer – 2
      unga anpu perithaiyaa
      ummai nampiduvaen – 2 – kuraivukal
  • Niraivaana Aaviyaanavarae நிறைவான ஆவியானவரே

    1. நிறைவான ஆவியானவரே
      நீர் வரும்போது குறைவுகள் மாறுமே

    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே

    1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
      பாழானது பயிர் நிலம் ஆகுமே
      நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
      முடியாததும் சாத்தியமாகுமே
    2. பெலவீனம் பெலனாய் மாறுமே
      சுகவீனம் சுகமாய் மாறுமே
      நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
      முடியாததும் சாத்தியமாகுமே

    Niraivaana Aaviyaanavarae Lyrics in English

    1. niraivaana aaviyaanavarae
      neer varumpothu kuraivukal maarumae

    neer vanthaal soolnilai maarumae
    mutiyaathathum saaththiyamaakumae

    niraivae neer vaarumae
    niraivae neer vaenndumae
    niraivae neer pothumae
    aaviyaanavarae

    1. vanaanthiram vayal veli aakumae
      paalaanathu payir nilam aakumae
      neer vanthaal soolnilai maarumae
      mutiyaathathum saaththiyamaakumae
    2. pelaveenam pelanaay maarumae
      sukaveenam sukamaay maarumae
      neer vanthaal soolnilai maarumae
      mutiyaathathum saaththiyamaakumae
  • Ninthaiyum Kodiya Vethanaiyum நிந்தையும் கொடிய வேதனையும்

    நிந்தையும் கொடிய வேதனையும்

    நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை

    சிந்தையில் கொண்டு தியானிக்கவே

    தினம் அருள் புரிவீர் ஆண்டவரே

    சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு

    1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம்

    இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம்

    மாசற்ற செம்மறி ஆனவர்க்கு

    மரண தண்டனையாம் விதித்து நின்றோம்

    அவரோ மௌனம் காத்துநின்றார்

    அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் –சிலுவையிலே

    1. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை

    பரமனின் திருவுளம் நிறைவுறவே

    ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார்

    ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி

    எனைப்பின் செல்பவன் தனை மறுத்து

    சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் –சிலுவையிலே

    1. சிலுவையின் பாரம் அழுத்தியதால்

    திருமகன் தரையில் விழலானார்

    வலுவற்ற அடியோர் எழுந்திடவே

    வல்லப தேவா வரமருள்வீர்

    எமைப் பலப்படுத்தும் அவராலே

    எல்லாம் செய்திடக் கூடுமன்றோ –சிலுவையிலே

    1. உதிரம் வியர்வைத் தூசியினால்

    உருவிழந்திருந்த தன் மகனை

    எதிர்கொண்டு வந்த அன்னை மனம்

    இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம்

    அந்நிய காலம் வரையெங்கள்

    அடைக்கலமாய் நீ இருந்திடம்மா –சிலுவையிலே

    1. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல

    உதவிய சீமோன் போல் யாமும்

    எம் அயலார்க்குத் தயங்காமல்

    என்றுமே உதவிடச் செய்தருள்வீர்

    நிரந்தரமாகப் பிறரன்பில் நிலைத்திடும்

    வரம் தர வேண்டுகின்றோம் –சிலுவையிலே

    1. துகள்படிந்திருந்த திருமுகத்தைத்

    துணிந்து வெரோணிக்காள் துடைக்க வந்தாள்

    இகமென்ன சொல்லும் என நினைந்து

    இழந்திடலாமோ விசுவாசம்

    இயேசுவை மனிதர் முன் ஏற்றுக்கொள்வோர்

    எய்துவர் அழியாப் பேரின்பம் –சிலுவையிலே

    1. மீண்டும் மீண்டும் பாவத்திலே

    விழுந்திடும் பாவியை மீட்டிடவோ

    ஈடிணையில்லா இறைமகனார்

    இவ்விதம் புழுதியில் விழலானார்

    நமை நிதம் இறைவன் மன்னிப்பதால்

    நாமும் பிறரை மன்னிப்போம் –சிலுவையிலே

    1. எங்கணும் நன்மை செய்தவர்க்கு

    ஏனிந்தக் கோலம் என வருந்திப்

    பொங்கிடும் கடல்போல் அழுதரற்றிப்

    புண்ணிய மாதரும் புலம்பினரே

    அழுகின்ற பேர்கள் பேறுபெற்றோர்

    ஏனெனில் ஆறுதல் அடைந்திடுவர் –சிலுவையிலே

    1. அளவற்ற களைப்போ பெருந்துயரோ

    அடியற்ற மரம்போல் விழலானார்

    உளந்தொறும் தாழ்ச்சி தழைத்திடவே

    உயர்பரன் அடிமை போல் விழலானார்

    தயையுயர்த்திடுவோன் தாழ்வடைவான்

    தனைத் தாழ்த்திடுவோன் உயர்வடைவான் –சிலுவையிலே

    1. உடையினை சேவகர் பிடித்திழுத்து

    உரித்திடும் வேளை காயமெல்லாம்

    மடைதிறந்தோடும் வெள்ளமென

    மறுபடி உதிரம் சொரிந்ததையோ

    அந்நியரும் வழிப்போக்கரும் நாம்

    அடக்குவோம் தீய ஆசைகளை –சிலுவையிலே

    1. கழுமரம் என்ற சிலுவையிலே

    களங்கமில்லாத இறைமகனை

    விழுமிய நலம் பல புரிந்தவரை

    வெறுத்திருப்பாணியால் அறைந்து வைத்தோம்

    ஒரு கணமேனும் இயேசுவேயாம்

    உமைப் பிரியாமல் வாழச் செய்வீர் –சிலுவையிலே

    1. நண்பனுக்காக தன்னுயிரை

    நல்குவதினுமேலான அன்பு

    கொண்டவர் யாருமே இல்லையன்றோ?

    கொடுத்தார் இயேசு தம் உயிர் நமக்காய்

    தமையன்பு செய்தார் நமக்காக

    தமைமுழுதும் அவர் கையளித்தார் –சிலுவையிலே

    1. மண்ணில் கோதுமை மணி விழுந்து

    மடிந்தால் தானே பலன் அளிக்கும்

    விண்ணில் வாழ்வு நமக்கருள

    விருப்புடன் இயேசு உயிர்துறந்தார்

    வியாகுல அன்னை மடிவளரும்

    மீட்பரே எம்மைக் காத்தருள்வீர் –சிலுவையிலே

    1. உலகின் ஒளியாய்த் தோன்றியவர்

    ஒரு கல்லறையுள் அடங்கிவிட்டார்

    விலகும் மரண இருள் திரையும்

    விளங்கும் கிறிஸ்துவின் அருள் ஒளியால்

    கிறிஸ்துவே எனக்கு உயிராகும்

    மரணம் எனக்கு ஆதாயம் –சிலுவையிலே


    Ninthaiyum Kodiya Vethanaiyum Lyrics in English

    ninthaiyum kotiya vaethanaiyum

    nirainthulla um thiruppaadukalai

    sinthaiyil konndu thiyaanikkavae

    thinam arul puriveer aanndavarae

    siluvaiyilaethaan meetchiyunndu thaedum vaanaka maatchiyunndu

    1. Yesuvai siluvaiyil araiyumentom

    itiyenak kookkural eluppi nintom

    maasatta semmari aanavarkku

    marana thanndanaiyaam vithiththu nintom

    avaro maunam kaaththunintar

    akamuvanthathanai aettukkonndaar –siluvaiyilae

    1. paavaththin sumaiyaam siluvaithanai

    paramanin thiruvulam niraivuravae

    aavalaayth tholil sumanthu sentar

    aanndavar kalvaari malai Nnokki

    enaippin selpavan thanai maruththu

    siluvaiyai eduththup pin selkaventar –siluvaiyilae

    1. siluvaiyin paaram aluththiyathaal

    thirumakan tharaiyil vilalaanaar

    valuvatta atiyor elunthidavae

    vallapa thaevaa varamarulveer

    emaip palappaduththum avaraalae

    ellaam seythidak koodumanto –siluvaiyilae

    1. uthiram viyarvaith thoosiyinaal

    uruvilanthiruntha than makanai

    ethirkonndu vantha annai manam

    iyamparun thuyaraal kalanga vaiththom

    anniya kaalam varaiyengal

    ataikkalamaay nee irunthidammaa –siluvaiyilae

    1. um thiruchchiluvaiyaich sumanthu sella

    uthaviya seemon pol yaamum

    em ayalaarkkuth thayangaamal

    entumae uthavidach seytharulveer

    nirantharamaakap piraranpil nilaiththidum

    varam thara vaenndukintom –siluvaiyilae

    1. thukalpatinthiruntha thirumukaththaith

    thunninthu veronnikkaal thutaikka vanthaal

    ikamenna sollum ena ninainthu

    ilanthidalaamo visuvaasam

    Yesuvai manithar mun aettukkolvor

    eythuvar aliyaap paerinpam –siluvaiyilae

    1. meenndum meenndum paavaththilae

    vilunthidum paaviyai meettidavo

    eetinnaiyillaa iraimakanaar

    ivvitham puluthiyil vilalaanaar

    namai nitham iraivan mannippathaal

    naamum pirarai mannippom –siluvaiyilae

    1. enganum nanmai seythavarkku

    aeninthak kolam ena varunthip

    pongidum kadalpol alutharattip

    punnnniya maatharum pulampinarae

    alukinta paerkal paerupettaோr

    aenenil aaruthal atainthiduvar –siluvaiyilae

    1. alavatta kalaippo perunthuyaro

    atiyatta marampol vilalaanaar

    ulanthorum thaalchchi thalaiththidavae

    uyarparan atimai pol vilalaanaar

    thayaiyuyarththiduvon thaalvataivaan

    thanaith thaalththiduvon uyarvataivaan –siluvaiyilae

    1. utaiyinai sevakar pitiththiluththu

    uriththidum vaelai kaayamellaam

    mataithiranthodum vellamena

    marupati uthiram sorinthathaiyo

    anniyarum valippokkarum naam

    adakkuvom theeya aasaikalai –siluvaiyilae

    1. kalumaram enta siluvaiyilae

    kalangamillaatha iraimakanai

    vilumiya nalam pala purinthavarai

    veruththiruppaanniyaal arainthu vaiththom

    oru kanamaenum Yesuvaeyaam

    umaip piriyaamal vaalach seyveer –siluvaiyilae

    1. nannpanukkaaka thannuyirai

    nalkuvathinumaelaana anpu

    konndavar yaarumae illaiyanto?

    koduththaar Yesu tham uyir namakkaay

    thamaiyanpu seythaar namakkaaka

    thamaimuluthum avar kaiyaliththaar –siluvaiyilae

    1. mannnnil kothumai manni vilunthu

    matinthaal thaanae palan alikkum

    vinnnnil vaalvu namakkarula

    viruppudan Yesu uyirthuranthaar

    viyaakula annai mativalarum

    meetparae emmaik kaaththarulveer –siluvaiyilae

    1. ulakin oliyaayth thontiyavar

    oru kallaraiyul adangivittar

    vilakum marana irul thiraiyum

    vilangum kiristhuvin arul oliyaal

    kiristhuvae enakku uyiraakum

    maranam enakku aathaayam –siluvaiyilae

  • Ninaivu Koorum Deivamae Nandri நினைவு கூறும் தெய்வமே நன்றி

    நினைவு கூறும் தெய்வமே நன்றி
    நிம்மதி தருபவரே நன்றி
    நன்றி இயேசு ராஜா (4)

    1. நோவாவை நினைவுகூர்ந்ததால்
      பெருங்காற்று வீசச்செய்தீரே
      தண்ணீர் வற்றியதைய்யா
      விடுதலையும் வந்ததைய்யா
    2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
      லோத்துவை காப்பாற்றினீரே
      எங்களையும் நினைவு கூர்ந்து
      எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
    3. அன்னாளை நினைவுகூர்ந்தால்
      ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
      மலட்டு வாழ்க்கையெல்லாம்
      மாற்றுகிறீர் நன்றி ஐயா
    4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு
      தூதனைக் கொண்டு வந்தது
      குடும்பத்தையும் நண்பர்களையும்
      இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்

    Ninaivu Koorum Deivamae Nandri Lyrics in English

    ninaivu koorum theyvamae nanti
    nimmathi tharupavarae nanti
    nanti Yesu raajaa (4)

    1. Nnovaavai ninaivukoornthathaal
      perungaattu veesachcheytheerae
      thannnneer vattiyathaiyyaa
      viduthalaiyum vanthathaiyyaa
    2. aapirakaamai ninaivu koornthathaal
      loththuvai kaappaattineerae
      engalaiyum ninaivu koornthu
      engal sonthangalai iratchiyumaiyyaa
    3. annaalai ninaivukoornthaal
      aannkulanthai petteduththaalae
      malattu vaalkkaiyellaam
      maattukireer nanti aiyaa
    4. korneliyu thaanatharmangal – oru
      thoothanaik konndu vanthathu
      kudumpaththaiyum nannparkalaiyum
      iratchiththu apishaekiththeerae-avan
  • Ninaivellam Neerae நினைவெல்லாம் நீரே

    நினைவெல்லாம் நீரே ஐயா என்
    உணர்வெல்லாம் நீரே ஐயா என்
    பேச்செல்லாம் நீரே ஐயா
    உயிர் மூச்செல்லாம் நீர் தானே ஐயா

    நினைவுகள் அறிந்தவரே உணர்வுகள்
    புரிந்தவரே என் வாயின் சொல் பிறக்கும்
    முன்னே தூராஷத்தில் அறிபவரே

    ஒளிப்பிட வினோதமாய்
    பிரமிக்கத்தக்க அதிசயமாய்
    பூமியின் தாழ்விடத்தில்
    எழும்புகள் உருவாக்கினீர்
    அவையமும் ஒன்றும் இல்லாத போதும்
    உருவம் அறிந்தவரே


    Ninaivellam Neerae Lyrics in English

    ninaivellaam neerae aiyaa en
    unarvellaam neerae aiyaa en
    paechchellaam neerae aiyaa
    uyir moochchellaam neer thaanae aiyaa

    ninaivukal arinthavarae unarvukal
    purinthavarae en vaayin sol pirakkum
    munnae thooraashaththil aripavarae

    olippida vinothamaay
    piramikkaththakka athisayamaay
    poomiyin thaalvidaththil
    elumpukal uruvaakkineer
    avaiyamum ontum illaatha pothum
    uruvam arinthavarae

  • Ninaivellaam Aekkamellaam நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்

    நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
    வாஞ்சையெல்லாம் நீரே
    உம்மோடு நான் நடக்கணுமே
    உம்மோடு நான் பழகணுமே
    உந்தன் சித்தம் செய்யவே
    என் அன்பே, என் உயிரே

    1. மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருந்தேன்
      கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
      மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
      என் அன்பே, என் உயிரே
    2. தாயின்றி தகப்பனின்றி தனிமையிலே எந்தன் துணை என்பேன்
      சிநேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே
      மணவாட்டி என்றவரே மணவாளன் என் இயேசுவே
      என் அன்பே, என் உயிரே

    Ninaivellaam Aekkamellaam Lyrics in English

    ninaivellaam aekkamellaam
    vaanjaiyellaam neerae
    ummodu naan nadakkanumae
    ummodu naan palakanumae
    unthan siththam seyyavae
    en anpae, en uyirae

    1. malaikkaaka kaaththirukkum payir pola naan kaaththirunthaen
      geelkaattu veesum entu aavaludan ethirpaarththirunthaen
      malaiyaaka iranganumae ennai muluthum nanaikkanumae
      en anpae, en uyirae
    2. thaayinti thakappaninti thanimaiyilae enthan thunnai enpaen
      sinaekitharae siranthavarae maarpodu ennai annaippavarae
      manavaatti entavarae manavaalan en Yesuvae
      en anpae, en uyirae
  • Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்

    நிமிஷங்கள் நிமிஷங்கள்

    நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்
    ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும்
    கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீ
    நினைவுகள் ஆகியே மறைந்திடுமே
    ………. நிமிஷங்கள்

    துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும்
    தனிதனியாகவே சேர்ந்துவிடும்
    இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும்
    கரைசேரும் முன்னே நினைத்திடுவாய்
    ………. நிமிஷங்கள்

    இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும்
    மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும்
    இனிதான நேசரை கரம் கூப்பி சாற்றுவாய்
    கனிவாக உன்னையே அழைக்கிறாரே
    ………. நிமிஷங்கள்


    Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal Lyrics in English

    nimishangal nimishangal

    nimishangal (2) vaalkkaiyin nimishangal
    ovvontay oti marainthuvidum
    kanavukal aayiram manathaara kanndu nee
    ninaivukal aakiyae marainthidumae
    ………. nimishangal

    thulithuli saaralum peru vellamaakum
    thanithaniyaakavae sernthuvidum
    ilaippaarum naatkalum viraivaaka vanthidum
    karaiserum munnae ninaiththiduvaay
    ………. nimishangal

    irulinil olikaattum peruvaalvu eettum
    marumaiyil unnaiyum serththuvidum
    inithaana naesarai karam kooppi saattuvaay
    kanivaaka unnaiyae alaikkiraarae
    ………. nimishangal

  • Nilavum Thoongum Malarum Thoongum நிலவும் தூங்கும் மலரும் தூங்கும்

    நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்

    கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன்

    இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

    உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே

    உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே

    இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

    சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம்

    இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் –2

    கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும்

    மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால்

    வானத்துப் பறவையைப் பார் விதைப்பதில்லை அறுப்பதில்லை

    வயல்வெளி மலர்களைப் பார் உழைப்பதில்லை நூற்பதில்லை

    இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே –2

    வருத்தும் சுமைகளெல்லாம் சுமந்திடக் காத்திருப்பான்

    வாழ்வு தரும் வார்த்தைகளால் ஆறுதல் அளித்திடுவான் –2

    நல்லவர்க்கும் தீயவர்க்கும் அருள்மழை பொழிந்திடுவான்

    வாழ்வின் வைகறையில் விடியலாய் எழுந்திடுவான்

    வயல்வெளி மலர்களைப் போல் வாடிவிடும் வாழ்க்கை இது

    நன்னெறி வாழ்க்கை ஒன்றே கூடிவரும் செல்வமது

    இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே –2


    Nilavum Thoongum Malarum Thoongum Lyrics in English

    nilavum thoongum malarum thoongum vaelaiyil

    kannnurakkam illaamal aengith thavippathaen

    ithayamae ithayamae kaaththidak kadavul unndu kalangida vaenndaam

    unnaith thaangum iraivan entum kainekilvathillaiyae

    unnaip paarkkum iraivan anpu kannnurangavillaiyae

    ithayamae ithayamae kaaththidak kadavul unndu kalangida vaenndaam

    sonthamillai panthamillai entu naalum aen kalakkam

    irulilum puyalilum vaalnthuvida aen thayakkam –2

    kannkalai ilanthavarum kaalkalaip pirinthavarum

    mannnninil nadappathu paar nampikkaik kaalkalinaal

    vaanaththup paravaiyaip paar vithaippathillai aruppathillai

    vayalveli malarkalaip paar ulaippathillai noorpathillai

    iraivan unaik kaappaar nee kalangaathae –2

    varuththum sumaikalellaam sumanthidak kaaththiruppaan

    vaalvu tharum vaarththaikalaal aaruthal aliththiduvaan –2

    nallavarkkum theeyavarkkum arulmalai polinthiduvaan

    vaalvin vaikaraiyil vitiyalaay elunthiduvaan

    vayalveli malarkalaip pol vaatividum vaalkkai ithu

    nanneri vaalkkai onte kootivarum selvamathu

    iraivan unaik kaappaar nee kalangaathae –2