Blog

  • Neer Seyya Ninaiththathu

    நீர் செய்ய நினைத்தது தடைபடாது
    எனக்காக யாவையும் செய்யும் தேவனே – 2
    உம் வேளைக்காக காத்திருக்க
    பொறுமையை எனக்கு தந்தருளும் – 2

    1. காலங்கள் மாறலாம்
      மனிதர்கள் மாறலாம்
      மாறாத தேவன் இருப்பதால்
      கலக்கம் இல்லை – 2

    என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
    எனக்காக நிறைவேற்றுவீர் – 2

    1. தடை போல சத்துரு
      வாசலை அடைத்தாலும்
      தடைகளை உடைக்கும் நீர்
      என் முன்னாய் நடந்து செல்வீர் – 2

    எனக்காக ஆயத்தம் பண்ணினதை
    என் கண்ணால் காண செய்வீர் – 2


    Neer Seyya Ninaiththathu Thadaipadaathu
    Enakkaaka Yaavaiyum Seiyum Thevane – 2
    Um Velaikkaaga Kaaththirukka
    Porumayai Enakku Thantharulum – 2

    1. Kaalangal Maaralaam
      Manithargal Maaralaam
      Maaratha Thevan
      Iruppathaal Kalakkam Illai – 2

    Ennodu Neer Sonna Vaarththayai
    Enakkaga Niraivetruveer – 2

    1. Thadai Pola Saththuru
      Vaasalai Adaiththaalum
      Thadaigalai Udaikkum Neer
      En Munnay Nadanthu Selveer – 2

    Enakkaga Aayaththam Panninathai
    En Kannaal Kaana Seiveer – 2

  • Neer Podhum Neer Podhum

    நீர் போதும் நீர் போதும்
    உம் அன்பு வினோதம்
    நீர் போதும் நீர் போதும்
    உம் அன்பு எப்போதும்

    1. மாறாத அளவில்லா அன்பு உமது
      உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
      எதிர்பாரா நேசரின்அன்பு உமது
      உம் அன்பு போதும் உம் அன்பு போதும்

    எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
    எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
    குறையாத அன்பு – 2

    1. என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே
      உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
      என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே
      உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்

    எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
    எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
    குறையாத அன்பு – 2

    நீர் போதும் … எக்காலமும்
    நீர் போதும்…..எந்நேரமும்
    உம் அன்பு வினோதம்
    நீர் போதும் … எந்நிலையிலும்
    நீர் போதும்…..சூழ்நிலையிலும்
    உம் அன்பு எப்போதும்…


    Neer Podhum Neer Podhum
    Um Anbu Vinodham
    Neer Podhum Neer Podhum
    Um Anbu Eppodhum

    1. Maratha Alavilla Anbu Umadhu
      Um Anbu Podhum Um Anbu Podhum
      Ethirparatha Nesarin Anbu Umadhu
      Um Anbu Podum Um Anbu Podhum

    Ekkalum Enneramum Maratha Anbu
    Ennilaiyilum Soolnilayilum
    Kuraiyatha Anbu – 2

    1. En Nerukathil Thunai Nindra Nesar Neere
      Ummai Nambi Vandhaen
      En Kanneerai Thudaikindra Thagappan Neere
      Ummai Nambi Vandhaen Ummai Nambi Vandhaen

    Ekkalum Enneramum Maratha Anbu
    Ennilaiyilum Soolnilayilum
    Kuraiyatha Anbu – 2

    Neer Podhum… Ekkalum
    Neer Podhum… Enneramum
    Um Anbu Vinodham
    Neer Podhum… Ennilaiyilum
    Neer Podhum… Soolnilayilum
    Um Anbu Eppodhum…

  • Neer Parthal Pothume

    நீர் பார்த்தால் போதுமே
    உந்தனின் இரக்கம் கிடைக்குமே
    நீ தொட்டால் போதுமே
    சுகம் அங்கு நடக்குமே
    ஒரு வார்த்தை போதுமே
    தேசத்தின் வாதைகள் நீங்குமே
    சிலுவையில் சிந்தின ரத்தமே
    என்னை மன்னித்து மீட்குமே

    இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே
    இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமே
    இயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்
    சர்வாங்க சுகம் தாருமே

    1. தழும்புகளால் குணமாவேன்
      காயங்கள் என்னை சுகமாக்கும் – 2
      நீர் எந்தன் பரிகாரி
      நீர் எந்தன் வைத்தியர்
      இயேசுவே பரிகாரி
      இயேசுவே வைத்தியர்
    2. உன் வசனங்கள் என்னை குணமாக்கும்
      தேசங்களை அது தப்புவிக்கும்
      வாதைகள் அணுகாதே
      பொல்லாப்பு நேரிடாதே
      நீர் எந்தன் மறைவாவீர்
      நீர் எந்தன் நிழல் ஆவீர்
      இயேசுவே நீர் மறைவாவீர்
      இயேசுவே நீர் நிழல் ஆவீர்

    Neer Parthal Pothume Unthanin Irakkam Kidaikume
    Neer Thottal Pothume Segam Angu Nadakkume
    Oru Vaarthai Pothume Desathin Vathaigal Neengume
    Siluvayil Sinthina Rathame Ennai Manithu Meetkume

    IAOMAI – Sugam Tharum Deivame
    IAOMAI – Sugam Ennil Ootrume
    IAOMAI IAOMAI Sarvanga Sugam Tharume – 2

    1. Thazhumbugalal Sugamanen
      Kayangal Ennai Sugamaakkum
      Neer Enthan Parigari, Neer Enthan Vaithiyar
      Yesuve Parigari, Yesuve Vaithiyar
      Yesuve Parigari, Yesuve Vaithiyar
    2. Um Vasanangal Ennai Sugamakkum
      Thesangalai Athu Thappuvikkum
      Vathaigal Anugathe, Pollappu Neridathu
      Neer Enthan Maraivaveer, Neer Enthan Nizhalaveer
      Yesuve Engal Maraivaveer, Yesuve Engal Nizhalaveer
  • Neer Kaithiranthaal

    நீர் கை திறந்தால்
    நான் திருப்தியாவேன்
    நீர் முகம் மறைத்தால்
    நான் திகைத்துப் போவேன் – 2
    நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்
    நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன் – 2

    எல்லாம் நீர்தானய்யா – 2
    என் வாழ்வே நீர்தானய்யா
    எல்லாம் நீர்தானய்யா – 2
    என் உயிரே நீர்தானய்யா

    1. ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே
      சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே – 2
      என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே
      உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே – 2
    2. நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே
      நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே – 2
      உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே
      நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே – 2

    Neer Kaithiranthaal
    Naan Thirupthiyavean
    Neer Mugam Maraithaal
    Naan Thigaithu Povean – 2
    Neer Ninaithaal Needithu Vazhvean
    Neer Maranthal( Naan) Engae Povean – 2

    Ellam Neerthanaiya – 2
    En Vazhvae Neerthanaiya
    Ellam Neerthanaiya – 2
    En Uyirae Neerthaniya

    1. Yeattra Vealaiyil Aagahram Tharubavarae
      Sagala Jeevan Umakaga Kaathirukumae – 2
      En Aaviyin Pasithagam Theerthidumae
      Um Varthaiyinal En Kuraigal Pokkidumae – 2
    2. Neer Paarthal Boomi Ellam Athirnthidumae
      Neer Thottal Malaigal Yaavum Pugainthidumae – 2
      Ummaipola Magimaiyana Deivam Illayae
      Neer Ennodu Irukumpothu Kavalai Illayae – 2
  • Neer Ingu Vasam Seigindrir

    நீர் இங்கு வாசம் செய்கின்றீர்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    நீர் இங்கு கிரியை செய்கின்றீர்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

    பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்
    வாக்கு மாறா இருளில் ஒளியே
    நீரே என் தேவனே- 2

    நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    நீர் இங்கு சுகமாக்குவீர்

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்
    வாக்கு மாறா இருளில் ஒளியே
    நீரே என் தேவனே-2
    என் தேவனே- 8

    மரணத்தை ஜெயித்தீர்
    திரைச்சீலையை கிழித்தீர்
    கல்லறை திறந்து
    என் பாவம் தீர்த்தீர்
    பரலோகம் முழங்கும்
    உம் துதி பாடும்
    என் தேவனே உயிர்த்தெழுந்தீர்
    உம்மைப்போல் யாரும்
    எங்குமே இல்லை
    இன்றும் என்றும் நீரே இராஜா
    இராஜ்ஜியம் உமதே
    மகிமை உமதே
    எல்லா நாமத்திலும் மேலானவர் – 2

    இது அழகிய நாமமே – 2
    இயேசுவின் நாமம் மேன்மையே
    இது அழகிய நாமமே
    ஈடு இணையில்லையே
    இது அழகிய நாமமே
    இயேசுவின் நாமம் – 3

    இது அழகிய நாமமே – 2
    இயேசுவின் நாமம் மேன்மையே
    இது வல்லமையின் நாமமே
    ஈடு இணையில்லையே
    இது அழகிய நாமமே
    இயேசுவின் நாமம்
    இது வல்லமையின் நாமமே
    இயேசுவின் நாமம்
    இது அற்புத நாமமே
    இயேசுவின் நாமம்


    Neer Ingu Vasam Seigindrir
    Arathipen Arathipen
    Neer Ingu Kiriyei Seigindrir
    Arathipen Arathipen

    Pathai Kathuvar Arputham Seivar
    Vaaku Mara Irulil Oliyeh
    Neereh, En Thevaneh
    En Thevaneh – 2

    Neer Ingu Valvei Matruveer
    Arathipen Arathipen
    Neer Ingu Sugamakuveer
    Arathipen Arathipen

    Pathai Kathuvar Arputham Seivar
    Vaaku Mara Irulil Oliyeh
    Neereh, En Thevaneh
    En Thevaneh – 8

    Maranathai Jeyitheer
    Thirai Seelaiyai Kilitheer
    Kalarai Thiranthe En Pavam Theertheer
    Paralogam Mulangum
    Um Thuthi Paadum
    En Thevane Uyirtheluntheer
    Ummai Poly Arum Engume Illai
    Indrum Endrum Neerae Raja
    Rajiyam Umathu Magimai Umathu
    Ella Namathilum Melanavar – 2

    Ithu Alagiya Namame – 2
    Yesuvin Naamam Meinmaiye
    Ithu Alagiya Namame
    Eedu Inaiyilaye
    Ithu Alagiya Namame
    Yesuvin Naamam – 3

    Ithu Alagiya Namame – 2
    Yesuvin Naamam Meinmaiye
    Ithu Valamaiyin Namame
    Eedu Inaiyilaye
    Ithu Alagiya Namame
    Yesuvin Naamam
    Ithu Valamaiyin Namame
    Yesuvin Naamam
    Ithu Arputha Namame
    Yesuvin Naamam

  • Neer Illatha Naalellam

    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

    1. உயிரின் ஊற்றே நீயாவாய்
      உலகின் ஓளியே நீயாவாய்
      உறவின் பிறப்பே நீயாவாய்
      உண்மையின் வழியே நீயாவாய்
    2. எனது ஆற்றலும் நீயாவாய்
      எனது வலிமையும் நீயாவாய்
      எனது அரணும் நீயாவாய்
      எனது கோட்டையும் நீயாவாய்
    3. எனது நினைவும் நீயாவாய்
      எனது மொழியும் நீயாவாய்
      எனது மீட்பும் நீயாவாய்
      எனது உயிர்ப்பும் நீயாவாய்

    Neer Illaatha Naalellaam Naalaakumaa
    Neer Illaatha Vaalvellaam Vaalvaakumaa

    1. Uyirin Ootte Neeyaavaay
      Ulakin Oliyae Neeyaavaay
      Uravin Pirappae Neeyaavaay
      Unnmaiyin Valiyae Neeyaavaay
    2. Enathu Aattalum Neeyaavaay
      Enathu Valimaiyum Neeyaavaay
      Enathu Aranum Neeyaavaay
      Enathu Kottayum Neeyaavaay
    3. Enathu Ninaivum Neeyaavaay
      Enathu Moliyum Neeyaavaay
      Enathu Meetpum Neeyaavaay
      Enathu Uyirppum Neeyaavaay
  • Neenga Senja Nanmaigala

    நீங்க செஞ்ச நன்மைகளை
    நெனச்சு பாக்குறேன்
    தினம் தினம் நன்றி சொல்லி
    துதிச்சி மகிழுறேன்

    புழுதியில் புரண்ட என்னை
    குப்பையில் கிடந்த என்னை – 2
    கன்மலை மேல் உயர்த்தி வச்ச
    உம்மை உயர்த்துவேன் – 2

    நன்றி அய்யா நன்றி அய்யா
    நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா – 2 – நீங்க செஞ்ச

    என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
    உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே – 2
    ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
    உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே – 2

    நன்றி அய்யா நன்றி அய்யா
    நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா – 2 – நீங்க செஞ்ச


    Neenga Senja Nanmaigala
    Nenachu Paakkuren
    Dhinam Dhinam Nandri Solli
    Thudhichi Magizhuren

    Puzhudhiyil Puranda Ennai
    Kuppaiyil Kidandha Ennai – 2
    Kanmalai Mel Uyarthi Vacha
    Umma Uyarthuven – 2

    Nandri Ayya Nandri Ayya
    Nallellam Umakkae Nandri Ayya – 2

    En Karuvai Um Kangal Kandadhinalae
    Um Karangal En Vazhvai Thottadhinalae – 2
    Ondrukkum Udhavadha Ennai Thedi Vandheerae
    Umadhu Sevaikkaga Ennai Therindhu Kondirae – 2

    Nandri Ayya Nandri Ayya
    Nallellam Umakkae Nandri Ayya – 2

  • Neenga Nanacha

    நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
    நீங்க நெனச்சா எல்லாம் கூடும் -அப்பா – 2

    மனிதனின் யோசனை பயனில்லையே
    ஏசைய்யா நினைவுகள் நடந்திடுமே-2-நீங்க நெனச்சா

    1. சோதனை வந்திட்ட வேளை
      அதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்க
      துன்பங்கள் வந்திட்ட வேளை
      அதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க -2
      பாடுகள் பட்டிட்ட வேளை
      உங்க வசனத்தில் உயர்த்திவிட்டீங்க
      சோர்வுகள் ஆட்கொண்ட வேளை
      உம்மை துதிப்பதால் நீக்கிவிட்டீங்க
      என்னை வழுவாமல் இறுக்கி பிடிச்சு வச்ச யேசப்பா நீங்க

    நீங்க நெனச்சா..

    1. மனமெல்லாம் உடஞ்சிட்ட போதும்
      அதை ஆற்றிய தேற்றிபுட்டீங்க
      இனமெல்லாம் பகச்சிட்ட போதும்
      உங்க மார்போடு அணைச்சிபுட்டீங்க -2
      உங்க வேதத்தினால் எங்க வாழ்க்கையினை
      வாழ்ந்திட வழி காட்டினீங்க
      உங்க த்யாகத்தினால் எங்க மனங்களையும்
      நீங்களே வென்றுபுட்டீங்க
      எம்மை ஆற்றி தேற்றி தங்கிகிட்ட யேசப்பா நீங்க

    Neenga Nanacha Ellam Aagum
    Neenga Nanacha Ellam Koodum – Appa – 2

    Manithanin Yosanai Bayan Illaiyae
    Ungalin Ninaivugal Nadanthidumae – 2

    1. Sodhanai Vandhita Velai
      Adhil Jeyichida Vacheega Neenga
      Thunbangal Soolndhita Velai
      Adhil Thidankoola Vacheenga Neenga – 2
      Paadugal Patita Velai
      Unga Vasanathaal Uyarthi Vittinga
      Sorvugal Aatkonda Velai
      Ummai Thuthipathaal Neeki Viteenga
      Ennai Valuvaamal Iruki Pidichu Vacha Yesu Neenga
    2. Manamellam Udanchita Pothum
      Athai Aatriyae Thetriputeenga
      Inamellam Pagachitta Pothum
      Unga Maarbodu Anachuputeenga – 2
      Unga Vedhathinaal Engal Vaalkayinai
      Vaalndhida Valigaatineenga
      Unga Thiyagathinaal Engal Manangalaiyum
      Neengalae Vendruputeenga
      Ummai Aatri Thetri Thaangikita Yesu Neenga
  • Neenga Illama

    எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2

    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
    உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?
    உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

    1. நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
      நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2
      உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல – நீங்க இல்லாம
    2. சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
      அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக – 2
      தேவை எல்லாமே நீங்க தான் அப்பா – நீங்க இல்லாம – எனக்கு யாருமில்லை
  • Neenga Illaatha Vaazhkai Vendaam Yesuvae

    நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே
    நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் ஏசுவே – 2

    என் இதயத்தை தருகிறேன் வாரும் ஏசுவே
    என் நண்பனை போலவே வந்தா போதுமே – 2

    ஓ ….ஏசுவே என் நண்பனே – 4

    1. பணமோ பொருளோ வேண்டாம்
      பட்டம் பதவியும் வேண்டாம்
      ஏசுவே என்னோடு நீங்க இருந்த போதும்
      பெரும் புகழும் வேண்டாம்
      பகட்டு வாழ்க்கையும் வேண்டாம்
      ஏசுவே உம்மோட சமூகம் இருந்த போதும்
      உம சித்தம் எனது விருப்பமாக வேண்டும்
    2. உலகத்தின் ஆசைகள் வேண்டாம்
      உலகத்தின் ஸ்நேகமும் வேண்டாம்
      ஏசுவே உம்மோட கிருபை இருந்த போதும்
      பொய்யான உறவுகள் வேண்டாம்
      பொய்யான நட்பும் வேண்டாம்
      ஏசுவே உம்மோட அன்பு இருந்த போதும்
      என் வாழ்க்கையின் எல்லை வரை வேண்டும்

    Neenga illaatha vaazhkai vendaam yesuvae
    Neenga illaatha vaazhkai vendaam yesuvae – 2

    En ithayathai tharugiren vaarum yesuvae
    En nanbanai polavae vanthaa pothumae – 2

    O….Yesuvae En nanbanae – 4

    1. Panamo porulo vendaam
      Pattam pathaviyum vendaam
      Yesuvae ennodu neenga iruntha pothum
      Perum pugazhum vendaam
      Pagattu vaazhkaiyum vendaam
      Yesuvae ummoda samoogam iruntha pothum
      Um sitham enathu viruppamaaga vendum
    2. Ulagathin aasaigal vendaam
      Ulagathin snegamum vendaam
      Yesuvae ummoda kirubai iruntha pothum
      Poiyaana uravugal vendaam
      Poiyaana natpum vendaam
      Yesuvae ummoda anbu iruntha pothum
      En vaazhkaiyin ellai varai vendum