Category: Tamil Worship Songs Lyrics

  • Azhaitha deivam அழைத்த தெய்வம்

    அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
    கண்ணின் மணி போல் காத்திடுவார்

    கவலைகள் இல்லை
    கலக்கமும் இல்லை
    கர்த்தர் என் மேய்ப்பர்
    குறை ஒன்றும் இல்லை

    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    இளைப்பாறுதல் தந்திடுவார்
    திராணிக்கு மேலாக
    ஒருபோதும் சோதித்திடார்

    என்ன வந்தாலும்
    எது வந்தாலும்
    என் இயேசு என்னை கைவிடார்
    நம்புவேன் இயேசுவை

    உலகமே எதிர்த்தாலும்
    நம்பினோர்களும் தூற்றினாலும்
    என்னை அழைத்தவரோ
    ஒருபோதும் என்னை மறவார்


    Azhaitha deivam Lyrics in English
    alaiththa theyvam nadaththich selvaar
    kannnnin manni pol kaaththiduvaar

    kavalaikal illai
    kalakkamum illai
    karththar en maeyppar
    kurai ontum illai

    alaiththavar unnmaiyullavar
    ilaippaaruthal thanthiduvaar
    thiraannikku maelaaka
    orupothum sothiththidaar

    enna vanthaalum
    ethu vanthaalum
    en Yesu ennai kaividaar
    nampuvaen Yesuvai

    ulakamae ethirththaalum
    nampinorkalum thoottinaalum
    ennai alaiththavaro
    orupothum ennai maravaar

  • Azhaikkum Iraivan Kuralai Kaettu அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு

    அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்

    அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் – 2

    பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே – 2

    படைத்த தேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

    பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்

    பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் -2

    அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே -2

    பரமதேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

    வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்

    வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் – 2

    நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே – 2

    இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்


    Azhaikkum Iraivan Kuralai Kaettu Lyrics in English
    alaikkum iraivan kuralaik kaettu elunthu vaarungal

    alaikkum avaril sangamamaaka virainthu vaarungal – 2

    pali seluththidavae palan atainthidavae – 2

    pataiththa thaevan pukalaip parappa panninthu vaarungal

    paathai kaattum aayanaaka iraivan alaikkintar

    paavam neekki paasam kaatta thaevan alaikkintar -2

    anpin aatchiyae avarin maatchiyae -2

    paramathaevan pukalaip parappa panninthu vaarungal

    vaalvu valangum vaarththaiyaaka vaala alaikkintar

    vaari valangum vallalaaka paraman alaikkintar – 2

    niraintha vaalvilae nammai nirappavae – 2

    iniya thaevan nammai alaikka innainthu vaarungal

  • Azhaikirar Azhaikirar Itho அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

    அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
    நீயும் வா! உந்தன் நேசர்
    ஆவலாய் அழைக்கிறார் இதோ

    1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
      கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
      கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்
    2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
      நீதிபரன் உன் நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே
      நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்
    3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
      இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
      துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ
    4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
      சொந்தமாகச் சேர்த்திட இந்தப் பாடடைந்தாரே
      நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ
    5. கல்லறை திறக்க காவலர் நடுங்க
      கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
      உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே
    6. சாந்த சொரூபனே சத்திய வாசனே
      வஞ்சமற் வாயனே வந்தணைக்கும் நேயனே
      தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார்

    Azhaikirar Azhaikirar Itho Lyrics in English
    alaikkiraar alaikkiraar itho
    neeyum vaa! unthan naesar
    aavalaay alaikkiraar itho

    1. paavaththai aettavar paliyaay maanndavar
      kalvaariyin maettinil kannkollaatha kaatchiyae
      kanntidaay vaenntidaay paava paaram neengidum
    2. Nnoyaiyum aettavar paeyaiyum ventavar
      neethiparan un Nnoyai nichchayamaayth theerththaarae
      Nnoyutta unnaiyae naeyamaay alaikkiraar
    3. thunpam sakiththavar thuyaratainthavar
      innalutta unnaiyae, annnal aesalaikkiraar
      thunpurum nenjamae thurithamaay nee vaaraayo
    4. anthak kaedatainthaar alakattuth thontinaar
      sonthamaakach serththida inthap paadatainthaarae
      ninthikkum unnaiyum santhippaar nee vaaraayo
    5. kallarai thirakka kaavalar nadunga
      kasthikalatainthaarae kattukalaruththaarae
      uyirththaar jeyiththaar unndu meetpunakkumae
    6. saantha soroopanae saththiya vaasanae
      vanjamar vaayanae vanthannaikkum naeyanae
      thanjamae thannaiyae thanthunai alaikkiraar
  • Azhaikiraar Yesu Andavar அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

    அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

    ஆவலாய் நாம் செல்லுவோம் – 2

    அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2

    சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே

    தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்

    தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்

    சுமைகளை சுகங்களாக மாற்றுவார்

    வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் – 2

    வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்

    வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

    அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்

    அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்

    விடியலின் கீதமாக முழங்குவார்

    விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் – 2

    வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்

    வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்


    Azhaikiraar Yesu Andavar Lyrics in English
    alaikkiraar Yesu aanndavar

    aavalaay naam selluvom – 2

    avar paliyinil kalanthida avar oliyinil nadanthida – 2

    saatchikalaay entum vaalnthida innaalilae

    thaetiyae thaevan varukiraar thannaiyae naalum tharukiraar

    tholkalil nammaith thaanguvaar thuyarinil avar thaettuvaar

    sumaikalai sukangalaaka maattuvaar

    valamudan vaalum valiyaik kaattuvaar – 2

    vaarungal orudalaay innainthiduvom

    vaanakath thanthaiyai naam vanangiduvom

    anpinaal ulakai aaluvaar aaviyaal nammai nirappuvaar

    amaithiyai entum aruluvaar aanantham nenjil polikuvaar

    vitiyalin geethamaaka mulanguvaar

    viduthalai vaalvai namakku valanguvaar – 2

    vaarungal orudalaay innainthiduvom

    vaanakath thanthaiyai naam vanangiduvom

  • Azhaganavar Yesu Azhaganavar அழகானவர் இயேசு அழகானவர்

    அழகானவர் இயேசு அழகானவர் (2)
    இனிமையானவர் இயேசு இனிமையானவர்
    நேசமானவர் என் சுவாசமானவர்

    1. ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
      நேசர் மடியிலே என்றும் பக்கம்
    2. தலை மயிர் சுருள்சுருளானவர்
      வெண்மையும் சிவப்புமானவர்
    3. தாலாட்டுவார் சீராட்டுவார்
      அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

    Azhaganavar Yesu Azhaganavar Lyrics in English
    alakaanavar Yesu alakaanavar (2)
    inimaiyaanavar Yesu inimaiyaanavar
    naesamaanavar en suvaasamaanavar

    1. rojaa thottam leelipushpam
      naesar matiyilae entum pakkam
    2. thalai mayir surulsurulaanavar
      vennmaiyum sivappumaanavar
    3. thaalaattuvaar seeraattuvaar
      annaikkum karangalaal aravannaippaar
  • Azhaganavar Arumaianavar Inimai அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்

    பல்லவி

    அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்

    ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர்

    அவ‌ர் இயேசு இயேசு இயேசு

    சரணங்கள்

    1. சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா

    என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன்
    இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர்

    என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே

    1. க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர்

    ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர்

    என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா

    என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே

    1. க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே

    நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார்

    பாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா

    என்னுடைய‌வ‌ர் என் அன்பு இர‌ட்ச‌க‌ர்


    Azhaganavar Arumaianavar Inimai Lyrics in English
    pallavi

    ala‌kaana‌va‌r arumaiyaana‌va‌r inimaiyaana‌va‌r

    ma‌kimaiyaana‌va‌r meetpa‌raana‌va‌r

    ava‌r Yesu Yesu Yesu

    saranangal

    1. senaika‌lin ka‌rththa‌r na‌m ma‌kimaiyin iraajaa

    entum na‌mmotirukkum immaanuvaela‌n

    imma‌ttum inimaelum entha‌n naesa‌r

    ennutaiya‌va‌r en aathma‌ naesa‌rae

    1. ka‌nma‌laiyum kottaைyum thunnaiyumaana‌va‌r

    aattith thaettik kaaththidum thaayumaana‌va‌r

    ententum na‌da‌ththidum entha‌n iraajaa

    ennutaiya‌va‌r en naesa‌ ka‌rththa‌rae

    1. ka‌lvaari maettinil kolkothaavilae

    naesa‌r ira‌ththa‌m sinthiyae ennai meettar

    paasa‌ththin ellaithaan Yesu iraajaa

    ennutaiya‌va‌r en anpu ira‌tcha‌ka‌r

  • Azhagaai nirkkum yaar ivargal அழகாய் நிற்கும் யார் இவர்கள்

    அழகாய் நிற்கும் யார் இவர்கள்
    திரளாய் நிற்கும் யார் இவர்கள்
    சேனைத் தலைவராம்
    இயேசுவின் பொற்தளத்தில்
    அழகாய் நிற்கும் யார் இவர்கள்

    எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்
    எல்லா மொழியும் பேசும் மக்களாம்
    சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
    சீர் போராட்டம் செய்து முடித்தோர்

    வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டு
    வெள்ளை குருத்தாம் ஓலை பிடித்து
    ஆர்ப்பரிப்பார் பிதாவின் முன்பு
    ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று

    தனிமையிலும் வறுமையிலும்
    லாசரு போன்றும் நின்றவர்கள்
    யாசித்தாலும் போஷித்தாலும்
    விசுவாசத்தைக் காத்தவர்கள்

    இனி அவர்கள் பசியடையார்
    இனி அவர்கள் தாகமடையார்
    வெயிலாகிலும் அனலாகிலும்
    வேதனையை அளிப்பதில்லை

    ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
    அற அகற்றி துடைத்திடுவார்
    அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
    அள்ளிப் பருக இயேசு தாமே


    Azhagaai nirkkum yaar ivargal Lyrics in English
    alakaay nirkum yaar ivarkal
    thiralaay nirkum yaar ivarkal
    senaith thalaivaraam
    Yesuvin porthalaththil
    alakaay nirkum yaar ivarkal

    ellaa jaathiyaar ellaa koththiram
    ellaa moliyum paesum makkalaam
    siluvaiyin geel Yesu iraththaththaal
    seer poraattam seythu mutiththor

    vellai angiyai thariththuk konndu
    vellai kuruththaam olai pitiththu
    aarpparippaar pithaavin munpu
    aattukkuttikkae makimaiyentu

    thanimaiyilum varumaiyilum
    laasaru pontum nintavarkal
    yaasiththaalum poshiththaalum
    visuvaasaththaik kaaththavarkal

    ini avarkal pasiyataiyaar
    ini avarkal thaakamataiyaar
    veyilaakilum analaakilum
    vaethanaiyai alippathillai

    aattukkutti thaan ivar kannnneerai
    ara akatti thutaiththiduvaar
    alaiththuch selvaar inpa oottukkae
    allip paruka Yesu thaamae

  • Ayan Yesu Kuda Iruka ஆயன் இயேசு கூட இருக்க

    ஆயன் இயேசு கூட இருக்க
    எனக்கு கவலையில்ல 
கையப் புடிச்சுக் கூட நடக்க
    யாரும் தேவையில்ல (2)

    1. அமைதி நீர் நிலைக்கு என்னை
      அழைத்துச் சென்றிடுவார் 
பசும்புல் தினம் எனக்கு
      பரமன் தந்திடுவார் – ஆயன்
    2. இருட்டு பயமில்ல எனக்கு
      எதிரி பயமில்ல 
கோலும் கைத்தடியும் எனக்கு
      காலமும் இருக்கும் – ஆயன்

    Ayan Yesu Kuda Iruka Lyrics in English
    aayan Yesu kooda irukka
    enakku kavalaiyilla 
kaiyap putichchuk kooda nadakka
    yaarum thaevaiyilla (2)

    1. amaithi neer nilaikku ennai
      alaiththuch sentiduvaar 
pasumpul thinam enakku
      paraman thanthiduvaar – aayan
    2. iruttu payamilla enakku
      ethiri payamilla 
kolum kaiththatiyum enakku
      kaalamum irukkum – aayan
  • Aviyai Arulumae Swamy ஆவியை அருளுமே, சுவாமீ

    ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்
    காயுர் கொடுத்த வானத்தினரசே!

    1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
    நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
    முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
    முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

    2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
    பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
    தேவ சமாதானம், நற்குணம், தயவு,
    திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை

    3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@
    திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,
    பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
    பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை


    Aviyai Arulumae Swamy Lyrics in English
    aaviyai arulumae, suvaamee, – enak
    kaayur koduththa vaanaththinarase!

    1.narkani thaetivarung kaalanga lallavo?
    naanoru kaniyatta paalmara mallavo?
    murkani mukangaannaa vempayi rallavo?
    mulunenjam vilaivatta uvarnila mallavo? – aaviyai

    2.paavikku aaviyin kaniyenunj sinaekam,
    parama santhosham, neetiya saantham,
    thaeva samaathaanam, narkunam, thayavu,
    thida visuvaasam sirithenumillai – aaviyai

    3.theepaththuk kennnneyaich seekkiram oottum@
    thiri yaviyaamalae theenntiyae yaettum,
    paava asoosangal vilakkiyae maattum,
    parisuththavaran thanthen kuraikalaith theerum – aaviyai

  • Aviyae Thuuya Aviyae வந்தருளும் தூய ஆவியே

    வந்தருளும் தூய ஆவியே
    தந்தருளும் தேவ மகிமையை

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே
    அபிஷேகியும் தேவ ஆவியே
    அனல் மூட்டும் தூய ஆவியே

    வழி காட்டும் தூய ஆவியே
    வழி நடத்தும் தூய ஆவியே

    இயேசுவே தூய இயேசுவே
    இயேசுவே தூய இயேசுவே


    Aviyae Thuuya Aviyae Lyrics in English
    vantharulum thooya aaviyae
    thantharulum thaeva makimaiyai

    aaviyae thooya aaviyae
    aaviyae thooya aaviyae
    apishaekiyum thaeva aaviyae
    anal moottum thooya aaviyae

    vali kaattum thooya aaviyae
    vali nadaththum thooya aaviyae

    Yesuvae thooya Yesuvae
    Yesuvae thooya Yesuvae