Author: admin

  • Ezhumbi Vaa

    உன் நாட்கள் எல்லாம் வீணானதா
    முயற்சி எல்லாம் பாழானதா
    ஒன்றுக்கும் உதவாகாதவனென்று
    உன் நம்பிக்கையை இழந்திட்டாயா

    போராட பெலன் இல்லை என்றாலும்
    விட்டு விடு என்று உலகம் சொன்னாலும்
    முடியாதென்று பட்டம் அளித்தாலும்
    முடியும் என்று இயேசு சொல்கிறார்

    எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்
    எழும்பி வா நீ
    மேலே பறந்திட எழும்பி வா நீ
    வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா
    நீ எழும்பி வா நீ -2

    மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்
    உனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்
    கனவில் இல்லா மேலான வாழ்வை
    பூமியில் வாழ உதவி செய்வார்
    காத்திருந்த காலம் முடிந்தது
    காரியங்கள் மாறப் போகுது
    ஆச்சர்யங்கள் கதவ தட்டுது
    ஆட்சி செய்யும் நேரம் வந்தது

    எழும்பி வா நீ எழும்பி வா நீ
    எழும்பி வா நீ எழும்பி வா
    நீ எழும்பி வா நீ
    எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்
    எழும்பி வா நீ
    மேலே பறந்திட எழும்பி வா நீ
    வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா
    நீ எழும்பி வா நீ

    எழும்பி வா நீ…
    அச்சத்தை எதிர்கொண்டு
    அலைகள் போல் மேலே உயர எழும்பிடு
    எழும்பி வா நீ….
    போனதை மறந்திடு புதிய வழி நோக்கி
    தொடர்ந்து ஓடிடு
    எழும்பி வா நீ…
    சோகத்தை தள்ளிவிட்டு எதிரி முன்
    நீ வாழ்ந்து காட்டிடு
    எழும்பி வா நீ…
    சந்தேகத்தை விடு உன்னால் முடியும்
    என்று நம்பிடு…


    Un Naatkal Ellam Veenaanathaa
    Muyarchchi Ellam Paazhanathaa
    Ondrukkum Uthavaagaathavan Endru
    Un Nambikkayai Izhanthittaaya

    Poraada Belan Illai Endraalum
    Vittu Vidu Endru Ulagam Sonnalum
    Mudiyathendru Pattam Aliththaalum
    Mudiyum Endru Yesu Solgiraar

    Ezhumbi Vaa Nee Vittukkodukkaamal
    Ezhumbi Vaa Nee
    Melae Paranthida Ezhumbi Vaa Nee
    Vaazhkkai Jeyiththida Ezhumbi Vaa
    Nee Ezhumbi Vaa Nee-2

    Manathin Manathin Yekkangal Ellam
    Unakkai Unakkai Niraivetri Mudippar
    Kanavil Illa Melana Vazhvai
    Boomiyil Vaazha Uthavi Seivaar
    Kaththiruntha Kaalam Mudinthathu
    Kariyangal Maara Poguthu
    Aachcharyangal Kathavai Thattuthu
    Aatchi Seyyum Neram Vanthathu

    Ezhumbi Vaa Nee Ezhumbi Vaa Nee
    Ezhumbi Vaa Nee Ezhumbi Vaa
    Nee Ezhumbi Vaa Nee
    Ezhumbi Vaa Nee Vittukkodukkaamal
    Ezhumbi Vaa Nee
    Melae Paranthida Ezhumbi Vaa Nee
    Vaazhkkai Jeyiththida Ezhumbi Vaa
    Nee Ezhumbi Vaa Nee

    Ezhumbi Vaa Nee…
    Achchaththai Ethir Kondu
    Alaigal Pol Melae Uyara Ezhumbidu
    Ezhumbi Vaa Nee…
    Ponathai Maranthu Puthiya Vazhi Nokki
    Thodarnthu Odidu
    Ezhumbi Vaa Nee…
    Sogaththai Thalli Vittu Ethiri Mun
    Nee Vaazhnthu Kaatrodu
    Ezhumbi Vaa Nee…
    Santhegaththai Vidu Unnaal Mudiyum
    Endru Nambidu….

  • Ethanayo Naamangal

    எத்தனையோ நாமங்கள் தேவனே
    அத்தனையும் உமக்கு பொருந்துமே – 2
    யேகோவா தேவனே எபினேச பிரபுவே
    இம்மனுவேலரே ஏசுவே – 2

    எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் – 2
    எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பது
    அதி உன்னத தேவன் என்று ஆகுமே – 2

    யேகோவா தேவனே எபினேச பிரபுவே
    இம்மனுவேலரே ஏசுவே – 2

    எத்தனையோ நாமங்கள் தேவனே
    அத்தனையும் உமக்கு பொருந்துமே – 2
    யேகோவா தேவனே எபினேச பிரபுவே
    இம்மனுவேலரே ஏசுவே – 2

    என்றென்றும் உயிரோடு இருப்பவர்
    எல் ஓலம் என்று அழைக்கிறோம் – 2
    நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்
    யேகோவா ஷம்ம என்று சொல்கிறோம் – 2

    யேகோவா தேவனே எபினேச பிரபுவே
    இம்மனுவேலரே ஏசுவே – 2

    எத்தனையோ நாமங்கள் தேவனே
    அத்தனையும் உமக்கு பொருந்துமே – 2
    யேகோவா தேவனே எபினேச பிரபுவே
    இம்மனுவேலரே ஏசுவே – 2


    Ethanayo Naamangal Devanae
    Aththanayum Umakku Porundhumae – 2
    Yegovaa Devanae Ebinesa Prabuvae
    Immanuvelarae Yesuvae – 2

    El rohi Naamam Ullavar Engalai Kaangindra Devanaam – 2
    El Elyon Naamaththai Udaiyavar Enbadhu
    Adhi Unnadha Devan Endru Aagumae – 2

    Yegovaa Devanae Ebinesa Prabuvae
    Immanuvelarae Yesuvae – 2

    Ethanayo Naamangal Devanae
    Aththanayum Umakku Porundhumae – 2
    Yegovaa Devanae Ebinesa Prabuvae
    Immanuvelarae Yesuvae – 2

    Endrendrum Uyirodu Iruppavar
    El Olam Endru Azhaikkirom – 2
    Namakkendrum Thunaiyaai Nammodu Iruppadhaal
    Yegova Shamma Endru Solgirom – 2

    Yegovaa Devanae Ebinesa Prabuvae
    Immanuvelarae Yesuvae – 2

    Ethanayo Naamangal Devanae
    Aththanayum Umakku Porundhumae – 2
    Yegovaa Devanae Ebinesa Prabuvae
    Immanuvelarae Yesuvae – 2

  • Erusalem Erusalem

    எருசலேம் எருசலேம்
    உன்னை ஸ்னேஹிப்போர் சுகித்திருப்பார்கள் – 2
    உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்
    அரண்மனைக்குள்ளே பூரண சுகம் – 2 – எருசலேம் …

    1. மணவாளன் வரும் நேரத்தில்
      மணவாட்டி ஆயத்தமாக்கு – 2
      இமைப்பொழுதில் உன்னை கை விட்டேன் – 2
      மிகுந்த இரக்கங்களால் சேர்த்து கொள்கிறேன்

    விழித்தெழு சீயோன் ஏ வல்லமையால் தரித்துக்கொள் – 2 – எருசலேம் …

    1. நான் உன்னை முத்திரை போல
      இருதயத்தில் வைத்து கொள்கிறேன்
      நான் என்னை முத்திரை போல
      இருதயத்தில் வைத்து கொள்ளுமே
      என்னிடத்தில் திரும்பிடுவாயே – 2
      உன்னை நான் மீட்டர் கொள்கிறேன் – 2
    2. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
      ஒருவனும் என்னை எதிர்பதில்லையே – 2
      மோசேயோடு இருந்தது போல – 2
      நான் உன்னோடும் கூட இருப்பான் – 2

    Erusalem Erusalem
    Unnai Snehippor Suhithiruppaarkal – 2
    Un Alangathrkkulle Samaathanam
    Aranmanaikkulle Poorana Sugam – 2 – Erusalem…

    1. Manavaalan Varum Nerathil
      Manavaatti Aayathamaaku – 2
      Imaipoluthil Unnai Kai Vitten – 2
      Miguntha Irakkangalaal Serthu Kolkiren

    Vilithelu Zion E Vallamaiyal Tharithukkol – 2 – Erusalem…

    1. Naan Unnai Muthirai Pola
      Iruthayathil Vaithu Kolkiren
      Naan Ennai Muthirai Pola
      Iruthayathil Vaithu Kollume
      Ennidathil Thirumpiduvaaye – 2
      Unnai Naan Meettur Kolkiren – 2
    2. Jeevanulla Naatkalellam
      Oruvanum Ennai Ethirpathilaiye – 2
      Moseyodu Iruntathu Pola – 2
      Naan Unnodum Kooda Iruppan – 2
  • Erusalaemae Erusalaemae

    எருசலேமே எருசலேமே
    கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே – 2
    எருசலேமே

    1. கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
      நினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே – 2
      கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல் – 2
      கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் – 2
    2. அத்திமரம் துளிர்க்கும் பொது வசந்த காலமே
      மணவாளன் இயேசு வருகையும் சீக்கிரமே – 2
      வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு – 2
      மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் – 2

    Erusalaemae Erusalaemae
    Karthar Unnai Nesikkiraar Erusalaemae – 2
    Erusalaemae

    1. Kani Kodukkum Kaalaththilae Koduthuvidu
      Ninaiyaadha Naatkkal Unmael Varugindradhae – 2
      Kozhithan Kunjugalai Kootti Saerpadhu Pol – 2
      Kartharum Unnai Saerthiduvaar – 2
    2. Aththimaram Thulirkkum podhu Vasantha Kaalamae
      Manavaalan Yesu Varugaium Seekkiramae – 2
      Vaanathin Maththiyilae Ekkaala Thoniyodu – 2
      Manavaatti Unnayum Saerthiduvaar – 2
  • Eriko En Mun Veezhnhthituthae

    எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
    நீர் என்னோடு இருப்பதினால்
    செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே
    நீர் என்னுள்ளே இருப்பதினால்-2

    உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
    தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
    உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
    இராஜா நீரே-2

    1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர்
    கிருபையால் சேர்த்துக்கொண்டீர்
    பெலவானாய் மாற்றிவிட்டீர்
    புது வாழ்வு தந்துவிட்டீர்

    நீதியில் நடத்துகின்றீர்
    அன்பினால் தாங்குகின்றீர்-2

    2.பூரண தேவன் நீரே
    மகிமையின் இராஜன் நீரே
    அற்புத தேவன் நீரே
    உண்மையின் இராஜன் நீரே

    (நான்) தவறின நேரங்களில்
    எனக்கு தவறாமல் உதவினீரே-2


    Eriko en mun veezhnhthituthae
    Neer ennoadu iruppathinaal
    Senkadal irandaay pilanthituthae
    Neer ennullae iruppathinaal-2

    Ummai potri potri thuthippaen
    Thinamum uyarththi uyarththi paaduvaen
    Ummai potri potri thuthippaen
    Raajaa neerae-2

    1.Ennai neer meettukkondeer
    Kirupaiyaal Saerththukkondeer
    Belavaanaay maatrivitteer
    Puthu vaazhvu thanthuvitteer

    Neethiyil nadaththukindreer
    Anbinaal thaankukindreer-2

    2.Poorana thaevan neerae
    Makimaiyin iraajan neerae
    Arputha thaevan neerae
    Unmaiyin iraajan neerae

    (Naan) Thavarina naerankalil
    Enakku thavaraamal uthavineerae-2

  • Enthan Yesuvae Enthan

    எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே
    வாழ்வே நீர் தானே
    எந்தன் இயேசுவே எந்தன் நேசரே
    வாழ்வே நீர் தானே
    என்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன்

    உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
    உம் சித்தம் தான் செய்கிறேன்
    உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
    உம்மை ஆராதிப்பேன் என்றும்
    உம் நாமம் போற்றிடுவேன்

    1. குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்
      என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர் – 2
      முள்முடி வேதனை எனக்காய் ஏற்றீர்
      என்னை மீட்டெடுத்தீர் என்றும்
      என்னை என்னை நேசிக்கின்றீர் – எந்தன் இயேசுவே
    2. முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரே
      சிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே – 2
      மறுவாழ்வு தந்திட மனமுவந்து வந்தவரே
      உம்மை போற்றிடுவேன் என்றும்
      உம் கிருபை தந்திடுமே – எந்தன் இயேசுவே

    Enthan Yesuvae Enthan Rajanae
    Vaazhvae Neer Thaanae
    Enthan Yesuvae Enthan Rajanae
    Vaazhvae Neer Thaanae
    Entrum Ummudan Vaazhthiduvean

    Ummalae Naan Ingu Vaazhkirean
    Um Siththam Than Seikirean
    Ummalae Naan Ingu Vaazhikirean
    Ummai Aarathippaen Entrum
    Um Naamam Pottriduvean

    1. Kurusinil Sinthiya Thooya Rathathaal
      En Paavam Pokki Thooimaiyaakkineer – 2
      Mulmudi Vedhanai Enakkaai Yeatteer
      Ennai Meettu Edutheer Entrum
      Ennai Ennai Nesikinteer – Enthan Yesuvae
    2. Muthukinil Kasaiyadi Enakkaai Sakitheerae
      Siluvaiyin Paaram Enakkaai Sumantheerae – 2
      Maru Vaazhu Thanthida Mananmuvanthu Vanthavarae
      Ummai Pottriduvean Entrum
      Um Kirubai Thanthidumae – Enthan Yesuvae
  • Enthan Ragam

    எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட
    எந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட – 2
    உங்க அன்பு நினைக்கையில்
    என் உள்ளம் பொங்குதே
    உங்க தியாகம் நினைக்கையில்
    நன்றியால் பாடுவேன்

    1. ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்
      ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரே
      வாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்
      வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே
    2. சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்
      உமது கரம் கொண்டு தாங்கினீரய்யா
      வாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போது
      புதிய வழியை காட்டி நடக்க செய்தீரே
    3. என்னையே உமக்காக தந்தேன் இராஜா
      என்னை முற்றிலுமாய் பயன்படுத்துமே
      சிலுவையில் எனக்காக வெற்றி சிறந்தவர்
      உம்மோடு வாழ எனக்கு ஆசை இராஜா

    Enthan Ragam Um Naamam Potrida
    Enthan Moochu Um Vaarthai Pesida – 2
    Unga Anbu Ninaikayil
    En Ullam Pongudhae
    Unga Thiyagam Ninaikayil
    Nandriyal Paduvaen

    1. Agadhavan Endru Palar Thalli Vitaargal
      Analum Neenga Ennai Therindhukondirae
      Vaaku Paninavargal Ellam Marandhu Vitaargal
      Vaakuthatham Thandhu Ennai Uyarthinerae
    2. Siragilla Paravai Pola Alaindha Pothellam
      Ummadhu Karam Kondu Thaangineer Ayya
      Vaazhave Mayam Endru Virakthi Aadain Boodhu
      Puthiya Vazhiya Kaati Nadaka Seithirae
    3. Ennaye Ummakaaga Thandhen Raja
      Ennai Mutrilumaai Paiyan Paduthumae
      Siluvaiyil Enakaaga Vetri Sirandhavar
      Ummudan Vaazha Enakku Asai Raja
  • Enthan Navil Pudhu Pattu

    எந்தன் நாவில் புதுபாட்டு
    எந்தன் இயேசு தருகிறார்

    ஆனந்தம் கொள்ளுவேன்
    அவரை நான் பாடுவேன் – உயிருள்ள
    நாள் வரையில் அல்லேலூயா

    1. பாவ இருள் என்னை வந்து
      சூழ்ந்து கொள்கையில் – தேவனவர்
      தீபமாய் என்னை தேற்றினார்
    2. வாதை நோயும் வந்தபோது
      வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
      துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்
    3. சேற்றில் வீழ்ந்த என்னையவர்
      தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
      ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்
    4. தந்தை தாயும் நண்பர் உற்றார்
      யாவுமாயினார் – நிந்தை தாங்கி
      எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
    5. இவ்வுலக பாடு என்னை
      என்னை செய்திடும் – அவ்வுலக
      வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்

    Enthan Naavil Puthupaattu
    Enthan Yesu Tharukiraar

    Aanantham Kolluvaen
    Avarai Naan Paaduvaen – Uyirulla
    Naal Varaiyil Allaelooyaa

    1. Paava Irul Ennai Vanthu
      Soolnthu Kolkaiyil -Thaevanavar
      Theepamaay Ennai Thaettinaar
    2. Vaathai Nnoyum Vanthapothu
      Vaenndal Kaettittar – Paathai Kaatti
      Thunpamellaam Neekkimeettittar
    3. Settil Veelntha Ennaiyavar
      Thookkiyeduththaar -Naattamellaam
      Jeeva Iraththam Konndu Maattinaar
    4. Thanthai Thaayum Nannpar Uttar
      Yaavumaayinaar – Ninthai Thaangi
      Engumavar Maenmai Solluvaen
    5. Ivvulaka Paadu Ennai
      Ennai Seythidum – Avvulaka
      Vaalkkaik Kaana Kaaththirukkiraen
  • Enthan Kanmalai

    1. புயலின் மத்தியில்
      நீர் நின்றிடு என்றீர்
      நீரே என் சத்துவம்
      என் நம்பிக்கை நீரே

    கடந்த நாட்களில், என்னுடனே இருந்தீர்
    இன்றும் என் அருகில், என் கூடவே வந்தீர்
    வரும் காலங்களிலும் நீர் இருப்பீர்

    எழும்பி வரும், புயல்களிலே
    நீரே எந்தன் கன்மலை
    பொங்கி வரும், அலைகள்மேலே
    உம் பாதத்தின் சுவடுகளே

    1. வியாதியின் மத்தியில்
      நீர் எழும்பு என்றீர்
      யெஹோவா ராபா
      என் சுகம் நீரானீரே

    வியாதியே உன் தலை குனிந்ததே
    என்மேலே உன் அழுகை முடிந்ததே
    என்னை எதிர்க்க கூடிய எது
    ஆயுதங்கள் எதுவும் வைக்காதே


    1. Puyalin Mathiyil
      Neer Nindridu Endreere
      Neere En Sattuvam
      En Nambikkai Neerae

    Kadantha Natkalil, Ennudane Iruntheer
    Indrum En Arigil, En Koodave Vantheer
    Varum Kalangalilum Neer Iruppeer

    Yezhumbi Varum, Puyalgalile
    Neere Enthan Kanmalai
    Pongi Varum, Alaigalmele
    Um Pathathin Suvadugale

    1. Vyathiyin Mathiyil
      Neer Yezhumbu Endreere
      Yehovah Raapha
      En Sugam Neeraneere

    Vyadhiye Un Thalai Kunindhadhe
    Enmele Un Alugai Mudindhadhe
    Ennai Yedhirka Koodiya Yethu
    Ayuthangal Yethuvum Vaikadhe

  • Enthan Chinna Idhayam

    எந்தன் சின்ன இதயம் அதில்
    எத்தனை காயங்கள்
    இருள் சூழ்ந்த உலகில் தானே
    எத்தனை பாரங்கள்

    1. தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்
      தொல்லைகளே தொடர்கதை ஆனால் – 2
      ஏங்கி நிற்கும் என் இதயமே
      உன்னால் தாங்கிட தான் முடியுமோ – 2
    2. என் காயம் ஆற்ற காயப்பட்டீரே
      என் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே – 2
      கழுவும் என்னை உம் இரத்தத்தால் (எந்தன்)
      பாவ கறை நீங்க – 2
    3. அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்
      வழுவாமல் காத்தார் என் நேசரே – 2
      குயவன் கையில் மண்பாண்டமாய்
      இயேசு என்னை வனைந்திடுவார் – 2

    எந்தன் சின்ன இதயம் அதில்
    என்றும் இயேசுவே
    இருள் சூழ்ந்த உலகில் தானே
    என் துணை இயேசுவே


    Enthan Chinna Idhaiyam Athil
    Ethanai Kayangal
    Irul Soozhntha Uzhagil Thaane
    Ethanai Barangal

    1. Thottathellam Thozhvi Aanal
      Thollaigaley Thodar Kadhai Aanal
      Aengi Nirkum En Idhaiyamey
      Unnal Thaangidathan Mudiyumo
    2. En Kaayam Aatra Kayapatteerey
      En Thunbam Neeka Norukka Patteerey – 2
      Kazhuvum Ennai Um Rathathaal (Enthan)
      Pava Karai Neenga – 2
    3. Azhaiyena Thunbam Ennai Soozhntha Pothum
      Vazhuvaamal Kathaar En Nesarey – 2
      Kuyavan Kaiyil Manpaandamaai
      Yesennai Vanainthiduvaar – 2

    Enthan Chinna Idhaiyam Athil
    Endrum Yesuvey
    Irul Soozhntha Uzhagil Thaane
    En Thunai Yesuvey