Author: admin

  • Anbae Anbae

    கல்வாரி சிலுவையிலே
    எனக்காக தொங்கினீரே – 2
    இயேசு உம் அன்பினாலே
    என் பாவத்தை கழுவினீரே – 2

    அன்பே அன்பே என்னையும்
    நோக்கி பார்த்த அன்பே – 2

    1.அறிந்ததே நான் மீண்டும் மீண்டும் விழுந்தேன்
    தெரிந்தே நான் மீண்டும் மீண்டும் தவறினேன் – 2
    இயேசு உம் அன்பினாலே
    மீண்டும் என்னை சேர்த்துக்கொண்டீரே – 2

    2.வாழ்க்கையில் தடுமாறினேன்
    திக்கற்றவனானேன் – 2
    இயேசு உம் அன்பினாலே
    என் தோழனாய் வந்தவரே – 2


    Kalvaari Siluvaiyilae
    Enakkaga Thongineerae – 2
    Yesu Um Anbinaalae
    En Paavathai Kazhuvineerae – 2

    Anbae Anbae
    Ennaiyum Nokki Paartha Anbae – 2

    1. Arindhae Naan Meendum Meendum Vizhundhaen
      Therindhae Naan Meendum Meendum Thavarinaen – 2
      Yesu Um Anbinaalae
      Meendum Ennai Serthukondeerae – 2
    2. Vazhkaiyil Thadumaarinaen
      Thikkatravanaanaen – 2
      Yesu Um Anbinaalae
      En Thozhanai Vandheerae – 2
  • Anathi Devan Un Adaikalame

    அநாதி தேவன் உன் அடைக்கலமே
    அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

    இந்த தேவன் என்றென்றுமுள்ள
    சதா காலமும் நமது தேவன் – மரண
    பரியந்தம் நம்மை நடத்திடுவார்

    1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
      தூய தேவ அன்பே
      இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
      இனிதாய் வருந்தி அழைத்தார்
    2. கானக பாதை காரிருளில்
      தூய தேவ ஒளியே
      அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
      அரும் நீருற்றாய் மாற்றினாரே
    3. கிருபை கூர்ந்து மனதுருகும்
      தூய தேவ அன்பே
      உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
      உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்
    4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
      தூய தேவ அருளால்
      நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
      சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
    5. ஆனந்தம் பாடி திரும்பியே வா
      தூய தேவ பெலத்தால்
      சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
      சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்

    Anaathi Thaevan Un Ataikkalamae
    Avar Niththiya Puyangal Un Aathaaramae

    Intha Thaevan Ententumulla
    Sathaa Kaalamum Namathu Thaevan – Marana
    Pariyantham Nammai Nadaththiduvaar

    1. Kaarunnyaththaalae Iluththukkonndaar
      Thooya Thaeva Anpae
      Ivvanaanthiraththil Nayangaatti Unnai
      Inithaay Varunthi Alaiththaar
    2. Kaanaka Paathai Kaarirulil
      Thooya Thaeva Oliyae
      Alukai Niraintha Pallaththaakkukalai
      Arum Neeruttay Maattinaarae
    3. Kirupai Koornthu Manathurukum
      Thooya Thaeva Anpae
      Un Samaathaanaththin Udanpatikkai Thanai
      Unnmaiyaay Karththar Kaaththuk Kolvaar
    4. Varannda Vaalkkai Seliththiduthae
      Thooya Thaeva Arulaal
      Niththiya Makilchchi Thalaimael Irukkum
      Sanjalam Thavippum Otippom
    5. Aanantham Paati Thirumpiyae Vaa
      Thooya Thaeva Pelaththaal
      Seeyon Parvatham Unnaich Serththiduvaar
      Santhatham Makilchchi Ataivaay
  • Anandha Thuthi Oli Ketkum

    ஆனந்த துதி ஒலி கேட்கும்
    ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
    ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
    ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…

    1. மகிமைப்படுத்து வேனென்றாரே
      மகிபனின் பாசம் பெரிதே
      மங்காத புகழுடன் வாழ்வோம்
      மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
      குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
      கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ…
    2. ஆதி நிலை எகுவோமே
      ஆசீர் திரும்பப் பெறுவோம்
      பாழான மண்மேடுகள் யாவும்
      பாராளும் வேந்தன் மனையாகும்
      சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
      சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ…
    3. விடுதலை முழங்கிடுவோமே
      விக்கினம் யாவும் அகலும்
      இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
      இரட்சகன் மீட்பருள்வாரே
      நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
      விடுதலை பெருவிழா காண்போம் — ஆ… ஆ…
    4. யாக்கோபு நடுங்கிடுவானோ
      யாக்கோபின் தேவன் துணையே
      அமரிக்கை வாழ்வை அழைப்போம்
      ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
      பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
      பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ…

    Aanantha thuthi oli kaetkum
    Aadal paadal saththamum thonikkum
    Aakaaya vinnmeenaay avar janam perukum
    Aanndavar vaakku palikkum — aa… aa…

    1. Makimaippaduththu vaenentarae
      Makipanin paasam perithae
      Mangaatha pukaludan vaalvom
      Maatchi pettuyarnthiduvomae
      Kurukida maattam kuntida maattam
      Karaiyillaa thaevanin vaakku — aa… aa…
    2. Aathi nilai ekuvomae
      Aaseer thirumpap peruvom
      Paalaana mannmaedukal yaavum
      Paaraalum vaenthan manaiyaakum
      Sirai vaalvu maraiyum seer vaalvu malarum
      Seeyonin makimai thirumpum — aa… aa…
    3. Viduthalai mulangiduvomae
      Vikkinam yaavum akalum
      Idukkannkal soolnthidum vaelai
      Iratchakan meetparulvaarae
      Nukangal murinthidum kattukal arunthidum
      Viduthalai peruvilaa kaannpom — aa… aa…
    4. Yaakkopu nadungiduvaano
      Yaakkopin thaevan thunnaiyae
      Amarikkai vaalvai alaippom
      Aanndavar maarpil sukippom
      Patharaatha vaalvum sitharaatha manamum
      Parisaaka thaevanarulvaar — aa… aa…
  • Anandamaga Anbarai Paduven

    1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
    ஆசையவரென்னாத்துமாவிற்கே
    ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
    ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே

    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் வேறெங்குமில்லையே

    2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்
    தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
    தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
    தாபரமும் நல்ல நாதனுமென்றார்

    3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
    கிருபையும் வெளியாகினதே
    நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்
    ஜீவன் அழியாமை வெளியாக்கினால்

    4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்
    தப்பறு தேசின் கிரீடமாகவே
    அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
    ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

    5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
    ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
    சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
    ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்


    1.Aananthamaaka Anparaip Paaduvaen
    Aasaiyavarennaaththumaavirkae
    Aaseekalarulum Aananthananthamaay
    Aanndavar Yesupol Aarumillaiyae

    Yesuvallaal Yesuvallaal
    Inpam Ikaththil Vaerangumillaiyae
    Yesuvallaal Yesuvallaal
    Inpam Vaerangumillaiyae

    2.Thanthai Thaayum Unsonthamaanorkalum
    Thallitinum Naan Thalliduvaeno
    Thaangiduvaen En Neethiyin Karaththaal
    Thaaparamum Nalla Naathanumentar

    3.Kiristhu Yesu Pirasannamaakavae
    Kirupaiyum Veliyaakinathae
    Neekkiyae Saavinai Narsuviseshaththaar
    Jeevan Aliyaamai Veliyaakkinaal

    4.Oppillaatha Makimai Nampikkai Santhoshamum
    Thappatru Thaesin Kireedamaakavae
    Apposthalar Tham Ooliyaththaalae
    Aathi Visuvaasaththil Valarnthiduvom

    5.Alukaiyin Thaalvil Nadappavarae
    Aalipol Vaanmalai Niraikkumae
    Sernthida Seeyonil Thaevanin Sannithi
    Jeyaththinmael Jeyamatainthiduvom

  • Anaathi Anbu

    அநாதி அன்பினாலே பிரித்தீரே
    உம் சாயலாய் வாழ்ந்திட
    நானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்
    என் உள்ளம் மகிழுதே

    நிலை இல்லா எந்தன் வாழ்வில்
    நிலையான உறவானீர்
    தள்ளினோர் முன்னிலையில்
    ஆயிரங்களை ஆசீர்வதித்தீர் – 2

    1. கருவில் தோன்றின நாள் முதல்
      இந்நாள் வரை என்னை மறக்கவில்லை – 2
      படைப்பின் காரணர் நீரே
      உந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் – 2
    2. சிறுமையும் எளிமையுமான
      என்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே – 2
      உயிர் வாழும் நாளெல்லாம்
      உம் சாயலை பிரதிபலிப்பேன் – 2

    Anaathi Anbinaale Pirithirey
    Um Saayalaai Vaazhthida
    Naan Alle Enakkul Neereh Vaazhvathinaal
    En Ullam Magiluthey

    Nilai Illaa Enthan Vaazhvil
    Nilaiyaana Uravaaneer
    Thallinor Munnilaiyil
    Aayirangalai Aasirvathitheer – 2

    1. Karuvil Thondrina Naal Muthal
      Innaal Varai Ennai Marakkavillai – 2
      Padaippin Kaaranar Neere
      Unthen Sittam Pol Nadatthukinreer – 2
    2. Sirimaiyum Yelimaiyumaana
      Ennul Melaana Tharisanam Thuvangineere – 2
      Uyir Vaazhum Naalellaam
      Um Saayalai Pirathibalippen – 2
  • Amen Alleluia Magathuva

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
    மகத்துவ தம்பரா பரா – ஆமென் அல்லேலூயா
    ஜெயம் ஜெயம் ஆனந்த ஸ்தோத்திரா
    தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
    துயிர்த்தெழுந்தாரே உன்னதமே

    1. வெற்றி கொண்டார்ப்பரித்து கொடும்
      வேதாளத்தை சங்கரித்து முறித்து
      பத்ராசனக் கிறிஸ்து -மரித்து
      பாடுபட்டு தரித்து முடித்தார்
    2. வேதம் நிறைவேற்றி மெய் தோற்றி
      மீட்டுக் கரையேற்றி -பொய் மாற்றி
      பாவிகளை தேற்றி கொண்டாற்றி
      பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
    3. சாவின் கூர் ஒடிந்து மடிந்து
      தடுப்புச் சுவர் இடிந்து-விழுந்து
      ஜீவனை விடிந்து தேவாலயத்
      திரை ரண்டாய் கிழிந்து ஒழிந்தது
    4. தேவக் கோபந்தீர்ந்து அலகையின்
      தீமை எல்லாம் சேர்த்து முடிந்தது
      ஆவலுடன் சேர்ந்து பணிந்து
      கொண்டாடி களி கூர்ந்து மகிழ்ந்து

    Aamen Allaelooyaa Aamen Allaelooyaa
    Makaththuva Thamparaa Paraa – Aamen Allaelooyaa
    Jeyam Jeyam Aanantha Sthoththiraa
    Thollai Anaathi Thanthaar Vanthaar Iran
    Thuyirththelunthaarae Unnathamae

    1. Vetti Konndaarppariththu Kodum
      Vaethaalaththai Sangariththu Muriththu
      Pathraasanak Kiristhu -Mariththu
      Paadupattu Thariththu Mutiththaar
    2. Vaetham Niraivaetti Mey Thotti
      Meettuk Karaiyaetti -Poy Maatti
      Paavikalai Thaetti Konndaatti
      Pathraasanath Thaetti Vaalviththaar
    3. Saavin Koor Otinthu Matinthu
      Thaduppuch Suvar Itinthu-Vilunthu
      Jeevanai Vitinthu Thaevaalayath
      Thirai Ranndaay Kilinthu Olinthathu
    4. Thaevak Kopantheernthu Alakaiyin
      Theemai Ellaam Serththu Mutinthathu
      Aavaludan Sernthu Panninthu
      Konndaati Kali Koornthu Makilnthu
  • Alaithavare Ennai Alaithavare

    நீ என்னுடையவன் என்று சொன்னீரையா
    இந்த உலகத்திலே என்னை மீட்டிரையா – 2
    அழைத்தவரே என்னை அழைத்தவரே
    பெயர் சொல்லி என்னை அழைத்தவரே – 2

    1. ஓடிய என்னையும் அழைத்து வந்து
      உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா – 2
    2. மறுதலித்து என்னை தேடி வந்து
      மறுபடி ஊழியம் தந்தீரையா – 2

    Nee Ennudaiyavan Endru Soneeraiyaa
    Intha Ulagathilae Ennai Meeteeraiyaa – 2
    Azhaithavarae Ennai Azhaithavarae
    Peyar Solli Ennai Azhaithavarae – 2

    1. Odiya Ennaiyum Azhaithu Vandhu
      Ummai Oyaamai Thuthikka Vaitheeraiyaa – 2
    2. Marudhalitha Ennai Thedi Vandhu
      Marubadi Oozhiyam Thantheeraiyaa – 2
  • Ahava

    யூதாவின் சிங்கம் நீங்க
    தங்க செங்கோலும் நீங்க
    சேனைக்கு சொந்தம் நீங்க
    ஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க – 2

    தோல் மேல சுமக்கிறீங்க அப்பாவ போல
    கண்ணீரை துடைக்கிறீங்க அம்மாவ போல
    நடந்தாலும் சோரமாட்டோம் சோரமாட்டோம்
    இளைக்காம ஓடிடுவோம் ஓடிடுவோம்
    உம் அன்புக்கு அளவே இல்ல

    இயேசு எங்கள் அஹாவா
    ஆவி எல்லாம் அஹாவா
    உயிரெல்லாம் அஹாவா
    உள்ளம் எல்லாம் அஹாவா

    1.அள்ளித்தூவும் விதை எல்லாம் அழகாகுமே
    கண்ணீரின் பள்ளத்தாக்கு பளிங்காகுமே – 2
    தெரிந்து கொண்ட கோலெல்லாம் துளிராகுமே
    ஊழியரின் பாதங்கள் புதிதாகுமே – 2
    உம் அன்புக்கு அளவே இல்ல

    2.தரிசனம் வேண்டுமே லேடீஸ் & ஜென்டில்மேன்ஸ்
    பாகுபாடு வேண்டாம் உங்க ஊழியத்திலே – 2
    அபிஷேகம் என்றாலே கிறிஸ்து மட்டுமே
    நீங்காத பிரசன்னம் பிரசன்னமே – 2
    உம் அன்புக்கு அளவே இல்ல

    3.கழுகு தன் குஞ்சுகளை சுமப்பது போல
    எல்லா நாளும் சுமப்பீங்க காப்பீங்க – 2
    கால் வைக்கும் தேசத்திலே கால் ஊன்றுவோம்
    முழங்காலின் யுத்தத்தில் வேர் ஊன்றுவோம் – 2
    உம் அன்புக்கு அளவே இல்ல-யூதாவின் சிங்கம்


    Yudhavin Singham Neenga
    Thanga Sengolum Neenga
    Senaikku Sondham Neenga
    Jebathaale Sendhom Naanga – 2

    Thol Mela Sumakireenga Appa Va Pola
    Kanneera Thudaikireenga Amma Va Pola
    Nadanthaalum Soramaatom Sora Maatom
    Ilaikkama Oodidivom Oodidivom
    Um Anbukku Alave Illa

    Yesu Engal Ahava
    Aavi Ellam Ahava
    Uyirellam Ahava
    Ullam Ellam Ahava

    1. Allithoovum Vidhai Ellam Azhagaagume
      Kanneerin Pallathakku Palingaagume – 2
      Therindhu Konda Kolellam Thuliraagume
      Ooliyarin Paadhangal Pudhidhaagume – 2
      Um Anbukku Alave Illa
    2. Dharisanam Vendume Ladies & Gentlemen
      Paagupaadu Vendaam Unga Ooliyathile – 2
      Abishegam Endraale Kristhu Mattume
      Neengaatha Prasannam Prasanname – 2
      Um Anbukku Alave Illa
    3. Kazhugu Than Kunjukalai Sumapathu Pola
      Ella Naalum Sumapeenga Kaapeenga – 2
      Kaal Vaikum Dhesathile Kaal Oondruvom
      Muzhangaalin Yuthathile Ver Oondruvom – 2
      Um Anbukku Alave Illa
  • Abishega Natha Anal Mootum

    அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
    ஆரூயிர் அன்பரே

    1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
      ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
    2. ரகசியம் பேசிட கிருபை தாருமே
      சத்திய ஆவியாய் என்மேல் வாருமே
    3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
      திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே
    4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே
      பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே
    5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
      சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே
    6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
      சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே


    Apishaeka Naathaa Anal Moottum Thaevaa
    Aarooyir Anparae

    1. Anniya Paashaikal Inte Thaarumae
      Aaviyil Jepiththida Enmael Vaarumae
    2. Rakasiyam Paesida Kirupai Thaarumae
      Saththiya Aaviyaay Enmael Vaarumae
    3. Thaesaththaik Kalakkida Thidanaith Thaarumae
      Thirappilae Nintida Pelanaay Vaarumae
    4. Parinthu Paesida Aathma Paaram Thaarumae
      Parisuththamaakida Thinam Enmael Vaarumae
    5. Saaththaanai Jeyiththida Saththuvam Thaarumae
      Saatchiyaay Vaalnthida Enmael Vaarumae
    6. Akkini Apishaekam Inte Thaarumae
      Sudaraay Pirakaasikka Enmael Vaarumae
  • Abishega Naadharae

    அபிஷேக நாதரே
    உம் அபிஷேகத்தைலதால்
    பெலத்தின்மேல் பெலனடைய
    உம் அபிஷேகம் ஊற்றிடும்

    நறுமண பொருள்களும்
    ஒலிவ என்னையும்
    அபிஷேக தைலமாய்
    என்மேல் இறங்கட்டும்

    1. பூமியின் ராஜாக்களை
      தெரிந்து கொண்டவரே
      இயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட
      அபிஷேகம் ஊற்றுவார்
    2. உந்தனின் சுவிசேஷத்தை
      உலகெங்கும் அறிவித்திட
      உம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட
      அபிஷேகம் ஊற்றுவார்

    Abishega Naadharae
    Um Abishegathailathaal
    Belathinmel Belanadaya
    Um Abishegam Ootridum

    Narumana Porulgalum
    Oliva Yennaiyum
    Abishega Thailamaai
    Yenmel Irangattum

    1. Boomiyin Rajakalai
      Therindhu Kondavarae
      Yesuvin Rethathal Adhigaram Petrida
      Abishegam Ootruveer
    2. Undhanin Suvisheshathai
      Ulagengum Arivithida
      Um Naamam Sollida Janangalai Saerthida
      Abishegam Ootruveer