Blog

  • Engal Thesathirku Neer Vendume

    எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
    புதிய சுதந்திரம் தாருமே
    பாவமே இந்த உலகத்தை நரகமாய் மாற்றுதே

    கொள்ளை நோய்கள் இங்கு பெருகுதே
    கொலை வெறிகளும் இங்கு கூடுதே
    விபச்சாரமும் வேசித்தனங்களும் கலாச்சாரமாய் மாறுதே

    ஜாதி கலவரங்கள் கூடுதே
    இந்த மண்ணில் நிம்மதி போனதே
    வலியிலே கதறும் குரல் இன்று பாடலாய் மாறுதே

    சாலையில் உறங்கியே வாழும் மக்களை பாருமே
    வறுமையால் கண்ணீரே இங்கு உணவாய் மாறுதே

    இந்த நிலையை மாற்றவே
    எங்கள் வறுமை ஓழியவே
    கரங்களை உயிரத்தியே உம்மை
    அழைக்கிறோம் இயேசுவே.

    வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்
    எங்கள் இயேசுவே
    ஒரு மாற்றத்தை நீர் தாருமே
    எங்கள் நிலமையை நீர் மாற்றுமே

    எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமே
    எங்கள் ஜனங்களை நீர் பாருமே
    உம் வருகைக்கு எங்களை நீர் ஆயத்தப்படுத்துமே

    எங்கள் கண்கள் திறக்கப்பட வேண்டுமே
    மூட நம்பிக்கை மாறவேண்டுமே
    இயேசுவே தெய்வமென்று எங்கள் தேசம் அறியனுமே

    உம்மால் கூடாதது இங்கு ஒன்றும் இல்லையே
    ஒரு வார்த்தை சொன்னலே எங்கள் தேசம் மாறுமே

    ஒரு எழுப்புதல் தொடங்கவே ஒரு மனதாய் ஜெபிக்கின்றோம்
    தேசங்கள் முழுவதும் உம்மை அறியனுமே

    சேற்றுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்
    உம் உதவியை நாங்கள் நோக்கி இங்கே நிற்கிறோம்
    அன்போடு எங்கள் பாருமே

    எங்கள் துக்கத்தை சந்தோமாய் மாற்றிடும் இயேசுவே


    Engal Dhesathurkku Neer Vendumae
    Pudhiya Sudhandhiram Tharumae
    Pavamae Indha Ullagathi Naragamai Mattrudhae
    Kollai Noikalum Ingu Perugudhae
    Kolai Verigalum Ingu Kududhae
    Vibacharammum Vaesithanangalum Kalacharamai Marudhae

    Jadhi Kalavarangal Kududhae
    Indhamannil Nimmadhi Ponadhae
    Valiyillae Kadharum Kural Indru Padalai Marudhae

    Salaiyil Urangiyae Vazhum Makkalai Parumae
    Varumaiyaal Kaneerae Engu Unavai Marudhae
    Endha Nilaiyai Mattravae
    Engal Varumai Ozhiyavae
    Engal Karangalai Uyarthiyae
    Ummai Azhaikirom Yessuvae

    Varummae Engal Yesuvae
    Ummai Azhaikirom Engal Yesuvae
    Oru Mattrathai Tharumae
    Engal Nilamayai Neer Mattrumae

    Engal Dhesathurku Neer Vendumae
    Engal Janangalai Neer Parumae
    Um Varugaiku Engalai Neer Ayathapaduthumae
    Engal Kangal Thirakapada Vendumae
    Mooda Nambikkai Maaravendumae
    Yesuvae Deivam Endru
    Engal Dhesam Ariyanumae

    Ummal Kudadhadhu Ingu Ondrumilaye
    Oru Varthai Sonnalae
    Engal Dhesam Marumae
    Oru Ezhupudhal Thodangavae
    Muzhu Manadhai Jebikindrom
    Dhesangal Muzuvadhum Ummai Ariyanumae.

    Varummae Engal Yesuvae
    Ummai Azhaikirom Engal Yesuvae
    Oru Maattrathai Neer Tharumae
    Engal Nilamayai Neer Maattrumae

    Saetrukul Muzhgi Kondu Irukkirom
    Um Udhaviyai Nangalnokki Ingu Nirkkirom
    Anbodu Neer Engalai Parumae
    Engal Dhukathai Sandhoshamaimattridum Yesuvae

  • Endhan Meypar Neere

    எந்தன் மேய்ப்பர் நீரே
    என் துணையும் நீரே
    எந்தன் நேசர் நீரே
    வழுவாமல் காப்பவரே

    ஏழை என்னை மறவாமல்
    உம் காருண்யத்தால்
    என்னை பெரியவனாக்கினீர்

    1. ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்
      ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்
      உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கி
      குயவனை போல என்னை வனைந்தீர்
    2. ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்
      அன்பை தேடி ஏங்கி நின்றேன்
      என் தாயை போல என்னை தேற்றி
      என் தகப்பனை போல என்னை சுமந்தீர்

    Endhan Meypar Neere
    En Thuṇaiyum Neere
    Endhan Naicar Neere
    Valuvamal Kaapavare

    Elai Ennai Maraaivamal
    Um Kaarunyataail
    Ennai Periyanakkinir

    1. Onrukkum Udhavadavanay Irundhen
      Odhuukkappattonai Odunki Kidhanden
      Um Anbal Kaṇdu Um Karattal Thukki
      Kuyavanai Pola Ennai Vanaindhir
    2. Adharavattronai Alaindhu Thirindhen
      Anbai Thedi Engi Nindren
      En Thayai Pola Ennai Thetri
      En Tagappanai Pola Ennai Sumandhir
  • Endhan Anbulla Aandavarae

    எந்தன் அன்புள்ள ஆண்டவரே
    ஆயிரம் ஸ்தோத்திரமே
    நீர் செய்த நன்மைக்கெல்லாம்
    நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

    1. ஆபத்து காலத்திலே
      அடியேன் உம்மை நினைத்தேன்
      ஆண்டவா உம் தயவால் நாதா
      ஆசீர்வாதம் நான் பெற்றேன்
    2. இன்று நான் பாடுவது
      உம்மால் தான் யேசுநாதா
      என்றும் நான் பாட வேண்டும் நாதா
      எண்ணில் நீர் வாழ வேண்டும்

    Endhan Anbulla Aandavarae
    Aayiram Sthothiramae
    Neer Seitha Nanmaikellam
    Naadha Sthothiram Sthothiramae

    1. Aabathu Kaalathile
      Adiyen Ummai Ninaithen
      Aandava Um Thayaval Naadha
      Aaservatham Naan Petraen
    2. Indru Naan Paaduvathu
      Ummal Dhan Yesunaadha
      Yendrum Naan Paada Vendum Naadha
      Yennil Neer Vaazha Vendum
  • Enakku Othasai Varum

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்

    1. வானமும் பூமியும் படைத்த
      வல்ல தேவனிடமிருந்தே
      என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
      என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
      நிலைமாறி புவியகன்றிடினும்
      மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
      ஆறுதல் எனக்கவரே
    3. என் காலை தள்ளாட வொட்டார்
      என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
      இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
      இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
      வழுவாமல் காப்பவர் அவரே
      சூரியன் பகலில் சந்திரன் இரவில்
      சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
      ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
      போக்கையும் வரத்தையும் பத்திரமாக
      காப்பாரே இது முதலாய்

    Enakkoththaasai Varum Parvatham Naeraay
    En Kannkalai Aeraduppaen

    1. Vaanamum Poomiyum Pataiththa
      Valla Thaevanidamirunthae
      Ennukkadangaa Nanmaikal Varumae
      En Kannkal Aeraduppaen
    2. Malaikal Peyarnthakantitinum
      Nilaimaari Puviyakantitinum
      Maaridumo Avar Kirupai Ennaalum
      Aaruthal Enakkavarae
    3. En Kaalai Thallaada Vottar
      Ennaik Kaakkum Thaevan Urangaar
      Isravaelaik Kaakkum Nalthaevan
      Iraappakal Urangaarae
    4. Valappakkaththin Nilal Avarae
      Valuvaamal Kaappavar Avarae
      Sooriyan Pakalil Santhiran Iravil
      Sethappaduththaathae
    5. Eththeengum Ennai Anukaamal
      Aaththumaavaik Kaakkumen Thaevan
      Pokkaiyum Varaththaiyum Paththiramaaka
      Kaappaarae Ithu Muthalaay
  • Enakku Ellam Seithiere

    எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன்,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
    ஆயிரம் நாவுகள் போதாது ஐயா,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

    யேகோவா ரபா சுகம் தந்தீரே
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
    என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

    என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே,
    எனக்காய் எல்லாம் செய்தீரே – 2

    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் – 4

    எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன்,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
    ஆயிரம் நாவுகள் போதாது ஐயா,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

    யேகோவா ரபா சுகம் தந்தீரே
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
    என் தேவை ஏழாம் பார்த்துகொண்டீரே,
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

    என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே,
    எனக்காய் எல்லாம் செய்தீரே – 2

    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்
    நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் – 4


    Enakku Ellam Seithiere Naan Ena Seluthuven,
    Nandrigal Yeatrukollum
    Aayiram Naavugal Podhathu Aiya,
    Nandrigal Yeatrukollum

    Yehovah Rapha Sugam Thandheerea
    Nandrigal Yeatrukollum
    Yen Irudhaya Vaanjaigal Yellam Arindhavare,
    Nandrigal Yeatrukollum

    Yenna Naan Seluthuvean Deva Umakke,
    Enakaai Yellam Seidheerea – 2

    Nandrigal Yeatrukollum Yellavatrirkum
    Nandrigal Yeatrukollum – 4

    Enakku Ellam Seithiere Naan Ena Seluthuven,
    Nandrigal Yeatrukollum
    Aayiram Naavugal Podhathu Aiya,
    Nandrigal Yeatrukollum

    Yehovah Rapha Sugam Thandheerea
    Nandrigal Yeatrukollum
    Yen Thevai Yelam Paarthukondeere,
    Nandrigal Yeatrukollum

    Yenna Naan Seluthuvean Deva Umakke,
    Enakaai Yellam Seidheerea – 2

    Nandrigal Yeatrukollum Yellavatrirkum
    Nandrigal Yeatrukollum – 4

  • Enakai Jeevan Vittavare

    எனக்காய் ஜீவன் விட்டவரே
    என்னோடிருக்க எழுந்தவரே
    என்னை என்றும் வழி நடத்துவாரே
    என்னைச் சந்திக்க வந்திடுவாரே

    இயேசு போதுமே இயேசு போதுமே
    எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
    எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே

    1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
      சோர்ந்து போகாமல் முன் செல்லவே
      உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
      மயங்கிடாமல் முன்னேறவே
    2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
      அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
      ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
      மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
    3. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
      மாமிசம் அழுகி நாறிட்டாலும்
      ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
      ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்

    Enakkaay Jeevan Vittavarae
    Ennotirukka Elunthavarae
    Ennai Entum Vali Nadaththuvaarae
    Ennaich Santhikka Vanthiduvaarae

    Yesu Pothumae Yesu Pothumae
    Entha Naalilumae Ennilaiyilumae
    Enthan Vaalvinilae Yesu Pothumae

    1. Pisaasin Sothanai Perukittalum
      Sornthu Pokaamal Mun Sellavae
      Ulakamum Maamisamum Mayakkittalum
      Mayangidaamal Munnaeravae
    2. Pullulla Idangalil Maeyththiduvaar
      Amarntha Thannnneeranntai Nadaththiduvaar
      Aaththumaavaith Thinam Thaettiduvaar
      Maranap Pallaththaakkil Kaaththiduvaar
    3. Manithar Ennaik Kaivittalum
      Maamisam Aluki Naarittalum
      Aisuvariyam Yaavum Alinthittalum
      Aakaathavan Entu Thallivittalum
  • En Yesu Raja Saronin Roja

    என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
    உம் கிருபை தந்தாலே போதும் – 2
    அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
    உம் கிருபை முன் செல்ல அருளும் – 2

    1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
      சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா – 2
      கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
      கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் – 2 – என் இயேசு
    2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
      புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் – 2
      பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
      பரமனே என் முன் தீபமாய் வாரும் – 2 – என் இயேசு
    3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
      என்னோடிருப்பவர் பெரியவர் நீரே – 2
      இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
      என் ஜீவ படகின் நங்கூரம் நீரே – 2 – என் இயேசு

    En Yaesu Raajaa Saaroanin Roajaa
    Um Kirubai Thandhaalae Poadhum – 2
    Alai Moadhum Vaazhvil Alaiyaamal Sella
    Um Kirubai Mun Sella Arulum – 2

    1. Kadal Ennum Vaazhvil Kalangum En Padagil
      Sukkaan Pidithu Nadathum En Dhaevaa – 2
      Kadalinai Kandittha Karthar Neer Allavoa
      Kadavaadha Ellaiyai En Vaazhvil Thaarum – 2 – En Yaesu
    2. Pilavunda Malaiyae Pugalidam Neerae
      Puyal Veesum Vaazhvil Paadhugaatharulum – 2
      Paarinil Kaarirul Saedhangal Anugaadhu
      Paramanae En Mun Dheebamai Vaarum – 2 – En Yaesu
    3. Edhir Kaatru Veesa Edhirpoarum Paesa
      Ennoadiruppavar Periyavar Neerae – 2
      Yaesuvae Yaathiraiyil Karai Saerkkum Dhaevan
      En Jeeva Padagin Nangooram Neerae – 2 – En Yaesu
  • En Yesu Ennodu

    என் இயேசு என்னோடு இருக்கின்ற
    பொழுதெல்லாம் என்றென்றும் ஆனந்தமே
    என் நேசர் என் வாழ்வில் செய்கின்ற
    அதிசயம் ஒன்றல்ல ஏராளமாய்

    1. கண்கள் மூடி துயிலும்போதும் என்னை அவர் காத்திடுவார்
      கண்ணின் இமை போல என்னை அழகாக பார்த்திடுவார்
      சிறகினிலே என்னை மூடி தீங்காணுகாமல்
      இருகரம் கொண்டனைப்பாரே
      பாடும் குயில் சத்தம் உம் புகழை பாடும் நித்தம்
      குயில்கள் கூட பேசும் உம் இனிமையான நேசம்

    தான நானா தான நானா தான நானா நன்னா நன்னா
    தான நானா தான நானா தான நானா நன்னா நன்நாணா

    என் இயேசு என்னோடு இருக்கின்ற
    பொழுதெல்லாம் என்றென்றும் ஆனந்தமே
    என் நேசர் என் வாழ்வில் செய்கின்ற
    அதிசயம் ஒன்றல்ல ஏராளமாய்

    1. சின்ன சின்ன குழந்தைகளை தனருகவே அழைத்திடுவார்
      சின்ன பட்டு கன்னம் தொட்டு அன்பாலே அணைத்திடுவார்
      குட்டி சுட்டி பாலகர்கள் போலவே நம்மை
      மாற வேண்டும் என்றாரே
      நமக்கு ஜீவன் தந்தார் நமக்காய் ஜீவன் தந்தார்
      என் ஜீவன் உள்ள மட்டும் மனம் பாடும் அவரை மட்டும்

    தான நானா தான நானா தான நானா நன்னா நன்னா
    தான நானா தான நானா தான நானா நன்னா நன்நாணா

    என் இயேசு என்னோடு இருக்கின்ற
    பொழுதெல்லாம் என்றென்றும் ஆனந்தமே
    என் நேசர் என் வாழ்வில் செய்கின்ற
    அதிசயம் ஒன்றல்ல ஏராளமாய்


    En Yesu Ennodu Irukkindra
    Poludhellam Endrendrum Aanandhamae
    En Nesar En Vazhvil Seiginra
    Adhisayam Ondralla Eraalamae

    1. Kangal Mooi Thuyilumbothum Ennai Avar Kaathdiuvar
      Kannin Imai Pola Ennai Azhagaga Parthiduvar
      Siraginil Ennai Moodi Theenganugamal
      Irugaram Kondanaipaarae
      Paadum Kuyil Satham Um Pugazhai Paadum Nitham
      Kuyilgal Kooda Pesum Um Inimaiyana Nesam

    Thana Nana Thana Nana Thana Nana Nanana Nanana
    Thana Nana Thana Nana Thana Nana Nanana Nanananaa.

    En Yesu Ennodu Irukkindra
    Poludhellam Endrendrum Aanandhamae
    En Nesar En Vazhvil Seiginra
    Adhisayam Ondralla Eraalamae

    1. Chinna Chinna Kulandhaigalai Thanarugae Azhaithiduvar
      Chinn Pattu Kannam Thottu Anbalae Anaithiduvar
      Kutti Chutti Palagargal Polavae Nammai
      Maara Vendum Endrarae
      Namakku Jeevan Thandhar Namakai Jeevan Thandhar
      En Jeevan Ulla Mattum Manam Paadum Avarai Mattum.

    Thana Nana Thana Nana Thana Nana Nanana Nanana
    Thana Nana Thana Nana Thana Nana Nanana Nanananaa.

    En Yesu Ennodu Irukkindra
    Poludhellam Endrendrum Aanandhamae
    En Nesar En Vazhvil Seiginra
    Adhisayam Ondralla Eraalamae

  • En Visuvaasa Kappal

    என் விசுவாச கப்பல் சேதமாகாமல்
    இதுவரை காத்துக் கொண்டீரே
    என்னை வழி நடத்துகிறீர் – 2
    என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்
    நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே

    என் தெய்வம் என்னோடு இல்லையென்றால்
    மூழ்கி நான் போயிருப்பேன்
    உம்சமூகம் என்னோடு
    இல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன்

    நீர்போதுமே என் வாழ்விலே
    நீர்வேண்டுமே என் வாழ்விலே
    நீரே நிரந்தரமே – ஐயா
    நீரே நிரந்தரமே

    1.உலகமென்னும் சமூத்திரத்தில்
    என் பயணம் தொடருதைய்யா
    பெருங்காற்றோ புயல் மழையோ
    அடிக்கையிலே இதுவரை சேதமில்லை

    என் தெய்வம் என்னோடு இல்லையென்றால்
    மூழ்கி நான் போயிருப்பேன்
    உம் சமூகம் என்னோடு இல்லையென்றால்
    திசைமாறி போயிருப்பேன்

    2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
    ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லை
    தீங்கு செய்ய ஒருவருமே
    என்மேலே கை போடவில்லை

    உம் கிருபை என்னோடு இல்லையென்றால்
    நிர்மூலமாயிருப்பேன்
    உம் வசனம் என்னை தேற்றாதிருந்தால்
    என் துக்கத்திலே மூழ்கியிருப்பேன்

    3.வெள்ளம் போல சாத்தானும்
    என் எதிரே வந்தபோது
    ஆவியான என் தெய்வம்
    அவன் எதிரே கொடியை ஏற்றினீரே

    தடையாவும் முற்றிலும் நீக்கினிரே
    பாதைக்கு வெளிச்சம் நீரே
    ஜெயம் கொடுத்து இதுவரை நடத்தினீரே
    உம் கிருபை போதுமையா.


    En Visuvasa Kappal Sedham Aagamal
    Ethuvarai Kaathukondirae
    Ennai Vazhi Nadathugireer – 2
    En Dhaivam En Yesu Kooda Iruppathal
    Neer Kattiya Thurai Mugathil Saerthiduvirae

    En Dhaivam Ennodu Illai Yendral
    Moolgi Naan Poyiruppaen
    Um Samoogam Yennodu
    Ellai Yendral Thisai Mari Poyiruppaen

    Neer Pothumae En Vazhvilae
    Neer Vendumae En Vazhvilae
    Neerae Nirantharamae Ayya
    Neerae Nirantharamae

    1. Ulagamennum Samuthirathil
      En Payanam Thodaruthaiya
      Perungatro Puyal Malaiyo
      Adikayila Ithuvarai Sedhamillai

    En Dhaivam Ennodu Illai Yendral
    Moolgi Naan Poyiruppaen
    Um Samoogam Yennodu
    Ellai Yendral Thisai Mari Poyiruppaen

    1. Yeppakkamum Nerukkapattum
      Odungi Naanum Ithuvarai Pogavillai
      Theengu Seyya Oruvarumae
      En Melae Kai Podavillai

    Um Kirubai Yennodu Illai Yendral
    Nirmoolam Agiruppaen
    Um Vasanam Yennai Thetrathirunthal
    En Thukathilae Moolgiruppaen

    1. Vellam Pola Sathanum
      En Yethirae Vantha Bothu
      Aaviyana En Dhaivam
      Avan Yethirae Kodiyai Yetrineerae

    Thadai Yaavum Mutrilum Neekineerae
    Paathaiku Velicham Neerae
    Jeyam Koduthu Ithuvarai Nadathineerae
    Um Kirubai Pothumaiya

  • En Valkai Ennum Padagu

    ஏலேலோ ஐலசா ஏலேலோ – 4
    என் வாழ்க்கை என்னும் படகினிலே
    இயேசு உதித்தார்
    என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை
    கரை சேர்த்தாரே – 2

    ஏலேலோ ஐலசா ஏலேலோ – 3
    இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா

    1.வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை
    இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே – 2
    படக விட்டு என்னால இறங்க முடிய
    இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே – 2 – ஏலேலோ…

    2.வானத்தை திறந்து மன்னாவை பொழிந்து
    ஜனங்களை நடத்தி வந்த இயேசுவை பாரு – 2
    வனாந்திரம் இப்போ வயல்வெளி ஆனதே
    உனக்குள்ளும் எனக்குள்ளும் ஜீவ நதி பாயுதே – 2 – ஏலேலோ…

    3.தாவீதைக்கொண்டு கோலியாத்தை வீழ்த்திய
    இஸ்ரவேலின் ராஜாவின் சரித்திரம் கேளு – 2
    ஆடு மேய்த்தவன் யுத்த வீரன் ஆனானே
    ஆண்டவர் இருதயத்திற்கு பிரியமானரே- 2 – ஏலேலோ…


    Yaelaelo ailasaa yaelaelo – 4
    En vaazhkkai ennum padakinilae
    Yesu uthiththaar
    En paava vaazhkkai neekki ennai
    Karai Saerththaarae -2

    Yaeaelo ailasaa yaelaelo – 3
    Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa

    1.Valaiya veesi meenu onnum sikkavae illai
    Yesu enthan karampitiththu katru thanthaare – 2
    Padaka vittu ennaala Iranga mudiyala
    Yesu enthan padakaaka maarivitdaarae – 2 – Yaeaelo …

    2.Vaanaththai Thiranthu mannaavai pozhinthu
    Janangalai nadaththi vantha yesuvai paaru – 2
    Vanaanthiram ippo vayalveli aanathae
    Unakkullum enakkullum jeeva nathi paayuthae – 2 – Yaeaelo …

    3.Thaaviithaikkontu koaliyaaththai veezhththiya
    Isravaelin raajaavin sariththiram kaelu – 2
    Aadu maeyththavan yuththa veeran aanaanae
    Aandavar iruthayaththirku piriyamaanarae – 2 – Yaeaelo …