Blog

  • En Belanae

    என் பெலனே என்னை அழைத்தவரே
    தடுமாறும் வேளையில் தாங்கினீரே
    என் இயேசுவே என்னை அழைத்தவரே
    தடுமாறும் வேளையில் தாங்கினீரே

    1. கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
      உயரங்களில் என்னை எழும்ப செய்தீர் – 2
      உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
      உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது – 2
    2. உபயோகமில்லாத பாத்திரம் நான்
      ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான் – 2
      ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
      உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது – 2
    3. சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
      என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2
      என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
      என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2

    En Belanae Azhaithavare
    Thadumaarum Velayil Thaangineere
    En Yesuve Ennai Azhaithavare
    Thadumaarum Velayil Thaangineere

    1. Kazhugai Pol Umakaga Kaathirunthean
      Uyarangalil Ennai Ezhuma Seitheer – 2
      Um Belan Thaan Idhuvaiyilum Thaangiyathu
      Um Belan Thaan Idhuvaiyilum Nadathiyathu – 2
    2. Ubayokamillatha Paathiram Naan
      Ontrukum Udhavatha Paithiyam Naan – 2
      Yeno Ennaiyum Karuvilae Um Kangal Kandathu
      Umakaai Ezhuma Um Valakaram Ennai Vanainthathu – 2
    3. Sathurukal Ennai Nerunginaalum
      En Meal Yuththam Seiya Ezhumbinalum – 2
      En Jeevanin Belanaanavar Iruppadhinaal
      En Vaazhvil Yaarukku Naan Anjiduvean – 2
  • En Belan Ellam Neer

    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா

    1. அலை மோதும் கடலினிலே
      தடுமாறும் படகினிலே – 2
      மாலுமியாய் வந்தீர் ஐயா
      மாறாதவர் நீர் தான் ஐயா – 2

    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா

    1. சோர்ந்திட்ட வேளையிலே
      பெலனற்ற நேரத்திலே – 2
      சுகம் தந்து நடத்தினீரே
      யெகோவா ஷாபாத் நீரே – 2

    உயிரே நீர் தான் ஐயா
    உறவே நீர் தான் ஐயா
    அழகையே நீர் தான் ஐயா
    எல்லாமே நீர் தான் ஐயா


    En Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya

    1. Alai Modhum Kadalinilae
      Thadumaarum Padaginilae – 2
      Maalumiyaai Vandheer Iyya
      Maaraadhavar Neer Thaan Iyya – 2

    En Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya
    Belan Ellam Neer Thaan Iyya
    En Belan Ellam Neer Thaan Iyya

    1. Sorndhitta Velayilae
      Belanatra Nerathilae – 2
      Sugam Thandhu Nadathineerae
      Yehovah Shaboth Neerae – 2

    Uyirae Neer Thaan Iyya
    Uravae Neer Thaan Iyya
    Alagae Neer Thaan Iyya
    Ellamae Neer Thaan Iyya

  • Ellame Neerthanaiya

    எல்லாமே நீர் தான் ஐயா
    எல்லாமே நீர் தான் ஐயா – 2
    எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
    பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் – 2
    யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது நீர்தானையா – 2

    1. கரை காணா படகை போல
      தனியாய் தவிக்கின்றேன் நான்
      கரம் பிடிப்பவர் ஒருவருமில்லை
      செல்லவோ வழியுமில்லை – 2
      உம்மை மாத்திரமே நம்புகிறேன் – 2
      நினைப்பவர் ஒருவருமில்லை
      நினைத்தருளும் ஐயா – 2
    2. காற்றும் மழையும் இல்லை என்றாலும்
      வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
      என் நிலைகள் நிச்சயம் மாறும்
      ஒரே வார்த்தை சொன்னால் போதும் – 2
      உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன் – 2
      துணை நின்று என் கரம் பிடிக்க
      நினைத்தருளும் ஐயா – 2

    Ellame Neerthanaiya
    Ellame Neerthanaiya – 2
    Enaku Ellame Neerthanaiya
    Belanullavan Belanatravan – 2
    Yarayirunthalum Uthavigal Seivathu Neethanaiya – 2

    1. Karai Kana Padagai Pola
      Thaniyai Thavikindren Nan
      Karam Pidippavar Oruvarum Illa
      Sellavo Vazhiyum Illa – 2
      Ummai Maathrame Nambugiren – 2
      Ninaippavar Oruvarum Illa
      Ninaitharulum Ayya – 2
    2. Kaatrum Mazhaiyum Illaiyendralum
      Vaaikalgal Nirambum Endreere
      En Nilaigal Nichayam Maarum
      Ore Varthai Sonnal Pothum – 2
      Ummai Maathrame Saarnthu Ullen – 2
      Thunai Nindru En Karam Pidikka
      Ninaitharulum Ayya – 2
  • Ellamae Neerthanaiya

    எல்லாமே நீர்தானய்யா – 4
    என் துவக்கமும் நீர்
    என் முடிவும் நீர்
    எல்லாமே நீர்தானய்யா- 4
    எல்லாமே நீர்தானய்யா- 4

    1. இந்த பூமியில் உம்மையல்லாமல்
      யாருமே இல்லை நாதா – 2
      பூமியில் வாழ்ந்தாலும்
      பரலோகம் நான் சென்றாலும் – 2
      நீர் இன்றி யாருமில்லை – 4
      நீர் இன்றி யாருமில்லை – என் துவக்கமும்…
    2. என் ஜீவனை பார்க்கிலும் கிருபை
      போதுமே இயேசு நாதா – 2
      பரிசுத்தமானவரே
      ஜீவனின் அதிபதியே – 2
      கிருபையை தாருமய்யா – 4
      கிருபையை தாருமய்யா – என் துவக்கமும்…
    3. இந்த பூமியும் சொந்தமுமில்லை
      எனக்கு எல்லாம் நீரே – 2
      எனக்கென்று எதுவும் இல்லை
      கூடவும் வருவதில்லை – 2
      கடைசிவரை நீரே – 4
      கடைசிவரை நீரே – என் துவக்கமும்…

    Ellamae Neerthanaiya – 4
    En Thuvakamum Neer
    En Mudivum Neer
    Ekkamae Neerthanaiya – 4
    Ekkamae Neerthanaiya – 4

    1. Intha Boomiyil Ummaiyallamal
      Yaarumae Illai Naadha – 2
      Boomiyil Vazhthalum
      Paralogam Naan Sendralum – 2
      Neerindri Yaarum Illai – 4
      Neerindri Yaarum Illai – En Thuvakamum…
    2. En Jeevanai Paarkilum Kirubai
      Pothumae Yesu Naatha – 2
      Parisutha Manavarae
      Jeevanin Adhibathiye – 2
      Kirubayai Tharumaiya – 4
      Kirubayai Tharumaiya – En Thuvakamum…
    3. Intha Boomiyil Sonthamum Illai
      Enaku Ellam Neerae – 2
      Enakendru Eduvum Illai
      Koodavum Varuvathillai – 2
      Kadaisi Varai Neerae – 4
      Kadaisi Varai Neerae – En Thuvakamum…
  • Ellam Yesuve

    எல்லாம் இயேசுவை எனக்கெல்லா மேசுவை
    தொல்லைமிகு மிவ்வுலகில் தோழர் யேசுவை

    1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
      நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்
    2. தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
      சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்
    3. கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்
      கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்
    4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
      ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்
    5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
      பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்
    6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென காவலும்
      ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

    Ellaam Yesuvai Enakkellaa Maesuvai
    Thollaimiku Mivvulakil Tholar Yaesuvai

    1. Aayanum Sakaayanum Naeyanum Upaayanum
      Naayanum Enakkanpaana Njaanamana Vaalanum
    2. Thanthaithaay Inamjanam Panthulor Sinaekithar
      Santhoda Sakalayoka Sampoorana Paakyamum
    3. Kavalaiyil Aaruthalum Kangulilen Jothiyum
      Kashdannoyp Padukkaiyilae Kaikannda Avilthamum
    4. Pothakap Pithaavumen Pokkinil Varaththinil
      Aatharavu Seythidung Koottaliyumen Tholanum
    5. Anniyum Aaparanamum Aasthiyum Sampaathyamum
      Pinnaiyaaliyum Meetparumen Piriya Maththiyasthanum
    6. Aana Jeeva Appamum Aavalumena Kaavalum
      Njaanageethamum Sathurum Naattamum Konndaattamum
  • Eliyavan Ennai

    எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்
    சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்
    புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்
    விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர்

    நீர் எந்தன் பெலனே பெலனே பெலனே
    எந்தன் துணையை…..
    உமக்கில்லை இணையே இணையே இணையே
    எந்தன் கன்மலையே – 2

    1. உம்மால் பிறந்த நானும்
      இந்த உலகை வெல்லுவேன்
      உம்மைப்போலவே பேசியே
      இந்த சாத்தானை நசுக்குவேன் – 2
    2. உந்தன் வார்த்தையை பிடித்து
      நான் உயரமாக வளர்வேன்
      உந்தன் சத்தம் கேட்டு
      நான் உன்னதத்தில் சேர்வேன் – 2

    புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரே
    தலை உயர்த்தினீரே
    என்னை நினைத்து அழைத்து
    கொடுத்தீர் புது ஜீவன்
    என் தலையை நீர் அபிஷேகித்தீர்
    என் கன்மலையே துதித்திடுவேன்
    கொடுத்திடுவேன்….
    நான் கொடுத்திடுவேன் உமக்கே என்னையே….

    1. தாயை போல் என்னை அணைத்து
      தம் ஜீவன் தந்து காத்தீர்
      தந்தை போல் தோளில் சுமந்து
      மாறா அன்பினாலே சேர்த்தீர் – 2

    Eliyavan Ennai Kuzhiyil Irundhu Uyarthugireer
    Siriyavanai Azhaiththu Abishegithu Nadathugireer
    Puzhudhiyilirundhu Eduthu Kazhuvi Ennai Niruthugireer
    Visuvaasathil Nadattha Urudhiyaai Pazhakkugireer

    Neer Endhan Belanae Belanae Belanae
    Endhan Thunaiyae
    Umakkillai Inaiyae Inaiyae Inaiyae
    En Kanmalaiyae – 2

    1. Ummal Pirandha Naanum
      Indha Ulagai Velluvaen
      Ummai Polavae Pesiyae
      Indha Saathanai Nasukkuvaen – 2
    2. Undhan Vaarthaiyai Pidithu
      Naan Uyaramaaga Vazharvaen
      Undhan Sattham Kaettu
      Naan Unnadhathil Saervaen – 2

    Puzhudhiyilirundhu Ennai Neer Edutheerae
    Thalai Uyarthineerae
    Ennai Ninaithu Azhaitthu Kodutheer Pudhu Jeevan
    En Thalaiyai Neer Abishegitheer
    En Kanmalaiyae Ummai Thudhithiduvaen
    Ennai Koduthiduvaen Umakkae Ennaiyae

    1. Thaayai Pol Ennai Anaithu
      Than Jeevan Thandhu Kaattheer
      Thandhai Pol Thozhil Sumandhu
      Maara Anbinaalae Saertheer – 2
  • Eliyaavin Naatkalil

    எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன்
    எங்களின் இந்த நாட்களில் பெரும் காரியம் செய்திடுவார் – 2

    எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
    அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – 2

    1. அதிகார அரியணையில் அமர்ந்திருந்தோர் அலறி நின்றார் – 2
      ஆவியில் அனல்கொண்ட எலியா அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் – 2
    2. காகங்களை கொண்டு கர்த்தர் எலியாவை போஷித்தாரே – 2
      மரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்ப செய்தாரே – 2
    3. பனிமலை நிறுத்திடவும் பெருமழை பெய்யப்பண்ணவும் – 2
      அதிகாரம் தந்தார் தேவன் தம் தாசன் எலியாவுக்கு – 2
    4. பாகாலின் கூட்டமெல்லாம் பதில் இல்லாமல் தாளிணைகுனிந்தார் – 2
      பாகால் தெய்வமே அல்ல -என்று நம் தேவன் நிரூபித்தார் – 2
    5. செப்பனிட்டு பலிபீடத்தில் தேவா அக்கினி இறங்கியதால் – 2
      கர்த்தரே தெய்வம் என்று தேவா ஜனங்கள் பணிந்தனரே – 2
    6. இரட்டிப்பான வரங்கள் பெற்ற தேவா தலைமுறை எழும்பிடவே – 2
      தேவனின் முன்னே நிற்போம் நம் இயேசுவை உயர்ந்திடுவோம் – 2
    7. சோர்ந்திட்ட எலியாவை கர்த்தர் தூக்கி நிறுத்தினாரே – 2
      பிரயாணம் வெகு தூரம் உண்டு என்று சொல்லி ஓட வைத்தாரே – 2
    8. பரலோக ரதம் வந்திடும் மகிமையில் நம்மை சேர்ந்திடும் – 2
      ஆயத்தமாகிடுவோம் நாம் அன்பார் இயேசுவை சந்திக்கவே – 2

    Eliyaavin Naatkalil Perum Kaariyam Seitha Devan – 2
    Engalin Indha Naatkalil Perum Kaariyam Seithiduvaar – 2

    Eliyaavin Devan Avar Engal Devan
    Avar Netrum Indrum Endrum Maarathavar – 2

    1. Adhikaara Ariyanaiyil Amarnthirundhoar Alari Nindraar – 2
      Aaviyil Analkonda Eliyaa Anjaamal Nimirnthu Nindraar – 2
    2. Kaagangalai Kondu Karthar Eliyaavai Poshithaarae – 2
      Marithitta Vidhavaiyin Maganai Uyirodu Ezhumba Seithaarae – 2
    3. Panimazhai Niruthidavum Perumazhai Peiyyapannavum – 2
      Adhigaaram Thandhaar Devan Tham Dhaasan Eliyaavukku – 2
    4. Paagaalin Koottamellaam Pathil Illaamal Thaliaikunindhaar – 2
      Paagaal Dheivmae Alla-Endru Nam Devan Niroobithaar – 2
    5. Seppanitta Palipeedathail Deva Akkini Irangiyathae – 2
      Kartharae Dheivam Endru Deva Janangal Paninthanarae – 2
    6. Rettippaana Varangal Pettra Deva Thalaimurai Ezhumbidavae – 2
      Devanin Munnae Nirppom Nam Yesuvai Uyarthiduvoam – 2
    7. Soarnthitta Eliyaavai Karthar Thooki Niruthinaarae – 2
      Prayaanam Vegu Thooram Undu Endru Solli Oada Vaithaarae – 2
    8. Paraloga Radham Vandhidum Magimaiyil Nammai Serthidum – 2
      Aayathamaagiduvoam Naam Anbar Yesuvai Santhikkavae – 2
  • El-Elyon – Unnathamanavarin Uyar

    உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் – 2
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரமசிலாக்கியமே

    எல் – எலியோன் நீர் உன்னதமானவரே
    எல் – ஷடாய் நீர் சர்வ வல்லவரே
    எல்லா வாதையில் இருந்தெங்கள் தேசத்தை விடுதலையாக்குமே
    கொள்ளை நோய்களிலிருந்து எங்கள் ஜனங்களை காப்பாற்றும் இயேசுவே

    1. வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது என்று சொன்னவரே
      பொல்லாப்பு நேரிடாது , நேரிடாது என்று உரைத்தவரே
      சிலுவையிலே எனக்காய் மரித்தீரே
      என் நோய்கள் எல்லாம் நீர் சுமந்தீரே
      உம் தழும்புகளால் நான் சுகமானேன்
      உம் தழும்புகளால் நான் குணமானேன்
    2. வழிகளெல்லாம் என்னை காக்கும்படி தம் தூதர்களுக்கு கட்டளையிட்டீர்
      என் பாதம் கல்லில் இடறாதபடி தம் கரங்களினால் என்னை ஏந்துகின்றீர்
      இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
      பயப்படேனே நான் கலங்கீடேனே
      இரத்தத்தினால் நான் மீட்கப்பட்டேன்
      இயேசு இரத்தத்தினால் நான் மீட்கப்பட்டேன்

    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார்
    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார்


    Unnathamanavarin Uyar Maraivilirukiravan – 2
    Sarva Vallavarin Nilalil Thanguvan
    Ithu Parama Silakiyamae

    EL-ELYON Neer Unnathamanavarae
    EL-SHADDAI Neer Sarva Vallavarae
    Yalla Vaathaiyilirunthengal Thesathai Viduthalaiyakumae
    Kollai Noigalilirunthu Yangal Janangalai Kaapartrum Yaesuvae

    1. Vaathai Unthan Koodarathai Anugathu Yandru Sonnavarae
      Pollapu Naeridathu , Naeridathu Yandru Oraithavarae
      Siluvaiyilae Yanakkai Maritheerae
      Yan Noigal Yallam Neer Sumantheerae
      Um Thalumbugalal Naan Sugamanaen
      Um Thalumbugalal Naan Gunamanaen
    2. Valigalellam Yannai Kaakumpadi Tham Thoothargaluku Kattalaiyiteer
      Yan Paatham Kallil Idarathapadi Tham Karangalinal Yannai Yaenthuginreer
      Irulil Nadamaadum Kollai Noikum
      Payapadaenae Naan Kalangidaenae
      Rathathinal Naan Meetkapattaen
      Yaesu Rathathinal Naan Meetkapattaen

    Avar Settaiyin Keel Adaikalam Pugavae
    Tham Siragugalal Mooduvar
    Avar Settaiyin Keel Adaikalam Pugavae
    Tham Siragugalal Mooduvar

  • Ebinesarae Ebinesarae

    இம்மட்டும் உதவின தேவன் நீர்
    இறுதிவரை என்னோடு நீர்
    ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்
    ஆதரவாய் என் உடனிருந்தீர்

    எபினேசரே எபினேசரே
    கோடி கோடி நன்றி ஐயா

    1. காற்றும் மழையும் பார்க்கவில்லை
      உள்ளங்கை மேகமும் காணவில்லை
      வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
      வளமாக மாற்றி விட்டீர்
    2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
      அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
      அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
      கரங்களில் ஏந்திக் கொண்டீர்
    3. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
      கிருபையினாலே அழைத்து வந்தீர்
      அழியாமல் காத்து கானானில் சேர்த்து
      உம் துதி சொல்ல வைத்தீர்

    Immattum Uthavina Dhevan Neer
    Iruthi Varai Ennodu Neer
    Aacharyamaai Dhinam Nadathi Vantheer
    Aatharavaai En Udan Iruntheer

    Ebinesarae Ebinesarae
    Koadi Koadi Nandri Ayya

    1. Kaatrum Mazhaiyum Paarkkavillai
      Ullangai Megamum Kaanavillai
      Vaaikkaalkalellam Thanneerai Thanthu
      Valamaaga Maattri Vitteer
    2. Theeyum Thanneerum Kadakka Vaitheer
      Akkini Choolaiyil Nadakka Vaitheer
      Avinthu Pokaamal Neeril Moozhkaamal
      Karangalil Yeanthikondeer
    3. Raththam Sinthi Meettukkondeer
      Kirubaiyinaale Azhaithu Vantheer
      Azhiyaamal Kaathu Kaanaanil Serththu
      Um Thuthi Solla Vaitheer
  • Dhinanthorum Nandri Solluvaen

    தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
    அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
    அதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்
    நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர்
    பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர்
    அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை
    காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர்
    நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை

    உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
    நன்றி கூறுவேன் நானும்
    உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன்
    உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
    நன்றி கூறுவேன் நானும்
    உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன்

    தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
    அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
    சுகம் தந்து பெலனும் தந்து உண்ண உணவும் தந்தீர்
    உடுத்த நல்ல உடையும் தந்தீர் அரவணைப்பும் தந்தீர்
    ஒன்றுக்கும் உதவாத களிமண்ணை போல் இருந்தேன்
    உமது கரத்தால் என்னை வனைந்தீரையா
    சங்கிலிகள் கட்டப்பட்ட பைத்தியம் போல் இருந்தேன்
    ஞானிகளை வெட்கப்பட வைத்தீர்ஐயா

    தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
    அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
    நான் தூங்க என்னை காக்க நீரோ தூங்குவதில்லை
    கடும் புயலின் நடுவிலும் சமாதான குறைவு இல்லை
    வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கின்றீர்
    பாதாளத்தில் படுத்தாலும் அங்கும் இருக்கின்றீர்
    நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
    உம்மை மறுதலித்தாலும் நீரோ மறுப்பதில்லை


    Dhinanthorum Nandri Solluvaen Ennai Kaatha Umakku
    Adhisayammaai Ennai Nadathum Adhisayavaan Umakku
    Adhikaalai Ezha Seitheer Ummai Thudhikka Seidheer
    Naal Muzhudhum Kooda Vandheer Enakku Munbaai Sendreer
    Panjathilum Ennai Nokki Kaagathai Anupugireer
    Appathukkum Thanneerukkum Kuraivae Illa
    Kaaliyaana Kudangal Ellam Ennaiyaal Nirappugireer
    Neer Ennai Boshipadhaal Kavala Illa

    Ummai Mutham Seidhu Mutham Seidhu
    Nandri Kooruvaen Naanum
    Um Paadhathai En Kanneerinaal Nanaithu Kazhuvuvaen
    Ummai Mutham Seidhu Mutham Seidhu
    Nandri Kooruvaen Naanum
    Um Paadham Patri Vilaiyuyarntha Thailam Poosiduvaen

    Dhinanthorum Nandri Solluvaen Ennai Kaatha Umakku
    Adhisayammaai Ennai Nadathum Adhisayavaan Umakku
    Sugam Thandhu Belanum Thandhu Unna Unavum Thandheer
    Udutha Nalla Udayum Thandheer Aravanaipum Thandheer
    Ondrukkum Udhavaadha Kalimannai Pol Irundhaen
    Umadhu Karathaal Ennai Vanaindheeraiyaa
    Sangiligal Kattapatta Paithiyam Pol Irundhaen
    Gnyanigalai Vetkapada Veitheeraiya

    Dhinanthorum Nandri Solluvaen Ennai Kaatha Umakku
    Adhisayammaai Ennai Nadathum Adhisayavaan Umakku
    Naan Thoonaga Ennai Kaakka Neero Thonguvahillai
    Kadum Payalin Naduvilum Samaadhaana Kuraivu Illai
    Vaanathirku Aerinaalum Neer Enge Irukkindreer
    Paadhaalathil Paduthaalum Angum Irukkindreer
    Naan Ummai Marandhaalum Neer Ennai Marappadhillai
    Ummai Marudhalithaalum Neero Maruppadhillai