Author: admin

  • Asaiyadha Anbai Nan

    அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா
    அசைந்திடும் வழக்கை நிலையானதே

    அசையாத அன்பே
    அகலாத உறவே
    இசைவான துணையே என் இசைய

    அசைய என் கோட்டை
    அசைய என் துருகம்
    அசைய என் நேசம் எந்தன் இசைய

    அசையாமல் உம்மில் சாய்கிறேன்
    என் நம்பிக்கை அசைந்திடாதே

    தாயின் அன்போ கருவுற்றபின்
    என் நேசரின் அன்போ உருவாகும்முன்
    உருவாகும் முன்னே என்னை அழைத்து
    உருக்கமான இரகத்தினால் முடி சூடினீர்
    அசையாமல் உம்மில் சாய்கிறேன்
    என் நம்பிக்கை அசைந்திடாதே

    நிலையான அன்போன்று
    இயேசுவின் அன்பு
    மாறாத அன்போன்று
    இயேசுவின் அன்பு
    அழியாத அன்போன்று
    இயேசுவின் அன்பு


    Asaiyadha Anbai Nan Kandean Ayya
    Asaindhidum Vazhkai Nilaiyanathae

    Asaiyadha Anbae
    Agazhadha Uravea
    Isaivana Thunaiyae En Yesaiya

    Asaiya En Kottai
    Asaiya En Dhurugam
    Asaiya En Neasam Enthan Yesaiya

    Asaiyamal Ummil Saaigindren
    En Nambikai Asaindhidathea

    Thaayin Anbo Karuvuttrapin
    En Neasarin Anbo Uruvagummun
    Uruvagum Munnae Ennai Azhaithu
    Urukamana Irakathinal Mudi Sootineer
    Asaiyamal Ummil Saaikindrean
    En Nambikai Asaindhidathea

    Nilaiyaana Anbondru
    Yeasuvin Anbu
    Maradha Anbondru
    Yesauvin Anbu
    Azhiyadha Anbondru
    Yesuvin Anbu

  • Asaivadum Aaviye

    அசைவாடும் ஆவியே
    தூய்மையின் ஆவியே
    இடம் அசைய உள்ளம் நிரம்ப
    இறங்கி வாருமே

    1. பெலனடைய நிரப்பிடுமே
      பெலத்தின் ஆவியே
      கனமடைய ஊற்றிடுமே
      ஞானத்தின் ஆவியே
    2. தேற்றிடுமே உள்ளங்களை
      இயேசுவின் நாமத்தினால்
      ஆற்றிடுமே காயங்களை
      அபிஷேக தைலத்தினால்
    3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
      கிருபையின் பொற்கரத்தால்
      நிறைத்திடுமே ஆனந்தத்தால்
      மகிழ்வுடன் துதித்திடவே
    4. அலங்கரியும் வரங்களினால்
      எழும்பி ஜொலித்திடவே
      தந்திடுமே கனிகளையும்
      நிறைவாக இப்பொழுதே

    Asaivaadum Aaviyae
    Thooymaiyin Aaviyae
    Idam Asaiya Ullam Nirampa
    Irangi Vaarumae

    1. Pelanataiya Nirappidumae
      Pelaththin Aaviyae
      Kanamataiya Oottidumae
      Njaanaththin Aaviyae
    2. Thaettidumae Ullangalai
      Yesuvin Naamaththinaal
      Aattidumae Kaayangalai
      Apishaeka Thailaththinaal
    3. Thutaiththidumae Kannnneerellaam
      Kirupaiyin Porkaraththaal
      Niraiththidumae Aananthaththaal
      Makilvudan Thuthiththidavae
    4. Alangariyum Varangalinaal
      Elumpi Joliththidavae
      Thanthidumae Kanikalaiyum
      Niraivaaka Ippoluthae
  • Aruvadai Undu

    அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
    எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்
    அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
    எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர் – 2

    விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர் – 2
    அறுவடை உண்டு அறுவடை உண்டு
    நீ கைவிடப்படுவதில்லையே
    நீயோ வெட்கப்படுவதில்லையே – 2

    1. வறண்ட நிலங்களெல்லாம்
      செழிப்பாய் மாறிடுமே – 2
      வாடின என் வாழ்வை
      வர்த்திக்க செய்பவரே – 2

    வறட்சியை காண்பதில்லையே
    நீயோ வறட்சியை காண்பதில்லையே
    அறுவடை உண்டு அறுவடை உண்டு
    நீ கைவிடப்படுவதில்லையே
    நீயோ வெட்கப்படுவதில்லையே – 2

    1. வெட்கத்தில் விதைத்ததெல்லாம்
      இரட்டிப்பாய் வந்திடுமே
      கண்ணீரில் விதைத்ததெல்லாம்
      விளைச்சலாய் மாறிடுமே

    விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
    நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
    அறுவடை உண்டு அறுவடை உண்டு
    நீ கைவிடப்படுவதில்லையே
    நீயோ வெட்கப்படுவதில்லையே – 2 – அதிசயமானவர்


    Athisayamaanavar Arputham Seibavar
    Enthan Kaalgalai Vazhuvaamal kappavar
    Athisayamaanavar Arputham Seibavar
    Enthan Paathaigalai Sethamindri Kappavar – 2

    Vithaikka Idangalil Vilaichchalai Tharubavar – 2
    Aruvadai Undu Aruvadai Undu
    Nee Kaividappaduvathillayae
    Neeyo Vetkappaduvathillayae – 2

    1. Varanda Nilangalellam
      Sezhippaai Maaridumae – 2
      Vaadina En Vaazhvai
      Varththikka Seibavarae – 2

    Varatchiyai Kanbathillayae
    Neeyo Varatchiyai Kanbathillayae
    Aruvadai Undu Aruvadai Undu
    Nee Kaividappaduvathillayae
    Neeyo Vetkappaduvathillayae – 2

    1. Vetkaththil Vithaithathellam
      Irattippai Vanthidumae – 2
      Kanneeril Vithaiththathellam
      Vilaichchalaai Maaridumae – 2

    Vilaichchalai Aandu Kolluvaai
    Neeyo Vilaichchalai Aandu Kolluvaai
    Aruvadai Undu Aruvadai Undu
    Nee Kaividappaduvathillayae
    Neeyo Vetkappaduvathillayae – 2 – Athisayamaanavar

  • Arpanikindraen Naan

    அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
    பயன்படுத்தும் என்னை
    நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்
    தேவா என் ஜீவன் உம் கரத்தில்
    என் வாழ்வில் உம் சித்தம்
    நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்

    ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக
    என் கனவுகளும் என் எண்ணங்களும்
    உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்

    என் வாழ்க்கை உம் கையில் உமக்கே
    நான் உமக்கே சொந்தம்
    தருகிறேன் தருகிறேன் என்னை


    Arpanikindraen Nan Arpanikindraen
    Payanpaduthum Ennai
    Nan Nirkindraen Um Samugathil
    Dheva En Jeevan Um Karathil
    En Vazhvil Um Sitham
    Niraivera Naan Vanchikiraen

    Yettru Kollum En Vazhavai Dheva Jeeva Baliyaga
    En Kanavugalum En Ennangalum
    Um Karathil Naan Oppuvikindraen

    En Vazhkai Um Kaiyil Umakkae
    Nan Umakkae Sondham
    Tharugiraen Tharugiraen Ennai

  • அஞ்சாதே கலங்காதே
    நானே உன் கடவுள்
    திகையாதே தேற்றிடுவேன்
    நானே உடனிருப்பேன் – 2

    1. தீமையும் துன்பமும் உன்னை தாக்கினாலும்
      பகைமையும் வெறுமையும் உன்னை வீழ்த்தினாலும் – 2 அஞ்சாதே ….

    என் மகனே உனக்கு துணையாய் நான் இருப்பேன்
    நானே ஆண்டவர் காத்திடுவேன் – அஞ்சாதே ….

    1. பதினாயிரம் பேர் உன்னை தாக்கினாலும்
      உன் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் – 2 – அஞ்சாதே …

    என் மகனே தீமை நெருங்க விடமாட்டேன்
    நானே ஆண்டவரே வாழ்வளிப்பேன் – அஞ்சாதே …


    Anjathe kalangathe
    Naane un kadavul
    Thigaiyathe thetriduven
    Naane udanirupen – 2

    1. Theemaiyum thunbamum Unai thaakinaalum
      Pagaimaiyam verumaiyum Unai veezhthinaalum – 2 Anjathe….

    En magane unakku thunaiyaai naan irupen
    Naane aandavar kaathiduven – Anjathe….

    1. Pathinaayiram per unai thaakinalum
      Un pakkam aayiram per veezhnthaalum – 2 – Anjathe…

    En magane theemai nerunka vidamaten
    Naane aandavara vazhvalipen – Anjathe…

  • Anbu Yesuvin Anbu

    பெயரோ புகழோ நிலை நிற்காதே
    சொத்தோ சுகமோ கரைந்துபோகுமே 2
    உங்க அன்பு மேலானதே
    உங்க அன்பு மெய்யானதே
    உங்க அன்பு விட்டு விளங்காததே
    உங்க அன்பு என்னை தங்கிடுமே

    அன்பு இயேசுவின் அன்பு
    அது என்றும் நிலையானதையே
    அன்பு இயேசுவின் அன்பு
    அது என்றும் மாறாததே

    சொந்தம் பந்தம் மறந்துபோவார்கள்
    நண்பர் மனிதர் விலகி போவார்கள் 2
    இயேசு நீரே எந்தன் உயிரானவர்
    மாறும் உலகில் நீர் உருவானவர்
    என் நினைவே நீர் அழகானவர்
    என் உயிரே நீர் நிறைவானவர்

    அன்பு இயேசுவின் அன்பு
    அது என்றும் நிலையானதையே
    அன்பு இயேசுவின் அன்பு
    அது என்றும் மாறாததே

    இந்த உலகத்தின் அன்பு எல்லாம் மாயையே
    இந்த உலகம் ஒரு நாள் அழிந்து போகுமே
    எந்தன் வாழ்வின் ஏக்கம் எல்லாம் நீர்தானே
    என் அன்பின் பாடல் என்றும் நீர்தானே


    Peyaro Pugazho Nilainitkaadhae
    Sotho Sugamo Karaindhupogumae 2
    Unga Anbu Melaanadhae
    Unga Anbu Meiyanadhae
    Unga Anbu Vittu Vilagadhadhae
    Unga Anbu Ennai Thaangidumae

    Anbu Yesuvin Anbu
    Adhu Endrum Nilaiyanadhae
    Anbu Yesuvin Anbu
    Adhu Endrum Maradhadhae

    Sondham Bandham Marandhupovargal
    Nanbar Manidhar Vilagi Povargal 2
    Yesu Neerae Endhan Uyiranavar
    Maarum Ulagil Neer Uravanavar
    En Ninaivae Neer Azhaganavar
    En Uyirae Neer Niraivanavar

    Anbu Yesuvin Anbu
    Adhu Endrum Nilaiyanadhae
    Anbu Yesuvin Anbu
    Adhu Endrum Maradhadhae

    Indha Ulagathin Anbu Ellam Maayaiyae
    Indha Ulagam Oru Naal Azhindhu Pogumae
    Endhan Vazhvin Ekkam Ellam Neerthanae
    En Anbin Paadal Endrum Neerthanae

  • Anbu Oliyadhu

    மனுஷர் பாஷை பேசினாலும் தூதர் பாஷை பேசினாலும்
    அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே…
    சத்தமிடும் வெண்கலமாய் ஓசையிடும் கைத்தாளமாய்
    வாழுகின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையே…

    தீர்க்கமான தரிசனங்கள் ஆழமான இரகசியங்கள்
    அன்பு இல்லா காரணத்தால் அற்பமாகுமே…
    அறிவு கலந்த வார்த்தைகளும் மலை பெயர்க்கும் விசுவாசமும்
    அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே…

    அன்பு ஒழியாது என்றும் அழியாது
    அன்பு குறையாது என்றும் நிறைவானது
    அன்பு அசையாது என்றும் அணையாது
    அன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது

    நேசருடைய சத்தம் ஒப்பில்லாத சத்தம்
    ஆண்டவரின் சத்தம் எங்க ஆராதனை சத்தம் – 2

    1. சாந்தமும் தயவும் சத்தியமும் சந்தோஷமும்
    அன்பிற்கு அடையாளமே
    அன்புகொண்ட பாஷைகளும் மனதுருகும் வார்த்தைகளும்
    இயேசுவின் அடையாளமே
    அயோக்கியம் செய்யாது அநியாயம் பண்ணாது
    போட்டியும் பொறாமையும் அன்பாகாது
    நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போகும்
    சுகவாழ்வு மணவாழ்வு வளமாகுமே

    2. குழந்தையாக இருந்தோம் மழலையாக பேசினோம்
    பரலோகம் இறங்கி வந்ததே
    ஆவியிலே வளர்ந்தோம் வார்த்தையிலே வளர்ந்தோம்
    அனுபவங்கள் மாறுகின்றதே
    கண்ணாடியில் பார்ப்பதெல்லாம் கண் முன்னே நிற்காது
    கர்த்தரோடே நடப்பது தான் நிறைவானதே
    முகமுகமாய் பார்ப்போமே முழுமையாக ருசிப்போமே
    மகிமையிலே அவரோடு பறப்போமே


    Manishar Baashai Pesinaalum Dhoodhar Baashai Pesinaalum
    Anbu Enakku Illaavittaal Artham Illayae
    Sathamidum Venkalamaai Oosaiidum Kaithaalamaai
    Vaalugindra Vaalkaiku Artham Illayae

    Dheerkamaana Dharisanangal Aalamaana Ragasiyangal
    Anbu Illaa Kaaranathaal Arpam Aagumae
    Arivu Kalandha Vaarthaigalum Malai Peyarkkum Visvaasamum
    Anbu Enakku Illaavittaal Artham Illayae

    Anbu Oliyaadhu Endrum Aliyaadhu
    Anbu Kuraiyaadhu Endrum Niraivaanadhu
    Anbu Asaiyaadhu Endrum Anaiyaadhu
    Anbu Pirikaadhu Endrum Jeyamaanadhu

    Nesarudaya Satham Opilaadha Satham
    Aandavarin Satham Enga Aaraadhanai Satham – 2

    1. Saandhamum Dhayavum Sathiyamum Sandhoshamum
      Anbukku Adaiyaalamae
      Anbukonda Baashaigalum Manadhurugum Vaarthaigalum
      Yesuvin Adaiyaalamae
      Ayokiyam Seiyaadhu Aniyaayam Pannaadhu
      Pootiyum Poraamaiyum Anbaagaadhu
      Niraivaanadhu Varumbodhu Kuraivaanadhu Olindhupogum
    2. Kulandhaiyaaga Irundhom Malalaiyaaga Pesinom
      Paraloogam Irangi Vandhadhae
      Aaviyilae Valarndhom Vaarthayilae Valarndhom
      Anubavangal Maarugindrathae
      Kanaadiyil Paarpathellam Kanmunnae Nirkaadhu
      Kartharodu Nadapadhu Dhaan Niraivaanadhey
      Mugamugamaai Paarpomae Mulumaiyaaga Rusipoomae
      Magimayilae Avarodu Parapoomae
  • Anbu Niraintha Deivam Neerae

    அன்பு நிறைந்த தெய்வம் நீரே
    இறக்கத்தில் ஐஸ்வரியம் நீரே
    ரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2
    தகுதி இல்ல அடிமை என்னை
    உயர்ந்தவர் உன்னதர் நீரே
    ஆனாலும் என்னை நேசித்தீர்
    என்னிலே ஒன்றும் இல்லை
    என்னிலே நன்மை இல்லை
    ஆனாலும் என்னை உயர்த்தினீர்

    வாழ்நாளெல்லாம் உம் புகழை
    என்றென்றும் பாடிடுவேன்
    உந்தன் நாமம் எந்தன் மேன்மை
    என்றென்றும் உயர்த்திடுவேன்

    ஹல்லேலூயா ஹல்லேலூயா
    ஹல்லேலூயா ஆமென் – 3
    ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2

    1. உன்னதமானவரின்
      மறைவினால் வாழ்கின்றேன்
      சமாதான தாவரம் நீரே – 2
      உம் நாமம் அறிந்ததினாலே
      உயரத்தில் வைத்தீரையா
      என்றென்றும் நீரே அடைக்கலம்
      அரணான கோட்டை நீரே
      நான் நம்பும் கேடகமே
      என்றென்றும் உம்மை உயர்த்துவேன்
    2. இடுக்கமென்னும் சமுத்திரத்தில்
      எனக்காக வழிதிறப்பீர்
      மகா பெரிய தேவன் நீரே – 2
      சமுத்திர அலைகளை எல்லாம்
      வல்லமையால் அடிப்பீறைய
      ஆழங்கள் வற்றி போகுமே
      சர்ப்பத்தின் தலைகளை எல்லாம்
      முற்றிலும் உடைப்பீறைய
      தடையின்றி கடந்து சென்றிடுவேன்

    Anbu Niraintha Deivam Neerae
    Irakkaathil Iswariam Neerae
    Ratham Sindhi Ennai Meetirae – 2
    Thaguthi Illa Adimai Ennai
    Uyarnthavar Unnathar Neerae
    Aanalum Ennai Nesitheer
    Ennilae Ondrum Illai
    Ennilae Nanmai Illai
    Aanalum Ennai Uyarthineer

    Vaazhlnalellam Um Pugazhai
    Endrendum Paadiduvaen
    Undhan Naamam Endhen Maenmai
    Endrendum Uyarthiduvaen

    Hallelujah Hallelujah
    Hallelujah Amen – 3
    Oh…Oh…Oh…Oh…Oh…Oh… – 2

    1. Unndhamanavarin
      Maraivinil Vazhgindren
      Samadhana Dhabaram Neerae – 2
      Um Naamam Arindhathinalae
      Uyarathil Vaitheeraiya
      Endrendrum Neerae Adaikalam
      Aranana Kottai Neerae
      Naan Nambum Kedagamae
      Endrendrum Ummai Uyarthuvaen
    2. Idukkamennum Samuthirathil
      Enakaaga Vazhithirapeer
      Maga Periya Dhevan Neerae – 2
      Samuthira Alaigalai Ellam
      Vallamaiyal Adippeeraiya
      Aazhangal Vatri Pogumae
      Sarpathin Thalaigalai Ellam
      Mutrilum Udaippeeraiya
      Thadaiyindri Kadanthu Sendriduvaen
  • Anbin Dheivam

    அன்பின் தெய்வம் நீரே ஆராதனை
    உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே – 2

    உங்க சமூகம் ஒன்றே போதும்
    அதற்கு ஈடே இல்லை ஏதும்
    அழகே… உயிரே… இயேசுவே… – 2

    1.பதினாயிரங்களிலே சிறந்தவர்
    நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    பாவத்தை பாராத சுத்த கண்ணரே
    நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

    2.சாந்த சொரூபியே நீர் தானே
    நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    பரலோக பாதையே நீர் தானே
    நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்


    Anbin Dheivam Neerae Aaradhanai Umakkae
    Thudhikku Neer Paaththeerarae – 2

    Unga Samugam Ondrae Pothum
    Atharkku Yeedae Illai Yaedhum
    Azhagae… Uyirae… Yesuvae… – 2

    1. Pathin Aayirangalilae Sirandhavar
      Neenga Parisuthar Parisuthar Parisuthar
      Pavathai Paaradha Suththa Kannarae
      Neenga Parisuthar Parisuthar Parisuthar
    2. Saantha Sorubiyae Neerdhanae
      Neenga Parisuthar Parisuthar Parisuthar
      Paraloga Paadhaye Neerdhanae
      Neenga Parisuthar Parisuthar Parisuthar
  • Anbae Entennai

    அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
    அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
    நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
    நன்றியுடன் பாடுகின்றேன் – 2

    நான் தனிமை என்றெண்ணும்போது
    தாங்கி கொண்டீரே
    தயவால் அணைத்துக்கொண்டீரே
    நான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரே
    நன்றி சொல்ல வார்த்தை இல்லையே-அன்பே

    1. என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்
      அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே – 2
      நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
      என்னை நான் தாழ்த்துகின்றேன் – அன்பே
    2. நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்
      என்னை விடாத அன்பை உம்மில் கண்டேனே – 2
      நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
      என்னை நான் தாழ்த்துகின்றேன் – அன்பே