Category: Tamil Worship Songs Lyrics

  • Nerukadi Velaiyil Padilalithu நெருக்கடி வேளையில் பதிலளித்து

    நெருக்கடி வேளையில் பதிலளித்து
    பாதுகாத்து நடத்திடுவார்
    உன்னோடு இருந்து ஆதரித்து
    தினமும் உதவிடுவார்

    நீ செலுத்தும் காணிக்கைகள்
    நினைவு கூர்ந்திடுவார்
    நன்றி பலி அனைத்தையுமே
    பிரியமாய் ஏற்றுக்கொள்வார்

    உன் மனம் விரும்புவதை
    உனக்குத் தந்திடுவார்
    உனது திட்டங்களெல்லாம்
    நிறைவேற்றி முடித்திடுவார்

    உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
    மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
    நம் தேவன் நாமத்திலே
    வெற்றிக் கொடி நாட்டிடுவோம்

    இரதங்களை நம்பும் மனிதர்
    இடறி விழுந்தார்கள்
    தேவனை நம்பும் நாமோ
    நிமிர்ந்து நின்றிடுவோம்


    Nerukadi Velaiyil Padilalithu Lyrics in English

    nerukkati vaelaiyil pathilaliththu
    paathukaaththu nadaththiduvaar
    unnodu irunthu aathariththu
    thinamum uthaviduvaar

    nee seluththum kaannikkaikal
    ninaivu koornthiduvaar
    nanti pali anaiththaiyumae
    piriyamaay aettukkolvaar

    un manam virumpuvathai
    unakkuth thanthiduvaar
    unathu thittangalellaam
    niraivaetti mutiththiduvaar

    unakku varum vettiyaik kanndu
    makilchchiyil aarpparippom
    nam thaevan naamaththilae
    vettik koti naatdiduvom

    irathangalai nampum manithar
    idari vilunthaarkal
    thaevanai nampum naamo
    nimirnthu nintiduvom

  • Nenje Nee Kalanguvatheno நெஞ்சே நீ கலங்குவதேனோ

    நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)
    நெஞ்சே நீ தவிப்பதேனோ …
    ஒரு கணம் கூட உன் சுமை தாங்க
    கருணையின் தேவன் தயங்குவதில்லை

    1. தளர்ந்திடும் போது தாங்கிடும்
      தூயவர் தூய பாதை காட்டுவார்
      கலங்கிடும் போது காத்திட வல்லவர்
      கவலை எல்லாம் மாற்றுவார்
      கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
      தேவன் கரங்களை நீட்டுவார்( 2)
      அந்த பாவம் யாவும் பறந்தோட
      என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
      நல்ல பாதை சொன்னவர் இயேசு
      இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்
    2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராக
      சிறந்த வழியை சொல்லுவார்
      நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
      தெளிந்த அறிவை ஊட்டுவார்
      என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
      இன்று புது பாதை காட்டுவார்
      அந்த பாவம் யாவும் பறந்தோட
      என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
      நல்ல பாதை சொன்னவர் இயேசு
      இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

    Nenje Nee Kalanguvatheno Lyrics in English

    nenjae nee kalanguvathaeno …(2)
    nenjae nee thavippathaeno …
    oru kanam kooda un sumai thaanga
    karunnaiyin thaevan thayanguvathillai

    1. thalarnthidum pothu thaangidum
      thooyavar thooya paathai kaattuvaar
      kalangidum pothu kaaththida vallavar
      kavalai ellaam maattuvaar
      kannnneer thutaiththida karunnai kaattida
      thaevan karangalai neettuvaar( 2)
      antha paavam yaavum paranthoda
      entum vaalvil nanmaikal kooda
      nalla paathai sonnavar Yesu
      inte avar paatham panninthiduvom
    2. piranthavar ellaam uyarnthavaraaka
      sirantha valiyai solluvaar
      niraintha anpaal kaalam ellaam
      thelintha arivai oottuvaar
      entum kalangaathae thaevan irukkintar
      intu puthu paathai kaattuvaar
      antha paavam yaavum paranthoda
      entum vaalvil nanmaikal kooda
      nalla paathai sonnavar Yesu
      inte avar paatham panninthiduvom
  • Nenjathilae Thooimaiyundo நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

    நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

    இயேசு வருகின்றார்.!

    நொறுங்குண்ட நெஞ்சத்தையே

    இயேசு அழைக்கிறார்.!

    வருந்தி சுமக்கும் பாரம் – உன்னை

    கொடிய இருளில் சேர்க்கும் -2

    செய்த பாவம் இனி போதும்

    அவர் பாதம் வந்து சேரும் -2

    குருதி சிந்தும் நெஞ்சம் – உன்னை

    கூர்ந்து நோக்கும் கண்கள் – 2

    செய்த பாவம் இனி போதும்

    அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

    மாய லோக வாழ்வு – உன்னில்

    கோடி இன்பம் காட்டும் – 2

    என்னில் வாழும் அன்பர் இயேசு

    உன்னில் வாழ இடம் வேண்டும் – 2


    Nenjathilae Thooimaiyundo Lyrics in English

    nenjaththilae thooymaiyunntoo!

    Yesu varukintar.!

    norungunnda nenjaththaiyae

    Yesu alaikkiraar.!

    varunthi sumakkum paaram – unnai

    kotiya irulil serkkum -2

    seytha paavam ini pothum

    avar paatham vanthu serum -2

    kuruthi sinthum nenjam – unnai

    koornthu Nnokkum kannkal – 2

    seytha paavam ini pothum

    angu paarum senneer vellam -2

    maaya loka vaalvu – unnil

    koti inpam kaattum – 2

    ennil vaalum anpar Yesu

    unnil vaala idam vaenndum – 2

  • Nenjame Nee Kalangathe Seyon Malaiyin நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின்

    நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின்
    இரட்சகனை மறவாதே; – நான் என் செய்வேனென்று.

    அனுபல்லவி

    வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே

    சரணங்கள்

    1. பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமான
      பாடு நோவு மிகுந்தாலும்,
      மட்டிலா வறுமைப் பட்டாலும்,
      மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் — நெஞ்சே
    2. சின்னத்தனம் எண்ணினாலும் – நீ நன்மை செய்யத்
      தீமை பிறர் பண்ணினாலும்
      பின்னபேதகம் சொன்னாலும்,
      வந்தணாப்பினாலும் — நெஞ்சே
    3. கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக்
      காவலில் வைத் தடித்தாலும்,
      வெள்ளம் புரண்டு தலை மீதில்
      அலைமொதினாலும் — நெஞ்சே

    Nenjame Nee Kalangathe Seyon Malaiyin Lyrics in English

    nenjae nee kalangaathae; – seeyon malaiyin
    iratchakanai maravaathae; – naan en seyvaenentu.

    anupallavi

    vanjar pakai seythaalum, vaaraa vinai peythaalum — nenjae

    saranangal

    1. pattayam, panjam vanthaalum, – athikamaana
      paadu Nnovu mikunthaalum,
      mattilaa varumaip pattalum,
      manushar ellaam kaivittalum — nenjae
    2. sinnaththanam ennnninaalum – nee nanmai seyyath
      theemai pirar pannnninaalum
      pinnapaethakam sonnaalum,
      vanthannaappinaalum — nenjae
    3. kallan entu pitiththaalum, – vilangu pottuk
      kaavalil vaith thatiththaalum,
      vellam puranndu thalai meethil
      alaimothinaalum — nenjae
  • Nenjamae Thallaati Nonthu நெஞ்சமே தள்ளாடி நொந்து

    நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
    நீ கலங்காதே; – கிறிஸ்
    தேசுவே உனக்கு நல்ல
    நேச துணையே.

    1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
      தாககியே பகைஞராக நின்ற போதிலும், — நெஞ்சமே
    2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
      அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் — நெஞ்சமே
    3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மா
      சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். — நெஞ்சமே
    4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகு
      பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். — நெஞ்சமே
    5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், — எந்தக்
      கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். — நெஞ்சமெ
    6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், – கிறிஸ்
      தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய் — நெஞ்சமே

    Nenjamae Thallaati Nonthu Lyrics in English

    nenjamae, thallaati nonthu,
    nee kalangaathae; – kiris
    thaesuvae unakku nalla
    naesa thunnaiyae.

    1. thanjamaana tholarkalum vanjakamaaka – unnai
      thaakakiyae pakainjaraaka ninta pothilum, — nenjamae
    2. annai thanthai aanavarum pinna paethamaay – unai
      angalaaykka vittelinjan aana pothilum — nenjamae
    3. jeevanam ilanthu thunpam maevinaalum, – maa
      sirumaiyaaych sakikkonnaa varumai konndaalum. — nenjamae
    4. panjamum pasiyum vanthu kenja vaiththaalum, – miku
      paaramaaych sumai unmaelae patti nintalum. — nenjamae
    5. ketta Nnoyilum nee akap pattulantalum, — enthak
      kaedukal unmaelae vanthu mootinaalum. — nenjame
    6. aana veedu thaanum kollai aana pothilum, – kiris
      thannnalae, unak kellaam entennnni niraivaay — nenjamae
  • Nenjae Nenjae Iraivanai நெஞ்சே நெஞ்சே இறைவனை

    நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு

    தஞ்சம் என்றும் அவரே என்று வாழ்த்திப் பாடிடு

    வல்லவராம் இறைவன் வாழ்வில் நன்மை பல புரிந்தார்

    எல்லையில்லாத இன்பப் பெருக்கில் இன்னிசைப் பாடிடு

    நிலவழகும் மலையழகும் இறைவன் பெயரைப் பாடட்டும்

    கடலழகும் கதிரழகும் கடவுள் அன்பைக் கூறட்டும்

    கடலையே பிரித்துக் கடந்திட உதவினார்

    கலகம் புரிந்தோரை கலங்கிடச் செய்தார்

    நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு

    அன்பழகும் அறிவழகும் அவர் தரும் ஆசியே

    ஊற்றழகும் உயிரழகும் இறைவனின் மாட்சியே

    வாழ்வெனும் பாதையில் வீழும் வேளையில்

    தாங்கிடும் தாயாய் தனைத் தந்தார்

    நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு


    Nenjae Nenjae Iraivanai Lyrics in English

    nenjae nenjae iraivanaip pottip paadidu

    thanjam entum avarae entu vaalththip paadidu

    vallavaraam iraivan vaalvil nanmai pala purinthaar

    ellaiyillaatha inpap perukkil innisaip paadidu

    nilavalakum malaiyalakum iraivan peyaraip paadattum

    kadalalakum kathiralakum kadavul anpaik koorattum

    kadalaiyae piriththuk kadanthida uthavinaar

    kalakam purinthorai kalangidach seythaar

    nanti sol nenjae irai thantha nalla vaalvirku

    anpalakum arivalakum avar tharum aasiyae

    oottalakum uyiralakum iraivanin maatchiyae

    vaalvenum paathaiyil veelum vaelaiyil

    thaangidum thaayaay thanaith thanthaar

    nanti sol nenjae irai thantha nalla vaalvirku

  • Nenjae Nee நெஞ்சமே நீ

    நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்
    தேவனை நோக்கி அமர்ந்திரு

    நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
    விரைவில் வருமே வந்திடுமே

    உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
    உன்னோடு பேசுகிறார்
    பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்
    பெயர் சொல்லி நான் அழைத்தேன்
    எனக்கே நீ சொந்தம்

    எனது பார்வையில்
    விலையேறப் பெற்றவன் நீ
    மதிப்பிற்குரியவன் நீ
    பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
    அன்பிற்கு எல்லை இல்லை
    கிருபை தொடர்கின்றது

    உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
    ஜனங்கள் தந்திடுவேன்
    கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
    திரள்கூட்டம் வந்திடுமே

    நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே
    வருமே வந்திடுமே

    வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
    கட்டளையிடு மகனே (மகளே)
    தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
    ஆணையிடு மகனே (மகளே)

    என்னைக் கேளும் நாடுகளை நான்
    சொந்தமாக்கிடுவேன்
    பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம்
    உனது உடைமையாகும்


    Nenjae nee Lyrics in English

    nenjamae nee aen kalangukiraay
    thaevanai Nnokki amarnthiru

    nee ethirpaarkkum nanmaikal
    viraivil varumae vanthidumae

    unakkul vaalpavar uruvaakki makilpavar
    unnodu paesukiraar
    payappadaathae unnai meettukkonntaen
    peyar solli naan alaiththaen
    enakkae nee sontham

    enathu paarvaiyil
    vilaiyaerap pettavan nee
    mathippirkuriyavan nee
    paeranpinaal iluththuk konntaen
    anpirku ellai illai
    kirupai thodarkintathu

    un jeevanukgeedaay makkalinangal
    janangal thanthiduvaen
    kilakku maerku thisaikalil irunthu
    thiralkoottam vanthidumae

    nee ethirpaarkkum elupputhal thaesaththilae
    varumae vanthidumae

    vadapuram Nnokki vittuvidu entu
    kattalaiyidu makanae (makalae)
    thenpuram Nnokki kodu kodu entu
    aannaiyidu makanae (makalae)

    ennaik kaelum naadukalai naan
    sonthamaakkiduvaen
    poovulakam athan ellaikal ellaam
    unathu utaimaiyaakum

  • Nelaiilla Ulagu Nijamilla Uravu நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

    நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
    நிலையானதொன்றும் இங்கில்லை
    நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் எப்போதும்

    1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
      ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
      வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
      வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
      நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
      நீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா
    2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
      பொழுதிங்கு போகுது கழிந்து
      உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
      ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
      நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
      நீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா

    Nelaiilla Ulagu Nijamilla Uravu Lyrics in English

    nilaiyillaa ulaku nijamillaa uravu
    nilaiyaanathontum ingillai
    naettum intum entum maaraatha theyvam
    nee mattum pothum eppothum
    nee mattum pothum nee mattum pothum
    nee mattum pothum eppothum

    1. aasaiyilae piranthu aanavaththil thodarnthu
      aati ingu adanguthu vaalkkai
      vaalvutharum vaarththai vaalkkaithanai valarththaal
      vasantham vanthu nammil entum thangum
      nee mattum pothum en vaalvu maarum
      nee mattum pothum eppothum — nilaiyillaa
    2. poymaiyilae vilunthu poliyaaka nadanthu
      poluthingu pokuthu kalinthu
      unnmaithanai unarnthu uruthiyudan elunthaal
      oothiyangal thaevaiyillai namakku
      nee mattum pothum en vaalvu maarum
      nee mattum pothum eppothum — nilaiyillaa
  • Negnsamae Kethsaemanaekku நெஞ்சமே கெத்சேமனேக்கு வா

    நெஞ்சமே கெத்சேமனேக்கு வா

    1. நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?
      சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்
    2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சிää அங்கலாய்த்து வாடுகின்றார்
      தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்
    3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி
      ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே
    4. அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்
      எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே
    5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே
      குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ?
    6. வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்
      தான் சஞ்சலத்தோடு முழந்தாள் நின்று வேண்டுகிறார்.
    7. தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ
      ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்

    Negnsamae Kethsaemanaekku Lyrics in English

    nenjamae kethsemanaekku vaa

    1. nenjamae kethsemanaekku nee nadanthu vanthidaayo?
      sanjalaththaal nenjurukith thayangukintar aanndavanaar
    2. aaththumaththil vaathai minjiää angalaayththu vaadukintar
      thaettuvaar ingaarumintith thiyangukintar aanndavanaar
    3. thaeva kopath theechchaூlaiyil sinthai nonthu venthuruki
      aavalaayth tharaiyil veelnthu aluthu jepam seykintarae
    4. appaa pithaavae ippaathram akalachcheyyum siththamaanaal
      eppatiyum nin siththampol enakkaakattum enkintarae
    5. iraththa vaervaiyaal thaekam meththa nanainthirukkuthae
      kuttam ontum seythidaatha kottavarkkiv vaathai aeno?
    6. vaanaththilirunthor thoothan vanthavaraip palappaduththath
      thaan sanjalaththodu mulanthaal nintu vaenndukiraar.
    7. thaangaொnnaa niththiraikonndu than seesharkal urangivila
      aangavar thaniththirunthu angalaayththu vaadukintar
  • Negnsam Agnsavaentaam நெஞ்சம் அஞ்சவேண்டாம்

    பூமி எங்கும் செல்லுவோம்

    நெஞ்சம் அஞ்சவேண்டாம் செய்தி எடுத்துரைப்பீர்
    உங்களைத் தொடுகிறவன் எந்தன் கண்களைத் தொடுகிறவன்

    1. அக்கினி கடலில் நின்றார் ஒரு முடியும் கருகவில்லை
      சிங்கக் கெபியில் எறிந்தார் ஒரு சேதமும் காணவில்லை
      உள்ளங்கை நடுவில் உங்களைக் கண்டேன்
      உள்ளம் துவள வேண்டாம் அல்லேலூயா!
    2. எக்காளம் ஊதவேண்டும் ஜாமக்காரரல்லவோ
      இக்காலம் மௌனம் கொண்டால் குற்றம் நம்மேலல்லவோ
      விசுவாச வீரரே வீறுகொண்டு எழுவீர்
      பூமி எங்கும் செல்லுவீர் அல்லேலூயா!
    3. எருசலேம் துவங்கி பூமி இறுதிவரை செல்லுங்கள்
      குமரிக் கரை தொடங்கி வடதிசையின் சுவர் தொடுங்கள்
      புறப்பட்டுச் செல்லுங்கள் சீடர்களாக்குங்கள்
      திருச்சபையைக் கட்டுங்கள் அல்லேலூயா

    Negnsam Agnsavaentaam Lyrics in English

    poomi engum selluvom

    nenjam anjavaenndaam seythi eduththuraippeer
    ungalaith thodukiravan enthan kannkalaith thodukiravan

    1. akkini kadalil nintar oru mutiyum karukavillai
      singak kepiyil erinthaar oru sethamum kaanavillai
      ullangai naduvil ungalaik kanntaen
      ullam thuvala vaenndaam allaelooyaa!
    2. ekkaalam oothavaenndum jaamakkaararallavo
      ikkaalam maunam konndaal kuttam nammaelallavo
      visuvaasa veerarae veerukonndu eluveer
      poomi engum selluveer allaelooyaa!
    3. erusalaem thuvangi poomi iruthivarai sellungal
      kumarik karai thodangi vadathisaiyin suvar thodungal
      purappattuch sellungal seedarkalaakkungal
      thiruchchapaiyaik kattungal allaelooyaa!