Category: Song Lyrics

  • Ennai Kondru Potalum

    என்னை கொன்று போட்டாலும்
    உம்மை நம்பியிருப்பேன்
    நான் சாகும் வரையில்
    உம்மை நம்பியிருப்பேன் – 2

    என்னை அழைத்தவரே
    உம்மை ஆராதிப்பேன்
    உண்மையுள்ளவரே
    உம்மை ஆராதிப்பேன் – 2

    நான் ஆராதிக்கும் தேவன்
    என்னை தப்புவிப்பாரே
    என்னை விடுவியாமல் போனாலும்
    (நான்) ஆராதிப்பேன் – 2

    1. தாவீதைப் போல் என்னை விரட்டி
      கொல்ல நினைத்தாலும்
      ஆமான் தூக்கு மரங்களை
      எனக்காய் செய்தாலும் – 2
    2. யோசேப்பை போல் என்னை அடித்து
      குழியில் போட்டாலும்
      யூதாசை போல் முத்தம் கொடுத்து
      காட்டிக் கொடுத்தாலும் – 2

    Ennai kondru potalum
    Ummai nambi irupaen
    Naan sagum varaiyil
    Ummai nambi irupaen – 2

    Ennai azhaithavarae
    Ummai aaradhipaen
    Unmaiyullavarae
    Ummai aaradhipaen – 2

    Naan aaradhikum dheivam
    Ennai thapuviparae
    Ennai viduviyamal ponalum
    (Naan)Aaradhipaen – 2

    1. Dhavithal pol ennai virati
      Kola ninaithalum
      Aaman thooku marangalai
      Enakai seithalum – 2
    2. Yosepai pol ennai adithu
      Kuliyil potalum
      Yudhasai pol mutham koduthu
      Kaati koduthalum – 2
  • Ennai Kaanbavare

    என்னை காண்பவரே ஆராதனை
    என்னை காப்பவரே ஆராதனை – 2

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை – 2

    1. புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
      அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் – 2
      உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல
      நீர் இருப்பதனால் குறையும் இல்ல – 2
    2. சாத்தானின் தலையை நசுக்கினீரே
      பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே – 2
      உம் வல்லமைக்கு ஈடு இல்ல
      நீர் இருப்பதனால் தோல்வி இல்ல – 2

    Ennai Kaanbavare Aarathanai
    Ennai Kaappavarae Aarathanai – 2

    Aarathanai Aarathanai
    Aarathanai Aarathanai – 2

    1. Pullulla Idanggalil Meikkindreer
      Amarntha Thannirandai Serkkindreer – 2
      Ummai Pola Nalla Meippan Illa
      Neer Iruppathinaal Kurayum Illa – 2
    2. Sathanin Thalayai Nasukkinirae
      Paavathai Siluvayil Arainthittirae – 2
      Um Vallamaikku Eedu Illa
      Neer Iruppathinaal Tholvi Illa – 2
  • Ennai Azhaitha

    என்னை அழைத்த என் அன்பே ஏசையா
    உம்மை மறவேன் நான் உம்மை மறவேன்

    1. உம் பார்வை ஒன்றே போதுமே
      என் பாவமெல்லாம் நீங்குமே
      எனக்காக உம் ஜீவன் தந்திர
      எந்தன் ஜீவனும் நீர் தானையா
    2. குப்பையாக இருந்த என்னையும்
      உயர்த்திவைத்த என் ஏசுவே
      உந்தன் நாமத்தையே உயர்த்த
      என்னை பயன்படுத்தும் என் ஏசுவே
    3. உலகம் என்னை வெறுத்தாலும்
      நண்பேன் என்னை மறந்தாலும்
      என்னை மறவாத மணவாளனே
      என்றும் மாறாத ஏசுவே

    Ennai azhaitha en anbe yesaiyaa
    Ummai maraven naan ummai maraven

    1. Um paarvai ondre podhume
      En paavamellam neengumey
      Enakaga um jeevan thandhir
      Endhan jeevanum neer dhaanaiyaa
    2. Kuppaiyaaga irundha ennaiyum
      Uyarthivaitha en yeshuve
      Undhan naamththaiye uyartha
      Ennai bayanpaduththum en yeshuve
    3. Ulagam ennai veruththaalum
      Nanben ennai marandhaalum
      Ennai maravaadha manavaalane
      Endrum maaraadha yesuve
  • Enna Seiyya Virumbukintreer

    என்ன செய்ய விரும்புகின்றீர்
    தேவ என்ன செய்ய விரும்புகின்றீர்

    என்னை தாயின் கருவில்
    தெரிந்தெடுத்தவரே நான்
    என்ன செய்ய விரும்புகின்றீர்

    1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்
      அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்
      கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லை
      கர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை
    2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்க
      தவறாமல் பேசும் உம் சித்தம் செய்ய
      பாடுகளின் பாதை ஆனாலும்
      ஓடுவேன் உமக்காக எந்நாளும்
    3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தை
      உம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்க
      உந்தனின் சமூகத்தில் நிற்கும் போது
      நான் நம்பினவன் என்று என்னை கட்டியணைக்க

    Enna Seiyya Virumbukintreer
    Dheva Enna Seiyya Virumbukintreer

    Ennai Thaayin Karuvil
    Therindheduthavare Naan
    Enna Seiyya Virumbukintreer

    1. Azhaitheere Ennai Um Sevaikkaai
      Arpanithen Naan Um Thevaikkaai
      Kalappaiyil Kai Vaithu Thirumbuvathillai
      Karthar Neer Iruppadhaal Kalanguvathillai
    2. Kaathirupen Um Satham Ketka
      Thavaraamal Pesum Um Sitham Seiyya
      Paadugalin Paadhai Aanaalum
      Oduven Umakkaga Ennaalum
    3. En Kaiyil Neer Kodutha Oozhiyathai
      Um Naamam Magimaikkai Seithu Mudikka
      Undhanin Samugathil Nirkkum Podhu
      Naan Nambinavan Endru Ennai Kattiyanaikka
  • Enna En Anandham

    என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
    சொல்லக்கூடாதே
    மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
    மன்னித்து விட்டாரே

    கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
    மகிழ் கொண்டாடுவோம்
    நாடியே நம்மைத் தேடியே வந்த
    நாதனைப் போற்றிடுவோம்

    பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
    பரிகரித்தாரே
    தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
    தேற்றியே விட்டாரே

    அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
    அருளிதனாலே
    நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
    பகரவேண்டியதே

    வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
    ஜெய கொடியுடனே
    மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
    மன்னனைத் தோத்தரிப்போம்.


    Enna En Aanantham Enna En Aanantham
    Sollakkoodaathae
    Mannan Kiristhu En Paavaththai Ellaam
    Manniththu Vittarae

    Kooduvom Aaduvom Paaduvom Nantay
    Makil Konndaaduvom
    Naatiyae Nammaith Thaetiyae Vantha
    Naathanaip Pottiduvom

    Paavangal Saapangal Kopangal Ellaam
    Parikariththaarae
    Thaevaathi Thaevan En Ullaththil Vanthu
    Thaettiyae Vittarae

    Atchayan Patchamaay Iratchippai Engalukku
    Arulithanaalae
    Nichchayam Suvaamiyaip Pattiyae Saatchi
    Pakaravaenntiyathae

    Vennnangi Ponmuti Vaaththiyam Maelveettil
    Jeya Kotiyudanae
    Mannnulakil Vanthu Vinnnulakil Senta
    Mannanaith Thoththarippom.

  • Engum Pugal Yesu

    எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே
    எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
    உங்களையல்லவோ
    உண்மை வேதங் காக்கும்
    உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்

    1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
      அதை அறிந்து துதி செய்குவீர்
      தாயினும் மடங்கு சதம் அன்புடைய
      சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்
    2. கல்வி கற்றவர்கள்
      கல்வி கல்லாதோர்க்குக்
      கடன் பட்டவர் கண்திறக்கவே!
      பல்வழி அலையும்
      பாதை தப்பினோரைப்
      பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்!
    3. தாழ்மை சற்குணமும் தயை
      காருண்யமும்
      தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
      பாழுந்துர்க்குணமும்
      பாவச் செய்கையாவும்
      பறந்தோடப் பார்ப்பதுங்கள்
      பாரமன்றோ?
    4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச்
      செல்ல
      தூதர் நீங்களே தூயன் வீரரே!
      கர்த்தரின் பாதத்தில்
      காலை மாலை தங்கிக்
      கருணை நிறை வசனம் கற்றிடுவீர்!

    Engum Pukal Yesu Iraajanukkae
    Elil Maatchimai Valar Vaaliparae!
    Ungalaiyallavo
    Unnmai Vaethang Kaakkum
    Uyar Veerarenap Pakthar Othukiraar

    1. Aayirath Thoruvar Aaveerallo Neerum
      Athai Arinthu Thuthi Seykuveer
      Thaayinum Madangu Satham Anputaiya
      Saami Yesuvukkithayam Thanthiduveer
    2. Kalvi Kattavarkal
      Kalvi Kallaathorkkuk
      Kadan Pattavar Kannthirakkavae!
      Palvali Alaiyum
      Paathai Thappinoraip
      Parinthu Thiruppa Nitham Paarththiduveer!
    3. Thaalmai Sarkunamum Thayai
      Kaarunnyamum
      Thalaippathallo Thakuntha Kalvi?
      Paalunthurkkunamum
      Paavach Seykaiyaavum
      Paranthodap Paarppathungal
      Paaramanto?
    4. Suththa Suvisesham Thurithamaaych
      Sella
      Thoothar Neengalae Thooyan Veerarae!
      Karththarin Paathaththil
      Kaalai Maalai Thangik
      Karunnai Nirai Vasanam Kattiduveer!
  • Engal Thesathirku Neer Vendume

    எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
    புதிய சுதந்திரம் தாருமே
    பாவமே இந்த உலகத்தை நரகமாய் மாற்றுதே

    கொள்ளை நோய்கள் இங்கு பெருகுதே
    கொலை வெறிகளும் இங்கு கூடுதே
    விபச்சாரமும் வேசித்தனங்களும் கலாச்சாரமாய் மாறுதே

    ஜாதி கலவரங்கள் கூடுதே
    இந்த மண்ணில் நிம்மதி போனதே
    வலியிலே கதறும் குரல் இன்று பாடலாய் மாறுதே

    சாலையில் உறங்கியே வாழும் மக்களை பாருமே
    வறுமையால் கண்ணீரே இங்கு உணவாய் மாறுதே

    இந்த நிலையை மாற்றவே
    எங்கள் வறுமை ஓழியவே
    கரங்களை உயிரத்தியே உம்மை
    அழைக்கிறோம் இயேசுவே.

    வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்
    எங்கள் இயேசுவே
    ஒரு மாற்றத்தை நீர் தாருமே
    எங்கள் நிலமையை நீர் மாற்றுமே

    எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
    எங்கள் ஜனங்களை நீர் பாருமே
    உம் வருகைக்கு எங்களை நீர் ஆயத்தப்படுத்துமே

    எங்கள் கண்கள் திறக்கப்பட வேண்டுமே
    மூட நம்பிக்கை மாறவேண்டுமே
    இயேசுவே தெய்வமென்று எங்கள் தேசம் அறியனுமே

    உம்மால் கூடாதது இங்கு ஒன்றும் இல்லையே
    ஒரு வார்த்தை சொன்னலே எங்கள் தேசம் மாறுமே

    ஒரு எழுப்புதல் தொடங்கவே ஒரு மனதாய் ஜெபிக்கின்றோம்
    தேசங்கள் முழுவதும் உம்மை அறியனுமே

    சேற்றுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்
    உம் உதவியை நாங்கள் நோக்கி இங்கே நிற்கிறோம்
    அன்போடு எங்கள் பாருமே

    எங்கள் துக்கத்தை சந்தோமாய் மாற்றிடும் இயேசுவே


    Engal Dhesathurkku Neer Vendumae
    Pudhiya Sudhandhiram Tharumae
    Pavamae Indha Ullagathi Naragamai Mattrudhae
    Kollai Noikalum Ingu Perugudhae
    Kolai Verigalum Ingu Kududhae
    Vibacharammum Vaesithanangalum Kalacharamai Marudhae

    Jadhi Kalavarangal Kududhae
    Indhamannil Nimmadhi Ponadhae
    Valiyillae Kadharum Kural Indru Padalai Marudhae

    Salaiyil Urangiyae Vazhum Makkalai Parumae
    Varumaiyaal Kaneerae Engu Unavai Marudhae
    Endha Nilaiyai Mattravae
    Engal Varumai Ozhiyavae
    Engal Karangalai Uyarthiyae
    Ummai Azhaikirom Yessuvae

    Varummae Engal Yesuvae
    Ummai Azhaikirom Engal Yesuvae
    Oru Mattrathai Tharumae
    Engal Nilamayai Neer Mattrumae

    Engal Dhesathurku Neer Vendumae
    Engal Janangalai Neer Parumae
    Um Varugaiku Engalai Neer Ayathapaduthumae
    Engal Kangal Thirakapada Vendumae
    Mooda Nambikkai Maaravendumae
    Yesuvae Deivam Endru
    Engal Dhesam Ariyanumae

    Ummal Kudadhadhu Ingu Ondrumilaye
    Oru Varthai Sonnalae
    Engal Dhesam Marumae
    Oru Ezhupudhal Thodangavae
    Muzhu Manadhai Jebikindrom
    Dhesangal Muzuvadhum Ummai Ariyanumae.

    Varummae Engal Yesuvae
    Ummai Azhaikirom Engal Yesuvae
    Oru Maattrathai Neer Tharumae
    Engal Nilamayai Neer Maattrumae

    Saetrukul Muzhgi Kondu Irukkirom
    Um Udhaviyai Nangalnokki Ingu Nirkkirom
    Anbodu Neer Engalai Parumae
    Engal Dhukathai Sandhoshamaimattridum Yesuvae

  • Endhan Meypar Neere

    எந்தன் மேய்ப்பர் நீரே
    என் துணையும் நீரே
    எந்தன் நேசர் நீரே
    வழுவாமல் காப்பவரே

    ஏழை என்னை மறவாமல்
    உம் காருண்யத்தால்
    என்னை பெரியவனாக்கினீர்

    1. ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்
      ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்
      உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கி
      குயவனை போல என்னை வனைந்தீர்
    2. ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்
      அன்பை தேடி ஏங்கி நின்றேன்
      என் தாயை போல என்னை தேற்றி
      என் தகப்பனை போல என்னை சுமந்தீர்

    Endhan Meypar Neere
    En Thuṇaiyum Neere
    Endhan Naicar Neere
    Valuvamal Kaapavare

    Elai Ennai Maraaivamal
    Um Kaarunyataail
    Ennai Periyanakkinir

    1. Onrukkum Udhavadavanay Irundhen
      Odhuukkappattonai Odunki Kidhanden
      Um Anbal Kaṇdu Um Karattal Thukki
      Kuyavanai Pola Ennai Vanaindhir
    2. Adharavattronai Alaindhu Thirindhen
      Anbai Thedi Engi Nindren
      En Thayai Pola Ennai Thetri
      En Tagappanai Pola Ennai Sumandhir
  • Endhan Anbulla Aandavarae

    எந்தன் அன்புள்ள ஆண்டவரே
    ஆயிரம் ஸ்தோத்திரமே
    நீர் செய்த நன்மைக்கெல்லாம்
    நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

    1. ஆபத்து காலத்திலே
      அடியேன் உம்மை நினைத்தேன்
      ஆண்டவா உம் தயவால் நாதா
      ஆசீர்வாதம் நான் பெற்றேன்
    2. இன்று நான் பாடுவது
      உம்மால் தான் யேசுநாதா
      என்றும் நான் பாட வேண்டும் நாதா
      எண்ணில் நீர் வாழ வேண்டும்

    Endhan Anbulla Aandavarae
    Aayiram Sthothiramae
    Neer Seitha Nanmaikellam
    Naadha Sthothiram Sthothiramae

    1. Aabathu Kaalathile
      Adiyen Ummai Ninaithen
      Aandava Um Thayaval Naadha
      Aaservatham Naan Petraen
    2. Indru Naan Paaduvathu
      Ummal Dhan Yesunaadha
      Yendrum Naan Paada Vendum Naadha
      Yennil Neer Vaazha Vendum
  • Enakku Othasai Varum

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்

    1. வானமும் பூமியும் படைத்த
      வல்ல தேவனிடமிருந்தே
      என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
      என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
      நிலைமாறி புவியகன்றிடினும்
      மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
      ஆறுதல் எனக்கவரே
    3. என் காலை தள்ளாட வொட்டார்
      என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
      இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
      இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
      வழுவாமல் காப்பவர் அவரே
      சூரியன் பகலில் சந்திரன் இரவில்
      சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
      ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
      போக்கையும் வரத்தையும் பத்திரமாக
      காப்பாரே இது முதலாய்

    Enakkoththaasai Varum Parvatham Naeraay
    En Kannkalai Aeraduppaen

    1. Vaanamum Poomiyum Pataiththa
      Valla Thaevanidamirunthae
      Ennukkadangaa Nanmaikal Varumae
      En Kannkal Aeraduppaen
    2. Malaikal Peyarnthakantitinum
      Nilaimaari Puviyakantitinum
      Maaridumo Avar Kirupai Ennaalum
      Aaruthal Enakkavarae
    3. En Kaalai Thallaada Vottar
      Ennaik Kaakkum Thaevan Urangaar
      Isravaelaik Kaakkum Nalthaevan
      Iraappakal Urangaarae
    4. Valappakkaththin Nilal Avarae
      Valuvaamal Kaappavar Avarae
      Sooriyan Pakalil Santhiran Iravil
      Sethappaduththaathae
    5. Eththeengum Ennai Anukaamal
      Aaththumaavaik Kaakkumen Thaevan
      Pokkaiyum Varaththaiyum Paththiramaaka
      Kaappaarae Ithu Muthalaay