Blog

  • Ennakka Ithana Kiruba

    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே

    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே

    பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
    அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
    தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
    அறுவடையை துவக்கி வைத்தவரே

    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை பாட வைத்ததே

    தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
    வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2
    அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
    அற்புதங்கள் செய்ய வைத்தவரே

    எனக்கா இத்தன கிருபை
    என் மேல் அளவற்ற கிருபை-2
    என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
    என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி வைத்ததே
    என்ன விட எத்தனை பேர் நல்லவனாக இருந்தும்
    என்னை மட்டும் தேடி வந்து சுமந்து கொண்டதே

    உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
    உங்க கிருபை என்னை தூக்கி சுமந்ததே
    அல்லேலூயா உங்க கிருபை போதுமே


    Ennakkaa Ithana Kiruba
    En Mel Alavatra Kiruba – 2

    Ennai Vida Eththana Per Thaguthiyaaga Irunthum
    Ennai Mattum Kirubai Indru Thedi Vanthathe
    Ennai Vida Eththana Per Thaguthiyaaga Irunthum
    Ennai Mattum Kirubai Indru Uyarththi Vaiththae

    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Thookki Sumakkuthe
    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Paada Vaiththathae

    Payanatra Nilaththai Pola Marakkappattavan Naan
    Aruvadai Kaanaamal Thaninthu Ponavan Naan
    Tharisaana Ennil Tharisanaththai Vaiththu
    Aruvadayai Thuvakki Vaiththavarae

    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Thookki Sumakkuthe
    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Paada Vaiththathae

    Tholviyin Aazhangalil Moozhki Ponavan Naan
    Vaazhnthidum Nokkam Thanai Izhandhu Ponavan Naan – 2
    Arppamaana Ennai Arpputhamaay Maatri
    Arputhangal Seyya Vaiththavarae

    Ennakkaa Ithana Kiruba
    En Mel Alavatra Kiruba-2

    Ennai Vida Eththana Per Thaguthiyaaga Irunthum
    Ennai Mattum Kirubai Vanthu Uyarththi Vaiththathae
    Ennai Vida Eththana Per Nallavanaaga Irunthum
    Ennai Mattum Thedi Vanthu Sumanthu Kondathae

    Unga Kirubai Ennai Vaazha Vaiththathae
    Unga Kirubai Ennai Thookki Sumakkuthe
    Halleluah Unga Kirubai Pothumae

  • Ennai Urumatra Neer

    என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
    என்ன அன்பு இதோ

    உம் சித்தம் மறந்தேன்
    உம் சத்தம் வெறுத்தேன்
    உம்மையே பிரிந்தேன்
    என்னை ஏன் தேடி வந்தீர்

    மாசில்லா நீரே மகிமையை தந்து
    மண்ணான என்னை மீட்கவா வந்தீர்

    என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

    என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
    என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ


    Ennai Urumatra Neer En Urugulaindheer
    Enna Anbu Idho Enna Anbu Idho

    Um Sitham Marandhaen
    Um Satham Veruthaen
    Ummaiyae Pirindhaen
    Ennai En Thedi Vandhir

    Maasilla Neerae Magimaiyai Thandhu
    Mannana Ennai Meetka Vavandhir
    Enna Anbu Idho
    Enna Anbu Idho

    Ennai Urumatra Neer En Urugulaindheer
    Enna Anbu Idho Enna Anbu Idho

  • Ennai Undakiya En Devathi Devan

    என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
    அவர் தூங்குவதுமில்ல , உறங்குவதுமில்லை – 2

    1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
      சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
      பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
      பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே
    2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
      பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
      ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
      கேடகமும், துருகமும் பெலன் அவரே
    3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
      ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
      வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
      வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர்

    Ennai Unndaakkiya En Thaevaathi Thaevan
    Avar Thoonguvathumillai, Uranguvathumillai – 2

    1. En Mael Avar Kannnnai Vaiththu Aalosanai Solluvaar
      Saththiyaththin Paathaiyilae Niththamum Nadaththuvaar
      Parisuththa Aaviyaal Ullaththai Nirappuvaar
      Parisuththar Parisuththar Avar Peyarae
    2. Pelaveena Naatkalilae Pelan Thanthu Thaanguvaar
      Palavitha Sothanaiyil Jeyam Namakkalippaar
      Aapaththuk Kaalaththil Arannaana Kottayum
      Kaedakamum, Thurukamum Pelan Avarae
    3. Aaviyaana Thaevanukku Roopamontumillaiyae
      Roopamontumillaiyathaal Soroopamontumillaiyae
      Vaanjaiyulla Aaththumaavin Iruthayanthannilae
      Vaarththaiyaalae Paesukinta Aanndavar Ivar
  • Ennai Um Kaiyil Tharugindren

    என்னை உம் கையில் தருகின்றேன்
    ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்
    என்னை அழைத்தவர் நீரல்லோ
    இந்த பெலத்தோட செல்கின்றேன்

    என் அன்பே ஆருயிரே (என்றும்)
    உம் மடியில் தலை சாய்ப்பேனே

    1. நான் உம்மை அறியவில்லை
      நீர் என்னை அறிந்தீரே – இந்த
      சிறியனை உம் பக்கம் இழுத்தீரே
      என்னை அழைத்தவர் நீரல்லோ
      இந்த பெலத்தோட செல்கின்றேன்
    2. தகுதியற்ற என்னை கண்டீர்
      கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்
      உந்தன் சித்தம் செய்ய
      அபிஷேகம் அருளினீர்
      என்னை அழைத்தவர் நீரல்லோ
      இந்த பெலத்தோடே செல்கிறேன்

    Ennai Um Kaiyil Tharugindren
    Yekamai Um Andai Varugindren – 2
    Ennai Azhaithavar Neeralo
    Intha Belathodae Selgindren – 2

    En Anbae Aaruyirae (Endrum)
    Um Madiyil Thalai Saipenae – 2

    1. Naan Ummai Ariyavillai
      Neer Ennai Arintheerae – Intha
      Siriyanai Um Pakam Izhutheerae – 2
      Ennai Azhaithavar Neeralo
      Intha Belathodae Selgindren – 2
    2. Thaguthiyatra Ennai Kandeer
      Kirubai Thanthu Uyarthi Vaitheer
      Unthan Sitham Seithida
      Abishegam Arulineer – 2
      Ennai Azhaithavar Neeralo
      Intha Belathodae Selgindren – 2
  • Ennai Um Kaikalil Padaikkiren

    என்னை உம் கைகளில்
    படைக்கிறேன் பயன்படுத்தும் இயேசையா
    இனி நான் அல்ல கிறிஸ்துவே
    ஆளுகை செய்திடுமே – 2

    உம் சத்தம் கேட்கணும்
    உம் சித்தம் செய்யணும்
    உதவிடுமே இயேசையா
    உம் நாமம் உயர்தனும்
    உம்மையே துதிக்கணும்
    உதவிடுமே இயேசையா

    1. மனம் மாறனும்
      குணம் மாறனும்
      உதவிடுமே இயேசையா
      நீர் பெருகனும்
      நான் சிறுகணும்
      உதவிடுமே இயேசையா – 2
    2. சிலுவை சுமக்கனும்
      என் சுயம் மடியனும்
      உதவிடுமே இயேசையா
      உம்மை அரியனும்
      இன்னும் அரியனும்
      உதவிடுமே இயேசையா – 2

    Ennai um kaikalil
    Padaikkiren payanpaduthum yesiah
    Ini naan alla kiristhuvae
    Aallugai seithidumae – 2

    Um satham ketkanum
    Um sitham seiyanun
    Udavidumae yesiah
    Um naamam uyarthanum
    Ummaiyae thuthikkanum
    Udavidumae yesiah

    1. Manam maaranum
      Gunam maaranum
      Udavidumae yesiah
      Neer peruganum
      Naan siruganum
      Udavidumae yesiah – 2
    2. Siluvai sumakkanum
      En suyam madiyanum
      Udavidumae yesiah
      Ummai ariyanum
      Innum ariyanum
      Udavidumae yesiah – 2
  • Ennai Thalatti Seeratti

    என்னை தாலாட்டி சீராட்டி வளர்கின்றவர்
    என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றனர் – 2
    என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர் – 2
    என் நிழல் போல என்னோடு நடக்கின்றனர் – 2

    1. நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்
      என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2
      என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2
      இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2
    2. (இயேசு)கண்ணின் மணி போல் என்னை பாதுகாக்கின்றவர்
      அன்பு என்றல் என்ன என்று சொல்லி தந்தவர் – 2
      என்னை மேல் ஜாதி கீழ் ஜாதி நேற்று பிரிக்கத்தவர் – 2
      இயேசு தம்மிடம் வரும் எல்லோரையும் யேற்றுக்கொள்பவர் – 2

    Ennai Thalatti Seeratti Valarkindravar
    En Idhayathin Yekkangal Arigindravar – 2
    En Thaai Ennai Maranthalum Marakkathavar – 2
    En Nizhal Pola Ennodu Nadakkindravar – 2

    1. Naan Azhumpothu Ennodu Azhugindravar
      En Ranamana Manathirkku Marunthanavar – 2
      En Uyirodu Uravadum Thunaiyanavar – 2
      Intha Kasapana Ulagathil Inippanavar – 2
    2. (Yesu)Kannin Mani Pol Ennai Pathukakkindravar
      Anbu Endral Enna Endru Solli Thanthavar – 2
      Ennai Meal Jathi Keel Jathi Nedru Pirikkathavar – 2
      Yesu Thammidam Varum Elloraiyum Yeatrukkolbavar – 2
  • Ennai Peyar Solli Azaithavarae

    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    உள்ளங்கைகளில் வரைந்தவரே
    என்னை கரம் பிடித்து நடத்தினீரே
    உருவாக்கி உயர்த்தினீரே – 2

    ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
    வெற்றியை காண செய்தீர் – 2

    1. வனாந்திரமாய் இருந்த என்னை
      வற்றாத ஊற்றாய் மாற்றினீரே – 2
      என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
      என்றும் உம் வழியில் நடந்திடுவேன் – 2 – என்னை பெயர்
    2. கை விடப்பட்டு இருந்த என்னை
      உம் கரத்தால் நடத்தினீரே – 2
      என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
      என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன் – 2 – என்னை பெயர்
  • Ennai Padaithavarea

    என்னை படைத்தவரே அழைத்தவரே
    துணையாக எப்போதும் வருபவரே
    முன் குறித்தவரே வனைந்தவரே
    உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே – 2

    யெஷுவா … நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா … நீர் எந்தன் எஜமானனே – 2

    1. நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய
      நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
      பாசம் காட்டி மாறாத அன்பை
      எனக்கு தந்தவரே – 2
    2. படைகள் எல்லாம் எனை சூழ நின்று
      பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
      பலத்த அரணாய் எனக்காக நின்று
      பாதுகாத்தவரே – 2
    3. முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
      கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
      வறுமை மாற்றி வளமான வாழ்வை
      எனக்கு தந்தவரே – 2

    Ennai Padaithavarea Azhaithavarea
    Thunaiyaaga Yeppothum Varubavarea
    Mun Kurithavarea Vanaindhavarea
    Ullangaill Ennai Anbaai Varainthavarae – 2

    Yeshuvaa… Neer Endhan Thunaiyaalarea
    Yeshuvaa… Neer Endhan Yejamaananea – 2

    1. Nesithor Ellam Enai Thookiyeriya
      Neer Mattum Yeno Enai Serthukondeer
      Paasam Kaatti Maaraatha Anbai
      Enakku Thanthavarea – 2
    2. Padaigal Ellam Enai Sula Nindru
      Pattaya Vaarthayal Enai Theendum Pothu
      Balaththa Aranaai Enakkaga Nindru
      Paathugaathavarea – 2
    3. Mullulla Paadhail Naan Nadandha Podhu
      Kazhugai Pola Enai Thookki Sumandheer
      Varumai Maatri Valamaana Vazhvai
      Enakku Thanthavareea – 2
  • Ennai Nadathubavar Nerey

    என்னை நடத்துபவர் நீரே
    தலை உயர்த்துபவர் நீரே
    ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)
    உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)

    1. சிறுமி என்று என்னைத் தள்ளி
      முடியாதென்று நினைத்த வேளை
      என் உள்ளத்தை நீர் கண்டீர்
      யாருமில்லா நேரம் வந்து
      தாயைப் போல என்னத் தேற்றி
      கண்ணீரைத் துடைத்தீர்

    உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)

    1. புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
      உலகத்தினால் மறக்கப்பட்டேன்
      என் மகளே என்றழைத்தீர்
      நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
      உம் கரத்தால் என்னை ஏந்தி
      நம்பிக்கை எனக்குள் வைத்தீர்

    உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)

    என்னை நடத்துபவர் நீரே
    தலை உயர்த்துபவர் நீரே(உயர்த்துபவரும் நீரே…ஓ )
    ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)
    உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2)


    Ennai Nadathubavar Nerey
    Thalai Uayarthubavar Nerey
    Yerta Kalathil Ennai Nadathiduver

    Umaku Maraivaga Onrum Illaiyae
    Oh Enrum Enrum Aarathipen

    1. Sirumi Entru Ennai Thalli
      Mudiyathentru Ninaitha Velai
      En Ullathai Neer Kandeer
      Yarum Illa Neram Vanthu
      Thaaiyai Pola Ennai Therti
      Kanneerai Thudaitheer

    Umaku Maraivaga Onrum Illaiyae
    Oh Enrum Enrum Aarathipen

    1. Puluthilum Setrilum Kidanthen
      Ulagathinaal Maraka Paten
      En Magaley Enralaitheer
      Nesithoor Ennai Kai Vitta Neram
      Um Karathaal Ennai Yenthi
      Nambikai Enakul Vaitheer

    Umaku Maraivaga Onrum Illaiyae
    Oh Enrum Enrum Aarathipen

    Ennai Nadathubavar Nerey
    Thalai Uayarthubavar Nerey
    Yerta Kalathil Ennai Nadathiduver
    Umaku Maraivaga Onrum Illaiyae
    Oh Enrum Enrum Aarathipen

  • Ennai Munnarindhu

    என்னை முன்னறிந்து முன்குறித்தவரே
    என்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே – 2

    வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை
    வேறெதையும் எதிர்பார்க்கவில்லை
    முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே
    முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

    என்னை அழைத்தவரே
    என்னை நடத்துவீரே
    இறுதிவரை உம்மில் மாற்றமில்லை

    ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
    அதிசயமே என்னை நீர் அழைத்தது – 2

    தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
    தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே – 2


    Ennai Munnarindhu Munkurithavarae
    Ennai Irudhivarai Thaangi Kolbavarae – 2

    Vaer Ondraiyum Naan Kaetkavillai
    Vaeredhaiyum Edhirpaarkavilai
    Mutrilum Thandhuvittaen Yesuvae
    Muzhuvadhum Saarndhuvittaen Ummaiyae

    Ennai Azhaithavarae
    Ennai Nadathuveerae
    Irudhivarai Ummil Maatramillai – 2

    Aayiram Padhinaayiram Janangal Vaazhum Boomiyil
    Adhisayamae Ennai Neer Azhaithadhu – 2

    Thagudhi Illai Endru Odhungi Nindra Ennai
    Thagudhipadutha Ummidamaai Izhuthu Kondeerae – 2