Blog

  • En Uyirum Yesuvukaaga

    என் உயிரும் என் இயேசுவுக்காக
    என் உள்ளமும் என் இயேசுவுக்காக – 2
    என் இயேசுவையே நான் நேசித்து
    இயேசுவையே நான் தியானித்து
    இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2

    1. என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
      என்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே – 2
      என் இயேசுவையே நான் நேசித்து
      இயேசுவையே நான் தியானித்து
      இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2
    2. என் ஆசை என் இயேசு மாத்ரமே
      என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே – 2
      என் இயேசுவையே நான் நேசித்து
      இயேசுவையே நான் தியானித்து
      இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2

    En Uyirum En Yesuvukaga
    En Ullamum En Yesuvukaga – 2
    En Yesuvaye Naan Neasithu
    En Yesuvaye Naan Thiyaanithu
    En Yesuviela Naan Kalikoora Vendumea – 2

    1. Ennai Uyarthiadhum En Yesu Maatharamae
      Ennai Uyirpithidhum En Yesu Maatharamae – 2
      En Yesuvai Naan Neasithu
      En Yesuvai Naan Thiyaanithu
      En Yesuviela Naan Kalikoora Vendumea – 2
    2. En Aasai En Yesu Maatharamae
      En Vaanjai Avar Samugam Maatharamae – 2
      En Yesuvai Naan Neasithu
      En Yesuvai Naan Thiyaanithu
      En Yesuviela Naan Kalikoora Vendumea – 2
  • En Uyirullavarai Ummai

    என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
    என் உயிர் பிரிந்தாலும் உம்மையே – 2
    என் ஜீவன் உமக்காக
    என் வாழ்வும் உமக்காக – 2

    என்னை ஏற்றுக் கொள்ளும்
    என்னை மன்னியும்
    உம் பிரியமாய்
    என்னை மாற்றிடும் – 2 – என் உயிர்

    1. தாயின் கருவில் என்னை காத்தவரே
      உம் தோளில் என்னை சுமந்தவரே – 2
      என் தனிமையிலே என்னை தேற்றினிரே
      என் அருகினிலே என்றும் இருப்பவரே – 2 – என் உயிர்
    2. என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
      புது மனிதனாய் உருவாக்கினீர் – 2
      உன் அன்பை நான் புரிந்து கொண்டேன்
      இனி உம்மை விட்டு நான் விலகிடேன் – 2 – என் உயிர்

    En Uyirullavarai Ummai Thudhithiduven
    En Uyir Pirinthalum Ummaiye – 2
    En Jevan Umakaage
    En Valvum Umakaage – 2

    Ennai Yetrukollum
    Ennai Manniyum
    Um Piriyamai
    Ennai Matridum – 2 – En Uyirullavarai

    1. Thayin Karuvil Ennai Kaathavarae
      Um Thollil Ennai Sumanthavarae – 2
      En Thanimayille Ennai Thetrineere
      En Aruginille Endrum Irupavarae – 2 – En Uyirullavarai
    2. En Pavathai Neer Sumanthu Kondeer
      Puthu Manithanai Oruvakineer – 2
      Um Anbai Naan Purinthu Konden
      Eni Ummai Vittru Naan Vilagiden – 2 – En Uyirullavarai
  • En Ullam Aenguthae Um Anpirkaakavae

    1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
      என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
      என்றென்றும் பாராமல் (2)
      எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
      காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
      ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
      இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
      எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

    உம் அன்பை பார்க்கிலும்
    வேறொன்றும் இல்லையே ஓ…
    என் இயேசுவே…
    ஒருநாளும் மறவேனே
    என் நேசர் நீர்தானே ஓ…
    என்றென்றுமே
    நான் உம்மை மறவேன்

    1. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
      உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
      சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
      உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
      அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
      உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
      இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
      எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

    உம் அன்பை பார்க்கிலும்
    வேறொன்றும் இல்லையே ஓ…
    என் இயேசுவே…
    ஒருநாளும் மறவேனே
    என் நேசர் நீர்தானே ஓ…
    என்றென்றுமே
    நான் உம்மை மறவேன்


    1. En ullam aenguthae um anpirkaakavae
      Ententum aenguthae um vaasam vaenntiyae
      Ententum paaraamal (2)
      Eppothum nenjil ummai thuthippaen
      Kaattaram kaattaki ummai thoduvaen
      Aanantha poovaaki um kaalil kidappaen
      Inpangal peruki paasaththai poliveer
      Eppothum nenjil ummai thuthippaen

    Um anpai paarkkilum
    Vaerontum illaiyae o…
    En Yesuvae…
    Orunaalum maravaenae
    En naesar neerthaanae o…
    Ententumae
    Naan ummai maravaen

    1. Um saththam kaettuthaan en nenjam kulirum
      Ullaadum ennnangal en kannnnil theriyum
      Sirpangal sirikkum sinthanai sirakkum
      Un mukam paarththaal poomi nilaikkum
      Athikaalai naeraththil en kannkal thavikkum
      Um mukam paarththaal en kannkal kulirum
      Inpangal tharuveer paasaththai poliveer
      Eppothum nenjil ummai thuthippaen

    Um anpai paarkkilum
    Vaerontum illaiyae o…
    En Yesuvae…
    Orunaalum maravaenae
    En naesar neerthaanae o…
    Ententumae
    Naan ummai maravaen

  • En Thalaiyai Uyarthuvaar

    என் தலையை உயர்த்துவார்
    நான் வெட்கப்பட்டு போவதில்லை
    என் தலையை உயர்த்துவார்
    நான் குனிந்து நடப்பதில்லை – 2

    1. அழைத்தவர் உண்மையுள்ளவர்
      கரம் பிடித்தென்னை நடத்திடுவார் – 2
      எனக்குளே இருப்பவர்
      எல்லோரிலும் பெரியவர் – 2
    2. எனது எதிராக
      ஒரு பாளையம் இறங்கினாலும் – 2
      தப்புவிக்க வல்லவர்
      என் அருகில் இருக்கிறார் – 2
    3. எனக்கு குறித்ததை
      நிறை வெற்றி முடித்திடுவார் – 2
      சகலமும் நன்மையை
      எனக்காக செய்து முடிப்பார் – 2

    En Thalaiyai Uyarthuvaar
    Naan Vetkapattu Povathilai
    En Thalaiyai Uyarthuvaar
    Naan Kuninthu Nadapadhilai – 2

    1. Azhaithavar Unmaiullavar
      Karam Pidithennai Nadathiduvaar – 2
      Enakulae Irupavar
      Ellorilum Periyavar – 2
    2. Enahu Ethiraaga
      Oru Paalayam Iranginalum – 2
      Thapuvikka Vallavar
      En Arugil Irukiraar – 2
    3. Enaku Kurithadhai
      Nirai Vertri Mudithiduvaar – 2
      Sagalamum Nanmaiyaai
      Enakaaga Seithu Mudipaar – 2
  • En Swasame

    தனிமை இல்லையே
    வாழ்க்கை பயணத்திலே – 2
    நிழலை போல பிரிந்திடாமல்
    எனக்குள் வாழ்பவரே – 2

    என் சுவாசமே
    என் உயிரே
    எனக்குள் வாழ்பவரே – 2

    யாரும் காணும் முன்னே
    என்னை உம் கண்கள் கண்டதே – 2

    கண்டவர் என்னை விடமாடீர்
    அழைத்தவர் என்னை மறபதில்ல

    என் சுவாசமே
    என் உயிரே
    எனக்குள் வாழ்பவரே – 2

    யெகோவா ஷம்மா
    என்னோடு என்றும் இருப்பவரே
    என்னை விட்டு பிரியாத
    நல்ல தகப்பனே
    யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
    அப்பா இருக்க அனாதை இல்லையே
    யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
    அப்பா இருக்க பயமும் இல்லையே

  • En Snegame En Devane

    என் ஸ்நேகமே என் தேவனே
    என் ராஜனே என் இயேசுவே – 2

    அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே
    கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே – 2

    1. மா பாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
      பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
      மாறிடா உம் ஸ்நேகம் என்னை சுகமாக்கிற்று
      உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே
    2. அநாதி ஸ்நேகத்தால் என்னை
      அணைத்துக் கொண்டீரே
      உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
      உம் சித்தம் போல் என்னை வனைந்துகொள்ளுமே
      உமக்காகவே நான் உயிர் வாழுவேன் – என் ஸ்நேகமே

    En Snegame En Devane
    En Rajane En Yesuve – 2

    Anaadhi Snegame Azhaitha Snegame
    Karampiditha Snegame Kaividaa Snegame – 2

    1. Maa Paavi Enakaai Siluvayil Maritheer
      Parisuthanaakida Um Aavi Thandhiteer
      Maaridaa Um Snegam Ennai Sugamaakittru
      Um Sevaikaai Naan Uyir Vaazhuven – Anaadhi Snegame …
    2. Anaadhi Snegathaal Ennai Anaithukondeere
      Um Kirubaitaal Ennai Uyarthivaithire
      Um Sitham Pol Ennai Vanaindhu Kollume
      Umakaagave Naan Uyir Vaazhuven – Anaadhi Snegame …
  • En Ratchaga

    என் ரட்சகா என் ரட்சகா
    என்னை ஆளும் என் மன்னவா
    என் ரட்சகா என் ரட்சகா
    என்றென்றும் உம்மை வணங்கிடுவேன்
    இம்மையிலும் மறுமையிலும்
    இம்மையிலும் மறுமையிலும்

    1. கருவிலிருந்தே என்னை தேர்ந்தெடுத்தீரே
      உம்மை நான் பிரியேன் அய்யா
      கரம் பிடித்து நடக்க பழக்கினீரே
      உம் வழியில் நடப்பேன் அய்யா
    2. படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரே
      உமக்காய் எழுந்து ஓடுவேன் அய்யா
      சேற்றில் இருந்த என்னை தூக்கினீரே
      உம் நாமம் உயர்த்துவேன் அய்யா

    என் விடிவெள்ளியே என் வாழ்விலே
    வந்ததற்காய் நன்றி அய்யா
    நீரின்றி நானில்லை
    நீரின்றி நானில்லை …


    En Ratchaga En Ratchaga
    Enai Aalum En Mannava
    En Ratchaga En Ratchaga
    Endrendrum Ummai Vanangiduvaen
    Immaiyilum Marumaiyilum
    Immaiyilum Marumaiyilum

    1. Karuvilirunthae Ennai Thaernthedutheerae
      Ummai Naan Piriyaen Ayya
      Karan Pidithu Nadakka Pazhakkineerae
      Um Vazhiyil Nadappaen Ayya
    2. Padukkaiyiliruntha Ennai Sugamaakineerae
      Umakkai Ezhunthu Oduvaen Ayya
      Saettril Iruntha Ennai Thookineerae
      Um Naamam Uyarthuvaen Ayya

    En Vidivelliyae En Vaazhvilae
    Vanthatharkaai Nandri Ayya
    Neerindri Naanillai
    Neerindri Naanillai…

  • En Muchikku Sondhakarare

    என் மூச்சுக்கு சொந்தக்காரர்
    என் உயிருக்கு அதிபதியே
    கண்ணமணி போல் காப்பவரே
    என்றும் என்றும் நடத்துபவரே – 2

    நீங்க இல்லனா வானம் இல்ல …
    நீங்க இல்லனா பூமி இல்ல … – 2
    நீங்க இல்லனா நானும் இல்ல …
    நீங்க இல்லனா யாரும் இல்ல …- 2

    என் கர்த்தா தி கர்த்தரும் நீரே
    என் தேவா தி தேவனும் நீரே
    ஏந்திடர்டரும் மார்த்தவரே …
    என்னைகை வீடாத தேவனும் நீரே … – 2

    நீங்க இல்லனா ஆரம்பம் இல்ல …
    நீங்க இல்லனா முடிவை இல்ல …- 2
    நீங்க இல்லனா மன்னிப்பு இல்ல …
    நீங்க இல்லனா பரலோகம் இல்ல … – 2


    En Muchikku Sondhakarare
    En Uyirukku Adhibadhieyaa
    Kannmani Pole Kapavarae
    Endrum Endrum Nadathubuvarae – 2

    Neenga Illana Vanam Illa…
    Neenga Illana Boomi Illa… – 2
    Neenga Illana Nanum Illa…
    Neenga Illana Yarum Illa…- 2

    En Kartha Dhi Kartharoom Neera
    En Deva Dhi Devanum Neera
    Enddrdrum Marthavarae…
    Ennaikai Veedadha Devanum Neera… – 2

    Neenga Illana Aarambam Illa…
    Neenga Illana Mudiva Illa…- 2
    Neenga Illana Manippu Illa…
    Neenga Illana Parlogum Illa… – 2

  • En Mel Ninaivaai

    என் மேல் நினைவாய் இருப்பவரே
    என்னை விசாரிக்கும் தெய்வமே
    உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
    என்னை உயர்த்த இறங்கினீரே – 2

    கைவிடா கன்மலையே
    உம்மை தான் நேசிக்கிறேன் – 2 – உம் அன்பு

    1. அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டு
    அழியா உம் ஜீவனையே என்னில் வைத்தவரே
    உமக்காய் வாழுவேன் – 2
    உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2 – என்மேல்

    2. எனக்கு எதிரான எண்ணங்களை அழித்து
    உமது திட்டத்தையே நிறைவேற்றி முடிப்பவரே
    உமக்காய் வாழுவேன் – 2
    உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன் – 2 – என்மேல்


    En Mel Ninaivaai Irupavare
    Ennai Visarikkum Dheivame
    Um Anbu Karangalil Naan Irupaen
    Ennai Uyartha Irangineerae – 2

    Kaivida Kanmalaiye
    Ummai Than Nesikiren – 2 – Um Anbu

    1. Azhindhu Kondirundha Aathumavai Meetu
      Azhiya Um Jeevanaiye Ennil Vaithavare
      Ummakai Vaazhuvaen – 2
      Undhan Presanam Than Naaduvaen – 2- Um Anbu
    2. Enact Edhiraana Ennangalai Azhithu
      Umadhu Thittathaye Niraivetri Mudipavare
      Ummakai Vaazhuvaen – 2
      Undhan Presanam Than Naaduvaen – 2 – Um Anbu
  • En Kaigalai

    என் கைகளை விரோதிகள் மேல்
    உயர்த்தினீரய்யா என் இயேசய்யா – 2

    என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
    என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
    ஜெயக்கொடியே வெற்றிகொடியே
    கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை

    1. கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போது
      ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா
      பலவானின் வில்லையெல்லாம்
      முற்றிலும் தகர்த்தெறிந்து
      எளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா – 2

    என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
    என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
    ஜெயக்கொடியே வெற்றிகொடியே
    கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை

    1. பால சிங்கத்தையும்
      சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்
      பலமுள்ள தேவ கரம் என்மேலே
      தீங்கு செய்திட ஒருவனும் என்மேலே
      இதுவரை கை போடவில்ல – 2

    என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
    என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
    ஜெயக்கொடியே வெற்றிகொடியே
    கல்வாரியின் நேசக்கொடியே – 2 – என் கைகளை