Blog

  • Nambuven Ummai Nambuven

    நம்புவேன் உம்மை நம்புவேன்
    என்றும் நம்புவேன் என் இயேசுவே – 2

    1. எனது வாழ்வின் வழிகள் எல்லாம்
      அறிந்தவர் நீர் ஒருவரே
      எல்லாவற்றையும் மாற்றினீரே
      உம்மை நம்புவேன் – 2

    நம்புவேன் உம்மை நம்புவேன்
    என்றும் நம்புவேன் என் இயேசுவே – 2

    1. உலகம் என்னை வெறுத்த போதும்
      நீர் என்னை வெறுக்கவில்ல
      எந்தன் கரத்தை பிடித்தீரே
      உம்மை நம்புவேன் – 2

    நம்புவேன் உம்மை நம்புவேன்
    என்றும் நம்புவேன் என் இயேசுவே – 2


    Nambuven ummai nambuven
    Endrum nambuven En Yesuvae – 2

    1. Enathu vaazhvin valigal ellam
      Arinthavar neer oruvarae
      Elaavatrayum maatrineerae
      Ummai nambuven – 2

    Nambuven ummai nambuven
    Endrum nambuven En Yesuvae – 2

    1. Ulagam ennai verutha pothum
      Neer ennai veruka villai
      Enthan karathai piditheerae
      Ummai nambuven – 2

    Nambuven ummai nambuven
    Endrum nambuven En Yesuvae – 2

  • Nambikkayum Neer Thane

    நம்பிக்கையும் நீர் தானே
    நங்கூரமும் நீர் தானே
    நாங்கள் நம்பும் தெய்வம் நீர் தானே
    நீர் தானே

    நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம்
    நம்பினோரைக் காக்கும் இயேசுவே
    பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
    பாடல் பாடி கொண்டாடிடுவோம்

    1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
      எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
      ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
      எகிப்தியர் வந்தாலும்
      பாடல் பாடி முன்னேறிடுவோம்
    2. கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
      நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
      பஞ்சம் பட்டினியே வந்தாலும்
      வறட்சிகள் என்றாலும்
      பாடல் பாடி முன்னேறிடுவோம்
    3. கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
      மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
      மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
      சூழ்நிலைகள் வந்தாலும்
      பயமின்றி முன்னேறிடுவோம்

    Nampikkaiyum Neer Thaanae
    Nangooramum Neer Thaanae
    Naangal Nampum Theyvam Neer Thaanae
    Neer Thaanae

    Nampikkai Nangooram Naan Nampum Theyvam
    Nampinoraik Kaakkum Yesuvae
    Parama Parisuththa Thaevanai Paraloka Raajanai
    Paadal Paati Konndaadiduvom

    1. Paarvonai Ventavarai Thuthippom
      Ekipthiyarai Ventavarai Thuthippom
      Aayiram Paarvonkal Vanthaalum
      Ekipthiyar Vanthaalum
      Paadal Paati Munnaeriduvom
    2. Kanmalayai Thandavari Thuthipom
      Neerotri Thandavari Thuthipom
      Panjam Pattiniyae
      Vandhalum Varatchigal Endralum
      Paadal Paadi Munneriduvom
    3. Kallaraiyai Pilanthavaraith Thuthippom
      Maranaththai Ventavaraith Thuthippom
      Marana Irululla Pallaththaakkin
      Soolnilaikal Vanthaalum
      Payaminti Munnaeriduvom
  • Nambikkai Nangooram Neerthaanae

    நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
    என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே – 2

    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் யாரும் இல்லை
    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை

    1. பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளை
      உம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதே
      தடுமாறி வழி மாறி நான் விலகின நேரம்
      உம் அன்பின் நேசம் என்னை மீண்டும் வனைந்ததே

    நம்பிக்கை…. நங்கூரம்…..

    1. எதிர்காலம் குறித்து நானும் கலங்கின வேளை
      என் சமூகம் உனக்கு போதும் என்று சொன்னீரே
      புயல் வந்து அலை அடித்து நான் பதறிட்ட நேரம்
      உன்னோடு நான் இருப்பேன் என்று வாக்கு பன்னீரே

    நம்புவேன் நம்புவேன் என்னை நீர் இரட்சிப்பீரே
    நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர் யுத்தம் செய்வீர்
    நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர் யாவும் செய்து முடிப்பீரே…முடித்தீரே

    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் யாரும் இல்லை
    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை

    நம்பிக்கை…. நங்கூரம்…..

    நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
    என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே


    Nambikkai nangooram neerthaanae
    En vaazhvin nokkamum neerthaanae – 2

    Neer illamal indha vaazkkaiku artham illai
    Neer illamal nanum yarum illai
    Neer illamal indha vaazkkaiku artham illai
    Neer illamal nanum ondrum illai

    1. Belaveena nerathil nan vizhunthitta velai
      Um kirubai meendum ennai thooki niruthiyathae
      Thadumaari vazhi maari nan vilagina neram
      Um anbin nesam ennai meendum vanaindhathae

    Nambikkai…. Nangooram…..

    1. Ethirkaalam kurithu naanum kalangina velai
      En samoogam unakku pothum endru sonneerae
      Puyal vanthu alai adithu nan padharitta Neram
      Unnnodu nan iruppen endru vaaku panneerae

    Nambuvaen Nambuvaen ennai neer ratchipeerae
    Nambuvaen Nambuvaen enakkai neer yutham seiveer
    Nambuvaen Nambuvaen enakkai neer yaavum seidhu mudipeerae…Muditheerae…

    Neer illamal indha vaazkkaiku artham illai
    Neer illamal nanum yarum illai
    Neer illamal indha vaazkkaiku artham illai
    Neer illamal nanum ondrum illai

    Nambikkai…. Nangooram…..

    Nambikkai nangooram neerthaanae
    En vaazhvin nokkamum neerthaanae

  • Nambi Vanthen Mesiya

    நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே – திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே

    1. தம்பிரான் ஒருவனே
      தம்பமே தருவனே – வரு
      தவிது குமர குரு
      பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்
    2. நின் பாத தரிசனம்
      அன்பான கரிசனம் – நித
      நிதசரி தொழுவ திதம் எனவும்
      உறுதியில் நம்பிவந்தேனே – நான்
    3. நாதனே கிருபைகூர்
      வேதனே சிறுமைதீர் – அதி
      நலம் மிகும் உனதிரு
      திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்
    4. பாவியில் பாவியே
      கோவியில் கோவியே – கன
      பரிவுடன் அருள்புரி
      அகல விடாதே நம்பிவந்தேனே – நான்
    5. ஆதி ஓலோலமே
      பாதுகாலமே – உன
      தடிமைகள் படுதுயர் அவதிகள்
      மெத்த – நம்பிவந்தேனே – நான்

    Nampi Vanthaen Maesiyaa
    Naan Nampivanthaenae – Thivya
    Saranam! Saranam! Saranam Aiyaa
    Naan Nampivanthaenae

    1. Thampiraan Oruvanae
      Thampamae Tharuvanae – Varu
      Thavithu Kumara Kuru
      Paramanuvaelae Nampivanthaenae – Naan
    2. Nin Paatha Tharisanam
      Anpaana Karisanam – Nitha
      Nithasari Tholuva Thitham Enavum
      Uruthiyil Nampivanthaenae – Naan
    3. Naathanae Kirupaikoor
      Vaethanae Sirumaitheer – Athi
      Nalam Mikum Unathiru
      Thiruvati Arulae Nampivanthaenae – Naan
    4. Paaviyil Paaviyae
      Koviyil Koviyae – Kana
      Parivudan Arulpuri
      Akala Vidaathae Nampivanthaenae – Naan
    5. Aathi Ololamae
      Paathukaalamae – Una
      Thatimaikal Paduthuyar Avathikal
      Meththa – Nampivanthaenae – Naan
  • Nallavarae Umakku Nandri

    நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
    நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன் – 2
    எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்
    ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன் – 2

    நன்றி சொல்கிறேன் உமக்கு
    நன்றி சொல்கிறேன் – 2

    1. குப்பையிலே தெரிந்து கொண்டீர்
      நன்றி சொல்கிறேன்
      குழந்தையாய் மாற்றி விட்டீர்
      நன்றி சொல்கிறேன் – 2

    உயர்ந்தவரே உயர்ந்தவரே
    உயிரோடு கலந்தவரே – 2
    உயிர் வாழும் நாட்களெல்லாம்
    உம்மை பாடுவேன் – 2

    2.அழுக்கான என்னை அழைத்தீர்
    நன்றி சொல்கிறேன்
    அன்போடு அணைத்துக்கொண்டீர்
    நன்றி சொல்கிறேன் – 2

    பரிசுத்தரே பரிசுத்தரே
    பாவங்களை சுமந்தவரே – 2
    உயிர் தந்த இயேசு நாதா
    உம்மைப்பாடுவேன் – 2


    Nallavarae Umakku Nandri Solgirean
    Nanmaigal Seitheerae Nandri Solgirean – 2
    Enakaga Vandheerae Nandri Solgirean
    Jeevanaiyum Thandheerea Nandri Solgirean – 2

    Nandri Solgirean
    Umakku Nandri Solgirean – 2

    1. Kuppaiyilea Therindhukondeer
      Nandri Solgirean
      Kulandhaiyai Maatrivitteer
      Nandri Solgirean – 2

    Uyarnthavarea Uyarnthavarea
    Uyirodu Kalandhavarea – 2
    Uyirvazhum Naatkal Ellam
    Ummai Paaduvean – 2

    1. Azhukkana Ennai Azhaitheer
      Nandri Solgirean
      Anbodu Anaithukondeer
      Nandri Solgirean – 2

    Parisutharea Parisutharea
    Pavangalai Sumanthavarea – 2
    Uyir Thandha Yesu Nadha
    Ummai Paaduvean – 2

  • Nalla Kalam Porakuthu

    நல்ல காலம் பொறக்குது
    உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

    மகனே நல்ல காலம் பொறக்குது
    மகளே நல்ல காலம் பொறக்குது

    இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
    என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

    1. பாவங்கள் சாபங்கள் மாறுது
      இயேசுவாலே – 2
      பயங்கள் குழப்பங்கள் நீங்குது
      இயேசுவாலே – 2
      கவலைகள் கண்ணீர்கள் மாறுது
      வறுமைகள் வேதனைகள் நீங்குது
      இயேசுவாலே – 3
    2. கடன்சுமை கஷ்டங்கள் மாறுது
      இயேசுவாலே – 2
      நிந்தைகள் அவமானம் நீங்குது
      இயேசுவாலே – 2
      போட்டிகள் பொறாமைகள் மாறுது
      தடைபட்ட காரியங்கள் வாய்க்குது
      இயேசுவாலே – 3
    3. சிலுவையில் உனக்காக மரித்த
      இயேசுவாலே – 2
      தீமைகள் நன்மையாக மாறுது
      இயேசுவாலே – 2
      இயேசுவின் நாமத்தில் வேண்டிடு
      வாழ்வில் நலம் வளம் பெற்றிடு
      இயேசுவாலே – 3

    Nalla Kaalam Porakuthu
    Unaku Nalla Kaalam Porakuthu – 3

    Magane Nalla Kaalam Porakuthu
    Magale Nalla Kaalam Porakuthu

    Indru Muthal Unnai Asirvathipen – 2
    Endra Yesuvaalae Nalla Kaalam Porakuthu – 2

    1. Paavangal Saabangal Maaruthu
      Yesuvaalae – 2
      Payangal Kulapangal Neeguthu
      Yesuvaalae – 2
      Kavalaigal Kaneergal Maaruthu
      Varumaigal Vethanaigal Neenguthu
      Yesuvaalae – 3
    2. Kadan Sumai Kastangal Maaruthu
      Yesuvaalae – 2
      Ninthaigal Avamaanam Neenguthu
      Yesuvaalae – 2
      Pottigal Poraamaigal Maaruthu
      Thadaipatta Kaariyangal Vaaikuthu
      Yesuvaalae – 3
    3. Siluvaiyil Unakaaga Maritha
      Yesuvaalae – 2
      Theemaigal Nanmaiyaga Maaruthu
      Yesuvaalae – 2
      Yesuvin Naamathil Vendidu
      Vaazhvil Nalam Valam Petridu
      Yesuvaalae – 3
  • Nadha Neer En Thagappan

    நாதா நீர் என் தகப்பன்
    தேவா நான் உம் பிள்ளை – 2
    இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2

    1. உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
      அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2
      உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2
      உந்தன் மார்போடு அனைந்து கொண்டீரே
    2. உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
      உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2
      எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2
      எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே

    Nadha Neer En Thagappan
    Deva Naan Um Pillai – 2
    Intha Uravinai Yaaralum Pirikka Mudiyuma – 2

    1. Ummai Kanammal Dhoorthilay Naan Irunthen
      Alainthu Thirinthu Yennai Thedi Vantheerae -2
      Unthan Anbaal Ennai Kavarnthu Kondeer – 2
      Unthan Maarbodu Serthu Kondeerae
    2. Unthan Menmaigal Ariyamal Puriyamal
      Ulaga Vazhkaiyai Naan Vazhnthu Vanthenae – 2
      Enthan Maganae Endru Azhaitheerae – 2
      Enthan Vazhvaiyum Matriviteerae
  • Naano Undhan Pillai

    இனி எதை குறித்த பயமும் இல்லை
    நானோ உந்தன் பிள்ளை – 2

    தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
    பேர் சொல்லி என்னை அழைத்தீர்
    மறுபிறவி எனக்கு தந்தீர்
    இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர் – 2 – இனி

    I am Surrounded
    By the Arms of Father
    I am Surrounded
    By songs of Deliverance
    We’ve been Liberated
    From Our Bondage
    We’re the sons and the Daughters
    Let us sing our Freedom

    செங்கடலை பிளந்தென்னை
    நடக்க வைத்தீரே
    பயம் இனி எனக்கில்லையே
    பார்வோனின் சேனையையும்
    எதிர்த்து நிற்பேனே
    நானோ உந்தன் பிள்ளை – 2
    நானோ உந்தன் பிள்ளை – 2

    உம் இரத்தம் தந்து மீட்டீரே
    உம் ஆவியால் நிறைத்தீரே
    உம் பிள்ளை என்று அழைத்தீரே
    உம் மார்போடு என்னை அணைத்தீரே
    உம்மோடு சேரவே உம்மோடு வாழவே – 2
    மீட்டுக்கொண்டீரே மீட்டுக்கொண்டீரே


    Ini Edhai Kuritha Bayamum Illai
    Naano Undhan Pillai

    Thayin Karuvil Therindhukondeer
    Peyar Solli Ennai Azhaitheer
    Maru Piravi Enaku Thandheer
    Rathathaal Ennai Meetu Kondeer – 2 – Ini

    I Am Surrounded
    By The Arms Of Father
    I Am Surrounded
    By Songs Of Deliverance
    We’ve Been Liberated
    From Our Bondage
    We’re The Sons And The Daughters
    Let Us Sing Our Freedom

    Sengkadalai Pilandhennai Nadakaveitheerey
    Bayam Ini Enakilaye
    Parvonin Senaiyayum Edhirthu Nirpaene
    Naano Undhan Pillai – 2
    Naano Undhan Pillai – 2

    Um Ratham Thandhu Meetirae
    Um Aaviyal Niraithirae
    Um Pillai Endru Azhaithirey
    Um Maarbodennai Anaitheeray
    Ummodu Seravey
    Ummodu Vazhavey – 2
    Meetukondeerey Meetukondeerey

  • Naan Valnthalum Ummodu Thaan

    நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)
    நான் மரித்தாலும் உம்மோடு தான்

    1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
      உம்மை தானே நேசிக்கிறேன்
    2. ஆத்தும பாரம் தாருமையா
      அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
    3. உம்மைப் போல என்னை மாற்றுமையா
      உமக்காகவே என்னைத் தந்தேனையா

    Naan vaalnthaalum ummodu thaan (Yesuvae)
    Naan mariththaalum ummodu thaan

    1. Umakkaakath thaanae uyirvaalkiraen
      Ummai thaanae naesikkiraen
    2. Aaththuma paaram thaarumaiyaa
      Apishaekaththaal ennai nirappumaiyaa
    3. Ummaip pola ennai maattumaiyaa
      Umakkaakavae ennaith thanthaenaiyaa
  • Naan Ummidathil

    நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
    பயம் என்னை விட்டுப் போனதே
    நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
    பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே -2

    உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
    உம்மைத்தான் பின் தொடர்வேன் -2

    – நான் உம்மிடத்தில்…..

    உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
    உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை -2
    ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
    ஏக்கத்தோடு வாழ்ந்தேன் -2
    அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா -2
    -உம்மோடு வாழ்வேன்….

    இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
    உண்மையான அன்பை நான் கண்டேனையா -2
    தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
    தாங்கியே நடத்தினீர் -2
    உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா -2
    -உம்மோடு வாழ்வேன்….

    அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
    உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்-2
    ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
    உந்தன் அன்பை சொல்வேன் -2
    ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா-2
    -உம்மோடு வாழ்வேன்….


    Naan ummidaththil vanthapothellaam
    Payam ennai vittup ponathae
    Neer enakkullae vantha pothellaam
    Paavam ennai vittuth tholainthathae-2

    Ummodu vaalvaen umakkaaka vaalvaen
    Ummaiththaan pin thodarvaen -2

    -Naan ummidaththil…

    Unnmaiyaana anpai naan kanndathaeyillai
    Uttar suttar anpilae unnmaiyumillai -2
    Aengi aengi vaalnthaen – naan
    Aekkaththodu vaalnthaen -2
    Anpukkaaka aengiyae alainthaenaiyaa -2
    -Ummodu vaalvaen…

    Yesuvae naan ummidaththil vanthathaalae
    Unnmaiyaana anpai naan kanntaenaiyaa -2
    Thookkith thookki sumantheer (ennai)
    Thaangiyae nadaththineer -2
    Ullamellaam anpinaalae ponguthaiyaa -2
    -Ummodu vaalvaen….

    Anpukkaaka aengukinta ullangalai
    Ummidaththil serkkavae uyir vaalkinten -2
    Oti oti ulaippaen (naan)
    Unthan anpai solvaen-2
    Oorellaam um naamam solvaenaiyaa-2
    -Ummodu vaalvaen…